சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

26 June 2014

" மிஸ்டர் வெங்கி.. யூ ஆர் லுக்கிங் வெரி ஸ்மார்ட்..!!! "


புதுசா ஒரு பிலிப்ஸ் ஷேவர் வாங்கினேன்...

ஆர்டர் போட போறேனு சொன்னப்பவே
என் ப்ரெண்ட் ஜெகன்

" அதெல்லாம் சரி வராதுடானு " திட்டினான்..

ஆனா நான் காதுலயே வாங்கிக்கலையே..

" மிஸ்டர் வெங்கி.. யூ ஆர் லுக்கிங் வெரி
ஸ்மார்ட்னு " நம்மள பாத்து யாராவது
சொல்லிடுவாங்களோனு பொறாமை..

ஆதனால ஆர்டர் போட்டுட்டேன்...
950 ரூபா..

ஷேவரும் வந்தது. ப்ர்ஸ்ட் டைம் யூஸ்
பண்ணினப்ப...

கிழி.. கிழி..!!

உஸ்ஸப்பா.. என்னடா இது...

" பெருமைக்கு எருமை மேய்ச்ச கதையா
போச்சே... " ஃபீலிங்கா இருந்தது...

இதை ஜெகன்கிட்ட சொன்னா அவன் வேற
கேவலமா திட்டுவானேனு யோசிச்சாலும்..
அப்புறம் சொல்லிட்டேன்..

அவனும்..

" கவலைப்படாதடா... அது செட்டில் ஆகறதுக்கு
ரெண்டு வாரம் ஆகும்னு " சொன்னான்..

ஓஹோ... அப்படியானு User Manual-ஐ எடுத்து
பாத்தேன்.... அதுலயும்...

" செட் ஆகறதுக்கு ரெண்டு வாரம் ஆகும்னு
குடுத்து இருந்தாங்க... "

சரி ஓ.கேனு ரெண்டு வாரம் தொடர்ந்து
அதுலயே ஷேவ் பண்ணிட்டு வந்தேன்..

ரெண்டு வாரம் போனதும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட்..

இப்ப..

கிழி.., கிழி.., கிழி.., கிழி..!!

இது ஆவற வேலை இல்ல... 950 ரூபாய்க்கு
பாத்தா.. என் அழகான கன்னம் என்ன
ஆவறதுனு அந்த ஷேவரை தூக்கி
என் பீரோல வெச்சிட்டேன்..

இப்ப என் கோவம் ஜெகன் மேல திரும்பிச்சு..
( பின்ன ஃபிலிப்ஸ் கம்பெனிகாரன்கிட்டயா
கோவப்பட முடியும்..!?! )

" ஏன்டா நாயே... ரெண்டு வாரத்துல செட்டில்
ஆகிடும்னு சொன்னே.. இப்பவும் அதே
மாதிரிதான்டா இருக்கு.. "

" ஹி., ஹி., ஹி.. நான் சொன்னது.. ரெண்டு வாரத்துல
அது உன் பீரோல செட்டில் ஆகிடும்டா..!! "

" அடப்பாவி..!! "
.
.

12 June 2014

நாங்கல்லாம் கணக்குல டைனோசரு..!!

என் Wife ஒரு கணித புலி..

எவ்ளோ பெரிய கணக்கா இருந்தாலும் 
டக்னு போட்டு Answer சொல்லிடுவாங்க..

கணக்கு சரியா இருக்கான்னு கால்குலேட்டரை 
வெச்சி Check பண்றவன் நான்..

கால்குலேட்டர் போட்ட கணக்கு சரியா 
இருக்கான்னு Check பண்றவங்க என் Wife.. 

இப்படித்தான் ஒரு தடவை துணிக்கடையில..

கடைக்காரர் கொடுத்த பில்லை வாங்கி 
நான் கால்குலேட்டர்ல போட்டு 3400 ரூபா 
வருதுன்னு சொன்னேன்..

அதுக்கு என் Wife Manual-ஆ கணக்கு போட்டு  
3200 ரூபா தாங்க வருதுன்னு சொன்னாங்க..

எனக்கு ஒரே சிரிப்பு..!! 

" கால்குலேட்டர் போட்ட கணக்கே தப்பா..? 
இது கொஞ்சம் ஓவரா இல்ல..?!! "

" ரொம்ப சிரிக்காதீங்க..!! கால்குலேட்டர் 
சரியா தான் சொல்லும்.. நீங்க தான் தப்பு தப்பா 
Enter பண்ணியிருப்பீங்க..

மறுபடியும் அதே பில்லை கூட்டி பாத்தா..
அந்த பாழா போன கால்குலேட்டர் இப்ப 
3200 ரூபா காட்டுது..

200 ரூபா கம்மியா வருதேங்கிற சந்தோஷத்தை விட., 
நான் போட்ட கணக்கு தப்பா போச்சேன்னு தான் 
எனக்கு பீலிங்கா இருந்தது..

அப்ப ஒரு முடிவு பண்ணினேன்.. 

என் மனைவியோட கணக்கு கர்வத்தை 
அடக்கணும்னு.. 

ஆனா இனிமே நான் போயி Tables., Formulas 
எல்லாம் மனப்பாடம் பண்ணி என் மனைவியை 
Overtake பண்றது.. இதெல்லாம் ஆவற வேலையா..?!!

அதனால நல்ல குறுக்கு வழிக்காக ரொம்ப நாளா 
Waiting.. அந்த நல்ல நாளும் வந்தது.. 

அப்ப இந்த Book என் கைக்கு கிடைச்சது..அதுல எவ்ளோ பெரிய கணக்கா இருந்தாலும் ஈஸியா, 
வேகமா போடறது எப்படின்னு எகப்பட்ட 
Tricks & Techniques இருந்தது..

அதுல ஒரே ஒரு Trick-ஐ மட்டும் நான் 
நல்லா Training எடுத்துகிட்டேன்..

என் Wife கிட்ட போயி ஒரு 15 Digit Number சொல்லு 
அதை எவ்ளோ வேகமா " 9 " ஆல  Multiply 
பண்ணி Answer சொல்றேன்னு பாருன்னு 
சேலஞ்ச் பண்ணினேன்..

அவங்களும் ஒரு நம்பர் சொன்னாங்க.. 

568745269856325 x 9 

ANS = 5119707428706925..

வெறும் 15 Secs இந்த Answer-ஐ சொல்லிட்டு  
" எப்புடீ..? "-ன்னு காலரை தூக்கி விட்டுகிட்டேன்..

என் Wife சிரிச்சாங்க..

எங்கே குடுங்கன்னு சரியான்னு பாக்கலாம்னு 
வாங்கி Answer Check பண்ணிட்டு... 

" இந்த Answer தப்புங்க "-னு சொன்னானங்க... 
வெறும் 10 Secs-ல..!!

எனக்கு தூக்கு வாரி போட்டது.. 

" ஆ..!!! என் கணக்கில் குற்றமா..? "

( நெற்றிக்கண்ணை தொறக்கலாம்னு 
ஒரு செகண்ட் யோசிச்சேன்.... அப்புறம் 
இருக்குற ரெண்டு கண்ணுக்கும் எதாவது 
பாதிப்பு வந்துடுமோனு வந்த கோவத்தை 
அடக்கிக்கிட்டேன்..!! )

ஒரு ஓரமா உக்காந்து அதே கணக்கை 
பொறுமையா போட்டு பாத்தா...,

அட... 5118...-க்கு பதிலா 5119 போட்டு இருக்கேன்...

என் பொண்டாட்டி கணக்கு திறமையை 
நினைச்சி ஆச்சரியமா இருந்தது.. 

" எப்படி நிர்மலா.. இவ்ளோ பெரிய கணக்கை 
டக்னு போட்டு Answer தப்புனு கண்டுபிடிச்சே..?!! " 

" நான் கணக்கே போடலைங்க.. எப்படியும் 
நீங்க தப்பாதான் போட்டு இருப்பீங்கனு 
ஒரு குத்து மதிப்பா தான் சொன்னேன்..!! 
ஹி., ஹி., ஹி... " 

" என்னாது குத்து மதிப்பா சொன்னியா..?!! 
அவ்வ்வ்வ்..!!! " 
.
.

05 June 2014

ஸ்டார்ர்ர்ர்ர் ஹோட்டல்..!!!


சென்னை போயிருந்தப்ப எங்களுக்கு
எங்க சின்ன மாமனாரு ஒரு ட்ரீட்
குடுக்கறேன்னு சொல்லிட்டு.. எங்கே
வெச்சிக்கலாம்னு கேட்டாரு..

அதுக்கு நானும் , என் மச்சானும்..

எந்த ஹோட்டலா இருந்தாலும் ஓ.கே...
ஆனா அது 5 ஸ்டார் ஹோட்டலா இருந்தா
போதும்னு சொல்லிட்டோம்..

( பின்ன நாங்க எப்ப 5 ஸ்டார் ஹோட்டல்ல
டின்னர் சாப்பிடறது..?!! )

அப்புறம் ALOFT-னு ஒரு ஹோட்டல்க்கு
கூட்டிட்டு போனாரு.. போனப்புறம் தான்
தெரிஞ்சது எங்க சின்ன மாம்ஸ் எங்களை
நல்லா ஏமாத்திட்டார்னு..

அது 4 ஸ்டார் ஹோட்டலாம்ல...

ஒரு ஸ்டார் கம்மியா போச்சே.. வெளிநடப்பு
பண்ணிடலாமானு யோசிச்சிட்டு இருக்கும்
போதே... டின்னர் ஹால் வந்திடுச்சு..

சரினு பெரிய மனசு பண்ணி என்னை
கண்ட்ரோல் பண்ணிகிட்டு உக்காந்தேன்...

ஆர்டர் எடுக்க ஒருத்தர் வந்தாப்ல..

எங்க மாம்ஸு புதுசு புதுசா வாய்ல
நுழையாத பெயர் எல்லாம் சொல்லி
ஆர்டர் பண்ணிட்டு இருந்தாரு....

" ஏன் மாம்ஸு.. நீங்க ஆர்டர் பண்றதோட
பெயரே வாய்ல நுழையலயே... ஐட்டமாவது
வாய்ல நுழையுமா..?! "

" உங்களுக்கு பிடிச்சதை சொல்லிகோங்க
மாப்ள....! "

" எனக்கு என்ன மாம்ஸு.. ஒரு கொத்து புரோட்டாவும்,
சில்லி சிக்கனும்..!! "

ஆர்டர் எடுத்தவன் அப்படியே ஷாக் ஆகிட்டான்..

என்னை கேவலமா ஒரு பார்வை பாத்தான்...

" சார்..  கொத்து புரோட்டா எல்லாம் இங்கே
கிடைக்காது..!! "

" ஏன்..?!! "

" அதெல்லாம் லோக்கல் ஐட்டம் சார்..?!! "

" இந்த ஹோட்டல் மட்டும் என்ன லண்டன்லயா
இருக்குது.. இதுவும் லோக்கல் தானே...!! "

" அதில்ல., மெக்சிகன், இத்தாலியன் இந்த மாதிரி
Food தான் சார் இங்கே கிடைக்கும்..!! "

" என்னய்ய்யா இது.... என்னென்னமோ இருக்குனு
சொல்றீங்க... தமிழனோட " பாரம்பரிய உணவு "
புரோட்டா இல்லயா..??!! "

இப்ப அவன் மறுபடியும் ஷாக்..
மறுபடியும் அதே பார்வை....

( சே..!! இதுக்குதான் ஒரு ஸ்டார் கம்மியா
இருக்குற ஹோட்டல்க்கு எல்லாம் போக
கூடாதுனு சொல்றது.. )

எனக்கு ரொம்ப ஃபீலிங்கா போச்சு...

தமிழ்நாட்ல., அதுவும் சென்னையில இருக்குற
ஒரு ஹோட்டல்ல கொத்து புரோட்டா கிடைக்கல..

# என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்..?!!
.
.