சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

26 December 2011

ஒவ்வொரு Friend-ம் தேவை மச்சான்..!?

நேத்து மதியம் 3 மணிக்கு
மங்குனிகிட்ட இருந்து போன்..

" ஹலோ., வெங்கட் என்ன பண்ணிட்டு
இருக்க..?! "

" இப்பத்தான் லஞ்ச் முடிச்சிட்டு
வர்றேன்.! "

" இப்பத்தான் சமைச்சிட்டு வர்றேன்னு
சொல்லு..! "

" நோ.,நோ., சாப்பிட்டுட்டு வர்றேன்..! "

" சமைக்காத மாதிரியே பேசறான்யா..!
ஆமா.. லஞ்சுக்கு என்ன ஸ்பெஷல்..? "

" வஞ்சரம் மீன் குழம்பு..! "

" சேலத்துல வஞ்சரம் மீனா..?
ஆச்சரியமா இருக்கே..!!! "

" இது மேட்டூர் Dam வஞ்சரம்..! "

" என்னாது வஞ்சரம் மீன் Dam-லயா.???!

" ஏன் இருக்காதா..? "

" ம்ஹூம்... அது கடல் மீன்யா
Dam-ல எல்லாம் வளராது..! "

" ஆஹா ஏமாத்திட்டானுகளா..?!! "

" இதுக்குதான் மீன் வாங்கும்போதே
ஒரிஜினல் வஞ்சரமான்னு செக் பண்ணி
வாங்கணும்கறது..! "

" அது எப்படி செக் பண்றது..?!! "

" அப்படி கேளு..."

" சரி சொல்லுங்க..! "

" நல்லா நோட் பண்ணிக்க.. இனிமே
எப்ப மீன் வாங்கினாலும் முதல்ல
அதை ஒரு கையில தூக்கி..."

" ம்ம்...! "

" அது மூஞ்சிக்கு நேரா கேளு..
What is Your Name..? "

" ??!!?!!?!?!?!?! "

( ஐயோ ராமா..! என்னை ஏன் இந்த மாதிரி
பசங்ககூட எல்லாம் கூட்டுசேர வைக்கிற.? )
.
.

24 December 2011

ராஜபாட்டை ( ஒன் லைன் விமர்சனம் )



ஆவ்வ்வ்வ்வ்வ்....! அவ்வ்வ்வ்..!!
( படம் முடிஞ்சா எழுப்பி விட மாட்டீங்களாப்பா..?! )
.
.

22 December 2011

ஏம்பா.., நான் சரியாதான் பேசறேனா.?!!

















" ஈரோடு சங்கமம் 2011 " நிகழ்ச்சிக்கு
நானும். சேலம் தேவாவும் பஸ்ல
சேர்ந்து போறதா Plan.

ஆனா அவரு முதல் ஸ்டாப்பிங்ல
ஏறுவாரு.. நான் 5-வது ஸ்டாப்பிங்ல
தான் ஏற முடியும்...

மணி சரியா 8.30. தேவாகிட்ட
இருந்து போன்...

" சார்.. நான் பஸ் ஏறிட்டேன்..! "

" அப்படியா..? பஸ் நம்பரு..? "

" 59 சார்.."

" ஓ.கே.. நான் பாத்துக்கறேன்..! "

பஸ் ஸ்டாப்ல..
நான் 10 நிமிஷமா Wait பண்ணிட்டு
இருக்கறதை பாத்த எனக்கு பக்கத்துல
இருந்த ஒரு ஆள்..

" எங்கே சார் போகணும்..? "

" ஈரோடு..! "

" ஓ.. அதோ வர்ற அந்த பஸ் கூட
ஈரோடு தான் போகுது.. வாங்க
போலாம்..!! "

நான் அந்த பஸ்சை பாத்தேன்..
அது ஒரு Private Bus.. " SNB "

" இல்ல சார்.. நீங்க போங்க.. நான்
அடுத்த பஸ்ல போயிக்கிறேன்..! "

" சீட் கூட காலியாத்தான் இருக்கு..! "

" இருக்கட்டும் சார்.. நீங்க ஏறிக்கோங்க..! "

அவரு ஏறிக்கிட்டாரு.. கூட 4 பேர்
ஏறினாங்க.. பஸ் ஸ்டார்ட் ஆகி
கிளம்பிடுச்சி..

அப்ப பஸ் உள்ள இருந்து ஒரு குரல்..

" வெங்கட் சார்.. சீக்கிரம் வாங்க..
இந்த பஸ்தான் ஏறுங்க.. ! "

யார்ரா அதுன்னு பாத்தா..
நம்ம சேலம் தேவா.. உடனே..

" ஸ்டாப்.. ஸ்டாப்.. ஸ்டாப்..!! "

ஒரு 30 அடி ஓடி போயி மூச்சு
வாங்க பஸ்ல ஏறினா..

அந்த ஆள் என்னை கொலைவெறில
பார்த்தாரு.. லைட்டா முகத்தை
திருப்பினா இந்தாண்ட கண்டக்டர்..
அவரும் அதே கொலைவெறி பார்வை..

ஹி., ஹி., ஹினு ஒரு வழி வழிஞ்சிட்டு.,
எஸ் ஆகி.. தேவாகிட்ட வந்து..

" உஸ்ஸப்பா.. வேற பஸ் மாத்தி
ஏறினா ஒரு போன் பண்ண மாட்டீங்களா.? "

" நான் மாத்தி ஏறலையே..! "

" ????!!!! "

" நீங்க இந்த பஸ் நம்பர் ப்ளேட்
பார்க்கலையா..? TN 52B - 059 "

" அடப்பாவிகளா..? Govt பஸ்ல ஏறினா
நம்பர் சொல்ல சொன்னா.. Private பஸ்ல
ஏறிட்டு நம்பர் ப்ளேட் நம்பர் எல்லாமா
சொல்லுவீங்க..?!!! "

டிஸ்கி : நாங்கள் ஈரோடு சங்கமத்தில்
கலந்து கொண்ட அழகை படிக்க
விரும்புகிறவர்கள்.. க்ளிக் பண்ணவும்

" ஈரோடு சங்கமம் " - வெளிவராத செய்திகள்..!
.
.

19 December 2011

" ஈரோடு சங்கமம் " - வெளிவராத செய்திகள்..!

டிஸ்கி : " ஈரோடு சங்கமம் " பத்தி
இந்நேரம் பல பேர் எழுதி இருப்பாங்க..
இன்னும் எழுதுவாங்க..

So.. நாம எந்த ப்ளாக்லயும் வெளிவராத
மத்த விஷயங்களை பார்க்கலாம்.

" ஈரோடு சங்கமம் "நிகழ்ச்சில
கலந்துக்க நான் வர்றேன்னு தெரிஞ்சதும்.,
பஸ் ஸ்டேண்ட் அருகே என் வாசகர்கள்
வைத்த கலக்கல் கட்-அவுட்..!

( ஹி., ஹி., அடங்க மாட்டோம்ல..!! )

" வெங்கட் வரட்டும்னு " Wait
பண்ணிட்டு இருக்காம 10.15-க்கு
நிகழ்ச்சியை Sharp-ஆ ஆரம்பிச்ச
அந்த Punctuality எனக்கு ரொம்ப
பிடிச்சி இருந்தது.


வந்திருந்த 230 பதிவர்கள்ல என்னை
மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலா
கவனிச்சாங்க.

( எனக்கு குடுத்த க்ளாஸ்ல
எல்லோரையும் விட 5 ml ஜூஸ்
அதிகமா இருந்துச்சில்ல..!! )

( நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட மஞ்சள் கலர் ஜூஸ்.
டேஸ்ட்.. செம, செம..!! )

சிறந்த பதிவர்களை பாராட்டி
அவார்ட் குடுத்துட்டு இருந்தாங்க..
அப்ப செல்வா என்கிட்ட..

" தல.. உங்களுக்கும் அவார்ட் தருவாங்களா.? "

" கேட்டாங்க.. வேணாம்னு சொல்லிட்டேன்.! "


யார் போட்டோ எடுத்தாலும் உடனே
கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்ளும்

சி.பி.செந்தில்குமார். அசந்த நேரத்தில்

க்ளிக்கியது...



மேடை ஏறி பதிவர்கள் தங்களை
பற்றி Intro பண்ணிக்கொள்ளும் போது
சேலம் தேவா பேசியது...

" நான் வலையுலகத்துக்கு வந்ததுக்கு
காரணமே வெங்கட் தான்..! அவரோட
கோகுலத்தின் சூரியன்
Blog-ஐ பாத்து
Inspire ஆகி தான் நானும் ஒரு Blog
ஆரம்பிச்சேன் "-னு சொன்னப்ப
கரகோஷம் விண்ணை பிளந்தது..

( நானு, சி.பி.செந்தில், " நாய் நக்ஸ் " நக்கீரன்,
செல்வா நாலு பேரும் ( மட்டும்.?! )
கையை தட்டிட்டே இருந்தோம்ல.. )

( சே..! எவ்ளோ Training குடுத்து அனுப்பினாலும்
ரெண்டு Points மிஸ் பண்ணிடுராரே..!!! )

டிஸ்கி :

மேலே இருக்குற கட்-அவுட்
நிஜம்னு
சில பேர்
நம்பிட்டதா எனக்கு தகவல்
வந்தது...
அது கிராபிக்ஸ் by Salem Deva

" இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது.?!! "
.
.

12 December 2011

" ரீஃபைண்ட் ஆயில் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

உங்க வீட்ல ரீஃபைண்ட் ஆயில்
Use பண்றீங்களா.? அப்ப இதை
கட்டாயம் படிங்க...


டிஸ்கி : " க்ரைம் நாவல்"-ல ராஜேஷ்குமார்
ஒரு வாசகர்க்கு எழுதின பதிலை இங்கே
அப்படியே போடறேன்..

உணவியல் பற்றி நன்கு அறிந்த திரு.S.சக்ரபாணி
ஒரு கட்டுரையில் நாம் உபயோகிக்கும்
சமையல் எண்ணெய் பற்றி சில அதிர்ச்சியான
விபரங்களை சொல்லியிருந்தார்.. அதை தான்
இப்போது சொல்லப் போகிறேன்.

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில்
ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,
நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்.,
மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த
எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.

இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு
தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,
தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,
கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ்,
வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும்
மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு
சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து
முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய
நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும்
வைத்து இருந்தனர்.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,
மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால்
அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றி
கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள்
இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக
" நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.
வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று
அழைக்கிறர்கள்.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும்
ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள்
எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான
உண்மை.

சரி., ரீஃபைண்ட் ஆயில் எப்படி
தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா..

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில்
காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க
வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு
எடுக்கிறார்கள்.

பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின்
மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து
அதில் இருக்கும் வாசனையை அறவே
நீக்கிவிடுகிறார்கள்.

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன்
மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.

இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில்
பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள்
எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால்
" சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று
நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து
கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது
அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது
சூடு தாங்காமல் உருக்குலைந்து
உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும்
ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்க்கையான
எண்ணெய்யை சூடுப்படுத்தினால்... அது
ரசாயன கலவையாக மாறாது. அதன்
தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல்
நமக்கு கிடைக்கும்.

எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால்
இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு
உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக
பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு
இருக்கிறார்கள்.

ரசாயன பொருட்களால் பாழ்படுத்தப்பட்டு.,
உடல் ஆரோக்கியத்திற்க்கு அவசியமான
பொருட்கள் நீக்கப்பட்ட ஒரு திரவத்தை
ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்பனை
செய்ய அரசாங்கமும்., மெடிக்கல் கவுன்சில்களும்
எப்படி அனுமதி அளிக்கின்றன...??

நாமும் யோசிக்கும் சக்தியை ஏன் இழந்து
விட்டோம்.?

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம்
சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான்
காரணம் என்று சொல்லி நம்மை நாமே
ஏமாற்றி கொள்கிறோம்.

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு
எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை
வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.
இதற்க்கான காரணங்களில் முக்கியமான
இடத்தை பிடித்து இருப்படி ரீஃபைண்ட் ஆயில்.

" விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கிறது
அதற்க்கு ஏற்றார்போல் நாமும் மாற வேண்டும்."
என்று சிலர் சொல்லக்கூடும்.

ஆனால் விஞ்ஞானம் தொழில்துறையில்
இருக்கலாம்.,நம்முடைய உடல் ஆரோக்கியத்தோடு
அந்த விஞ்ஞானம் விளையாடக்கூடாது..

===============================================
மேலும் சில பதிவுகளில்....

// எண்ணை உண்மை:

கொட்டைகள், விதைகளிலிருந்து நேரடியாக
எடுக்கப்படும் எண்ணை தான் சிறந்ததே தவிர,
ரீபைண்ட் ஆயில் அல்ல. அதில் நார்ச்சத்து
இழக்கப்பட்டு விடுகிறது. //

Source : உணவு பழக்கம்


// முற்றிலும் தண்ணீர் போன்ற ஒரு திரவம் தான்
ரீஃபைண்ட் ஆயில். சமையலில் உணவு பொறிக்கப்படும்
போது, அதிகச் சூட்டினால் இந்த எண்ணெய் போன்ற
திரவம் முற்றிலுமாய் சிதைந்து விடுகின்றதாம்.
இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் தான்,
ஆஸ்துமா, தைராய்டு, புற்று நோய் ஏற்படுகிறதாம். . //

Source : புற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்

எந்த விஷயமா இருந்தாலும் அதை
ஒரு இங்கிலீஷ்காரன் சொன்னா தானே
நாம " சரி "- ன்னு ஒத்துப்போம்..
( வெள்ளையா இருக்கறவன் பொய்
சொல்ல மாட்டான்ல...! )

Source : Refining Vegitable Oil : A Nasty Process

பின் டிஸ்கி : இன்னில இருந்து எங்க வீட்ல
ரீஃபைண்ட் ஆயிலுக்கு " டாட்டா.. பை பை.. "
.
.

05 December 2011

Why this கொலைவெறி டி..!?!!!


ரெண்டு நாள் முன்னாடி தான்
என் Friend ஹரி போன் பண்ணி

Youtube-ல " Why this கொலைவெறி டி..! "
பாட்டு பாத்தியான்னு கேட்டான்..

இன்னும் இல்லன்னு சொன்னதும்...

" ?!!@?##?#!@!?@### "

" ஹேய்.. ஹேய்... No Bad Words..! "

" அப்ப முதல்ல போயி அதை பார்டா..! "

சரின்னு.. நானும் அவசர அவசரமா
Youtube-ல தனுஷ் பாடின அந்த பாட்டை
பாத்துட்டேன்..!

( அப்பாடி.. இனிமே ஊருக்குள்ள
தலை நிமிந்து நடக்கலாம்..! )

என்னா ஒரு பாட்டு..! என்னா ஒரு Lyrics..?!

( தம்பி..! பாட்டும், Lyrics-ம் ரெண்டும்
ஒண்ணுதான்பா.! )

ஹி., ஹி., ஹி.. இப்ப தான் பாட்டை
பாத்துட்டு வர்றேன்.. அதான்...

சரி அதை விடுங்க...

இதே பாட்டை பஞ்சாபி பொண்ணு
ஒண்ணு பாடின வீடியோவும் இருக்கு..


சும்மா சொல்லக்கூடாது.. இந்த பாட்டும்
நல்லாத்தான் இருக்கு..

ஆனா நிறைய பேர் இந்த பாட்டுக்கு
" Dislike " போட்டு இருக்காங்க..!

சிலர் இந்த பாட்டை திட்டி கமெண்ட்
வேற போட்டு இருந்தாங்க..

அங்கே இருந்த கமெண்ட்ஸ்ல சில
என்னை அப்படியே புல்லரிக்க
வெச்சது...

இதோ சில சாம்பிள் கமெண்ட்ஸ்..

" Pls dont kill TAMIL language.. "

" உனக்கு தமிழ் மேல என்ன கொலைவெறி டி..!"

" Go get a lesson on Tamil and come back. "

" தமிழ் இனி மெல்லச்சாகும்..! "

இதை எல்லாம் படிச்சதுக்கு அப்புறம்
தான் எனக்கு அந்த உண்மையே
தெரிஞ்சது...
.
.
.
ஆஹா.., அப்ப நம்ம தனுஷ் பாடினது
" தமிழ்ப் பாட்டா..!?! "

=========================================================

போனஸ் Track :

ஜூனியர் Nigam ( Nevaan Nigam ) பாடினது..


.
.