சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

31 October 2011

7-ஆம் அறிவு..! ( இது விமர்சனம் அல்ல..! )

டிஸ்கி : இது " 7-ஆம் அறிவு "
பட விமர்சனம் அல்ல.
























போன வாரம் எங்க பையன்
ஸ்கூல்ல Parents Meeting-க்கு
நாங்க போயிருதோம்.

மீட்டிங் முடிஞ்சி வெளியே
வரும்போது அங்கே ஒரு
Long Size Note வெச்சி இருந்தாங்க.
Parents அவங்க Suggestions எழுதவாம்...

சரி நாமளும் அந்த Note-ல
எதாவது எழுதலாமேன்னு போனா..

அங்கே ஒரு 4th Std பொண்ணோட
அப்பா எதோ எழுதிட்டு இருந்தாரு..

சரி. அவர் எழுதட்டும்னு நான்
Wait பண்ணினேன்.

பண்ணினேன்..பண்ணினேன்..
Wait பண்ணிட்டே இருந்தேன்.

5 நிமிஷம் ஆகியும் Note என் கைக்கு
வரலை.... அப்படி என்னதான்டா
எழுதறார்னு லைட்டா எட்டி பாத்தேன்..

அரை பக்கத்துக்கு மேல இங்கிலீஷ்ல
எதோ எழுதிட்டு இருந்தாரு..

( ஓ.. இவரு.. நம்ம ஸ்கூல்ல படிச்சி
இருக்க மாட்டார் போல..!!)

மறுபடியும் Wait பண்ணினேன்..
2 நிமிஷம் ஆச்சு..

இப்ப அவரு முக்கால் பக்கத்தை
தாண்டிட்டாரு..

அப்புறம் என் Wife என்னை
தேடி வரவும்., அவரு Note-ஐ
என்கிட்ட தந்துட்டு போகவும்
சரியா இருந்தது..

" மாலா.. அவரை நல்லா பாத்துக்கோ..! "

" யாருங்க அவரு..? "

" இந்த அப்பாடக்கர்.. அப்பாடக்கர்னு
சொல்றாங்கல்ல.. அந்த ' அப்பா-டக்கர் '
இவர் தான்.."

என் Wife ஓண்ணும் புரியாம முழிக்க..,
அவர் எழுதின Note-ஐ காட்டினேன்..
அதை பாத்துட்டு என் Wife..

" படிச்சவங்களை பாத்தா உங்களுக்கு
ஏங்க இவ்ளோ காண்டு...?! "

" என்னாது படிச்சவங்களா..? அப்ப
நாங்கல்லாம் மாடு மேய்ச்சவங்களா..?
நீ ஒரு MCA Gold Medalist -கிட்ட பேசிட்டு
இருக்க. Mind It..! "

" அந்த Gold Medal., AVR Jewellers-ல
வாங்கினதுன்னு உங்க பாட்டி
என்கிட்ட சொல்லிட்டாங்க..! "

" ஹி., ஹி., சொல்லிட்டாங்களா..? "
( கர்ர்ர்ர்ர்ர்...! )

" சரி., உங்க MCA அறிவை Use
பண்ணி அவர் எழுதின மாதிரி
English-ல எழுதுங்க பார்க்கலாம்..! "

நோட்டை வாங்கி அவர் எழுதின
இங்கிலிபீசை ஒரு தடவை
லுக் விட்டேன்...

" ப்பூ.. இதென்ன பிஸ்கோத்து மேட்டரு..!
இப்புடு சூடூ........"

பேனாவை எடுத்து..,
டக்னு எழுதினேன்...

" REPEATUUUUUUU..! "
.
.

27 October 2011

இது Thousand Much மச்சி...!!















தீபாவளிக்கு முதல் நாள்
எங்க காலேஜ் களை கட்டும்..!

கிளாஸ் நடந்துட்டு இருக்கும்
போது திடீர்னு காலேஜ்ல
எதோ ஒரு மூலையில
பட்டாசு வெடிக்கும்..

எங்களுக்கு செம ஜாலியா
இருக்கும்.. அடுத்த பட்டாசு
எப்ப வெடிக்கும்னு ஆவலா
எதிர்பாத்துட்டு இருப்போம்..

( என்னாது.. அப்ப கிளாஸை
எப்ப கவனிப்பீங்களாவா..?!
அந்த மாதிரி தீய பழக்கங்கள்
எல்லாம் எங்களுக்கு எப்பவுமே
கிடையாது.. )

லஞ்ச் பிரேக் வந்துட்டா போதும்.
காம்பவுண்ட் சுவர்., டாய்லட்.,
சைக்கிள் ஸ்டேண்ட், கேண்டீன்னு
எங்கே பார்த்தாலும் " டமார் டமார் "
தான்..

எங்க பிரின்சிபாலும் இதை தடுக்க
நிறைய முயற்சி பண்ணினார்..
ஆனா முடியல..

அதனால அடுத்த வருஷம் ரொம்ப
Strict-ஆ இருந்தார்...

முக்கியமான இடத்துல எல்லாம்
வாட்ச்மேன்., லேப் அசிஸ்டெண்ட்ஸ்.,
ப்யூன்., P.T மாஸ்டர்னு நிறைய
உளவாளிகளை நிக்க வெச்சிட்டார்..

பிரின்சிபாலும் அங்கிட்டு, இங்கிட்டு
சுத்திட்டு செம ரவுண்ட்ஸ்ல இருந்தாரு,,

அதனால.. எங்க பசங்களால
பட்டாசு வெடிக்க முடியல..

மதியம் வரைக்கும் ஒரு சின்ன
ஊசி பட்டாசு சத்தம் கூட இல்ல..
வெறுத்து போச்சு..

திடீர்னு " பட பட படன்னு "
ஒரு 1000 வாலா வெடிக்கிற சத்தம்..


அட இவ்ளோ கெடுபிடியையும் மீறி
எங்கடா பட்டாசு வெடிக்குதுன்னு
எல்லோரும் ஓடி போயி பாத்தா...

யாரோ ஒரு நல்லவன்
எங்க பிரின்சிபால் ரூம்ல
பட்டாசை கொளுத்தி போட்டு
இருந்தான்..

ஸ்டூடண்ட்ஸ் பவர்..
ஹி., ஹி., ஹி..

டிஸ்கி :

மாட்டிக்கொள்ளாமல் பட்டாசு
வைப்பது எப்படி..?

கமெண்ட் நம்பர் 13 படிக்கவும்.
.
.

25 October 2011

10% மேதை..!


















அப்பாடா.. ஒரு வழியா நான்
ஆசைப்பட்ட Sony HX100-V கேமரா
வாங்கிட்டேன்..

( அமெரிக்கால இருக்குற
என் மச்சான் கீர்த்தி இனிமே
நிம்மதியா இருப்பான்..! )

எனக்கு அந்த கேமராவை
10% Discount-ல் வாங்கி தந்த
சேலம் தேவாவுக்கு என் நன்றிகள்..
( இவர் ஒரு Professional Photographer. )

அந்த கேமராவை பாத்துட்டு
தேவாவுக்கே ஆச்சரியம் தாங்கல..

என்னை பாத்து கேட்டாரு...

" இவ்ளோ பெரிய கேமரா உங்களுக்கு
எதுக்கு வெங்கட்..? "

" என்ன தேவா இப்படி கேட்டுடீங்க..?
சின்ன வயசுல இருந்தே Photography-னா
எனக்கு உசுரு..!! "

" ஓ.. அப்படியா..? "

" ஆமா.. இப்ப கூட PIT Blog-ல மாச மாசம்
போட்டி நடத்தறாங்கல்ல.. "

" ஆமா.. "

" அதுல அடுத்த மாச போட்டியில
ஜெயிக்கறது தான் என்னோட
அடுத்தகட்ட ப்ளான்.. "

" ஓ.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..! "

" Thanks தேவா..! ஆங்.. ஒரு சின்ன டவுட்.."

" சொல்லுங்க வெங்கட்...! "

" இதுல போட்டோ எடுக்க
எந்த Button-ஐ அமுக்கணும்..?!! "

" ?!!??!?! "

டிஸ்கி :

போட்டோகிராபி மேதை Ivars Gravlejs
எழுதின " 78 Photography Tips-ஐ "
நான் 10% படிச்சி இருக்கேன்..

இதோ அதுல இருந்து நான்
கத்துகிட்ட 7 Tips..







Last But Not Least....


.
.

18 October 2011

VKS... ஹேண்ட்ஸ் அப்..!















வர வர எங்களை யாருக்குமே
தெரிய மாட்டேங்குதுன்னு
VKS Members எங்ககிட்ட ரொம்ப
பீல் பண்ணினதால..

அவர்களுக்காக அவர்களை பற்றிய
ஒரு சிறப்பு பதிவு..

VKS = எங்ககிட்ட அடி வாங்கறதுக்குன்னே
இருக்குற 6 பேர் கொண்ட ஒரு குழு..!

சிம்பிளா ஒரு லைன்ல சொல்லணும்னா..
VKS ஒரு " டம்மி பீஸ்...!! "

" வலிக்காத மாதிரியே நடிக்கும் "
அந்த 6 பேர்கள் இவிங்க தான்...

அனு : ( VKS தலைவலி.. சாரி தலைவி )
இவங்க தன்மான சிங்கம்..

தன் தகுதிக்கு ஏற்ப சம்பளம்
தர ஒரு கம்பெனி முன்வந்தும்,
அவ்ளோ 'சீப்'பான சம்பளத்துல
வேலை செய்ய மாட்டேன்னு
சொன்னவங்க..

ரமேஷ் :
இவர் இந்த நாட்டில் தான் பிறந்தார்..

இது மாதிரி கொடூரமான நிகழ்ச்சிகள்
வேற நாடுகள்லயும் நடக்கறது உண்டு..!

ரசிகன் :
இவருக்கு சங்கீதம் ரொம்பவே ஸ்பெஷல்..

இவர் சங்கீதம் கத்துக்க நிறைய
செலவு ஆச்சாம்..
( பக்கத்து வீட்டுக்காரங்க இவங்க அப்பா
மேல கேஸ் போட்டதால.. )

அருண் :
இவரால நிறைய பிக்பாக்கெட்ஸ்
திருந்தி இருக்காங்க..

இவர்கிட்ட எத்தனை தடவை
பிக்பாக்கெட் அடிச்சாலும்., வெறும்
Training மட்டும் தான் கிடைக்குமாம்..!

பெ.சொ.வி :
இவர் ஒரு " ஜென்டில்மேன் "...

ATM -ல பணம் எடுக்கும் போது கூட
அந்த Machine-க்கு " Thanks " சொல்லிட்டு
தான் வருவாருன்னா பாருங்களேன்..!

கார்த்தி :
இவருக்கு கம்ப்யூட்டர் மைண்ட்..

இவரை சொந்தமா யோசிக்க
வைக்க இப்போ நிறைய பேர்
Try பண்ணிட்டு இருக்காங்க..
.
.

13 October 2011

ஸ்பெஷலான நாள்..!


அக்டோபர் 13..
ஒரு ஸ்பெஷலான நாள்..

ஏன்னா..
இன்னிக்கு ஒரு புத்திசாலிக்கு Birthday..

Stop..,Stop.., Stop..!!

யாருப்பா அது.. அதுக்குள்ள
" Happy Birthday to You "-ன்னு பாடறது..?

நான் Genius-க்கு Birthday-ன்னா
சொன்னேன்..?
( நம்ம Birthday April 13.. )

நான் சொன்ன அந்த புத்திசாலி
என் மனைவி மாலா.!

" Happy Birthday to Mala.! "

என் மனைவியின் புத்திசாலிதனத்துக்கு
ஒரு சின்ன உதாரணம்...

எங்களுக்கு கல்யாண Fix ஆனப்ப...

" இந்த பையனா.. நல்லா யோசிம்மானு "
பல பேர் குழப்பினாங்க..

அப்ப எல்லாம்..

" அவரு ரொம்ப நல்லவரு., வல்லவரு.,
அன்பானவரு., பண்பானவருன்னு.. "
மத்தவங்ககிட்ட என்னை பத்தி
எனக்கே தெரியாததை எல்லாம்
எடுத்து சொல்லி..

" என்னை தான் கல்யாணம்
பண்ணிக்கணும்னு " ஒரு
புத்திசாலித்தனமான Decision
எடுத்தவங்க.. என் மனைவி..!

அதே மாதிரி எனக்கு என் Wife-கிட்ட
பிடிச்ச இன்னொரு விஷயம்..

என் மனைவி ரொம்ப சிம்பிள்..!

ஒரு பிரபல பிளாக்கரோட மனைவிங்கற
பந்தா அவங்ககிட்ட கொஞ்சம் கூட
கிடையாது..! ( ஹி., ஹி.! )

ஆங்.. முக்கியமான மேட்டரு
சொல்ல மறந்துட்டேனே....

இந்த வருஷம் அவங்க Birthday-க்கு
ஒன்ரை பவுன்ல ஒரு நெக்லஸ்
வாங்கி தரலாம்னு யோசிச்சிட்டு
இருக்கேன்..

என்ன அப்படி சந்தேகமா
பார்க்கறீங்க..?

இதே மாதிரி..

2008-ல - 7000 ரூபாய்க்கு ஒரு பட்டுப்புடவை.
2009-ல - 10000 ரூபாய்க்கு ஒரு மொபைல்.
2010-ல - 15000 ரூபாய்க்கு ஒரு LED Tv..

எல்லாம் வாங்கி தரணும்னு யோசிச்சி
இருந்தேன் தெரியுமா..! ( ஹி., ஹி.! )
.
.

06 October 2011

இதெல்லாம் ஒரு தப்பா சார்..?!!


பசங்களுக்கு பாடம் சொல்லி
குடுக்கும் போது என் Wife ரொம்ப
Strict Officer..!

அடுத்த நாள் என் பையனுக்கு
Quarterly English Exam. என் Wife
அவனுக்கு Letter Writing Practice
குடுத்துட்டு இருந்தாங்க..

அப்ப அவன்கிட்ட...

"உன் பிறந்த நாள்க்கு Gift குடுத்ததுக்கு
உங்க சித்தப்பாவுக்கு Thanks சொல்லி
ஒரு லெட்டர் எழுதி வை"ன்னு சொல்லிட்டு
கிச்சன்ல வேலையை முடிக்க போனாங்க..

அவனும் "சரிம்மா"ன்னு எழுத
ஆரம்பிச்சிட்டான்...

Dear Small Father.,

How are you.? I'm Fine here.
How is My Small Mother.?
How is My Small Sister Harini..? and
How is My Small Small Sister Vandana..?

I Like Hero Pen., Writing is Super.
Colour is Supero Super. I Like it.
Thanks for Gift.

Thanking You

Your Big Brother's Son
Surya
IV Std "D"

இந்த லெட்டரை படிச்சிட்டு
என் Wife... அவனை திட்டினாங்க...

"டேய்.. நான் உன்னை தனியா
உக்காந்து தானே எழுத சொன்னேன்..? "

" ஆமாம்மா..!! "

" அப்புறம் எதுக்குடா உங்கப்பாகிட்ட
கேட்டு எழுதுன? "

இதை கேட்டுட்டு எனக்கு
பயங்கர " ஷாக்கா " போச்சு..

' பட் 'னு என் Wife-ஐ பாத்து கேட்டேன்..

"ஆமா... இந்த விஷயம் உனக்கு எப்படி
தெரிஞ்சது..?!! "
.
.

03 October 2011

உஷ்..!! ரகசியம்..!!

சீக்ரெட் நெ : 1

" 2 மாசமா எங்கே போயிருந்தீங்க..?
என்ன பண்ணிட்டிருந்தீங்கன்னு.? "
மட்டும் யாரும் என்னை கேக்காதீங்க..

ஏன்னா.. அது எங்க Department Secret..!!

நான் ஒரு CBI Officer-ங்கறதையே
வெளியே சொல்லக் கூடாது..

இதுல 2 மாசமா Spectrum Case-ல
துப்பறிஞ்சி பல உண்மைகளை
கண்டுபிடிச்சதை எப்படிங்க
வெளியே சொல்ல முடியும்..?!!

அதனால தயவு செஞ்சி புரிஞ்சிக்கோங்க..!

சீக்ரெட் நெ : 2

திடீர்னு ஒரு நாள் எனக்கு
ஒரு புது நம்பர்ல இருந்து
ஒரு Call வந்தது..



" ஹலோ வணக்கம் சார்....!! "

" வணக்கம்.. ஆமா நீங்க..? "

" என் பெயர் கணேஷ் சார்..!
ஊரு சென்னை..! மங்குனி சார்
தான் உங்க நம்பர் குடுத்தாரு.. "

" ஓ.. அப்படியா..? சொல்லுங்க
கணேஷ்..!! "

" நான் உங்க Fan சார்..! உங்க
போஸ்ட் எல்லாம் ரெகுலரா
படிப்பேன்..!! ரொம்ப சூப்பரா
எழுதறீங்க.!! ""

" ரொம்ப Thanks கணேஷ்..!! "

" உங்க பதிவை எல்லாம் படிச்சா
என்னால சிரிப்பை Control பண்ணவே
முடியாது.. நாள் பூரா சிரிச்சிட்டே
இருப்பேன்..! "

" நீங்க என்னை ரொம்ப புகழ்றீங்க..!! "
( தன்னடக்கம்..!! )

" இல்ல சார்.. உண்மைய தான்
சொல்றேன்..! எப்படி இவ்ளோ
காமெடியா எழுதறீங்க...? "

" ஹி., ஹி., அதெல்லாம் தானா
வருது கணேஷ்..!! "

" சார்.. ஒரு சின்ன டவுட்..
கேக்கலாமா.? "

" கேளுங்க.. கேளுங்க..!! "

" உங்க Blog-ல ஏன் சார் வித்யாசமா
பெயர் வெச்சி இருக்கீங்க..? "

" ஓ.. அதுவா.. அது என் பசங்க பேரு..! "

" சார்ர்ர்ர்ர்ர்...!! தமாஷ் பண்ணாதீங்க..!
இப்படி எல்லாமா பசங்களுக்கு பெயர்
வெப்பாங்க..?? "

" ஏன் வெச்சா என்ன தப்பு..??! "

" போங்க சார்.. நீங்க என்கிட்ட
காமெடி பண்றீங்க..! "

" அட இதென்ன வம்பா இருக்கு..
நான் சொல்றது நிசம்...

கோகுல் + சூர்யா = கோகுலத்தில் சூரியன்..!! "

" கோகுலத்தில் சூரியனா..? அது என்ன
சார்..? "

" அது என்னவா..? அதான் என் Blog பேரு..! "

" ஐயோ..! அப்ப நீங்க பன்னிகுட்டி ராமசாமி
இல்லையா..? நான் அவருன்னு
நினைச்சில்ல இம்புட்டு நேரம் பேசிட்டு
இருக்கேன்.. !! "

" என்னாது....? பன்னிகுட்டி ராமசாமியா..?!!

கிர்ர்ர்ர்ர்ர்..!!!

இதுக்கு தான் நைட் 8 மணிக்கு மேல
மங்குனிகிட்ட நம்பர் வாங்காதீங்கன்னு
சொல்றது.....! "

( உஸ்ஸப்பா..., படுத்தறாங்களே...!!! )

சீக்ரெட் நெ : 3
இன்று பிறந்தநாள் காணும் VKS-ன்
மூத்த தலைவி அனு அவர்களை
வாழ்த்த வயதில்லை... வணங்குகிறோம்..!!

" பிறந்த நாள் வாழ்த்து பதிவு " போட
சொல்லி அனு கெஞ்சி கேட்டுக்
கொண்டாலும்..,

அதுக்கு நேரமில்லாத காரணத்தால்..
போன வருஷ பதிவையே அனைவரும்
படித்து குதூகலிக்குமாறு அன்போடு
கேட்டுக்கொள்கிறோம்.

. .