சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

17 July 2012

ஆடியில அடிக்குதம்மா.....கையில 15,000 ரூபா இருக்கு
என்ன பண்ணலாம்..?

Fridge-ஐ மாத்திட்டு புதுசு வாங்கலாமா..?

TV-ல விளம்பரம் வர்ற அந்த
புது மாடல் Fridge கூட பாக்க 
நல்லா தான் இருக்கு., 


கூடவே Offer-ல ஒரு குக்கர் வேற 
தர்றாங்கலாம்..

சரி., நாளைக்கே அதை வாங்கிடலாம்..!

இப்படி சில பேர் டக்கு டக்னு முடிவு
எடுத்துடறாங்க.. இது ரொம்ப தப்பு..!

( ஆமா.., இதுல என்ன தப்பு இருக்கு..? )

" என்ன தப்பு இருக்கா...? சொல்றேன்
நோட் பண்ணிக்கோங்க...! "

1. 15,000 ரூபா இருக்குங்கறதுக்காக
அதை செலவு பண்ண நினைக்கிறது
முதல் தப்பு.

2. பழசுங்கறதுக்காக நல்லா இருக்குற
ஒரு பொருளை மாத்த நினைக்கிறது 
ரெண்டாவது தப்பு.

3. புது Fridge வாங்கணும்னு முடிவு
பண்ணினதும்., உடனே வாங்கிடணும்னு 
துடிக்கிறது மூணாவது தப்பு.

4. " எந்த Fridge நல்லா இருக்குன்னு..? "
தெரிஞ்சவங்க நாலு பேர்கிட்ட Opinion
கேக்காதது நாலாவது தப்பு.

5. Free-யா வருதேன்னு தேவையில்லாத
குக்கர்க்கு ஆசைப்படறது அஞ்சாவது தப்பு..!

6. Offer-ன்னு சொல்லி தரமில்லாத
Fridge-ஐ வாங்க நினைக்கிறது
ஆறாவது தப்பு..!

இப்படிக்கு..,

வீட்டில் சொல்ல முடியாததை எல்லாம் 
தைரியமாக Blog-ல் சொல்லுவோர் சங்கம்..

சேலம் கிளை.

( அவ்வ்வ்வ்....!!! )
.
.

10 July 2012

ஒரு ஊர்ல, ஒரு கம்பியூட்டர் இஞ்ஜினியர்..!


நேத்து Evening என் கூட +2-ல படிச்ச
என் Friend கணேஷ் போன்
பண்ணியிருந்தான்..

" ஹலோ..! "

" டேய்.. நீ என்ன படிச்சி இருக்க..? "

எடுத்தவுடனே இப்படி ஒரு கேள்வியை
அவன் கேட்டதும் எனக்கு தூக்கி வாரி
போட்டது..,

( பொதுவா என் படிப்பு சம்பந்தமா
யாராச்சும் கேட்டா எனக்கு அப்படிதான்
ஆகும்...! ஹி., ஹி., ஹி.. )

" ஏன்டா.. என்ன விஷயம்..? "

" நீ மொதல்ல சொல்லு..! "

" நான் இந்த உலக இலக்கியம்.,
இந்திய இலக்கியம் எல்லாம்
படிச்சி இருக்கேன்..! "

" டேய்... போதும்.. நான் கேட்டது
அதில்ல. நீ காலேஜ்ல என்ன
டிகிரி படிச்ச..? "

" ஓ.. அதை கேக்கறியா..? நான் MCA
படிச்சி இருக்கேன்..! "

" அது கம்பியூட்டர் சம்பந்தமான படிப்பா..?! "

" ஆமா...! "

" டிகிரி வாங்கிட்டியா. இல்ல எதாச்சும்
அரியர் இருக்கா..? "

" ஹேய்... யாரை பாத்து... நான் தான்
MCA-ல காலேஜ் First..! "

" அப்ப உன் திறமையை Use பண்ணவேண்டிய
நேரம் வந்துடுச்சி மச்சி...! "

" நேரம் வந்துடிச்சா...? அப்படின்னா..."

( ஐய்யயோ... சாப்ட்வேர் எதாச்சும்
டெவலப் பண்ண சொல்லுவானோ..! )


( கொஞ்சம் ஓவராதான் போயிட்டோமோ..!! ) 

" என் பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல.... " 

" ஸ்கூல்ல..... " 

" தெர்மோகோல்ல கம்பியூட்டர் 
பண்ணிட்டு வர சொல்லி இருக்காங்க... 
கொஞ்சம் வந்து பண்ணி குடேன்..! " 

" அடி செருப்பால... புல்லு புடுங்க 
பில்கேட்ஸ் வேணுமாடா உனக்கு...? " 

" டென்ஷன் ஆகாதடா.. உன் படிப்பை மதிச்சி 
எவனாவது உனக்கு வேலை குடுத்தானா..? 
நானாவது இந்த வேலை குடுத்தேன்னு 
சந்தோஷப்படுவியா.. அதை விட்டுட்டு..!! " 

" ஹி., ஹி., ஹி.., தெர்மோகோல் எல்லாம் 
ரெடியா இருக்கா மச்சி...! "
.
.