சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

21 May 2010

ஒரு கிக் ( Kick ) பதிவு..!!


ஒரு நாள்
நானும் என் பையனும்
பைக்ல போயிட்டு இருந்தோம்..

அப்போ ஒரு " நல்ல குடிமகன் "
எங்க வண்டில வந்து
விழுந்திருப்பாரு.,
Sudden Brake.. Just Escape..

ஆனா எனக்கு மனசு
பட படன்னு ஆயிடிச்சி..,

அப்ப என் பையன்..

" ஏம்பா அவரு அப்படி
தள்ளாடிட்டே வர்றாரு..? "

" அவரு குடிச்சிருக்காரு.. அதான் "

" என்ன குடிச்சிருக்காரு..? "

சின்ன பையனா இருக்கானே
என்ன சொல்றதுன்னு
ஒரு நிமிஷம் யோசிச்சேன்..

சரி உண்மையவே சொல்லலாம்..
நல்லது., கெட்டதை அவனே
முடிவு பண்ணிக்கட்டும்..

" அவரு Whisky, Brandy இந்த மாதிரி
ஏதோ ஒண்ணு குடிச்சிருக்காரு.. "

" அது குடிச்சா என்ன ஆகும்..? "

" ரொம்ப Danger..! உயிருக்கே ஆபத்தாயிடும்..! "

" அப்ப ஏன்பா கடையில எல்லாம் அதை
விக்கறாங்க..? "

" அது வந்து.., அது வந்து...!! "
( என்னால பதில் சொல்ல முடியால... )

இந்த கடையை நடத்துறதே
Government தான்னு இதுவரைக்கும்
அவனுக்கு தெரியாது..

" சின்னபுள்ளங்க கேள்வி எப்பவுமே
சின்னபுள்ளதனமா இருக்காது..!! "

ம்ம்.. எனக்கும் ஒரு சின்ன Doubt..

வள்ளுவர் தானே கள்ளுண்ணாமை
பத்தி பாடினவரு..,

மதுவிற்பனைக்கு
Yearly Target Fix பண்ணிட்டு.,
எப்படிப்பா இவங்க
அவர் சிலைக்கு
மாலை போடுறாங்க..??

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..!!
அப்படித்தானே..!!


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( பால கண்ணன் )
நீங்க " ஹாய் வெங்கட் " Start
பண்ணி இருக்கிறதை பத்தி
" ஹாய் மதனுக்கு " தெரியுமா.?

அவருக்கு தெரியாது..,
நான் சொல்லலை..
Ego Problem..


இன்று ஒரு தகவல் :
---------------------

ஒரு காலத்தில
பள்ளிக்கூடங்கள் அரசிடம் இருந்தது..
மதுக்கடைகள் தனியாரிடம் இருந்தது.,
இப்போ.. அது மாறி இருக்கு..
.
.

36 Comments:

அருண் பிரசாத் said...

வெங்கட் அடுத்த பதிவை போட்டுட்டார்........... ஹையா ஜாலி.... கூட்டமா கும்மி அடிக்கலாம் வாங்க.... டண்டநகா அ டனகுனகா டண்டநகா அ டனகுனகா.........

நான் தான் பிரஸ்ட் நான் தான் பிரஸ்ட்.

அருண் பிரசாத் said...

வெங்கட் தண்ணி அடிச்சது யாரோ ஒரு குடிமகன். உங்களுக்கு ஏன் Bed rest? உண்மைய சொலுங்க தண்ணி அடிச்சது யாரு? வண்டி ஓடினது யாரு? இல்ல ரெண்டும் ஒரே ஆளா?

வெங்கட் said...

@ அருண் பிரசாத்.,

உங்க Comment வந்தா மட்டும்
என் மொபைல் Default-ஆ
Reject காட்டுதே ஏன்..??

அன்னிக்கு நான் Sudden Brake
போடாம இருந்திருக்கணும்..
பாவம் நம்ம அருணாச்சேன்னு
நினைச்சது தப்பா போச்சி..

Vijay Anand said...

//இன்று ஒரு தகவல் :
---------------------

ஒரு காலத்தில
பள்ளிக்கூடங்கள் அரசிடம் இருந்தது..
மதுக்கடைகள் தனியாரிடம் இருந்தது.,
இப்போ.. அது மாறி இருக்கு..//

நல்ல தகவல்

அருண் பிரசாத் said...

நீங்க இன்னும் தெளியலையா? அதுக்கு தான் டாஸ்மாக் ல சரக்கு வந்கங்கதிங்கனு சொனது. பாருங்க REJECT பட்டன்னுக்கும் ACCEPT பட்டன்னுக்கும் வித்தியாசம் தெரியல. ஒரு சொம்பு மோர் குடிச்சிட்டு நல்லா BED REST எடுங்க, எல்லாம் கிளியர் ஆகிடும்.

Chitra said...

ஒரு காலத்தில
பள்ளிக்கூடங்கள் அரசிடம் இருந்தது..
மதுக்கடைகள் தனியாரிடம் இருந்தது.,
இப்போ.. அது மாறி இருக்கு..


...... நெத்தியடி கிக். சூப்பர்!

ஜெய்லானி said...

//" சின்னபுள்ளங்க கேள்வி எப்பவுமே
சின்னபுள்ளதனமா இருக்காது..!! "//

ம்..ம்..ம்..உண்மைதான்....

அனு said...

நான் எதாவது தப்பான ப்ளாக்-க்கு வந்துட்டேனா??

வெங்கட் யோசிக்குற மாதிரி பதிவு எல்லாம் போட்டிருக்கார்..

ஆமா, இந்த Whisky, Brandy.. இதெல்லாம் என்னங்க??

//அவருக்கு தெரியாது..,
நான் சொல்லலை..
Ego Problem..//

சொல்லிடாதீங்க.. ஒரு தற்கொலைக்கு நீங்க காரணம் ஆகிடாதீங்க

jana said...

@ அருண் பிரசாத்.,

சில பேர் கலாய்க்க வேண்டிய நேரத்துல
கலாய்ப்பாங்க.,
நீங்க எல்லா நேரத்திலயும் கலாய்க்க
முயற்சி பண்றீங்க..
ஜோக் அடிச்சா சிரிக்கலாம்.. அது Normal
எப்பவுமே சிரிச்சா - அது Abnormal..
நீங்க அப்படி இல்லைன்னு நினைக்கிறேன்
நம்ம வெங்கட் இந்த posting-ல
Message சொல்லி இருக்கார்...
அத நாம தான் எல்லோருக்கும்
புரிய வக்கனும்...

நீங்க நம்ம ஆளுன்னு நினக்கறேன்....
(இதயும் கலாய்க்க வேண்டாம்...)

நன்றி...

கவிதா said...

நீங்க உங்க மகனிடம் உண்மையை சொல்ல வேண்டியதுதானே,கவர்மெண்டே அதைதான் நம்பியிருக்கிறதென்று

அனு said...

//நம்ம வெங்கட் இந்த posting-ல
Message சொல்லி இருக்கார்...
அத நாம தான் எல்லோருக்கும்
புரிய வக்கனும்...
நீங்க நம்ம ஆளுன்னு நினக்கறேன்....
//

So, I am changing my comment..

//" சின்னபுள்ளங்க கேள்வி எப்பவுமே
சின்னபுள்ளதனமா இருக்காது..!! "//

//ஒரு காலத்தில
பள்ளிக்கூடங்கள் அரசிடம் இருந்தது..
மதுக்கடைகள் தனியாரிடம் இருந்தது.,
இப்போ.. அது மாறி இருக்கு..//

நல்ல சிந்தனைகள்...Keep it up..

வெங்கட் said...

நன்றி
விஜய் ஆனந்த், சித்ரா, ஜெய்லானி

வெங்கட் said...

@ அனு.,

// இந்த Whisky, Brandy.. இதெல்லாம் என்னங்க?? //

யப்பா..,
இது உலக மகா நடிப்புடா சாமீ..

// நல்ல சிந்தனைகள்.Keep it up. //

இது என்ன..?
கிளைமேக்ஸ்ல வில்லன்கள்
எல்லாம் திருந்தின மாதிரி ஒரு Effect..

அருண் பிரசாத் said...

ஜனாவின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கவும், சங்கதின் தானை தலைவி அணு அவர்கள் நல்ல பதிவு என கூறியதாலும், இந்த பதிவிற்கான கலாய்ப்பை வாபஸ் பெறுவதோடு சங்கத்தின் கலாய்ப்பை தற்காலிகமாக நிருதிவைகிரேன். ( வேற வழி - சப்போர்ட் ஏ இல்லபா).

யாராது சங்கத கலைக்க சொலுறது?

வெங்கட் உண்மைலேயே நல்ல பதிவு.

(நல்ல வேலை மன்னு ஓட்டலை..... எப்படிலாம் சமாளிக்க வேண்டி இருக்குது. ஒரு கோட்டர் அடிச்சா தான் தூக்கம் வரும் போல )

nTamil.com said...

ஒரு காலத்தில
பள்ளிக்கூடங்கள் அரசிடம் இருந்தது..
மதுக்கடைகள் தனியாரிடம் இருந்தது.,
இப்போ.. அது மாறி இருக்கு..

Realy SUPER !!!

வானதி லஷ்மணன் said...

நம் ப்ளாக்கரின் கமெண்ட்களை மொபைலில் எப்படி பப்ளிஷ் பண்ண முடியும்.. மொபைலை ப்ளாக்கரோடு கனெக்ட் பண்றது எப்படி?கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க புரியிற மாதிரி...

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

நகைச்சுவையில் இருந்து சீரியஸ் இடுகைகள் இட ஆரம்பித்தாயிற்றா - வாழ்க - தொடர்க - க்ள்ளுண்ணாமை இன்று சாத்தியமில்லை வெங்கட் - அரசின் வருமானம் தேவைப்படுகிற ஒன்று - ம்ம்ம்ம்

ஹாய் வெங்அட்டும் - இன்று ஒரு தகவலும் அருமை

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஒரு காலத்தில பள்ளிக்கூடங்கள் அரசிடம் இருந்தது.. மதுக்கடைகள் தனியாரிடம் இருந்தது.,இப்போ.. அது மாறி இருக்கு..//

ஒரு காலத்துல ப்ளாக் நல்லா எழுதுறவங்க கிட்டா இருந்தது ஆனா இப்போ வெங்கட் மாதிரி ஆளுங்ககிட்ட.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ஜனா வெங்கட்கிட்ட எவ்ளோ காசு வாங்குனீங்க?

வெங்கட் ரொம்ப நல்ல பதிவு. இனிமே வண்டி முன்னாடி போய் விழாதீங்க.

வெங்கட் said...

@ கவிதா.,

// நீங்க உங்க மகனிடம் உண்மையை
சொல்ல வேண்டியதுதானே,
கவர்மெண்டே அதைதான் நம்பியிருக்கிறதென்று //

சொல்லியிருக்கலாம் தான்..
அப்புறம் கவர்மெண்ட் மேல ஒரு
தப்பான அபிப்பிராயம் உண்டாயிடும்..
நல்லது செஞ்சாலும்., தப்பா பார்க்க
தோணுமே..

அனு ரசிகன் said...

// ( வேற வழி - சப்போர்ட் ஏ இல்லபா).//

என்ன அருண், இப்படி சொல்லிட்டீங்க. நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம். நம்ம தலைவிக்கு ஆணி அதிகமா இருந்ததால இதை கவனிக்கலன்னு நினைக்கிறேன்.

வெங்கட் முதல் முறையா சீரியஸ் பதிவு போட்டுட்டாராம்.. அதான், இவ்வளவு சீன்.

@வெங்கட்
சீரியஸ் பதிவு போட்டவங்க நகைச்சுவை பகுதியில ஏன் போஸ்ட் பண்ணினீங்க? அதனால, Benefit of doubt எங்களுக்கு தர வேண்டும் என்று கனம் கோர்ட்டார் அவர்களை கேட்டுக் கொ(ல்)ள்கிறேன்..

ரசிகன் said...

Good Post...
வள்ளுவர் கள்ளுண்ணாமை மட்டுமா சொன்னார்..
ஒழுக்கமுடைமை, நேர்மை, சான்றாண்மை,
செங்கோன்மை, புலால் மறுத்தல், புறங்கூறாமைன்னு
நிறைய சொல்லி இருக்கார்...
இதையெல்லாம் பண்ணுறவங்கதான் அவர
ம‌ரியாதை செய்யணும்னா...
அவர் சிலைக்கு மாலை என்ன...
சிலையே இருக்காது...

தகவல் பகுதி super...

வெங்கட் said...

@ வானதி.,

// நம் ப்ளாக்கரின் கமெண்ட்களை மொபைலில்
எப்படி பப்ளிஷ் பண்ண முடியும்.. //

1. உங்க மொபைல்ல GPRS Activate ஆகி
இருக்கணும். ( For Activation Call Customer Care )

2. Opera Mini Browser உங்க மொபைலுக்கு
Download பண்ணிக்கோங்க.
Opera Mini 4.2 நான் Use பண்றேன்..

3. Google-ல Search பண்ணி Download
பண்ணிக்கோங்க..
www.getjar.com இங்கேயும் கிடைக்கும்..

4. உங்க Browser open பண்ணி Address Bar-ல
opera:config டைப் பண்ணி நெட் Connect
பண்ணுங்க.

5. அதுல Use bitmap fonts for complex scripts- ன்னு
கடைசில ஒன்னு வரும்.. அதை " YES " --ன்னு
Change பண்ணிடுங்க..

6. இப்ப நீங்க உங்க மொபைல் வழியா
பதிவ பார்க்கலாம், Comment படிக்கலாம்,
பப்லிஷ் பண்ணலாம், Reject பண்ணலாம்.
But தமிழ்ல எதுவும் எழுத முடியாது.
English-ல வேணா எழுதிக்கலாம்..

இதை Try பண்ணிட்டு Result சொல்லுங்க..

வெங்கட் said...

@ சீனா சார்.,

// நகைச்சுவையில் இருந்து சீரியஸ்
இடுகைகள் இட ஆரம்பித்தாயிற்றா.? //

அப்படியெல்லாம் இல்லங்க.,
எங்க குடும்ப நண்பர் ஒருத்தர்
இருந்தார்.. ஆனா அவர் இப்ப இல்ல..
காரணம் மது பழக்கம்.

மனசை பாதிச்ச இந்த
சம்பவம் தான் இந்த பதிவு
சீரியஸா ஆனதுக்கு காரணம்..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ஒரு காலத்துல ப்ளாக் நல்லா எழுதுறவங்க கிட்டா இருந்தது
ஆனா இப்போ வெங்கட் மாதிரி ஆளுங்ககிட்ட..... //

அதென்ன வெங்கட் மாதிரி ஆளுங்க..?
" நம்மள மாதிரி ஆளுங்கன்னு "
சொல்லுங்க..

வெங்கட் said...

@ அனு ரசிகன்.,

// சீரியஸ் பதிவு போட்டவங்க நகைச்சுவை
பகுதியில ஏன் போஸ்ட் பண்ணினீங்க..? //

தப்புதான்..
ஆனா அதை நான்
போஸ்ட் பண்ணலை..
என் தீவிர ரசிகை ஒருத்தர் தான்
அதை பண்ணினாங்க..

நான் எது எழுதினாலும் அது
நகைச்சுவையாதான் இருக்கும்னு
நம்பற அவங்க நல்ல மனசு
இதிலிருந்தே நமக்கு தெரியுதில்ல..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// இதையெல்லாம் பண்ணுறவங்கதான்
அவர ம‌ரியாதை செய்யணும்னா...
அவர் சிலைக்கு மாலை என்ன...
சிலையே இருக்காது... //

ம்ம்.. நல்ல Point..
இப்ப ஒரு விஷயம்
ஞாபகம் வருது., சுஜாதா சொன்னது..

" ஒவ்வொரு ஊர்லயும் ஒரு
மகாத்மா காந்தி ரோடு இருக்கும்..,
அதில கட்டாயமா ஒரு
Wine Shop இருக்கும்..! "

தேசம் முழுக்க தேசப்பிதாவுக்கு
இந்த நிலைமைதான்..!!
நாம After all தமிழ்நாட்ல
மட்டும் தானே..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//1. உங்க மொபைல்ல GPRS Activate ஆகி
இருக்கணும். ( For Activation Call Customer Care )

2. Opera Mini Browser உங்க மொபைலுக்கு
Download பண்ணிக்கோங்க.
Opera Mini 4.2 நான் Use பண்றேன்..//

அதெல்லாம் சரி மொபைல்ல சிம் போடணுமா வேணாமா?

DEVARAJAN said...

நாயகன் படம் பார்த்த மாதிரியே இருந்திச்சு

அனு said...

//அதெல்லாம் சரி மொபைல்ல சிம் போடணுமா வேணாமா?//

இதுக்குத்தான் உங்கள சிங்கப்பூர விட்டு துரத்தி விடுறாங்க...

(இப்பல்லாம் கட்சிக்குள்ளயே சண்டை போட்டுக்குற மாதிரி act விட்டா தான் popularity ஏறுதாம்..)

VELU.G said...

//ஒரு காலத்தில
பள்ளிக்கூடங்கள் அரசிடம் இருந்தது..
மதுக்கடைகள் தனியாரிடம் இருந்தது.,
இப்போ.. அது மாறி இருக்கு..
//

சரியாகச் சொன்னீர்கள்

நல்ல பகிர்வு

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதுக்குத்தான் உங்கள சிங்கப்பூர விட்டு துரத்தி விடுறாங்க..//
எங்க கட்சி தலைவர் அணு என்ன கலாய்ச்சிட்டாங்க. ஏய் கட்சில நானும் பெரிய ஆளுதான்.

வெங்கட் said...

@ ஜெய்லானி., நன்றி .,

அப்பாடா எப்படியோ ஒரு
விருது வாங்கியாச்சு..!!

இனிமே கொஞ்சம் கொஞ்சமா
Develop ஆகி அப்படியே நைசா
கலைமாமணி, பாத்மஸ்ரீ,
பத்மபூஷண், பாரத்ரத்னா
இதையெல்லாம் கூட
வாங்கிட வேண்டியது தான்..

அதே மாதிரி எவ்ளோ
செலவானாலும் சரி
நோபல் பரிசு ஒண்ணாவது
வாங்கிடணும்பா.

அப்படியே ஒரு ஆஸ்கார் கூட..
என்னாது ஆஸ்கார் எனக்கு
தரமாட்டாங்களா..? ஏன்..?

நானும் நல்லபுள்ள மாதிரி
நல்லாதானே நடிச்சிட்டு இருக்கேன்..!!!

மாலா said...

உருப்படியான ரெண்டாவது பதிவு.,
வாழ்த்துக்கள்..

வெங்கட் said...

@ மாலா.,

என்னங்க இப்படி பொசுக்குன்னு
சொல்லிட்டீங்க..
அந்த முதல் பதிவு எதுன்னு
தெரியாம இங்கே இருக்கறவங்க
எல்லாம் Comfuse ஆயிட்டாங்க பாருங்க..