சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 April 2012

ஒரு ஆட்டோகிராப்.. ப்ளீஸ்..!

என் Birthday அன்னிக்கு பிள்ளையாரை
இம்சை பண்ணியே ஆகணும்கற
கொள்கையில உறுதியா இருக்கறதால
இந்த வருஷம் நான் அவரை மீட்
பண்ணினது பிள்ளையார்பட்டில.

அப்படியே வழக்கம் போல சின்னதா
ஒரு லிஸ்ட் ஒப்பிச்சிட்டு லஞ்ச்க்கு
தஞ்சாவூர் போயிட்டோம்..

அங்கே ஹோட்டல்ல ஆர்டர்
சொல்லிட்டு உக்காந்துட்டு இருக்கோம்...
அப்ப என் Wife மாலா என்கிட்ட...

" என்னங்க என்னங்க... அங்கே
பாருங்க.. காயத்ரி ப்ரியா..! "

" எந்த காயத்ரி..? " ( ஹி., ஹி., ஹி..
எனக்கு நாலு காயத்ரி தெரியும்ல..! )

" அட நடிகை காயத்ரி ப்ரியாங்க..! "

" நடிகையா...!!? " ( நான் லைட்டா திரும்பி
பார்த்தேன்.. ரெண்டு டேபிள் தள்ளி
காயத்ரி ப்ரியா அவங்க குடும்பத்தோட
உக்காந்து இருந்தாங்க.. )


" ஓ.. மெகா சீரியல்ல வந்து நல்லா 
அழுவாங்களே அவங்க தானே..?! " 

" இந்த ஜோக்குக்கு நான் வீட்டுக்கு போயி 
சிரிக்கிறேங்க.. இங்கே சிரிச்சா அடிபட்டுடும்.." 
( விழுந்து விழுந்து சிரிப்பாங்களாமாம்..! )

" சரி., சரி.. இப்ப என்ன பண்ணனும்கற..? " 

" அவங்ககிட்ட போயி ஆட்டோகிராப் 
வாங்கிட்டு வர்றேங்க..! "

" நோ., நோ.. அதெல்லாம் ஒண்ணும் 
வேணாம்..! " 

" அவங்க ஒரு செலிபிரிட்டீங்க., இப்படி  
அடிக்கடியா பார்க்க முடியும்..?! " 

" செலிபிரிட்டின்னாலும் அவங்களும் 
ஒரு சாதாரண மனுஷி தான்..! அவங்க 
Privacy-ஐ கெடுக்க கூடாது.. " - இப்படி 
நான் Strict-ஆ சொல்லிட்டேன்.. 

அதனால என் Wife-க்கு கொஞ்சம் 
வருத்தம்.. உம்முன்னு இருந்தாங்க..

கொஞ்ச நேரம் கழிச்சி.. 

Van-ல இருக்குற Water Bottle எடுக்க 
என் Wife போனாங்க.. அவங்க திரும்பி 
வரும்போது...

Reception-ல நானும் ., காயத்ரி ப்ரியாவும் 
பேசிட்டு இருந்தோம்.. 

இதை பாத்த என் Wife கண்ணுல 
கொலவெறி தெரிஞ்சது. வேகமா 
பக்கத்துல வந்தாங்க.. 

அப்ப காயத்ரி ப்ரியா என்கிட்ட...

" நீங்க ' கோகுலத்தில் சூரியன் ' வெங்கட் 
தானே..? நான் உங்க ரசிகை சார்.. 
ஒரு ஆட்டோகிராப்.. ப்ளீஸ்..! " 

" பொத்...!! " 

மாலா..! மாலா..! என்னாச்சி..! 


டிஸ்கி : காயத்ரி ப்ரியா என்கூட நின்னு 
ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு ரொம்ப 
ஆசைப்பட்டாங்க.. ஆனா " தமன்னா " 
பீல் பண்ணுவாங்களேன்னு " No " சொல்லிட்டேன்..

ஹி., ஹி., ஹி... சென்னை போனப்ப 
தமன்னாவும் என்கூட நின்னு போட்டோ 
எடுத்துக்க ஆசை பட்டாங்கல்ல.. 
அவுங்களுக்கும் " No " சொன்னோம்ல..!
.
.

03 April 2012

சகலை vs ரகளை..!!


" ஒரு மனுஷனுக்கு எந்த கஷ்டம்
வேணாலும் வரலாம்.. - ஆனா...

பொங்கி வர்ற சந்தோஷத்தை
Control பண்ணிட்டு சோகமா
இருக்குற மாதிரி ஆக்ட் குடுக்குற
நிலைமை மட்டும் வரவே கூடாது...! "

சரி., நாம மேட்டர்க்கு போவோம்..

எங்க மாமனார் வீட்ல நானும் ,
என் சகலையும் ஒரு கோடு கிழிச்சா...
அதை யாரும் தாண்ட மாட்டாங்க..

( அது மேலயே நடந்து போவாங்க..
அது வேற விஷயம்..)

போன வாரம் என் மச்சானுக்கு
பொண்ணு பார்க்க போயிருந்தோம்..

பொண்ணை பாத்துட்டு.. எல்லோரும்
டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க..

ஆனா எங்க ரெண்டு பேரையும்
கண்டுக்கவே ஆள் இல்ல.. நாங்களும்
என்ன தான் பண்றாங்கன்னு வேடிக்கை
பாத்துட்டு இருந்தோம்.. ( வேற வழி..?! )

கொஞ்ச நேரம் கழிச்சி., என் மச்சான்,
என் சகலை Wife,  என் Wife மூணு பேரும்
எங்க கிட்ட வந்து..

" ஏங்க பொண்ணு ஓ.கேவா..? "

" மாப்ள பக்கத்துல தானே இருக்கான்..
அவனை கேளுங்க...! "

" இந்த லூசு.. நீங்க ரெண்டு பேரும்
ஓ.கே சொன்னாதான் ஓ.கேன்னு
சொல்லிடுச்சு..! "

( ஆஹா.. தெய்வ மச்சான்..! )

இதை கேட்டதும் நான்...

" இப்படி டக்னு கேட்டால்லாம் எங்களால
பதில் சொல்ல முடியாது.. ஒரு வாரம்
டைம் வேணும்..! இல்லியா சகலை.."

" என்னாது ஒரு வாரமா..? " எங்க மச்சான்
டென்ஷன் ஆகிட்டான்..

இப்ப என் சகலை திருவாய் மலர்ந்தாரு..

" ஒரே நாள்ல முடிவு பண்ணி., எங்களை
மாதிரி நீயும் மாட்டிக்க கூடாதுல்ல..
அதுக்குதான் ஒரு வாரம் டைம் கேக்கறோம்..
அப்படித்தானே சகலை...?! "

( ஆஹா.. கோத்து விட்டுட்டான்யா..! )
ஹும்ம்.., இப்ப பதிவோட
முதல் ரெண்டு வரியை
மறுபடியும் படிச்சிக்கோங்க..
.
.