சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

31 March 2010

ஹாய் - ஹைகூ...!!( படித்ததில் பிடித்த ஹைகூக்கள் )

வெளியே மழை.,

சாரலடிக்கிறது
உன் நினைவுகள்..!

சுத்தம் சோறு போடும்.,
சுத்தம் வயிறு..,
சோறு..?

அறுவடைக்கு பின்னும்
வளர்ந்துகொண்டே இருக்கிறது
வங்கி கடன்..

காவிரி பிரச்சினை.,
பேசிப் பேசியே
வறண்டு போகும் நாக்கு..

கர்ணன் எவ்ளோ பெரிய வள்ளல்.,
வாரி வழங்கியதென்னவோ
துரியோதனன் வீட்டு பொருள்..

பின் குறிப்பு :
முதல் ஹைகூ மட்டும்
என் நண்பன் ஜெகன் எழுதியது..
.
.

30 March 2010

சிங்கம்-ல...!!!ரெண்டு பேர் காட்டு வழியா
நடந்து போயிட்டு இருக்காங்க...,

அப்போ 300 மீட்டர் தூரத்தில
ஒரு சிங்கம் நின்னுட்டு இருக்கு..,

இவங்க சிங்கத்தை பார்க்க.,
சிங்கம் இவங்களை பார்க்க..,
ஒரே ஜாலிதான் - சிங்கத்துக்கு..

அப்புறம் என்ன..?
Chasing தான்...,

இவங்க ரெண்டு பேரும் ஓடறாங்க..

திடீர்னு ஒருத்தன் மட்டும்
உக்கார்ந்து Shoe Lace-ஐ
Correct பண்றான்..

இன்னொருத்தன் கடுப்பாயிட்டான்..

" இதை Correct பண்ணி..,
சிங்கத்தை விட வேகமா
ஓடப்போறியா..? "

" எதுக்கு..! உன்னை விட வேகமா
ஓடுனா போதுமே..!!! "
.
.

29 March 2010

இதுதான் லொள்ளு..!!!!
நண்பனின் Medical Shop-ல்

நான் : இதென்னடா புதுசா இருக்கு..?

நண்பன் : இது Memory Plus.., ஞாபக சக்திக்கு..,

நான் : இது சாப்பிட்டா நிஜமாலுமே
ஞாபக சக்தி வளருமா..?

நண்பன் : ஆமா.., வேணும்னா
தினமும் ஒன்னு சாப்பிட்டு பாரேன்..

நான் : தினமும் ஒன்னு தானா..?!
வேளைக்கு ஒன்னு சப்பிட கூடாதா..?

நண்பன் : வேணாம்டா...!!
Over Dose-ஆகி..,
அப்புறம் போன ஜென்மத்தில
நீ நாயா சுத்திட்டு இருந்ததெல்லாம்
ஞாபகம் வந்து தொலைக்கப்போவுது..
.
.

28 March 2010

நீங்க LKG : Pass-ஆ..? Fail-ஆ..??

வர வர இந்த Schools பண்ற
லொள்ளு அளவே இல்ல..

LKG சேர்த்துக்கவே Interview...!!

சென்னையில இருக்கிற
என் Friend ஒரு மாசமா
ஸ்கூல்., ஸ்கூலா
ஏறி இறங்கிட்டு இருந்தான்..,
மகனை LKG சேர்க்க..,

ஆனா..,
வீட்ல எது கேட்டாலும்
பதில் சொல்லுற அவனோட மகன்..,
Interview-ல மட்டும் வாயே திறக்க
மாட்டேங்கறானாம்..!

ஸ்கூல்லயும்..,
" உங்க மகனுக்கு ஒன்னுமே
தெரியல., சீட் இல்லைன்னு
சொல்லிடறாங்களாம்..! "

என் Friend ஒரே புலம்பல்..

அடப்பாவிகளா..!!
ஒன்னுமே தெரியலைன்னு
தானே School-லயே சேர்த்தறது..!!

நேத்து என் Friend
Phone பண்ணியிருந்தான்.

நண்பன் : ( ஒரு ஸ்கூல் பெயரை சொல்லி )
என் பையனுக்கு சீட் கிடைச்சிடுச்சிடா..!!

நான் : சந்தோஷம்டா..!
எப்படியோ ஒரு வழியா
உன் மகன் பாஸ் பண்ணிட்டான்..,

நண்பன் : அவன் எங்கடா பாஸ்
பண்ணினான்..! Currency தான்
பாஸ் ( Pass ) ஆச்சு..!

எதோ ஒன்னு பாஸ் ஆனா சரி...!

பின் குறிப்பு :
இந்த வருஷம்
எங்க ஊர்ல நிறைய பேர்
CBSC School-க்கு மாறுறாங்க..,
சமச்சீர் கல்வி வர்றதால..,

என் மகனை நான் மாத்தலை..
இருந்தாலும் Confusion-ஆ இருக்கு..!
விவரம் தெரிஞ்சவங்க
Comment Section-ல சொல்லலாம்..
.
.

27 March 2010

லைட்டா சிரிங்க - 1( படித்ததில் பிடித்தது... )

No: 1

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

* * * * * * * * * * * * * *

No : 2 ( கட்சி ஆபீஸ்.. )

தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட
எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி
வெச்சிட்டாரு..!

தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம்
தானே..!

தொண்டர் 1 : அட போப்பா..,
கட்சியை அவரோட மகனுக்கு
எழுதி வெச்சிட்டாரு..!!

* * * * * * * * * * * * * *

No : 3

நிருபர் : நடிக்க வரலைன்னா என்ன
பண்ணியிருப்பீங்க..?

நடிகை : Doctor ஆயிருப்பேன்..

நிருபர் : அதான் நடிக்கவே வரலைல்ல.,
போயி Doctor ஆக வேண்டியது தானே..?!

* * * * * * * * * * * * * *

No : 4

( Exam ஆரம்பிக்கும் முன்... )

மாணவன் : டீச்சர் ஒர் Doubt...

டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும்
அரை மணி நேரம்தான் இருக்கு..,
இப்ப போயி என்னடா Doubt..?

மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?

* * * * * * * * * * * * * *
No: 5

மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..

மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..

* * * * * * * * * * * * * *

No : 6

நண்பன் 1 : காலையில உங்க வீட்டுக்கு
வந்து இருந்தேன்.., உங்க அப்பாகிட்ட
நீ எங்கேன்னு கேட்டதுக்கு.,
" அந்த மாடு எங்கயாச்சும் ஊர் மேய
போயிருக்கும்னு " சொன்னார்டா..!

நண்பன் 2 : என்கிட்ட
" அந்த எருமை வந்துட்டு போச்சுன்னு "
சொன்னாரு.., அது உன்னைத் தானா..!!
.
.

26 March 2010

ஒரு சேலையின் கதை...!

ஒரு ஆம்பளைக்கு எவ்ளோ
பொறுமை இருக்குன்னு
அவங்க Wife-கூட Saree எடுக்க
போகும்போது தெரிஞ்சிக்கலாம்...

நேத்து என் பொறுமைக்கு
சோதனை...!

நாங்க எடுக்க போனது
ஒரே ஒரு Saree...!

Rack-ல இருக்கிற எல்லா
Saree-யும் கீழே இறக்கியாச்சு..,

அஞ்சாறு Sarees பிரிச்சி
பார்த்தாச்சு..

ஒரு Saree-ஐ கூட என் Wife
Select பண்ற மாதிரி தெரியலை..

எனக்கு ஒரே யோசனை..,
ஒருவேளை என்னை தனியா
கூட்டிட்டு போயி " டின்னு "
கட்டுவாங்களோன்னு...!!

அதனால நானே ஒரு
நல்ல Saree-ஐ Select
பண்ணி குடுக்கலாம்னு
களத்துல இறங்கினேன்...!!

நான் : இந்த Blue Saree நல்லா இருக்கே..!!

Wife : அட., அது துணி சரியில்லைங்க...

நான் : அந்த Pink Saree..??

Wife : போன தீபாவளிக்கு எடுத்த
Saree இதே கலர்தாங்க..

எனக்கு அந்த Salesman-ஐ பார்த்தா
பாவமா இருந்தது..!
அவனுக்கு என்னை பார்த்தா
பாவமா இருந்தது...!

ஒரு மணி நேரம் கழிச்சி.,
ஒரு வழியா என் Wife-க்கு
ரெண்டு Sarees பிடிச்சிருந்தது...

ஒன்னு முதல்ல காட்டின Saree.,
இன்னொன்னு அங்கே
தொங்கவிட்டிருந்த Saree...

ரெண்டுல எது Best..??
சின்ன Confusion..

அப்ப
பக்கத்தில இருந்த ஒரு Aunty
அந்த ரெண்டு Sarees-ஐ காட்டி,,

" அந்த பிஸ்தா கலர் Saree
குடுங்க பார்க்கலாம்..!! "

Wife : இல்லீங்க அதை நான்
Select பண்ணிட்டேன்..

( எப்போ..?? இப்பத்தான்...!! )

அந்த Aunty-க்கு ஒரு Thanks...!!

வீட்டுக்கு வந்ததும்
நான் பண்ணின முதல் வேலை..,
Bill-ஐ ஒளிச்சி வெச்சதுதான்...

" லைட் வெளிச்சத்துல கலர்
சரியா தெரியல..,
மாத்த போகணும்னு
சொல்லிட்டா வம்புதானே..!! "
.
.

25 March 2010

அந்த ரகசியம்....!!இது 12 வருஷம் Back...

என் Friend ஜெகன் வீட்டுக்கு
போயிருந்தேன்..,

அப்ப ஜெகனோட தங்கை கவிதாவுக்கு
ஒரு Phone Call வந்தது..

Phone பண்ணியது கவிதாவோட
Friend பிரியா.., Attend பண்ணினது நான்..

" Hello..!! அது கவிதா வீடுங்களா..? "

" இல்லீங்களே.. இது கவிதாவோட
 அப்பா வீடு.., கவிதாவுக்கு இன்னும்
எழுதி வைக்கலையே...!! "

அப்புறம் என்ன பேசினேன்னு
சரியா ஞாபகம் இல்ல..
ஆனா நாலு நிமிஷத்திலயே
பிரியா நம்ம Friend ஆயாச்சு..

" நாங்க தான் சைக்கிள் Gap-ல
Santro ஓட்டுற ஆளுங்களாச்சே...!!! "

அதுக்கு அப்புறம் பிரியா
எப்ப Phone பண்ணினாலும்.,
Letter எழுதினாலும்..,
என்னை பத்தி கண்டிப்பா
ரெண்டு வரியாவது விசாரிப்பாங்க...

இது என் Friend ஜெகனுக்கு
பொறுக்கலை...,

ஒரு தடவை என்கிட்ட புலம்பிட்டான்...

" ஏன்டா அந்த பொண்ணு Letter-ல
 ' உங்க அண்ணன் நல்லா இருக்காரான்னு..? '
கேட்டா பரவாயில்ல.,

அத விட்டுட்டு..

' உங்க அண்ணன் Friend நல்லா இருக்காரான்னு.? '
கேட்டா எப்படிடா...? அப்படி அந்த பொண்ணுகிட்ட
 என்னடா சொன்ன..?

ஹி., ஹி., ஹி... அதிகமில்ல Gentleman...,

" உங்க வாய்ஸ்.., Pepsi உமா
மாதிரி இருக்குன்னு சொன்னேன்.. "
.
.

24 March 2010

கும்பிட போன தெய்வம்..!!
Foreign Coins Collect பண்றது என் Hobby..
கொஞ்சம் கஷ்டமான Hobby-யும் கூட..,

என் நண்பர்கள் யாராவது வெளிநாட்ல
இருந்து வந்தா முதல் வேலையா
ஒரு Coin கேட்டு வாங்கி வெச்சிப்பேன்...

இப்படி 15 வருஷமா கஷ்டப்பட்டு
28 Countries Coins தான் சேர்க்க முடிஞ்சது.

என்ன பண்ண...?

என் நண்பர்கள் துபாய்., அமெரிக்கா.,
சிங்கப்பூர்., மலேசியான்னு சுத்தி சுத்தி.,
ஒரே ஏரியாவுல இருக்காங்களே...!!

சீக்கிரம் Transfer வாங்கிட்டு என் Collection-ல
இல்லாத Country-க்கு போற வழிய
பாருங்கப்பா...!!

நேத்து எனக்கு ஒரு Surprise..,

எங்கிட்ட இல்லாத 10 Countries Coins
பார்சல்ல வந்தது.., Kuwait-ல இருந்து...

அந்த பார்சலை அனுப்பிய அன்பு உள்ளங்கள்..,
சித்ரா அக்காவும்., அவங்க கணவரும்..

" கும்பிட போன தெய்வம்..,
வீட்டுக்கே வந்து பிரசாதம் தந்த
மாதிரி சந்தோஷமா இருந்தது...!! "

என் Blog மூலமா தான் சித்ரா அக்கா
எனக்கு அறிமுகமானாங்க்..

என் " பாட்டு ஆராய்ச்சி " பதிவை
படிச்சிட்டு என்னை பாராட்டி
Mail பண்ணினாங்க.. இப்பவும்
பண்ணிட்டு இருக்காங்க..,

நானும் Reply பண்ணினேன்.. அப்படியே
" ஒரு Kuwait Coin அனுப்புங்கன்னு " கேட்டேன்.,

ஆனா சித்ரா அக்காவும்., அவங்க கணவரும்.,
கூட வேலை பார்க்கிற மற்ற நண்பர்கள்கிட்ட
இருந்தும் Coins Collect பண்ணி அனுப்பி
இருக்காங்க..

Coins அனுப்பிய அவங்களுக்கும்.,
அதை என்னிடம் பத்திரமாக
சேர்த்த ஆறுமுகம் சாருக்கும்
என் நன்றிகள்..

இப்பதான் எனக்கு தெரியுது..,
Coins சேர்க்கிறதை விட.,
மனுஷங்களோட அன்பை சேர்க்கிறது
எவ்ளோ சந்தோஷமான விஷயம்னு...!!

அந்த Coins-ஐ என் ப்ரெண்ட்கிட்ட
பெருமையாக காட்டினேன்...

" ஹேய்... நான் கூட Currency Collect
பண்ணிட்டு இருக்கேன்டா.. "

" அப்படியா..! சொல்லவேயில்ல..?? "

" காந்தி தாத்தா படம் போட்டு.., 500.,
1000-ன்னு நம்பர் போட்டு இருக்குமே
அந்த Currency.. உங்கிட்ட இருந்தா
ஒன்னு., ரெண்டு குடேன்...!! "
.
.

23 March 2010

இது எந்த ஊரு Dictionary..?? Part - 1* அம்பயர் : பவுலரோட Cap.,ஸ்வெட்டர்
இதெல்லாம் வாங்கி வெச்சிக்கிறதுக்காக
Stump-க்கு பின்னாடி நிக்கிறவர்..

* செல் போன் ( Mobile) : பாட்டு கேட்க.,
படம் பிடிக்க உதவும்.,
முக்கியமான Call வரும் போது
" Low Battery " காட்டும் சாதனம்...!

* குப்பை லாரி : ஒரு இடத்துல இருக்கிற
குப்பைய அள்ளி.., ஊர் முழுக்க
போட்டுட்டு போற வண்டி...

* அரசியல்வாதி : பணக்காரர்களிடம் நோட்டையும்.,
ஏழைகளிடம் ஓட்டையும் வாங்கிக்கிறவர்..

* Exam Hall : எதெல்லாம் நமக்கு தெரியாதுன்னு
தெரிஞ்சிக்கிற இடம்....

* சாமியார் : எல்லாம் அறிந்தவர்..
( Camera இருக்கிறதை தவிர...! )

* கிரிக்கெட் Commentator : ஆடிய காலங்களில்
கட்டை போட்டவர்..,
இப்போது பலருக்கு அதிரடியாய்
ஆடுவதை பற்றி Idea கொடுக்கிறவர்..
.
.

22 March 2010

சொன்ன பேச்ச கேளு..!!D.Pharm படிச்ச என் Friend சுரேஷ்
எங்க ஊருலயே Medical Shop
வெச்சி இருக்கான்...

ஜலதோசம்., தலைவலி..,மாதிரி
சின்ன விஷயத்துக்கெல்லாம்
அவன் தான் எனக்கு டாக்டர்...

( ஓ.சி Treatment. ஹி., ஹி., ஹி..!! )

அப்படி தான் நான் ஒரு தடவை
அவன்கிட்ட போயி...

" தலைவலி., உடம்பு வலி., காய்ச்சல்
வர்ற மாதிரி இருக்கு.., எதாவது
மாத்திரை குடு.. "

உடனே அவனும் கலர்., கலரா
பெருசு., பெருசா 3 மாத்திரை
குடுத்தான்..

" ஐயோ.. என்னடா இம்புட்டு பெருசா
இருக்கு..?! சின்ன மாத்திரையா குடுடா...! "

அவனும் உள்ளே போயி., வேற மாத்திரை
எடுத்திட்டு வந்து...

" இந்தா நீ கேட்ட மாதிரி சின்ன மாத்திரை..! "

" ரொம்ப Thanks..! "

" மறக்காம வேளைக்கு 40 சாப்பிடு...! "

" என்னாது நாப்பதா...??!! அந்த
மூணு மாத்திரையவே குடு ராசா..!! "
.

.

21 March 2010

மின்சாரமும்., சம்சாரமும்..!!


Current நியூஸ் எதாவது எழுதலாம்னு
சன் நியூஸ் பார்த்திட்டு இருந்தேன்...

அப்ப கரண்ட் கட் ஆயிடுச்சி..!
ஆஹா...!
கிடைச்சிடுச்சே " கரண்ட் நியூஸ்..! "

கரண்ட் கட் ஆகறதால எவ்ளோ
நன்மைகள் இருக்கு தெரியுமா..!?

1. கரண்ட் பில் அதிகமா வராது.,

2. T v ஓடாது.., ஜவ்வு மிட்டாயில இருந்து
கொஞ்ச நேரம் தப்பிச்சுக்கலாம்..!

3. குழந்தைங்க வெளிய போயி
விளையாடுவாங்க..
உடம்புக்கு நல்லது தானே..!

4. நாம ரொம்ப Punctual-ஆ இருப்போம்..,
கரண்ட் போறதுக்குள்ள வேலைகளை
Correct-ஆ செய்யணுமில்ல...!

5. கடிகாரத்தை பார்க்காமலே Time
தெரிஞ்சிக்கலாம்..,
கரண்ட் போனா - 12 மணி
கரண்ட் வந்தா - 2 மணி

6. போர் அடிக்குதுன்னு Books படிப்போம்..,
General Knowledge வளரும்..!

7. நைட் கரண்ட் போனா.. வீட்லயே
" Candle Light Dinner " சாப்பிடலாம்..
ஹோட்டல் செலவு மிச்சம்..

8. Fan ஓடாது., புழுக்கமா இருக்கும்.,
அதனால வியர்வை வெளியேறும்..
அது உடம்புக்கு நல்லதுன்னு டாக்டரே
சொல்றார்ல..

என் மனைவிகிட்ட ஒரு Point
சொல்லுன்னு சொன்னேன்.
அப்ப அவங்க சொன்னது இது..,

9. கரண்ட் இல்லாததால.,
நீங்க Computer முன்னாடி உட்காராம..,
என்கூட நாலு வார்த்தை பேசிட்டு
இருப்பீங்க...!

பின் குறிப்பு :

இவ்ளோ நல்ல விஷயம் இருக்கே...,
அப்புறம் ஏன் எல்லோரும்
" அந்த நல்ல மனுஷனை "
திட்றாங்க..??!!
.
.

20 March 2010

ஆர்வக் கோளாறு....!!


MCA சேர்ந்த புதுசுல
காலேஜ் Magazine-க்கு குடுக்க
ஆர்வக் கோளாறுல எழுதினது..!

Computer காதல்...!
----------------------

என் இதயத்தில் Install-ஆன
Software தேவதையே...!

தினமும் உன்னை பார்த்த
பின்பு தான் Boot ஆகிறேன்...!

Compact Disc போன்ற உன் முகம்
என் Video Memory-ல் எப்போதும்
மறைவதேயில்லை...!

Power Cut-லும் Work செய்யும்.,
UPS-ல் Connect செய்த System
அதுபோல்..,
என் சுயநினைவு இழந்தாலும்.,
உன் நினைவு மட்டும் இழப்பதேயில்லை..!

தினமும் நான் பார்க்கும்
பெண்களெல்லாம் என் RAM-ல்
கூட நிற்பதில்லை..,
ஆனால்.,
நீதானடி ROM-ன் ராணி..!

அன்புடன்
பாவா
S/o JAVA

பின் குறிப்பு :
இதை நான் எந்த பொண்ணுக்கும்
குடுக்கலை..,
அதான் காலேஜ் Magazine-லயே
வந்துடுச்சே..!
.
.

18 March 2010

இது கூடவா புரியலை.?
B.Com Class...
ஒரு நாள் எங்க HOD Class எடுத்திட்டு
இருந்தாரு..,
பொதுவா ஒண்ணு., ரெண்டு புரியும்..,
அன்னிக்கு சுத்தமா எதுவும் புரியலை...
மூளை சூடாகி., காது வழியா புகை வந்திச்சி..!
( ' மூளை இருக்கான்னு..? " அபத்தமான
கேள்வியெல்லாம் கேக்கபடாது...! )
பக்கத்துல உக்காந்து இருந்த என் Friend சரவணனை
லேசா தட்டினேன்..
" என்னடா..? "
" HOD என்ன எடுக்கறாருன்னே புரியலையேடா சரவணா..??!! "
அவன் என்னை ஒரு லுக் விட்டுட்டு சொன்னான்..
" அட இது கூடவாடா புரியலை..?!
.
.
.
நம்ம உயிரை எடுக்கறார்டா..!! "
.
.

17 March 2010

செக்கு மாடும்., MBA படித்தவனும்..!

MBA படிச்ச ஒருத்தன்
கிராமத்துக்கு போறான்..,

அங்கே ஒரு செக்கு மாடு மட்டும்
தனியா செக்கு சுத்திட்டு இருக்கு..

அவனுக்கு ஆச்சரியமா இருக்கு..,

பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள
ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு
இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்...

" மாடு மட்டும் தனியா செக்கு
சுத்திட்டு இருக்கே..? "

" அது பழகின மாடு தம்பி.., அதுவே
சுத்திக்கும்..! "

" நீங்க உள்ளே வந்த உடனே
அது சுத்தறத நிறுத்திட்டா...!
எப்படி கண்டுபிடிப்பீங்க..? "

" அது கழுத்தில ஒரு சலங்கை
இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா
அந்த சலங்கை சத்தம் வராது..
அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்.. "

" அது சுத்தறதை நிறுத்திட்டு.,
ஒரே இடத்துல நின்னு..,
தலைய மட்டும் ஆட்டினா..
அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..? "

" இதுக்குதான் தம்பி., நான் என் மாட்டை
காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..! "

" ?!?!!?!? "

பின் குறிப்பு :

" சரியாவே யோசிக்க மாட்டேன்னு..,"
குலதெய்வத்துக்கு எதாவது சத்தியம்
பண்ணி குடுத்திருப்பானோ..!
.
.

16 March 2010

F i f t y : பிப்டி ( 50 : 50 )என் நண்பன் Mani-க்கு Birthday..,
அவனை வாரி., வாரி புகழ்ந்து
ஒரு கவிதை..

அழகாய் சிரிப்பவனும் நீதான்..,
அசடு வழிய நிற்பவனும் நீதான்..,


அமைதியான ஆழ்கடலும் நீதான்..,
ஆர்பரித்தால் சுனாமியும் நீதான்..,


கை தூக்கி விடுபவனும் நீதான்..,
காலை வாரி விடுபவனும் நீதான்..,


டயட்டில் இருப்பவனும் நீதான்..,
தினமும் சிக்கன் சாப்பிடுபவன் நீதான்..,


தத்துவங்கள் தெளிப்பவனும் நீதான்..,
தத்துபித்தென்று உளறுபவனும் நீதான்..,தோள் கொடுப்பதில் கர்ணன் நீதான்., 
போட்டு கொடுப்பதில் புரூட்டஸ் நீதான்..


அவ்ளோ தான்..


என்னடா பண்றது..,
என்னால Continuous-ஆ
ரெண்டு வரி பொய் பேச முடியாதே..!

இப்படிக்கு.,
உன் உயிர் ( வாங்கும் ) நண்பன்
வெங்கட்
.
.

15 March 2010

" மாப்ள Bench " மாணவர்கள்...!Class-ல இருக்கிற
கடைசி Bench-ஐ தான்
மாப்ள Bench-ன்னு சொல்லுவாங்க..

பொதுவாவே
மாப்ள Bench மாணவர்கள்
ரொம்ப நல்லவங்க..,
தங்கமானவங்க..,
பிரச்சனை பண்ணாதவங்க..

( தூங்கிட்டு இருக்கறவங்க பெருசா
என்ன பிரச்சனை பண்ண முடியும்..? )

ஆனா எதையும்
வித்தியாசமா சிந்திப்பாங்க..,
வித்தியாசமா செய்வாங்க..,
இப்படி...,

1st Bench மாணவர்கள் : Bore அடிக்குதுடா..,
MBA Coaching போலாமா..?

2nd Bench மாணவர்கள் : Bore அடிக்குதுடா..,
லைப்ரரிக்கு போலாமா..?

3rd Bench மாணவர்கள் : Bore அடிக்குதுடா..,
சினிமாவுக்கு போலாமா..?

மாப்ள Bench மாணவர்கள் : Bore அடிக்குதுடா..,
காலேஜ்க்கு போலாமா..?

பின் குறிப்பு :
நானெல்லாம் 1st Bench மாணவன்கிற
உண்மைய சொன்னாலும்..,
நீங்க நம்பவா போறீங்க..!!!
.
.

14 March 2010

" Jackpot " தந்த அதிர்ச்சி..!!
" பொண்ணுங்கல்லாம் புத்திசாலிங்கப்பா "
என்ற என் நினைப்பில்
மண் அள்ளிபோட்டது
போன வார
Jackpot நிகழ்ச்சி ( ஜெயா Tv )

ரெண்டு Team..,
இந்த Team-ல நாலு பொண்ணுங்க.,
அந்த Team-ல நாலு பொண்ணுங்க..,
எல்லோருமே College படிக்கிறவங்க..

முதல் Team-ஐ பார்த்து
குஷ்பு ஒரு கேள்வி கேட்டாங்க..

" பதவியில் இருக்கும் போதே இறந்த
முதல் இந்திய President யார்..? "

அவங்க சொன்ன பதில்...

" இந்திரா காந்தி..! "

குஷ்புக்கு அதிர்ச்சி..,
( எல்லோருக்கும் தான் )

உங்களுக்காவது தெரியுமான்னு
ரெண்டாவது Team-ஐ கேட்டாங்க..,

அந்த அறிவு ஜீவிங்க சொன்ன பதில்..,

" நேரு..! "

பதில் தெரியலைன்னு சொல்லி
இருந்தாகூட கொஞ்சம் Decent-ஆ
இருந்து இருக்கும்..

( சரியான பதில் " ஜாகீர் ஹுசைன் " )

" இந்த காலத்து பொண்ணுங்களுக்கு
ஜனாதிபதிக்கும்., பிரதமருக்கும் கூட
வித்தியாசம் தெரியல..
அப்படி என்னத்த படிக்கிறாங்களோ..?! "

இது.., என் பாட்டி அடித்த Comment.

பின் குறிப்பு :
அந்த கேள்விக்கான பதிலை
என் பாட்டி சரியாக சொன்னார்..
.
.

13 March 2010

IPL கிரிக்கெட்டும்., மாணவர் எதிர்காலமும்..?


IPL ஆரம்பிச்சாச்சு..,
அதுக்கு முன்னாடியே Examz
ஆரம்பிச்சாச்சே...!
மாணவர்கள் நிலைமை...?

இதை பத்தி IPL Chairman
லலித் மோடிகிட்ட கேட்டா
அவரு என்ன சொல்லுவாரு...?

" வாழ்க BCCI..,
வளர்க IPL..,
முடிந்தால் Pass ஆகட்டும்
மாணவர்கள்..! "

முக்கியமான Examz நடக்கும்
போது., இந்த போட்டிகள்
அவசியமா..?
ஒரு சமூக அக்கறை வேண்டாமா..?

என்னது சமூக அக்கறையா..?

முதல்ல அது
அரசியல்ல இருக்கா..?
ஆன்மீகத்துல...?
சினிமாவில..?
தொலைகாட்சியில...?

அப்புறம்.,
அதை நாம கிரிக்கெட்ல
மட்டும் எதிர்பார்த்தா..,
அது நம்ம தப்பு தான்..!

பணம்தான் பிரதானம்னு
ஆனபிறகு..,
சமூகமாவது..! அக்கறையாவது..!

எனக்கு ஒரு சின்ன வருத்தம்..,

IPL போட்டிகள்
Mar - Apr-ல தான்
வரப்போகுதுன்னு போன
வருஷமே தெரியும்..!

ஆனாலும்..,
அதை “ தள்ளி வைங்கன்னு..! “
ஒரு ஊசி பட்டாசு கூட
நம்ம நாட்டுல எங்கேயுமே
வெடிக்கலையே..!

ம்ம்ம்...
ஒருவேளை.,
+2-ல Pass Percentage
குறைஞ்சிட்டா..,

அதுக்கு காரணம்
நித்யானந்தாவா..?
IPL-லான்னு..?
அதுக்கு அப்புறம் பேசி
என்ன ஆகபோகுது..?!

பின் குறிப்பு :
மாணவர்கள் என்பது Students
என்ற Meaning-ல் கையாளப்பட்டுள்ளது..
.
.

12 March 2010

நாட்டாம.! தீர்ப்ப மாத்தி சொல்லு.!எதாவது சிக்கலான விஷயம்.,
அதை பத்தி எங்க H.O.D-கிட்ட
பேசணும்னா என் நண்பர்களோட
Choice நான்தான்..

நானும் " நாட்டாமை " மாதிரி
போவேன்..

அங்க போனப் பிறகு தான் தெரியும்..
நான் நாட்டாமை இல்ல
கைபுள்ளன்னு..

இப்படிதான் ஒரு தடவை.,
எங்க Professor ஒரு Tour
ஐடியா கொடுத்தார்

" எங்கேயாவது ஒரு Education Tour
Plan பண்ணுங்களேம்பா.. H.O.D-கிட்ட
Permission வாங்கிட்டு போயிட்டு வரலாம்.. "

உடனே என் நண்பர்கள் Tour
போறதை பத்தி Discuss பண்ண
ஆரம்பிச்சிட்டாங்க.

H.O.D Permission வேணுமே..?
எங்கிட்ட வந்தாங்க..

" H.O.D-கிட்ட Education Tour போக
Permission வாங்கிட்டு வா..! "

" எந்த ஊருன்னு கேட்பாரே..! "

" GOA-ன்னு சொல்லு.. "

" என்னது GOA-வா..? GOA போறதெல்லாம்
Education டூராடா..? "

" நம்ம பாட புக்கெல்லாம் எடுத்திட்டு
போயிடலாம்..,அங்கே Beach-ல
உக்கார்ந்து படிக்கலாம்டா..! அப்ப
அது Education Tour தானே..!! "

" ??!!?!?!! "

( ஆஹா.. நம்மள காலேஜ் விட்டு
தொரத்த ப்ளான் பண்ணிட்டானுகளே..!
மீ எஸ்கேப்..! )

.
.

11 March 2010

என் திருமணத்தில் சில சுவையான நிகழ்ச்சிகள்..


இன்னிக்கு என் திருமண நாள்.,
இதுவரை வாழ்த்திய.,
இனிமேல் வாழ்த்தப்போகும்
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
நன்றி..

என் திருமணத்தில் நடந்த
சில சுவையான நிகழ்ச்சிகள்..

No : 1

எங்க அப்பா ஒரு
அரசியல் பிரமுகர்..

என் கல்யாணத்துக்கு
நாலு வட்ட., மாவட்ட
செயலாளர்கள் வந்ததிருந்தாங்க..

அடுத்த ரெண்டு மாசத்தில
வந்த தேர்தல்ல நின்னு
MLA ஆயிட்டாங்க..

என் பையன் கல்யாணத்துக்கு
வந்த நேரம்..,
அவங்க இப்ப MLA ஆயிட்டாங்கன்னு
எங்கப்பா பல பேருகிட்ட
Election முடிஞ்சதுக்கு பிறகு
சொன்னது உச்சபட்ச காமெடி..


No : 2

ஆர்கெஸ்ட்ராவுல மணமக்கள்
பாடுவாங்கன்னு அறிவிச்சாங்க..

ஏற்கனவே
உன்னி கிருஷ்ணன்., ஹரிஹரன்
இவங்களுக்கெல்லாம் Competition
குடுக்ககூடாதுன்னு தான்
நான் பாடுறது இல்லை.

" வேண்டாம்னு " சொல்லி
பார்த்தேன்..

" உன்கிட்ட Dummy Mike
தான் இருக்கும்..,
அவங்க ஆளுங்க பின்னாடி
இருந்து பாடுவாங்க..,
நீ சும்மா வாயசைச்சா
போதும்னாங்க..! "

ஓ.. அப்படியான்னு
Mike-ஐ கையில வாங்கி
" Mike மோகன் " Range-க்கு
கலக்கிட்டேன்..

No: 3

மணமகன் அறை
சூப்பரா இருந்தது..,
Split A.C.,
குஷன் Bed..,
ஆஹா..,

Photo Session முடிஞ்சி
Room-க்கு போனா..,
என் சகோதரிகள் படை
ஆக்கிரமிப்பு நடத்தியிருந்தது..

வேற வழி இல்லாம
Guest Room-ல நானும்.,
என் நண்பர்களும் தங்கினோம்..

மணமகன் அறையில தங்காத
ஒரே மணமகன்
நானாத்தான் இருப்பேன்.

No : 4

தாலி கட்டும்போது மாப்பிள்ளை
கை நடுங்குதே ஏன்..?
கூட இருக்கிற அக்கா., தங்கச்சிங்க
சும்மா இருந்தா தானே..!

பார்த்துடா..,
கரெக்டா மூணு முடிச்சி போடணும்..!
கை நடுங்கும் ஜாக்ரதை..,
இப்படி Running Commentry குடுத்தே
ஒரு வழி பண்ணிடுவாங்க..

ம்ம்.. எனக்கும் கை நடுங்கிச்சி.

No : 5

எங்களுக்கு கல்யாண Gift-ஆ
12 Wall Clocks.,
9 Night Lamps. வந்தது..,
அதை என்ன பண்ணுறது..?!?
.
.

10 March 2010

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!இது என் நண்பன் ஜனாவின்
கல்யாண பத்திரிக்கை..
சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே
என்று இப்படி யோசித்தோம்..
--------------------------------------------------------------------------

ஜனா-Win
திருமண அழைப்பு


அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..,

வர்ற June 20-ம் தேதி நீங்க Free தானே..?!

ஏன் கேக்கறேன்னா..,
அன்னிக்கு தான் உங்க JANA-க்கு கல்யாணம்..

ஜனாதிபதிக்கே Appointment குடுத்திருந்தாலும்.,
நீங்க என் கல்யாணத்துக்கு தான் வருவீங்கன்னு
தெரியும்..

ஏன்னா..,

" கோழி குளிரெடுத்தாலும் சுடுதண்ணியில
குளிக்காது..,
அன்பா குடுத்தாலும் ஐஸ்மோரை
குடிக்காது..! "

இப்ப எதுக்கு இதை சொல்லுறேன்னு
பார்க்கறீங்களா..?

பழமொழி சொன்னா அனுபவிக்கனும்.,
ஆராயக்கூடாது..!


இதை பாருங்க..!

ஒன்னு சொல்லுறேன்..,
ஆனா உருப்படியா சொல்லுறேன்..

என் கல்யாணத்துக்கு கவர்னர் வந்தா..,
அது அவருக்கு சந்தோஷம்.. - ஆனா
நீங்க வந்தா தான் எனக்கு சந்தோஷம்..

அன்புடன்
K.ஜனா

பின் குறிப்பு :
இவரு கல்யாணத்துக்கு அடிச்ச
வாழ்த்து பத்தின பதிவுதான்
Feb மாதத்தில் இருப்பது..
.
.

09 March 2010

" A X E " விளம்பரத்தை தடை செய்யணும்..!

நேத்து என் நண்பன்கிட்ட
Phone-ல பேசிட்டு இருக்கும்
போது..

நண்பன் : இந்த " A X E " விளம்பரத்தை
தடை செய்யணும்டா..!

நான் : எனக்குகூட அப்படிதான் தோணுது.,
என்ன ஒரு மட்டமான Concept..?!
" A X E " போட்டுட்டு போனா..,
உடனே பொண்ணுங்க எல்லாம்
பின்னாடியே வந்துடுவாங்களா..?

நண்பன் : Correct-ஆ சொன்னடா.,
நேத்து பாரேன்..,
ஒரு கல்யாணத்துக்கு
" A X E " போட்டுட்டு போனேன்..
அங்கே ஒரு பொண்ணுகூட என்னை
திரும்பி பார்க்கலை..
ஒரே Feeling-ஆ போச்சு..

நான் : ஓ.. அவனா நீ..?!!
.
.

08 March 2010

ஆண்கள் Vs பெண்கள்நான் MCA படிக்கும் போது
" சிந்தனையில் மேம்பட்டவர்கள்
ஆண்களா..? பெண்களான்னு..? "
எங்களுக்கு ஒரு பட்டிமன்றம்
நடந்தது..

நான் " பெண்களேங்கிற " Side-ல
பேசினேன்..

எனக்கு முன்னாடி ஆண்கள் Side-ல
பேசினவருக்கு நான் குடுத்த
Counter Attack பத்தி தான் இந்த பதிவு..,

முதல்ல இருக்கிறது அவரு பேசியது..
அடுத்தது நான் பேசியது..

No :1

பட்டி மன்ற தலைப்பை பாருங்க.,
" சிந்தனையில் மேம்பட்டவர்கள்
ஆண்களா..? பெண்களா..? "

இந்த தலைப்புல
முதல்ல " ஆண்கள் " இருக்கு..
ரெண்டாவதா தான் " பெண்கள் " இருக்கு..
இதுலயிருந்தே தெரியலையா
ஆண்கள்தான் மேம்பட்டவர்கள்னு..

என் பதில் :

இது கொஞ்சம் Too Much-ஆ இருக்கே..!!?

சரி உங்க வழிக்கே வர்றோம்..
ஒண்ணு பெருசா..? ரெண்டு பெருசா..?


No : 2

நியூட்டன்., எடிசன்.., காந்தி.., நேரு..,
இவங்கல்லாம் எவ்வளோ
பெரிய சிந்தனைவாதிங்க..

என் பதில் :

நல்லா கவனிச்சீங்களா மகா ஜனங்களே..!
சிந்தனைவாதிங்கன்னு அவங்க சொன்ன
எல்லோருமே 1960-க்கு முன்னாடி
இருந்தவங்க.. இப்ப இருக்கிற ஆண்கள்ல
சிந்தனைவாதி யாரும் இல்லைன்னு
அவங்களே ஒத்துகிட்டாங்க..

No 3 :

+2-ல பொண்ணுங்க அதிக மார்க்
எடுக்கறாங்கன்னா.., அதுக்கு காரணம்
வீட்டுல உக்கார்ந்து மாங்கு., மாங்குன்னு
மனப்பாடம் பண்ணுறாங்க..
அவங்களுக்கு வேற வேலை இல்ல.,


என் பதில் :

நீ என்ன Part Time-ல இந்தியாவோட
ஜனாதிபதியாவா இருக்கே..?
நீயும் உக்கார்ந்து படி..!

பொறாமை பிடிச்ச பசங்க..!

ஆனா.., நம்ம பையன் Exam Hall-ல
உக்கார்ந்துகிட்டு சிந்திப்பான் பாருங்க..
என்னமோ இவன் தான் புதுசா
ஒரு Formula கண்டுபிடிக்க போற மாதிரி...

இப்படி Counter Attack அமைஞ்சது..

என் Speech இனிமே தான் வரும்
அதுலயும் நிறைய Same Side கோல்
போட்டு இருப்ப்பேன்..

இன்னும் 10 வருஷத்தில இந்த
மாதிரி Topic அவசியமே இருக்காது..
பெண்கள் தான் புத்திசாலின்னு
எல்லோருக்குமே தெரிஞ்சி போயிடும்னு
கடைசியில சொல்லி இருப்பேன்..

நடுவர் சமமான தீர்ப்பு குடுத்தார்..,

ஆனா அதுக்கு அப்புறம்..,
எங்க காலேஜ் பொண்ணுங்க
என்னை பார்த்தா பாசமா சிரிச்சாங்க..!

என் Friends தான் முறைச்சிக்கிட்டே
திரிஞ்சாங்க..

( அந்த வருஷ Semester Exam-ல எனக்கு
Internal Marks வாரி வழங்கப்பட்டது.
அது தனி கதை ஹி., ஹி..! )
.
.

07 March 2010

" Petrol " லிட்டர் எவ்ளோ..??!!இந்தியாவுல பெட்ரோல் விலை
எப்படி கணக்கிடறாங்கன்னு
ஒரு SMS வந்தது..,

( இது உண்மையான்னு தெரியாது..
ஆனா இப்போதைக்கு இதை
உண்மைன்னே வெச்சிப்போம்.. )

அடிப்படை விலை ( Basic Price ) -> : Rs 21.12
உள் நாட்டு வரி ( Excise Duty ) -> : Rs 13.80
கல்வி வரி ( Education Cess )- > : Rs 0.41
மதிப்பு கூட்டு வரி ( VAT ) -> : Rs 5.25
கச்சா எண்ணெய் சுங்க வரி -> : Rs 1.01
பெட்ரோல் சுங்க வரி -> : Rs 1.45
போக்குவரத்து செலவு -> : Rs 6.00
டீலர் கமிஷன் -> : Rs 1.00
விற்பனை விலை : Rs 50.07

21 ரூபாய் பொருளுக்கு நாம
கட்டுற வரி 29 ருபாய்..!

என்ன Tension ஆயிடீங்களா..?!

" ரோஜா செடியில முள்ளு இருக்கேன்னு
வருத்தப்படுறதை விட.,
முள்ளு செடியில ரோஜா பூத்து
இருக்கேன்னு நினைச்சி சந்தோஷப்படுங்க..! "

K.பாக்யராஜ் சார் இதை நமக்கு
சொல்லி தந்து இருக்காருல்ல..

இப்ப..,
நாம சரியான நேரத்துக்கு
ஆபீஸ் புறப்பட்டாலும்.,
போய் சேர அரை மணி நேரம்.,
ஒரு மணி நேரம்
லேட் ஆகுது..!

அவ்வளவு Traffic..!!

பெட்ரோல் விலை 50 ரூபாயா
இருக்கும் போதே
இந்த நிலைமைன்னா..,
பெட்ரோல் விலை 25 ரூபாயா
இருந்தா..?

நீங்க Road Cross
பண்ணுறதுக்குள்ள
Lunch Break வந்திடும்..

ஏன்.. Road வசதி செஞ்சு
குடுக்கலாம்லன்னு
நீங்க கேட்கலாம்..

நியாயம்தான்..
ஆனா..,
" இங்கே அரசியல் பேசப்படாது..! "
.
.

06 March 2010

லவ்வுன்னா., LOVE..!
நேத்து இரவு 8.30 மணி..

என் Friend ஜெகன்கிட்ட
Phone பேசிட்டு இருந்தேன்...
அப்ப என் Wife சாப்பிட
கூப்பிட்டாங்க...

" டேய்.., என் Wife சாப்பிட
கூப்பிடறாங்க..நாம அப்புறமா
பேசலாம்..?! "

" பேசிட்டு இருக்கும் போது
பாதில ஓடாதடா.., அவங்கள
முதல்ல சாப்பிட சொல்லு.. '

" நான் சாப்பிடாம., அவங்க
சாப்பிட மாட்டாங்க., என் மேல
அவ்வளோ Love.. "

" நான்கூட தான் தினமும்
சாப்பிடறதுக்கு முன்னாடி
காக்காவுக்கு சோறு வெக்கிறேன்..
அதுக்காக எனக்கு காக்கா மேல
Love-ன்னு அர்த்தமா..? "

" டேய்ய்ய்ய்ய்ய்....... வீணா எரிமலை
மேல எச்சி துப்பி Enjoy பண்ற..!!
Be Careful...!! "
.

.

05 March 2010

கணவனை பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம்..!


இது நல்ல பழக்கமா..?
கெட்ட பழக்கமா..?

அவங்க புருஷன்.., அவங்க எப்படி
வேணாலும் கூப்பிடலாம்..,
அது அவங்க இஷ்டம்...
அதை பத்தி நாம என்ன கேக்கறது..?!!

அதனால அந்த பழக்கம் எப்ப
ஆரம்பிச்சிருக்கும்னு..?
ஒரு சின்ன ஆராய்ச்சி மட்டும்
பண்ணலாம்..

நீங்கள்லாம்
" கந்தன் கருணை " படம்
பார்த்து இருப்பீங்க..

அந்த படத்துல தான்
நம்ம ஆராய்ச்சி தொடங்குது...

அந்த படத்தில
" திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
முருகான்னு.. " ஒரு பாட்டு வரும்ல..

அந்த பாட்டை பாடுறது யாரு..?

" K.R.விஜயாவும்., ஜெயலலிதாவும் "

அட அது இல்லங்க... படத்துல
அவங்க யாரு..?

" தெய்வானையும்., வள்ளியும்..! "

ம்ம்.. அப்படி வாங்க வழிக்கு..

அப்ப கணவனை பெயர் சொல்லி
அழைக்கும் பழக்கம் முருகன் சாமி
காலத்துல இருந்தே இருக்குன்னு
இப்ப புரியுதா..?!!


வெயிட்., வெயிட்., வெயிட்..

திருவிளையாடல் படத்துல தாட்சாயினி
" ஈசனே... சக்தி இல்லயேல் சிவம்
இல்லை "னு வாதாடுவாங்களே..

அப்ப இந்த பழக்கம்
முருகரோட அப்பா காலத்துல
இருந்தே இருக்கோ..?!!

.
.

04 March 2010

எங்ககிட்டயே English-ல பீட்டரா..?


[ *** பீட்டர் விடறது = English-ல
பேசறதால தன்னை
அறிவாளின்னு நம்பறது.. ]

உங்ககிட்ட யாரவது
English-ல பீட்டர் விட்டா
நீங்க என்ன பண்ணுவீங்க..?

நாங்களா இருந்தா
" அர்னால்டு ஸ்வார்சனேகர் "
இதுக்கு என்ன Spelling-ன்னு..?
கேட்போம்.

English-ல பேசறவனெல்லாம்
அறிவாளின்னா..
London-ல பிச்சை எடுக்கிறவங்கூட
அறிவாளி தான்..

English ஒரு மொழி தானே
தவிர.,
அது அறிவு அல்ல..!

காந்திஜி., நேருஜி., நேதாஜி
இவங்கள்லாம் English-ல
பேசுனாங்க.., - அது
English-காரனுக்கு புரியணுமேன்னு..,
அதுல ஒரு Logic இருந்தது..

இப்ப..,
நமக்குள்ளயே English-ல
பேசிக்கிறோமே இதுல
எதாவது Logic இருக்கா..?

யோசிங்க..,

பின் குறிப்பு :

" ARNOLD SCHWARZENEGGER "
இது தான் அவர்
பெயரோட Spelling.
ரொம்ப சிம்பிளா இருக்கே..!!!??
.
.

02 March 2010

சாமியா..? ஆசாமி..?இன்னிக்கு Sun Tv நியூஸ்
பார்த்ததுக்கு அப்புறம்

" சாமி இருக்குங்கிறவனை நம்பு..,
சாமி இல்லைங்கிறவனையும் நம்பு..,
ஆனா..,
நான் தான் சாமின்னு
சொல்லுறவனை மட்டும் நம்பாதேன்னு..! "

ஒரு படத்துல கமல் சொல்லுவார்
அதுதான் நியாபகத்துக்கு வந்தது...

ஹும்ம்ம்....!

" இந்த பூனையும் பால்
குடிக்குமான்னு பார்த்தா., - அது
பால் பாயாசம் சாப்பிட்டுட்டு.,
Parcel வேற வாங்கிட்டு போகுது..! "

கலிகாலம்டா சாமி...!

பின் குறிப்பு :
வேணும்னே தான் இதை பத்தி விரிவா
எழுதலை.
நம்ம Blog-க்குன்னு ஒரு மரியாதை
இருக்குல்ல..
.
.

மாத்தி யோசி..!!B.Com..,Semester Exam
நெருங்கிட்டு இருந்தது..,

என் Friend ஜனா என்னை
கூப்பிட்டான்..

"வா., இளங்கோவன் சார்கிட்ட போயி
முக்கியமான கேள்வியெல்லாம்
குறிச்சி தர சொல்லி வாங்கிட்டு
வரலாம்.. "

எனக்கு தூக்கி வாரி போட்டது..,

" ஜனா...! உனக்கு பரிட்சையில
பாசாகிற எண்ணம் இல்லியா..? "

" இருக்கே..!! "

" அப்ப எதுக்கு இளங்கோவன் சார்கிட்ட
போகணும்கற..?!! அவரு குறிச்சி தந்தா...
ஒரு கேள்வி கூட பரீட்சைக்கு வராது
தெரிஞ்சிக்க...! "

"  அட லூசு.. அதான் எதெல்லாம்
வராதுன்னு தெரிஞ்சிடுதுல்ல.. அப்புறம்
அதை விட்டுட்டு மத்ததை படிக்கலாமே..! "

அட ஆமால்ல..!!!
.

.

" குச்சின் டெண்டுல்கர் " - ஒரு அறிமுகம்

எங்க Friend ஒருத்தன் செல்ல பேரு
" குச்சின் டெண்டுல்கர் "

அன்னிக்கு வேற காலேஜ் கூட
ஒரு Match..

எதிர் டீம் கேப்டன் கிட்ட
நம்ம " குச்சினை " பத்தி
நாலு வார்த்தை இப்படி
Intro குடுத்தோம்..,

1. எங்க டீமோட முதுகெலும்பே
இவன் தான்.

2. இவன் இல்லாம நாங்க எந்த Match-ம்
விளையாட மாட்டோம்.

3. ஆள பாத்து சாதாரணமா எடை
போடாதீங்க. இவனை அவுட்டே
பண்ண முடியாது..

4. இவனை நாங்க செல்லமா
" குச்சின் டெண்டுல்கர்"-ன்னு கூப்பிடுவோம்..

எதிர் டீம் கேப்டன் முகத்துல
அப்ப லேசா கலவரம் தெரிஞ்சது...

ஆனா.., எங்க Bad Luck..
அன்னிக்கு நாங்க மேட்ச்ல
தோத்து போயிட்டோம்..!!

" குச்சின் இருந்துமா தோத்து
போயிட்டீங்கன்னு..? " நீங்க மனசுக்குள்ள
நினைக்கிறது எனக்கு கேக்குது..

என்ன பண்றது... ? அன்னிக்கு Match-ல
குச்சினுக்கு சான்ஸ் குடுக்க முடியல..
( அம்பயரிங் பண்ண, வேற ஆள்
வந்துட்டாங்க...... )

ஹி., ஹி., ஹி...!  நாங்க எப்ப
கிரிக்கெட் விளையாடினாலும்
குச்சின் தான் எங்க  டீம் அம்பயர்..!

டிஸ்கி :
அவன் பார்க்க ஒல்லியா இருப்பான்..
அதனால " குச்சின் டெண்டுல்கர்ன்னு "
கூப்பிடுவோம்...அவ்வளவு தான்.

.
.

01 March 2010

ஜோசியம் பார்க்கலையோ..??!!


மனக் கஷ்டத்தோடு
வருகிறார்கள்
ஜோசியரிடம்..,
சொல்லப்படுகிறது
பரிகாரம்..,
உடனே தீர்கிறது
ஜோசியரின்
பணக்கஷ்டம்..!
.
.

ஆடு சைவமா.? அசைவமா..?


ஆடு அசைவமா..?
நல்லா இருக்கே கதை..

சைவத்தை சாப்பிடறவங்க
சைவனா.. ஆடு மட்டும் என்ன
சிக்கன் வருவல், மீன் ரோஸ்ட்னா
சாப்பிடுது..??

அது பாட்டுக்கு இலை., தழை.,
புல்லுன்னு சைவ விஷயத்தை
தானே சாப்பிடுது..?!

இப்படி முழுக்க முழுக்க சைவத்தை
சாப்பிடற ஆட்டை " அசைவம்னு "
எப்படி சொல்லலாம்..?!!

ஆடு சமுதாயத்துக்கு ஏற்பட்ட
இந்த தீராத களங்கத்தை
சரி பண்ணியே ஆகணும்..

அது நம்ம பொறுப்பு..

உங்களை பாத்தா பெரிய மனுஷரா
தெரியுது... நீங்க நல்லா யோசிச்சி
சொல்லுங்க...

ஆடு சைவம் தானே..?

அப்ப..
அப்ப..

Mutton பிரியாணியும்
சைவம் தானே..??!!

ஹி., ஹி., ஹி..!
.


.