சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

26 December 2011

ஒவ்வொரு Friend-ம் தேவை மச்சான்..!?

நேத்து மதியம் 3 மணிக்கு
மங்குனிகிட்ட இருந்து போன்..

" ஹலோ., வெங்கட் என்ன பண்ணிட்டு
இருக்க..?! "

" இப்பத்தான் லஞ்ச் முடிச்சிட்டு
வர்றேன்.! "

" இப்பத்தான் சமைச்சிட்டு வர்றேன்னு
சொல்லு..! "

" நோ.,நோ., சாப்பிட்டுட்டு வர்றேன்..! "

" சமைக்காத மாதிரியே பேசறான்யா..!
ஆமா.. லஞ்சுக்கு என்ன ஸ்பெஷல்..? "

" வஞ்சரம் மீன் குழம்பு..! "

" சேலத்துல வஞ்சரம் மீனா..?
ஆச்சரியமா இருக்கே..!!! "

" இது மேட்டூர் Dam வஞ்சரம்..! "

" என்னாது வஞ்சரம் மீன் Dam-லயா.???!

" ஏன் இருக்காதா..? "

" ம்ஹூம்... அது கடல் மீன்யா
Dam-ல எல்லாம் வளராது..! "

" ஆஹா ஏமாத்திட்டானுகளா..?!! "

" இதுக்குதான் மீன் வாங்கும்போதே
ஒரிஜினல் வஞ்சரமான்னு செக் பண்ணி
வாங்கணும்கறது..! "

" அது எப்படி செக் பண்றது..?!! "

" அப்படி கேளு..."

" சரி சொல்லுங்க..! "

" நல்லா நோட் பண்ணிக்க.. இனிமே
எப்ப மீன் வாங்கினாலும் முதல்ல
அதை ஒரு கையில தூக்கி..."

" ம்ம்...! "

" அது மூஞ்சிக்கு நேரா கேளு..
What is Your Name..? "

" ??!!?!!?!?!?!?! "

( ஐயோ ராமா..! என்னை ஏன் இந்த மாதிரி
பசங்ககூட எல்லாம் கூட்டுசேர வைக்கிற.? )
.
.

24 December 2011

ராஜபாட்டை ( ஒன் லைன் விமர்சனம் )



ஆவ்வ்வ்வ்வ்வ்....! அவ்வ்வ்வ்..!!
( படம் முடிஞ்சா எழுப்பி விட மாட்டீங்களாப்பா..?! )
.
.

22 December 2011

ஏம்பா.., நான் சரியாதான் பேசறேனா.?!!

















" ஈரோடு சங்கமம் 2011 " நிகழ்ச்சிக்கு
நானும். சேலம் தேவாவும் பஸ்ல
சேர்ந்து போறதா Plan.

ஆனா அவரு முதல் ஸ்டாப்பிங்ல
ஏறுவாரு.. நான் 5-வது ஸ்டாப்பிங்ல
தான் ஏற முடியும்...

மணி சரியா 8.30. தேவாகிட்ட
இருந்து போன்...

" சார்.. நான் பஸ் ஏறிட்டேன்..! "

" அப்படியா..? பஸ் நம்பரு..? "

" 59 சார்.."

" ஓ.கே.. நான் பாத்துக்கறேன்..! "

பஸ் ஸ்டாப்ல..
நான் 10 நிமிஷமா Wait பண்ணிட்டு
இருக்கறதை பாத்த எனக்கு பக்கத்துல
இருந்த ஒரு ஆள்..

" எங்கே சார் போகணும்..? "

" ஈரோடு..! "

" ஓ.. அதோ வர்ற அந்த பஸ் கூட
ஈரோடு தான் போகுது.. வாங்க
போலாம்..!! "

நான் அந்த பஸ்சை பாத்தேன்..
அது ஒரு Private Bus.. " SNB "

" இல்ல சார்.. நீங்க போங்க.. நான்
அடுத்த பஸ்ல போயிக்கிறேன்..! "

" சீட் கூட காலியாத்தான் இருக்கு..! "

" இருக்கட்டும் சார்.. நீங்க ஏறிக்கோங்க..! "

அவரு ஏறிக்கிட்டாரு.. கூட 4 பேர்
ஏறினாங்க.. பஸ் ஸ்டார்ட் ஆகி
கிளம்பிடுச்சி..

அப்ப பஸ் உள்ள இருந்து ஒரு குரல்..

" வெங்கட் சார்.. சீக்கிரம் வாங்க..
இந்த பஸ்தான் ஏறுங்க.. ! "

யார்ரா அதுன்னு பாத்தா..
நம்ம சேலம் தேவா.. உடனே..

" ஸ்டாப்.. ஸ்டாப்.. ஸ்டாப்..!! "

ஒரு 30 அடி ஓடி போயி மூச்சு
வாங்க பஸ்ல ஏறினா..

அந்த ஆள் என்னை கொலைவெறில
பார்த்தாரு.. லைட்டா முகத்தை
திருப்பினா இந்தாண்ட கண்டக்டர்..
அவரும் அதே கொலைவெறி பார்வை..

ஹி., ஹி., ஹினு ஒரு வழி வழிஞ்சிட்டு.,
எஸ் ஆகி.. தேவாகிட்ட வந்து..

" உஸ்ஸப்பா.. வேற பஸ் மாத்தி
ஏறினா ஒரு போன் பண்ண மாட்டீங்களா.? "

" நான் மாத்தி ஏறலையே..! "

" ????!!!! "

" நீங்க இந்த பஸ் நம்பர் ப்ளேட்
பார்க்கலையா..? TN 52B - 059 "

" அடப்பாவிகளா..? Govt பஸ்ல ஏறினா
நம்பர் சொல்ல சொன்னா.. Private பஸ்ல
ஏறிட்டு நம்பர் ப்ளேட் நம்பர் எல்லாமா
சொல்லுவீங்க..?!!! "

டிஸ்கி : நாங்கள் ஈரோடு சங்கமத்தில்
கலந்து கொண்ட அழகை படிக்க
விரும்புகிறவர்கள்.. க்ளிக் பண்ணவும்

" ஈரோடு சங்கமம் " - வெளிவராத செய்திகள்..!
.
.

19 December 2011

" ஈரோடு சங்கமம் " - வெளிவராத செய்திகள்..!

டிஸ்கி : " ஈரோடு சங்கமம் " பத்தி
இந்நேரம் பல பேர் எழுதி இருப்பாங்க..
இன்னும் எழுதுவாங்க..

So.. நாம எந்த ப்ளாக்லயும் வெளிவராத
மத்த விஷயங்களை பார்க்கலாம்.

" ஈரோடு சங்கமம் "நிகழ்ச்சில
கலந்துக்க நான் வர்றேன்னு தெரிஞ்சதும்.,
பஸ் ஸ்டேண்ட் அருகே என் வாசகர்கள்
வைத்த கலக்கல் கட்-அவுட்..!

( ஹி., ஹி., அடங்க மாட்டோம்ல..!! )

" வெங்கட் வரட்டும்னு " Wait
பண்ணிட்டு இருக்காம 10.15-க்கு
நிகழ்ச்சியை Sharp-ஆ ஆரம்பிச்ச
அந்த Punctuality எனக்கு ரொம்ப
பிடிச்சி இருந்தது.


வந்திருந்த 230 பதிவர்கள்ல என்னை
மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலா
கவனிச்சாங்க.

( எனக்கு குடுத்த க்ளாஸ்ல
எல்லோரையும் விட 5 ml ஜூஸ்
அதிகமா இருந்துச்சில்ல..!! )

( நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட மஞ்சள் கலர் ஜூஸ்.
டேஸ்ட்.. செம, செம..!! )

சிறந்த பதிவர்களை பாராட்டி
அவார்ட் குடுத்துட்டு இருந்தாங்க..
அப்ப செல்வா என்கிட்ட..

" தல.. உங்களுக்கும் அவார்ட் தருவாங்களா.? "

" கேட்டாங்க.. வேணாம்னு சொல்லிட்டேன்.! "


யார் போட்டோ எடுத்தாலும் உடனே
கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்ளும்

சி.பி.செந்தில்குமார். அசந்த நேரத்தில்

க்ளிக்கியது...



மேடை ஏறி பதிவர்கள் தங்களை
பற்றி Intro பண்ணிக்கொள்ளும் போது
சேலம் தேவா பேசியது...

" நான் வலையுலகத்துக்கு வந்ததுக்கு
காரணமே வெங்கட் தான்..! அவரோட
கோகுலத்தின் சூரியன்
Blog-ஐ பாத்து
Inspire ஆகி தான் நானும் ஒரு Blog
ஆரம்பிச்சேன் "-னு சொன்னப்ப
கரகோஷம் விண்ணை பிளந்தது..

( நானு, சி.பி.செந்தில், " நாய் நக்ஸ் " நக்கீரன்,
செல்வா நாலு பேரும் ( மட்டும்.?! )
கையை தட்டிட்டே இருந்தோம்ல.. )

( சே..! எவ்ளோ Training குடுத்து அனுப்பினாலும்
ரெண்டு Points மிஸ் பண்ணிடுராரே..!!! )

டிஸ்கி :

மேலே இருக்குற கட்-அவுட்
நிஜம்னு
சில பேர்
நம்பிட்டதா எனக்கு தகவல்
வந்தது...
அது கிராபிக்ஸ் by Salem Deva

" இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது.?!! "
.
.

12 December 2011

" ரீஃபைண்ட் ஆயில் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

உங்க வீட்ல ரீஃபைண்ட் ஆயில்
Use பண்றீங்களா.? அப்ப இதை
கட்டாயம் படிங்க...


டிஸ்கி : " க்ரைம் நாவல்"-ல ராஜேஷ்குமார்
ஒரு வாசகர்க்கு எழுதின பதிலை இங்கே
அப்படியே போடறேன்..

உணவியல் பற்றி நன்கு அறிந்த திரு.S.சக்ரபாணி
ஒரு கட்டுரையில் நாம் உபயோகிக்கும்
சமையல் எண்ணெய் பற்றி சில அதிர்ச்சியான
விபரங்களை சொல்லியிருந்தார்.. அதை தான்
இப்போது சொல்லப் போகிறேன்.

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில்
ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,
நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்.,
மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த
எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.

இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு
தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,
தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,
கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ்,
வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும்
மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு
சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து
முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய
நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும்
வைத்து இருந்தனர்.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,
மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால்
அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றி
கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள்
இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக
" நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.
வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று
அழைக்கிறர்கள்.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும்
ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள்
எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான
உண்மை.

சரி., ரீஃபைண்ட் ஆயில் எப்படி
தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா..

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில்
காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க
வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு
எடுக்கிறார்கள்.

பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின்
மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து
அதில் இருக்கும் வாசனையை அறவே
நீக்கிவிடுகிறார்கள்.

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன்
மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.

இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில்
பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள்
எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால்
" சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று
நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து
கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது
அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது
சூடு தாங்காமல் உருக்குலைந்து
உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும்
ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்க்கையான
எண்ணெய்யை சூடுப்படுத்தினால்... அது
ரசாயன கலவையாக மாறாது. அதன்
தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல்
நமக்கு கிடைக்கும்.

எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால்
இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு
உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக
பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு
இருக்கிறார்கள்.

ரசாயன பொருட்களால் பாழ்படுத்தப்பட்டு.,
உடல் ஆரோக்கியத்திற்க்கு அவசியமான
பொருட்கள் நீக்கப்பட்ட ஒரு திரவத்தை
ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்பனை
செய்ய அரசாங்கமும்., மெடிக்கல் கவுன்சில்களும்
எப்படி அனுமதி அளிக்கின்றன...??

நாமும் யோசிக்கும் சக்தியை ஏன் இழந்து
விட்டோம்.?

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம்
சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான்
காரணம் என்று சொல்லி நம்மை நாமே
ஏமாற்றி கொள்கிறோம்.

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு
எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை
வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.
இதற்க்கான காரணங்களில் முக்கியமான
இடத்தை பிடித்து இருப்படி ரீஃபைண்ட் ஆயில்.

" விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கிறது
அதற்க்கு ஏற்றார்போல் நாமும் மாற வேண்டும்."
என்று சிலர் சொல்லக்கூடும்.

ஆனால் விஞ்ஞானம் தொழில்துறையில்
இருக்கலாம்.,நம்முடைய உடல் ஆரோக்கியத்தோடு
அந்த விஞ்ஞானம் விளையாடக்கூடாது..

===============================================
மேலும் சில பதிவுகளில்....

// எண்ணை உண்மை:

கொட்டைகள், விதைகளிலிருந்து நேரடியாக
எடுக்கப்படும் எண்ணை தான் சிறந்ததே தவிர,
ரீபைண்ட் ஆயில் அல்ல. அதில் நார்ச்சத்து
இழக்கப்பட்டு விடுகிறது. //

Source : உணவு பழக்கம்


// முற்றிலும் தண்ணீர் போன்ற ஒரு திரவம் தான்
ரீஃபைண்ட் ஆயில். சமையலில் உணவு பொறிக்கப்படும்
போது, அதிகச் சூட்டினால் இந்த எண்ணெய் போன்ற
திரவம் முற்றிலுமாய் சிதைந்து விடுகின்றதாம்.
இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் தான்,
ஆஸ்துமா, தைராய்டு, புற்று நோய் ஏற்படுகிறதாம். . //

Source : புற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்

எந்த விஷயமா இருந்தாலும் அதை
ஒரு இங்கிலீஷ்காரன் சொன்னா தானே
நாம " சரி "- ன்னு ஒத்துப்போம்..
( வெள்ளையா இருக்கறவன் பொய்
சொல்ல மாட்டான்ல...! )

Source : Refining Vegitable Oil : A Nasty Process

பின் டிஸ்கி : இன்னில இருந்து எங்க வீட்ல
ரீஃபைண்ட் ஆயிலுக்கு " டாட்டா.. பை பை.. "
.
.

05 December 2011

Why this கொலைவெறி டி..!?!!!


ரெண்டு நாள் முன்னாடி தான்
என் Friend ஹரி போன் பண்ணி

Youtube-ல " Why this கொலைவெறி டி..! "
பாட்டு பாத்தியான்னு கேட்டான்..

இன்னும் இல்லன்னு சொன்னதும்...

" ?!!@?##?#!@!?@### "

" ஹேய்.. ஹேய்... No Bad Words..! "

" அப்ப முதல்ல போயி அதை பார்டா..! "

சரின்னு.. நானும் அவசர அவசரமா
Youtube-ல தனுஷ் பாடின அந்த பாட்டை
பாத்துட்டேன்..!

( அப்பாடி.. இனிமே ஊருக்குள்ள
தலை நிமிந்து நடக்கலாம்..! )

என்னா ஒரு பாட்டு..! என்னா ஒரு Lyrics..?!

( தம்பி..! பாட்டும், Lyrics-ம் ரெண்டும்
ஒண்ணுதான்பா.! )

ஹி., ஹி., ஹி.. இப்ப தான் பாட்டை
பாத்துட்டு வர்றேன்.. அதான்...

சரி அதை விடுங்க...

இதே பாட்டை பஞ்சாபி பொண்ணு
ஒண்ணு பாடின வீடியோவும் இருக்கு..


சும்மா சொல்லக்கூடாது.. இந்த பாட்டும்
நல்லாத்தான் இருக்கு..

ஆனா நிறைய பேர் இந்த பாட்டுக்கு
" Dislike " போட்டு இருக்காங்க..!

சிலர் இந்த பாட்டை திட்டி கமெண்ட்
வேற போட்டு இருந்தாங்க..

அங்கே இருந்த கமெண்ட்ஸ்ல சில
என்னை அப்படியே புல்லரிக்க
வெச்சது...

இதோ சில சாம்பிள் கமெண்ட்ஸ்..

" Pls dont kill TAMIL language.. "

" உனக்கு தமிழ் மேல என்ன கொலைவெறி டி..!"

" Go get a lesson on Tamil and come back. "

" தமிழ் இனி மெல்லச்சாகும்..! "

இதை எல்லாம் படிச்சதுக்கு அப்புறம்
தான் எனக்கு அந்த உண்மையே
தெரிஞ்சது...
.
.
.
ஆஹா.., அப்ப நம்ம தனுஷ் பாடினது
" தமிழ்ப் பாட்டா..!?! "

=========================================================

போனஸ் Track :

ஜூனியர் Nigam ( Nevaan Nigam ) பாடினது..


.
.

28 November 2011

மாஸ்டர் ப்ளான்..!!

என் டேபிள் மேல ஒரு Bag
இருந்தது.. அதை பார்த்த என் Wife...

" என்னங்க இது Bag..? "

" அதெல்லாம் மாஸ்டர் பிளான்..
சொன்னா உனக்கு புரியாது..! "

" மாஸ்டர் பிளானா..?! அப்ப அது
நீங்க போட்டதா இருக்காதே..
கரெக்ட்டா..?!! "

" நீ ஒரு ஜீனியஸ்கிட்ட பேசிட்டு
இருக்கேன்னு அடிக்கடி மறந்துடற..! "

" ஹி.,ஹி., முதல்ல உங்க ப்ளான்
என்னான்னு சொல்லுங்க.. அப்புறம்
நீங்க ஜீனியஸா இல்ல ஜீனியஸ்க்கு
எதிர்வீட்டுக்காரரான்னு பார்க்கலாம்..!  "

" என் Friend ரவியோட பொண்ணு
' ஹோலி கிராஸ்ல ' 2nd Std
படிக்கிறால்ல.."

" ஆமாம்..! "

" அவ வீட்ல கூட இங்கிலீஷ்ல தான்
பேசறாளாம்.. "

" சரி.. அதுல என்ன பிரச்னை..? "

" நம்ம ஆளுக்கு தான் இங்கிலீஷ்
சரளமா பேச வராதே.. "

" அட.. என்னமோ நீங்க தினமும்
இங்கிலீஷ்ல எட்டு பாட்டு எழுதற
மாதிரி பேசறீங்க.. இங்கேயும் அதே
கதை தானே..?! "

" ஹி., ஹி., ஹி.. இருக்கலாம்.. ஆனா
இன்னும் ஒரு மாசம் கழிச்சி இப்படி
எல்லாம் நீ எங்களை கிண்டல்
பண்ண முடியாது.. "

" ஏன் ரெண்டு பேரும் எதாவது
ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்
போக போறீங்களா..?! "

" சே., சே., அதெல்லாம் கஷ்டம்..
நாங்க வேற ஒரு ஈஸியான
மாஸ்டர் ப்ளான் வெச்சி இருக்கோம்ல.. "

" அட அது என்னான்னு தான்
சொல்லுங்களேன்.. "

" அந்த Bag-ஐ திறந்து பாரு..
உனக்கே புரியும்..! "

பையை திறந்து பார்த்த
என் Wife ஆச்சரியத்தோட...



" என்ன இது... எல்லாம் இங்கிலீஷ் பட
DVD-யா இருக்கு..! "

" ம்ம்.. தினமும் ஒரு இங்கிலீஷ் படம்
பாக்கறது., ஒரு மாசத்துல சரளமா
இங்கிலீஷ் பேசறது.. இதான் எங்க ப்ளான்..!!
எப்பூடி..?! "

" அது சரி.., அதுக்கு எதுக்கு தமிழ்ல டப்
பண்ணின இங்கிலீஷ் பட DVD-ஐ வாங்கிட்டு
வந்து இருக்கீங்க..? "

" Oh My God..! அவ்வ்வ்வ்வ்..!! "

( யானைக்கும் அடி சறுக்கும்னு
சொல்றது எம்புட்டு கரெக்ட்டு..! )
.
.

22 November 2011

7-ஆம் அறிவு vs வேலாயுதம்

இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன்..
எங்க டாக்குடரு விஜயை பாத்தா
உங்க எல்லாருக்கும் " கைப்புள்ள "
கணக்கா தெரியுதா..?

ஆனா, ஊனா அவர் நடிக்கிற படத்தை..
( சரி., சரி... இருக்குற படத்தை.. )
கிண்டல் பண்றீங்க..?!!

இப்ப லேட்டஸ்ட்டா வேற
வேலாயுதம் படமும், 7-ஆம் அறிவு
படமும் ஒரே கதை தான்னு
சில பேர் கதை கட்டி விடறாங்க..

இதையெல்லாம் கேக்கும் போது
எனக்கு செம டென்ஷன் ஆகுது..







பின்ன தெலுங்கு, மலையாளம்,
இந்தி, ஹாலிவுட், அசஸின்கிரீட்-னு
அவர் ரேஞ்ச் எங்கேயோ போயிட்டு
இருக்கு போது..

இந்த மாதிரி ஒரு தமிழ்படத்தை.,
( அதுவும் வேற ஒருத்தர் நடிச்ச படத்தை )
காப்பி அடிச்சார்னு சொல்றது
சின்னப்புள்ள தனமால்ல இருக்கு..


இந்த 10 வித்தியாசங்களை படிங்க..
அப்ப புரியும் " வேலாயுதம் " எவ்ளோ
வித்தியாசமானவன்னு...

ஏழாம் அறிவு
வேலாயுதம்
1. வில்லன் சீனால இருந்து கிளம்பி வருவான்..

வில்லன் ஆப்கான்ல இருந்து கிளம்பி வருவான்..
2. Bio Weapon Use பண்ணி மக்களை கொல்லுவாங்க.

2. குண்டு வெச்சி மக்களை கொல்லுவாங்க.

3. முதல்ல சென்னைலதான் ஆரம்பிப்பாங்க..
3. இங்கேயும் சென்னை தான்.. ஆனா ஏரியா வேற

4. இதுல ஹீரோ சர்க்கஸ்காரர்

4. இதுல ஹீரோ பால்காரர்
5. இதுல ஸ்ருதி ஒரு Scientist.

5. இதுல ஜெனி ஒரு Reporter.
6. ஸ்ருதிதான் சூர்யாவுக்கு
' போதிதர்மர் ' யார்னு புரிய வெப்பாங்க.
6. ஜெனிதான் விஜய்க்கு
' வேலாயுதம் ' யார்னு புரிய வெப்பாங்க.
7. Senior Scientist ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு 7. உள்துறை மந்திரி லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு.
8.லஞ்சம் 300 கோடி

8. லஞ்சம் 5000 கோடி

9. சூர்யா ஒரு சீன்ல ஸ்ருதியை யானை மேல கூட்டிட்டு போவாரு 9.விஜய் ஒரு சீன்ல ஜெனியை குதிரை மேல கூட்டிட்டு போவாரு
10.கடைசி Fight-ல சூர்யா சட்டை பட்டனை கழட்டி விட்டுட்டு சண்டை போடுவாரு..
10.கடைசி Fight-ல விஜய்
சட்டையையே கழட்டிட்டு
சண்டை போடுவாரு..

































இப்ப சொல்லுங்க.. இது ரெண்டும்
ஒரே கதையா..?!!!
( என்னாது கொஞ்சம் அப்படி தான்
தெரியுதா..? )

சரி இருங்க... நான் முக்கியமான
ஒரு வித்யாசம் சொல்றேன்..

வேலாயுதம் படத்துல விஜய்க்கு
மாமா பொண்ணு இருக்காங்க..

7-ஆம் அறிவுல சூர்யாவுக்கு
மாமா பொண்ணு இருக்காங்களா..?!
இருக்காங்களா..?! இருக்காங்களா..?!

எப்பூடி..?!!
.
.

11 November 2011

சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5

டிஸ்கி : 4-ஆம் வகுப்பு படிக்கும் என் மகன்
பள்ளி சுதந்திர தின விழாவில் பேசியது.!

தலைப்பு : ஜாதிகள் இல்லையடி பாப்பா..!



செட்டியாரு., ரெட்டியாரு., முதலியாரு.,
கோனாரு., நாடாரு., கவுண்டரு.,
ஐயரு., தேவரு., மறவரு, குறவரு.,
கோடா., இடிகா...

உஸ்ஸப்பா..! இப்பவே கண்ணை கட்டுதே..!

இது மாதிரி இந்தியால 28,000 ஜாதிகள்
இருக்கு..

ஜாதீ - அதுலயே ஒரு " தீ " இருக்கு.
நல்லா நோட் பண்ணுங்க..

மரத்துக்கு தீ பிடிச்சா - அது
காட்டையே அழிச்சிடும்..
மனுஷனுக்கு ஜாதீ பிடிச்சா - அது
நாட்டையே அழிச்சிடும்..

அந்த காலத்துல நம்மகிட்ட ஒத்துமை
இல்ல.. அதனால தான் இங்கிலீஷ்காரங்க
நம்மள 200 வருஷம் அடிமையா வெச்சி
இருந்தாங்க..

அப்ப அவங்க வெறும் 30 லட்சம்.
நம்ம ஆளுங்க 30 கோடி.

ஆனா 30 லட்சம் பேர் சேர்ந்து
30 கோடி பேரை அடிமையா வெச்சி
இருந்தாங்க..

என்ன கொடுமை சார் இது..?!!

இப்ப புரியுதா...

புலிக்கு முன்னாடி ஓடற மானும்.,
ஒத்துமையா இல்லாத நாடும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல..!

அந்த காலத்துல ஜாதி கொடுமை
எப்படி இருந்துச்சுன்னு ஒரு சின்ன
உதாரணம்...

Dr.அம்பேத்கர் - அவர் ஒரு தாழ்த்தப்பட்ட
ஜாதியை சேர்ந்தவர்.

அவர் ஸ்கூல்ல படிக்கும் போது.,
எல்லா பசங்களும் பெஞ்ச்ல தான்
உக்காருவாங்க.. ஆனா அவரை மட்டும்
கீழே தான் உக்கார வெப்பாங்க.

அவர்கூட யாரும் பேச மாட்டாங்க.,
பழக மாட்டாங்க..

ஒருநாள் அம்பேத்கரோட கை
பக்கத்துல இருந்த பையனோட
டிபன் பாக்ஸ் மேல பட்டுடுச்சி..

அதுக்கு அந்த பையன்.. டிபன் பாக்ஸ்
" தீட்டு " ஆயிடிச்சின்னு சொல்லி
அதுல இருந்த சாப்பாட்டை எல்லாம்
கீழே கொண்டு போயி கொட்டிட்டான்..

ஆனா.. யார் கைபட்டா தீட்டுன்னு
சொன்னாங்களோ.. அவர் தான்
பின்னாளில் இந்தியாவின் சட்டத்தையே 
தீட்டு தீட்டுன்னு தீட்டினார் என்பது வரலாறு..!

இது மாதிரி பல நிகழ்வுகளை
பாத்துட்டுட்டு தான் பாரதி
Feel பண்ணி பாடினார்.....
" வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ் சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை
யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் இஃது
ஏற்றமென்றும் சொல்லலாமோ..! "

எந்த சாதியா இருந்தாலும்..
நாமெல்லாம் ஒரே மனிதஜாதின்னு
பாரதி அழுத்தமா சொன்னாரு.

சரி.. இன்னைக்கு " ஜாதி காய்ச்சல் "
எப்படி இருக்குன்னு பார்க்கலாம்..

கொஞ்சம் குறைஞ்சி இருக்கு..
ஆனா இன்னும் குணமாகலை..

" ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு "
பாடினாரு பாரதி..

ஆனா அவர் பெயர்ல இருக்குற
யுனிவர்சிட்டில சேரணும்னா கூட
ஜாதி சர்டிபிகேட் கேக்கறாங்க..

இப்ப மட்டும் பாரதி இருந்தார்னா..
இதை பாத்து நொந்து நூடுல்ஸ்
ஆகியிருப்பார்..

அவர் என்ன மேற்கோளுக்காவா
எழுதினார்..?!
குறிக்கோளுக்கல்லவா எழுதினார்..

இலங்கையை ஆண்ட ராவணன் தான்
ஆண்டவனையே சோதிச்சான்..
பத்து தலை இருந்தும் கூட
தப்பு தப்பா யோசிச்சான்னு சொல்லுவாங்க..

அது மாதிரி.. படிச்சவங்களே ஜாதி கட்சி
ஆரம்பிச்சு.. நம்மள ஒத்துமையா
இருக்கவிடாம பண்றாங்களே..
இது நியாயமா..?!!

உலகத்துக்கே திருக்குறள்கிற
பொதுமறையை தந்த நாம..
ஜாதீங்கற விஷசெடியை
வளர்ப்பது சரியா..?!

கடைசியா ஒரு பஞ்ச் டயலாக்
சொல்றேன். நல்லா நோட்
பண்ணிக்கோங்க..

ஆம்லட் போடணும்னா முட்டையை
உடைக்கணும்..
நாம ஒத்துமையா இருக்கணும்னா
ஜாதியை அழிக்கணும்..

நன்றி..!


டிஸ்கி : மேலும் சில பேச்சுப் போட்டிகள்..


பேச்சுப்போட்டி - 6
.
.

08 November 2011

ஆசை., தோசை., மீசை..!!!

ஒருநாள் நான் என் மீசையை
லைட்டா ட்ரிம் பண்ணி இருந்தேன்..

என் Friend ஜெகன் வீட்டுக்கு
போயிருந்தப்ப அதை பாத்த அவன்..

" இப்ப உனக்கு 2 வயசு கம்மியான
மாதிரி இருக்குடான்-"னு சொன்னான்..!

" ஓ... Only 29..?? வாவ்..!! "

உடனே அவங்க வீட்டில இருந்த
சிஸ்ஸரை எடுத்து மீசையை
இன்னும் கொஞ்சம் ட்ரிம் பண்ணிட்டு..,
அவனை பாத்து கேட்டேன்...

" இப்ப..? "

" 3 வயசு கம்மி ஆன மாதிரி
இருக்கு...? "

" ஓ... வாவ்.. அப்ப 24...!! "

( 2 + 3= 5. அப்ப 29 - 5 = 24..
கணக்கு சரியா வருதுல்ல..!! )

கொஞ்ச நாள் இப்படியே போயிட்டு
இருந்தது.. ஆனா எனக்கு Bore அடிக்க
ஆரம்பிச்சது..

இதென்னா Instalment விளையாட்டு..?
டக்னு ஒரு நாள் மீசையை Shave
பண்ணிட்டேன்..!

திடீர்னு என்னை மீசையில்லாம
பாத்த என் Wife ஷாக் ஆகிட்டாங்க..

( விட்றா.., விட்றா.. ஓவர் நைட்ல
ஒருத்தன் ஷாகித் கபூர் கணக்கா
மாறி நின்னா யாருக்குதான் ஷாக்கா
இருக்காது..?!! )


( சைடு ஆங்கிளில்.. என்னை போலவே
இருக்கும் ஷாகித் கபூர் இவர்தான்.. )

அன்னிக்கு நான் Bank-க்கு போயிட்டு
வந்துட்டு இருக்கும் போது..

வழியில ஒரு தாத்தா என்கிட்ட
லிப்ட் கேட்டாரு..

" தம்பி.. பஸ் ஸ்டேண்ட் பக்கம்
என்னை கொண்டு போயி விடறியா..? "

( அது வேற ரூட் ஆச்சே..!!! )

" சரி உக்காருங்க தாத்தா " -ன்னு..
அவருக்கு லிப்ட் குடுத்தேன்..!

( என் " நல்ல உள்ளத்தை" பத்தி
இதுவரை நோட் பண்ணாதவங்க..
இப்பவாச்சும் பண்ணவும்..! )

அந்த தாத்தா " நான் யார் பையன் "-னு
விசாரிச்சாரு.. நானும் சொன்னேன்...

" ஓ. சின்ராஜ் மகனா நீ.? "

" ஆமாம் தாத்தா...! "

" ஆமா.. நீங்க ரெண்டு பேருல்ல...
அது உன் அண்ணனா..? தம்பியா..? "

" தம்பி..! "

அதுக்கு அப்புறம் அந்த தாத்தா
ஒரு கேள்வி கேட்டார் பாருங்க..
நான் ஆடி போயிட்டேன்...

" ஆமா தம்பி.. நீ என்ன படிக்கிற...?!! "

( அடங்கொன்னியா... மீசையை எடுத்ததும்..
ஸ்கூலு பையன் கணக்கா மாறிட்டோம்
போல இருக்கே..?! )

" படிச்சி முடிச்சிட்டேன் தாத்தா.! "
குஷியா சொன்னேன்.

( இம்புட்டு நாளா இந்த மீசைல தான்
நம்ம கிளாமர் ஒளிஞ்சிட்டு இருந்து
இருக்கு போல..! )

அப்படியே பேசிட்டே பஸ் ஸ்டேண்ட்
வரை வந்துட்டோம்..

" தாத்தா.. பஸ் ஸ்டேண்டு பக்கம்
வந்துட்டோம்.. உங்களை எங்கே
இறக்கி விடறது..? "

" ராஜன் ஆஸ்பத்திரில இறக்கி
விடுப்பா.. வர வர கண்ணு சரியா
தெரிய மாட்டேங்குது..! "

( அடப்பாவி தாத்தா... அப்ப இவ்ளோ
நேரம் குத்து மதிப்பா தான் பேசிட்டு
வந்தியா..?!!

அவ்வ்வ்வ்வ்...!!! )
.
.

03 November 2011

Facebook என்ன இளிச்சவாயா.?!














கொஞ்ச நாள் முன்னாடி ஒரு
ப்ளாக்ல ஒரு தத்துவம் படிச்சேன்..

" நன்றி - முகநூல் "-னு போட்டு
இருந்தது..

நானும் சரி முக நூல்னா. அது ஏதோ
அகநானூறு., புறநானூறு மாதிரி
சங்க இலக்கிய நூல் போலன்னு
கம்முன்னு விட்டுட்டேன்..

நேத்து தான் என் Friend ஜனா
சொன்னான்..

முகநூல் = Facebook-னு

அடப்பாவிகளா..

" Facebook is a Social Network..! "

அதாவது அது ஒரு சமூக தளம்..
Facebook-ங்கறது அதோட பெயர்..
பெயரை கூடவா மொழி பேப்பீங்க..?

புல்லரிக்குதுப்பா..!

அப்ப இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
" Mr. Mark Butcher " -ஐ..

" திரு. மதிப்பெண் கறிக்கடைக்காரர் " னு
தான் சொல்லுவீங்களா...?!

நமக்கு இங்கிலீஷ்காரன் கண்டுபிடிச்ச
பொருள் வேணும்.. - ஆனா அதுக்கு
அவன் வெச்ச பேரு மட்டும் வேணாம்..!

என்னா நியாயம் சார் இது..?

இனிமேலாச்சும் யாரோ கண்டுபிடிச்ச
பொருளுக்கு தமிழ்ல பெயர் வெக்கறதை
விட்டுட்டு.. நாமளா எதாவது கண்டுபிடிச்சி..
அதுக்கு நல்ல தமிழ் பெயரா வெக்கலாம்..

அப்புறமா " நாங்க தமிழன் "னு..!
சட்டை காலரை தூக்கிவிட்டுக்கலாம்.
( ஆமா.. " காலர் "-க்கு தமிழ்ல என்ன..? )

இதுவரைக்கும் நிறைய பேர்
இது பத்தி தெரியாம " முகநூல்" னு
சொல்லியிருப்பீங்க..

பரவாயில்ல..!! இனிமே திருத்திக்கோங்க..!

ஆனா அதை விட்டுட்டு...

" நான் Facebook-ஐ முகநூல்னு தான்
சொல்லுவேன் " னு அடம்பிடிச்சீங்க..
அவ்ளோதான்...

பின்ன அதென்ன சார்.. Facebook
மட்டும்தான் இளிச்சவாயா..?

அப்ப இந்த ORKUT., GOOGLE., PICASA.,
TWITTER.,YAHOO., APPLE., iPhone., Sim Card
இதுக்கெல்லாம் தமிழ்ல என்னான்னு
சொல்லிட்டு போங்க.

ஆங்... மறந்துட்டேனே..
அப்படியே KARATE, Kung-Fu-க்கும்
என்னன்னு சொல்லிடுங்க..
( ஜப்பான், சைனீஸ் மொழி மட்டும்
விதிவிலக்கா என்ன..?!! )
.
.

31 October 2011

7-ஆம் அறிவு..! ( இது விமர்சனம் அல்ல..! )

டிஸ்கி : இது " 7-ஆம் அறிவு "
பட விமர்சனம் அல்ல.
























போன வாரம் எங்க பையன்
ஸ்கூல்ல Parents Meeting-க்கு
நாங்க போயிருதோம்.

மீட்டிங் முடிஞ்சி வெளியே
வரும்போது அங்கே ஒரு
Long Size Note வெச்சி இருந்தாங்க.
Parents அவங்க Suggestions எழுதவாம்...

சரி நாமளும் அந்த Note-ல
எதாவது எழுதலாமேன்னு போனா..

அங்கே ஒரு 4th Std பொண்ணோட
அப்பா எதோ எழுதிட்டு இருந்தாரு..

சரி. அவர் எழுதட்டும்னு நான்
Wait பண்ணினேன்.

பண்ணினேன்..பண்ணினேன்..
Wait பண்ணிட்டே இருந்தேன்.

5 நிமிஷம் ஆகியும் Note என் கைக்கு
வரலை.... அப்படி என்னதான்டா
எழுதறார்னு லைட்டா எட்டி பாத்தேன்..

அரை பக்கத்துக்கு மேல இங்கிலீஷ்ல
எதோ எழுதிட்டு இருந்தாரு..

( ஓ.. இவரு.. நம்ம ஸ்கூல்ல படிச்சி
இருக்க மாட்டார் போல..!!)

மறுபடியும் Wait பண்ணினேன்..
2 நிமிஷம் ஆச்சு..

இப்ப அவரு முக்கால் பக்கத்தை
தாண்டிட்டாரு..

அப்புறம் என் Wife என்னை
தேடி வரவும்., அவரு Note-ஐ
என்கிட்ட தந்துட்டு போகவும்
சரியா இருந்தது..

" மாலா.. அவரை நல்லா பாத்துக்கோ..! "

" யாருங்க அவரு..? "

" இந்த அப்பாடக்கர்.. அப்பாடக்கர்னு
சொல்றாங்கல்ல.. அந்த ' அப்பா-டக்கர் '
இவர் தான்.."

என் Wife ஓண்ணும் புரியாம முழிக்க..,
அவர் எழுதின Note-ஐ காட்டினேன்..
அதை பாத்துட்டு என் Wife..

" படிச்சவங்களை பாத்தா உங்களுக்கு
ஏங்க இவ்ளோ காண்டு...?! "

" என்னாது படிச்சவங்களா..? அப்ப
நாங்கல்லாம் மாடு மேய்ச்சவங்களா..?
நீ ஒரு MCA Gold Medalist -கிட்ட பேசிட்டு
இருக்க. Mind It..! "

" அந்த Gold Medal., AVR Jewellers-ல
வாங்கினதுன்னு உங்க பாட்டி
என்கிட்ட சொல்லிட்டாங்க..! "

" ஹி., ஹி., சொல்லிட்டாங்களா..? "
( கர்ர்ர்ர்ர்ர்...! )

" சரி., உங்க MCA அறிவை Use
பண்ணி அவர் எழுதின மாதிரி
English-ல எழுதுங்க பார்க்கலாம்..! "

நோட்டை வாங்கி அவர் எழுதின
இங்கிலிபீசை ஒரு தடவை
லுக் விட்டேன்...

" ப்பூ.. இதென்ன பிஸ்கோத்து மேட்டரு..!
இப்புடு சூடூ........"

பேனாவை எடுத்து..,
டக்னு எழுதினேன்...

" REPEATUUUUUUU..! "
.
.

27 October 2011

இது Thousand Much மச்சி...!!















தீபாவளிக்கு முதல் நாள்
எங்க காலேஜ் களை கட்டும்..!

கிளாஸ் நடந்துட்டு இருக்கும்
போது திடீர்னு காலேஜ்ல
எதோ ஒரு மூலையில
பட்டாசு வெடிக்கும்..

எங்களுக்கு செம ஜாலியா
இருக்கும்.. அடுத்த பட்டாசு
எப்ப வெடிக்கும்னு ஆவலா
எதிர்பாத்துட்டு இருப்போம்..

( என்னாது.. அப்ப கிளாஸை
எப்ப கவனிப்பீங்களாவா..?!
அந்த மாதிரி தீய பழக்கங்கள்
எல்லாம் எங்களுக்கு எப்பவுமே
கிடையாது.. )

லஞ்ச் பிரேக் வந்துட்டா போதும்.
காம்பவுண்ட் சுவர்., டாய்லட்.,
சைக்கிள் ஸ்டேண்ட், கேண்டீன்னு
எங்கே பார்த்தாலும் " டமார் டமார் "
தான்..

எங்க பிரின்சிபாலும் இதை தடுக்க
நிறைய முயற்சி பண்ணினார்..
ஆனா முடியல..

அதனால அடுத்த வருஷம் ரொம்ப
Strict-ஆ இருந்தார்...

முக்கியமான இடத்துல எல்லாம்
வாட்ச்மேன்., லேப் அசிஸ்டெண்ட்ஸ்.,
ப்யூன்., P.T மாஸ்டர்னு நிறைய
உளவாளிகளை நிக்க வெச்சிட்டார்..

பிரின்சிபாலும் அங்கிட்டு, இங்கிட்டு
சுத்திட்டு செம ரவுண்ட்ஸ்ல இருந்தாரு,,

அதனால.. எங்க பசங்களால
பட்டாசு வெடிக்க முடியல..

மதியம் வரைக்கும் ஒரு சின்ன
ஊசி பட்டாசு சத்தம் கூட இல்ல..
வெறுத்து போச்சு..

திடீர்னு " பட பட படன்னு "
ஒரு 1000 வாலா வெடிக்கிற சத்தம்..


அட இவ்ளோ கெடுபிடியையும் மீறி
எங்கடா பட்டாசு வெடிக்குதுன்னு
எல்லோரும் ஓடி போயி பாத்தா...

யாரோ ஒரு நல்லவன்
எங்க பிரின்சிபால் ரூம்ல
பட்டாசை கொளுத்தி போட்டு
இருந்தான்..

ஸ்டூடண்ட்ஸ் பவர்..
ஹி., ஹி., ஹி..

டிஸ்கி :

மாட்டிக்கொள்ளாமல் பட்டாசு
வைப்பது எப்படி..?

கமெண்ட் நம்பர் 13 படிக்கவும்.
.
.

25 October 2011

10% மேதை..!


















அப்பாடா.. ஒரு வழியா நான்
ஆசைப்பட்ட Sony HX100-V கேமரா
வாங்கிட்டேன்..

( அமெரிக்கால இருக்குற
என் மச்சான் கீர்த்தி இனிமே
நிம்மதியா இருப்பான்..! )

எனக்கு அந்த கேமராவை
10% Discount-ல் வாங்கி தந்த
சேலம் தேவாவுக்கு என் நன்றிகள்..
( இவர் ஒரு Professional Photographer. )

அந்த கேமராவை பாத்துட்டு
தேவாவுக்கே ஆச்சரியம் தாங்கல..

என்னை பாத்து கேட்டாரு...

" இவ்ளோ பெரிய கேமரா உங்களுக்கு
எதுக்கு வெங்கட்..? "

" என்ன தேவா இப்படி கேட்டுடீங்க..?
சின்ன வயசுல இருந்தே Photography-னா
எனக்கு உசுரு..!! "

" ஓ.. அப்படியா..? "

" ஆமா.. இப்ப கூட PIT Blog-ல மாச மாசம்
போட்டி நடத்தறாங்கல்ல.. "

" ஆமா.. "

" அதுல அடுத்த மாச போட்டியில
ஜெயிக்கறது தான் என்னோட
அடுத்தகட்ட ப்ளான்.. "

" ஓ.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..! "

" Thanks தேவா..! ஆங்.. ஒரு சின்ன டவுட்.."

" சொல்லுங்க வெங்கட்...! "

" இதுல போட்டோ எடுக்க
எந்த Button-ஐ அமுக்கணும்..?!! "

" ?!!??!?! "

டிஸ்கி :

போட்டோகிராபி மேதை Ivars Gravlejs
எழுதின " 78 Photography Tips-ஐ "
நான் 10% படிச்சி இருக்கேன்..

இதோ அதுல இருந்து நான்
கத்துகிட்ட 7 Tips..







Last But Not Least....


.
.

18 October 2011

VKS... ஹேண்ட்ஸ் அப்..!















வர வர எங்களை யாருக்குமே
தெரிய மாட்டேங்குதுன்னு
VKS Members எங்ககிட்ட ரொம்ப
பீல் பண்ணினதால..

அவர்களுக்காக அவர்களை பற்றிய
ஒரு சிறப்பு பதிவு..

VKS = எங்ககிட்ட அடி வாங்கறதுக்குன்னே
இருக்குற 6 பேர் கொண்ட ஒரு குழு..!

சிம்பிளா ஒரு லைன்ல சொல்லணும்னா..
VKS ஒரு " டம்மி பீஸ்...!! "

" வலிக்காத மாதிரியே நடிக்கும் "
அந்த 6 பேர்கள் இவிங்க தான்...

அனு : ( VKS தலைவலி.. சாரி தலைவி )
இவங்க தன்மான சிங்கம்..

தன் தகுதிக்கு ஏற்ப சம்பளம்
தர ஒரு கம்பெனி முன்வந்தும்,
அவ்ளோ 'சீப்'பான சம்பளத்துல
வேலை செய்ய மாட்டேன்னு
சொன்னவங்க..

ரமேஷ் :
இவர் இந்த நாட்டில் தான் பிறந்தார்..

இது மாதிரி கொடூரமான நிகழ்ச்சிகள்
வேற நாடுகள்லயும் நடக்கறது உண்டு..!

ரசிகன் :
இவருக்கு சங்கீதம் ரொம்பவே ஸ்பெஷல்..

இவர் சங்கீதம் கத்துக்க நிறைய
செலவு ஆச்சாம்..
( பக்கத்து வீட்டுக்காரங்க இவங்க அப்பா
மேல கேஸ் போட்டதால.. )

அருண் :
இவரால நிறைய பிக்பாக்கெட்ஸ்
திருந்தி இருக்காங்க..

இவர்கிட்ட எத்தனை தடவை
பிக்பாக்கெட் அடிச்சாலும்., வெறும்
Training மட்டும் தான் கிடைக்குமாம்..!

பெ.சொ.வி :
இவர் ஒரு " ஜென்டில்மேன் "...

ATM -ல பணம் எடுக்கும் போது கூட
அந்த Machine-க்கு " Thanks " சொல்லிட்டு
தான் வருவாருன்னா பாருங்களேன்..!

கார்த்தி :
இவருக்கு கம்ப்யூட்டர் மைண்ட்..

இவரை சொந்தமா யோசிக்க
வைக்க இப்போ நிறைய பேர்
Try பண்ணிட்டு இருக்காங்க..
.
.

13 October 2011

ஸ்பெஷலான நாள்..!


அக்டோபர் 13..
ஒரு ஸ்பெஷலான நாள்..

ஏன்னா..
இன்னிக்கு ஒரு புத்திசாலிக்கு Birthday..

Stop..,Stop.., Stop..!!

யாருப்பா அது.. அதுக்குள்ள
" Happy Birthday to You "-ன்னு பாடறது..?

நான் Genius-க்கு Birthday-ன்னா
சொன்னேன்..?
( நம்ம Birthday April 13.. )

நான் சொன்ன அந்த புத்திசாலி
என் மனைவி மாலா.!

" Happy Birthday to Mala.! "

என் மனைவியின் புத்திசாலிதனத்துக்கு
ஒரு சின்ன உதாரணம்...

எங்களுக்கு கல்யாண Fix ஆனப்ப...

" இந்த பையனா.. நல்லா யோசிம்மானு "
பல பேர் குழப்பினாங்க..

அப்ப எல்லாம்..

" அவரு ரொம்ப நல்லவரு., வல்லவரு.,
அன்பானவரு., பண்பானவருன்னு.. "
மத்தவங்ககிட்ட என்னை பத்தி
எனக்கே தெரியாததை எல்லாம்
எடுத்து சொல்லி..

" என்னை தான் கல்யாணம்
பண்ணிக்கணும்னு " ஒரு
புத்திசாலித்தனமான Decision
எடுத்தவங்க.. என் மனைவி..!

அதே மாதிரி எனக்கு என் Wife-கிட்ட
பிடிச்ச இன்னொரு விஷயம்..

என் மனைவி ரொம்ப சிம்பிள்..!

ஒரு பிரபல பிளாக்கரோட மனைவிங்கற
பந்தா அவங்ககிட்ட கொஞ்சம் கூட
கிடையாது..! ( ஹி., ஹி.! )

ஆங்.. முக்கியமான மேட்டரு
சொல்ல மறந்துட்டேனே....

இந்த வருஷம் அவங்க Birthday-க்கு
ஒன்ரை பவுன்ல ஒரு நெக்லஸ்
வாங்கி தரலாம்னு யோசிச்சிட்டு
இருக்கேன்..

என்ன அப்படி சந்தேகமா
பார்க்கறீங்க..?

இதே மாதிரி..

2008-ல - 7000 ரூபாய்க்கு ஒரு பட்டுப்புடவை.
2009-ல - 10000 ரூபாய்க்கு ஒரு மொபைல்.
2010-ல - 15000 ரூபாய்க்கு ஒரு LED Tv..

எல்லாம் வாங்கி தரணும்னு யோசிச்சி
இருந்தேன் தெரியுமா..! ( ஹி., ஹி.! )
.
.

06 October 2011

இதெல்லாம் ஒரு தப்பா சார்..?!!


பசங்களுக்கு பாடம் சொல்லி
குடுக்கும் போது என் Wife ரொம்ப
Strict Officer..!

அடுத்த நாள் என் பையனுக்கு
Quarterly English Exam. என் Wife
அவனுக்கு Letter Writing Practice
குடுத்துட்டு இருந்தாங்க..

அப்ப அவன்கிட்ட...

"உன் பிறந்த நாள்க்கு Gift குடுத்ததுக்கு
உங்க சித்தப்பாவுக்கு Thanks சொல்லி
ஒரு லெட்டர் எழுதி வை"ன்னு சொல்லிட்டு
கிச்சன்ல வேலையை முடிக்க போனாங்க..

அவனும் "சரிம்மா"ன்னு எழுத
ஆரம்பிச்சிட்டான்...

Dear Small Father.,

How are you.? I'm Fine here.
How is My Small Mother.?
How is My Small Sister Harini..? and
How is My Small Small Sister Vandana..?

I Like Hero Pen., Writing is Super.
Colour is Supero Super. I Like it.
Thanks for Gift.

Thanking You

Your Big Brother's Son
Surya
IV Std "D"

இந்த லெட்டரை படிச்சிட்டு
என் Wife... அவனை திட்டினாங்க...

"டேய்.. நான் உன்னை தனியா
உக்காந்து தானே எழுத சொன்னேன்..? "

" ஆமாம்மா..!! "

" அப்புறம் எதுக்குடா உங்கப்பாகிட்ட
கேட்டு எழுதுன? "

இதை கேட்டுட்டு எனக்கு
பயங்கர " ஷாக்கா " போச்சு..

' பட் 'னு என் Wife-ஐ பாத்து கேட்டேன்..

"ஆமா... இந்த விஷயம் உனக்கு எப்படி
தெரிஞ்சது..?!! "
.
.

03 October 2011

உஷ்..!! ரகசியம்..!!

சீக்ரெட் நெ : 1

" 2 மாசமா எங்கே போயிருந்தீங்க..?
என்ன பண்ணிட்டிருந்தீங்கன்னு.? "
மட்டும் யாரும் என்னை கேக்காதீங்க..

ஏன்னா.. அது எங்க Department Secret..!!

நான் ஒரு CBI Officer-ங்கறதையே
வெளியே சொல்லக் கூடாது..

இதுல 2 மாசமா Spectrum Case-ல
துப்பறிஞ்சி பல உண்மைகளை
கண்டுபிடிச்சதை எப்படிங்க
வெளியே சொல்ல முடியும்..?!!

அதனால தயவு செஞ்சி புரிஞ்சிக்கோங்க..!

சீக்ரெட் நெ : 2

திடீர்னு ஒரு நாள் எனக்கு
ஒரு புது நம்பர்ல இருந்து
ஒரு Call வந்தது..



" ஹலோ வணக்கம் சார்....!! "

" வணக்கம்.. ஆமா நீங்க..? "

" என் பெயர் கணேஷ் சார்..!
ஊரு சென்னை..! மங்குனி சார்
தான் உங்க நம்பர் குடுத்தாரு.. "

" ஓ.. அப்படியா..? சொல்லுங்க
கணேஷ்..!! "

" நான் உங்க Fan சார்..! உங்க
போஸ்ட் எல்லாம் ரெகுலரா
படிப்பேன்..!! ரொம்ப சூப்பரா
எழுதறீங்க.!! ""

" ரொம்ப Thanks கணேஷ்..!! "

" உங்க பதிவை எல்லாம் படிச்சா
என்னால சிரிப்பை Control பண்ணவே
முடியாது.. நாள் பூரா சிரிச்சிட்டே
இருப்பேன்..! "

" நீங்க என்னை ரொம்ப புகழ்றீங்க..!! "
( தன்னடக்கம்..!! )

" இல்ல சார்.. உண்மைய தான்
சொல்றேன்..! எப்படி இவ்ளோ
காமெடியா எழுதறீங்க...? "

" ஹி., ஹி., அதெல்லாம் தானா
வருது கணேஷ்..!! "

" சார்.. ஒரு சின்ன டவுட்..
கேக்கலாமா.? "

" கேளுங்க.. கேளுங்க..!! "

" உங்க Blog-ல ஏன் சார் வித்யாசமா
பெயர் வெச்சி இருக்கீங்க..? "

" ஓ.. அதுவா.. அது என் பசங்க பேரு..! "

" சார்ர்ர்ர்ர்ர்...!! தமாஷ் பண்ணாதீங்க..!
இப்படி எல்லாமா பசங்களுக்கு பெயர்
வெப்பாங்க..?? "

" ஏன் வெச்சா என்ன தப்பு..??! "

" போங்க சார்.. நீங்க என்கிட்ட
காமெடி பண்றீங்க..! "

" அட இதென்ன வம்பா இருக்கு..
நான் சொல்றது நிசம்...

கோகுல் + சூர்யா = கோகுலத்தில் சூரியன்..!! "

" கோகுலத்தில் சூரியனா..? அது என்ன
சார்..? "

" அது என்னவா..? அதான் என் Blog பேரு..! "

" ஐயோ..! அப்ப நீங்க பன்னிகுட்டி ராமசாமி
இல்லையா..? நான் அவருன்னு
நினைச்சில்ல இம்புட்டு நேரம் பேசிட்டு
இருக்கேன்.. !! "

" என்னாது....? பன்னிகுட்டி ராமசாமியா..?!!

கிர்ர்ர்ர்ர்ர்..!!!

இதுக்கு தான் நைட் 8 மணிக்கு மேல
மங்குனிகிட்ட நம்பர் வாங்காதீங்கன்னு
சொல்றது.....! "

( உஸ்ஸப்பா..., படுத்தறாங்களே...!!! )

சீக்ரெட் நெ : 3
இன்று பிறந்தநாள் காணும் VKS-ன்
மூத்த தலைவி அனு அவர்களை
வாழ்த்த வயதில்லை... வணங்குகிறோம்..!!

" பிறந்த நாள் வாழ்த்து பதிவு " போட
சொல்லி அனு கெஞ்சி கேட்டுக்
கொண்டாலும்..,

அதுக்கு நேரமில்லாத காரணத்தால்..
போன வருஷ பதிவையே அனைவரும்
படித்து குதூகலிக்குமாறு அன்போடு
கேட்டுக்கொள்கிறோம்.

. .

19 September 2011

" சிங்கம் " மறுபடியும் களத்துல குதிக்கும் நாள்..!

" தங்கம் எப்ப விலை குறையும்...? "

இந்த கேள்விக்கு அடுத்த படியா
எல்லார் மனசுலயும் இருக்கற
கேள்வி..

" வெங்கட் எப்ப பிளாக்குக்கு திரும்ப
வருவார்..? "

இதை நான் எப்படி கண்டுபிடிச்சேன்னு
பார்க்கறீங்களா..? எல்லாம் போன பதிவுக்கு
மக்கள் போட்ட கமெண்ட்ஸ் வெச்சி தான்..

இதோ சில சாம்பிள் கமெண்ட்ஸ்...
( வழக்கம் போல நமக்கு சாதகமான
கமெண்ட்ஸ் மட்டும்.. ஹி., ஹி., ஹி..!)

1. லேகா said...
// 10 நாளாவும் இருக்கலாம்.. 1 மாசமாவும் இருக்கலாம்.// :O boss ipdi ellam adhirchi kudukadheenga zero ku value illa so oru naal la vandhudunga 16 August 2011 9:42 PM 2. சுதன் said... We miss U! come quickly. 18 August 2011 2:45 AM 3. லக்ஷ்மி said...

வெயிட்டிங்கு. 18 August 2011 10:48 AM 4. Zero to Infinity said... இன்னுமா பிசி..... 23 August 2011 8:28 PM 5. முனைவர்.இரா.குணசீலன் said... சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்., அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..! விரைவா வாங்க நண்பா.. 25 August 2011 2:04 PM 6. Vinodhini said... ஒரு மாசமாகப்போகுது சார்.. :( 12 September 2011 3:31 PM 7. Blogger Zero to Infinity said... "ஒரு சின்ன பிரேக்..!"....திருத்தம்.... "ஒரு பெரிய பிரேக்"....சீக்கிரம் வாங்க சார்!... சிரிச்சு பல நாள் ஆகுது 14 September 2011 10:59 PM 8. Zero to Infinity said... hellooooooooo mic testing...1 billion...2 billion...3 billion...

18 September 2011 11:36 PM

இந்த உங்க தூய்மையான அன்புக்கு
என் நன்றிகள்..!!

உங்களுக்கெல்லாம் ஒரு Good News....

" சிங்கம் " மறுபடியும் களத்துல
குதிக்கும் நாள்.. Oct 3rd 2011..

.
.

16 August 2011

ஒரு சின்ன பிரேக்..!

கடந்த 10 நாளா நான் போஸ்ட் போடல..
"ஏன் போஸ்ட் போடலைன்னு..? "
யாராச்சும் கேப்பாங்கன்னு பார்த்தா..

உஹூம்.. யாருமே கண்டுக்கற
மாதிரி தெரியல..

அதான் நானே சுய விளக்கம்
குடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..

தவிர்க்க முடியாத சில சொந்த வேலைகள் 
காரணமா போஸ்ட் போட முடியல...!!

இன்னும் கொஞ்சம் நாள் இப்படி தான்
இருக்கும்.. அது எத்தனை நாள்னு
இப்போதைக்கு சரியா சொல்ல முடியல..
( 10 நாளாவும் இருக்கலாம்.. 1 மாசமாவும்
இருக்கலாம்..)

இதுக்காக யாரும் ஓவரா சந்தேஷப்படக்கூடாது..
கண்டிப்பா கொஞ்ச நாள்ல வருவேன்....
பீ கேர் புல்...!!
.
.

04 August 2011

இது வேற " கோ "


















போட்டோகிராப்பர் ஜீவா பார்ல
உக்காந்து ஜாலியா 2-வது ரவுண்ட்
முடிக்கும் போது... அவரோட
மொபைல் ரிங் ஆகுது..

எடுத்து நம்பரை பாத்தா.. எடிட்டரு..!

ஐய்யையோ..! இப்ப நான் பார்ல
இருக்கேன்னு தெரிஞ்சா அவ்ளோ தான்..
( அவருக்கும் ஒரு பாட்டில் வேணும்னு
அடம் பிடிப்பாரே..! )

" ஹலோ..!! "

" ஹலோ ஜீவா.. எங்கே இருக்க..? "

" நாளைக்கு நம்ம நியூஸ் பேப்பர்ல போட
எதாவது நல்ல ஸ்டில் கிடைக்குமான்னு
தேடிட்டு இருக்கேன் சார்..! "

" அதெல்லாம் ஒண்ணும் தேட வேணாம்..
பக்கத்து Forest-ல Fire ஆகிடுச்சாம்..
நெருப்பு கொழுந்து விட்டு எரியுதாம்..
அதை போய் போட்டோ எடுத்துட்டு வா..! "

" சார்.. அங்கே எப்படி நான் போறது..?

" ஒண்ணும் கவலைப்படாதே.. பக்கத்து
ஏர்போர்ட்க்கு போ.. உனக்கு ஒரு Plane
அரேஞ்ச் பண்ணியிருக்கேன்."

" ஓகே சார்..! "

ஜீவா அவரசமாக ஏர்போர்ட் போகவும்..
அங்கே ஒரு குட்டி Plane ரெடியா
இருந்தது.. அதுல ஒரே ஜம்பா தாவி
ஏறின ஜீவா.. Pilot-ஐ பாத்து...

" சீக்கிரம்.. சீக்கிரம்.. Start பண்ணுங்க..
நாம கிளம்பணும்..! "

" North Direction-ல ஓட்டுங்க..! "

" அதோ Forest தெரியுது..!! "

" அதோ..அதோ.. Forest Fire..! அங்கே
பக்கமா போங்க..! "

" இன்னும் ஒரு 3 ஆயிரம் அடி கிழே
போங்க..! நான் அந்த Forest Fire-ஐ
போட்டோ பிடிக்கணும்..! "

இதுவரை பொறுமையா இருந்த
பைலட்.. ஜீவாவை பாத்து..

" சார்.. Plane-ஐ கிழே போக வைக்க
எந்த பட்டனை அமுக்கணும்..?! "

" என்னை கேட்டா.. நான் போட்டோகிராப்பர்டா..! "

" அப்ப நீங்க எனக்கு Plane ஓட்ட சொல்லி
குடுக்க வந்த Instructor இல்லையா..?! "

" என்றா சொல்ற..? அப்ப நீ பைலட்
இல்லையா..? "

" இல்லையே..!! நான் இந்த Plane ஓட்ட
கத்துக்க வந்தவன்.. இந்த Plane-க்கு
முன்னால " L " Board மாட்டி இருந்ததே..
நீங்க கவனிக்கல..?!

" ?!?!?!!!!!! "

நீதி : டியூட்டி நேரத்துல " தண்ணி " அடிக்கறது
ரொம்ப தப்பு..!


( உருப்படியான பதிவு எழுத சொன்னா..
இப்படியா எழுதுவ.. உன்னை... )
.
.

01 August 2011

ரெடி., ஸ்மைல்., க்ளிக்..!


















எனக்கு அமெரிக்கால இருந்து
ஒரு கேமரா வாங்கணும்னு
ரொம்ப நாளா ஆசை..

அமெரிக்கால தான் நவம்பர் மாசம்
" Thanks Giving Day Deals " போடுவாங்களாம்..
அப்ப 50% வரை Offer இருக்கும்னு
என் மச்சான் கீர்த்தி சொல்லி இருக்கான்..

போன வருஷம் அவன் Friend-க்கு
Canon SX30 வாங்கிட்டு வந்தான்.
$ 435 -க்கு விக்குற அந்த கேமரா
Offer-ல $ 370 தானாம்..

போன மாசம் போன் பண்ணி பேசிட்டு
இருந்தப்ப...

" உங்களுக்கு கேமரா எதாவது
வேணுமா மாமான்னு " கேட்டான்..!

" எனக்கு Gift-ஆ குடுக்கற மாதிரி ஐடியா
இருந்தா.. Canon SX30 ஒண்ணு வாங்கிட்டு
வான்னு சொன்னேன்..! "

" ஹலோ.. ஹலோ.. ஹலோ..!
இங்கே சிக்னல் சரியா கிடைக்கலை
மாமான்னு " போனை கட் பண்ணிட்டான்..!

( நமக்கு மேல கில்லாடியா இருக்கானுங்க..)

இதை பத்தி என் Wife-கிட்ட சொன்னேன்..
அதுக்கு அவ

" நான் வேணா அவனை கேமரா
வாங்கிட்டு வர சொல்லட்டுமா..? "

" ம்ம்.. சொல்லு.. சொல்லு..!
கூடவே உங்க மாமா நீ போனை
' கட் ' பண்ணினதால பயங்கர
கோவமா இருக்கார்னு சொல்லு.. "

" வேணாங்க.. இப்ப போனை தான் கட்
பண்ணினான்.. அப்புறம் உங்களையே
கட் பண்ணிடுவான்.! "

" ஓ..! சரி.. நீ கேமரா பத்தி மட்டும் பேசு..! "  

" அதுக்கு முன்னாடி நமக்குள்ள
ஒரு டீலிங்..! "

" என்னா டீலிங்..? "

" கேமரா வங்கிட்டு வந்ததுக்காக
அவன் கல்யாணத்துல அவனுக்கு
1 பவுன்ல மோதிரமும்.,

வாங்கிட்டு வர சொன்னதுக்காக
எனக்கு 1 பவுன்ல கம்மலும் செஞ்சி
தர்றீங்களா..?! "

" ஆணியே புடுங்க வேணாம்..! "

இவங்க இல்லன்னா நாம்மளால
அமெரிக்கால இருந்து கேமரா
வாங்க முடியாதா என்ன..?

டக்னு ஒரு சூப்பர் ஐடியா தோணிச்சு..!

நம்ம Friends-க்கு தெரிஞ்சவங்க
யாராச்சும் அமெரிக்காவுல
இருப்பாங்கல்ல.. அவங்ககிட்ட
வாங்கிட்டு வர சொல்லலாம்..
வந்ததும் காசு குடுத்துடலாம்..

என் தேடுதலை தொடங்கினேன்..

ஆனா என் கெரகம்.. நான் முதல்ல
கேட்டது என் Friend சுரேஷை..

" டேய்.. உனக்கு தெரிஞ்சவங்க
யாராவது அமெரிக்கால இருக்காங்களா..? "

" ஓ.. நாலெஞ்சு பேர் இருக்காங்களே..! "

" அப்படியா..? யார்றா..? "

" ஓபாமா., பில் கிளிண்டன், பில் கேட்ஸ்..! "

" கிர்ர்ர்ர்ர்..! "
.
.

28 July 2011

ஒரு பிளாக்கரின் பீலிங்..!!


காலத்தின் ஓட்டத்தில்
காணாமல் போய்விடுவேன் என
சினிமாவையும்.,
கிரிக்கெட்டையும்
தள்ளி வைத்தேன்..

பொழுதை வீணாய்
போக்க வேண்டாமென
என் Twitter-யும்.,
Facebook-யும் Open
செய்வதில்லை..

நண்பர்களின் Buzz-ஐ கூட
Unfollow செய்தேன்..
மற்றவரை Follow செய்வது
தப்பென்று நினைத்து..

இப்பொழுதெல்லாம்
மௌனமாக இருக்கவே
விழைகிறேன்..
அதிகம் Chat செய்துவிட்டேன்
என நினைக்கையில்..

இன்னும் தொங்கி கிடப்பது
என் Blog..

அதையும் மறந்தால் தான்
உருப்படுவேன் எனில்..

விட்டுவிடுங்கள்...
நான் உருப்படாதவனாகவே
இருந்துவிட்டு போகிறேன்..!!

ஹி., ஹி., ஹி......!!

- கவி இளவரசு வெங்கட்
.
.

25 July 2011

ஐ.. பிஸ்கோத்து..!!

















என் Friend ஜெகன் பெங்களூர்ல
இருந்து ஒரு வார லீவ்ல நேத்து
தான் ஊருக்கு வந்து இருக்கான்..

பாத்து ஆறு மாசம் ஆச்சேன்னு
அவனை பாக்க Evening அவங்க
வீட்டுக்கு போயிருந்தேன்..

அப்ப அவங்க வீட்ல ஒரு தட்ல
Biscuits கொண்டு வந்து வெச்சாங்க..
அந்த Biscuit பார்க்கவே புது மாதிரி
இருந்தது... ஒரு Biscuit எடுத்து சாப்பிட்டு
பார்த்தேன்.. ரொம்ப டேஸ்டா இருந்தது..

" என்ன Biscuit இது..? "

" இது Imported.. Made in Denmark..! "

" ஓ.. I Like Denmark..! "

" Biscuit-ஐ பாத்ததும் உனக்கு
Denmark பிடிக்குதா..? "

" ஹேய்.. எனக்கு பிடிச்ச ஒரே
Foreign Country டென்மார்க் தான்..
தெரியுமா..?! "

" அப்படியா..? டென்மார்க் எங்கே
கண்ணா இருக்கு..? "

" ஹி., ஹி.!! உலக மேப்ல...
ஒரு ஓரமா.... ! "

" அடிங்.... "

5 நிமிஷம் ஆகியிருக்கும்..

ஜெகன் பேசிட்டே Biscuit சாப்பிட்டுட்டு
இருந்தான்..

நான் Biscuit சாப்பிட்டுட்டே பேசிட்டு
இருந்தேன்..

( ரெண்டும் ஒண்ணுதனேன்னு
அப்பாவி மாதிரி கேக்கறவங்களுக்கு...

அவன் சாப்பிட்டது - 2 பிஸ்கட்
நான் சாப்பிட்டது - 5 பிஸ்கட்

இப்ப புரியுதா Difference..! )

திடீர்னு தட்டு காலி ஆகிட்டு
இருக்கறதை பார்த்த ஜெகன்..
ஷாக் ஆகிட்டான்..

" டேய்.. அந்த பிஸ்கட்டை அதிகமா
சாப்பிடாதே..! "

" ஏன்டா..?! "

" வயிறு எரியும்..! "

" அடப்பாவி..! முதல்லயே சொல்லாம்ல..
நான் வேற 5 பிஸ்கட் சாப்பிட்டுடேனே.!
இப்ப என்ன பண்றது..? "

" டேய்.. நான் வயிறு எரியும்னு சொன்னது
உனக்கில்ல., எனக்கு..! "

" என்ரா சொல்ற..? "

" ஒரு பிஸ்கட் 15 ரூபாடா..! "

" அட நாயே..!! "
.
.

21 July 2011

இன்டர்வியூ சமாளிபிகேஷன்..!


















( இவனை என்ன பண்ணலாம்.?! )

நீங்க ஒரு Interview-க்கு போய்..
அங்கே உங்களுக்கு தெரியாத
கேள்வி கேட்டா... நீங்க என்ன
பண்ணுவீங்க..

" தெரியாதுன்னு " சொல்வீங்க..!
அப்படிதானே..?!

இனிமே அப்படி சொல்லாம
அதை சமாளிக்கறது எப்படின்னு
தான் இன்னிக்கு பார்க்கபோறோம்..

அது Very Simple..

" If You can't Convience them..
Then.. Try to Confuse Them..! "

இப்ப உதாரணத்துக்கு.

Question No.1 :

" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "

" அலக்சாண்டர் குதிரை பேரா..?

அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?!

கருப்பா., வால் குட்டையா இருந்ததே
அதுவா..?

வெள்ளை கலர்ல மூக்குல மட்டும்
கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?

இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே
அந்த குதிரை பேரா..?

( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு
சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச எதோ
பெயரை சொல்லிட வெண்டியது தானே..! )

Question No.2 :

" பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சவர் யாரு..? "

அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி
சொன்னவரு கிரேக்க மேதை
" ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " .

Unfortunately அவரு பூமி Clock Wise-ல
சுத்துதுன்னு சொல்லிட்டாரு..

??!!?

Question No 3 :

" உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட
தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? "

" அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! "

( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )

Question No 4 :

" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? "

" நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? "

-------------------------------------------------------------------

இப்படிதான் இன்டர்வியூல கேக்கற
கேள்விக்கு.. டக் டக்னு பதில்
சொல்லணும்.. புரியுதுங்களா.?!

பின்ன.., அவங்க மட்டும் நமக்கு
தெரியாத கேள்வியை கேக்கலாம்..
நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத
பதிலை சொல்ல கூடாதா..?!
.
.