சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

04 August 2011

இது வேற " கோ "


போட்டோகிராப்பர் ஜீவா பார்ல
உக்காந்து ஜாலியா 2-வது ரவுண்ட்
முடிக்கும் போது... அவரோட
மொபைல் ரிங் ஆகுது..

எடுத்து நம்பரை பாத்தா.. எடிட்டரு..!

ஐய்யையோ..! இப்ப நான் பார்ல
இருக்கேன்னு தெரிஞ்சா அவ்ளோ தான்..
( அவருக்கும் ஒரு பாட்டில் வேணும்னு
அடம் பிடிப்பாரே..! )

" ஹலோ..!! "

" ஹலோ ஜீவா.. எங்கே இருக்க..? "

" நாளைக்கு நம்ம நியூஸ் பேப்பர்ல போட
எதாவது நல்ல ஸ்டில் கிடைக்குமான்னு
தேடிட்டு இருக்கேன் சார்..! "

" அதெல்லாம் ஒண்ணும் தேட வேணாம்..
பக்கத்து Forest-ல Fire ஆகிடுச்சாம்..
நெருப்பு கொழுந்து விட்டு எரியுதாம்..
அதை போய் போட்டோ எடுத்துட்டு வா..! "

" சார்.. அங்கே எப்படி நான் போறது..?

" ஒண்ணும் கவலைப்படாதே.. பக்கத்து
ஏர்போர்ட்க்கு போ.. உனக்கு ஒரு Plane
அரேஞ்ச் பண்ணியிருக்கேன்."

" ஓகே சார்..! "

ஜீவா அவரசமாக ஏர்போர்ட் போகவும்..
அங்கே ஒரு குட்டி Plane ரெடியா
இருந்தது.. அதுல ஒரே ஜம்பா தாவி
ஏறின ஜீவா.. Pilot-ஐ பாத்து...

" சீக்கிரம்.. சீக்கிரம்.. Start பண்ணுங்க..
நாம கிளம்பணும்..! "

" North Direction-ல ஓட்டுங்க..! "

" அதோ Forest தெரியுது..!! "

" அதோ..அதோ.. Forest Fire..! அங்கே
பக்கமா போங்க..! "

" இன்னும் ஒரு 3 ஆயிரம் அடி கிழே
போங்க..! நான் அந்த Forest Fire-ஐ
போட்டோ பிடிக்கணும்..! "

இதுவரை பொறுமையா இருந்த
பைலட்.. ஜீவாவை பாத்து..

" சார்.. Plane-ஐ கிழே போக வைக்க
எந்த பட்டனை அமுக்கணும்..?! "

" என்னை கேட்டா.. நான் போட்டோகிராப்பர்டா..! "

" அப்ப நீங்க எனக்கு Plane ஓட்ட சொல்லி
குடுக்க வந்த Instructor இல்லையா..?! "

" என்றா சொல்ற..? அப்ப நீ பைலட்
இல்லையா..? "

" இல்லையே..!! நான் இந்த Plane ஓட்ட
கத்துக்க வந்தவன்.. இந்த Plane-க்கு
முன்னால " L " Board மாட்டி இருந்ததே..
நீங்க கவனிக்கல..?!

" ?!?!?!!!!!! "

நீதி : டியூட்டி நேரத்துல " தண்ணி " அடிக்கறது
ரொம்ப தப்பு..!


( உருப்படியான பதிவு எழுத சொன்னா..
இப்படியா எழுதுவ.. உன்னை... )
.
.

41 Comments:

பெசொவி said...

ha...ha...ha!

பெசொவி said...

@ வெங்கட்
அவருதான் குடிச்சுட்டு வந்தாரு, அதுக்காக அவரை நம்பி நீங்க ப்ளைட்ல ஏன் உக்காந்தீங்க?
(நீங்கதான் அந்த பைலட்னு எனக்கே தெரியுமே!)

Mohamed Faaique said...

ஒரு SMS'அ வச்சி ஒரு பதிவு... என்ன பொழ்ப்பு இது.....

///பக்கத்து Forest-ல Fire ஆகிடுச்சாம்..///

இதுக்கு எதுக்கு`ங்க பிளைட்டு.....

///நெருப்பு கொழுந்து விட்டு எரியுதாம்..///

கொஞ்ச நேரத்துல இழை,கிளையெல்லாம் விட்டு எரியுமோ???

Mohamed Faaique said...

///ஒண்ணும் கவலைப்படாதே.. பக்கத்து
ஏர்போர்ட்க்கு போ.. உனக்கு ஒரு பிளைன்
அரேஞ்ச் பண்ணியிருக்கேன்."///

//அதோ Forest தெரியுது..!! ///
///
" இன்னும் ஒரு 3 ஆயிரம் அடி கிழே
போங்க..! ///

3000+ அடி மேலே போஹும் போது, கீழே உள்ள காடு+னெருப்பு தெரியுமா???? (டவுட்டு)

Mohamed Faaique said...

///" சார்.. Plane-ஐ கிழே போக வைக்க
எந்த பட்டனை அமுக்கணும்..?! "///

எதுவுமே பண்ணாம இருந்தா Automatic'ஆ கீழே போயிடும்.. இது கூட தெரியாம......

Mohamed Faaique said...

///நீதி : டியூட்டி நேரத்துல " தண்ணி " அடிக்கறது
ரொம்ப தப்பு..!///

நீதி: எந்த நேரத்துலயா இருந்தாலும் வெங்கட் ப்லாக் வாசிக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

@பெசொவி , வெங்கட் பைலாட்டா?
ஹா...ஹா...ஹா....முதல்ல சைக்கிள ஒழுங்கா ஓட்ட சொல்லுங்க..

Lakshmi said...

ஆஹா , நல்ல காமெடி.ஹா ஹா ஹா

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

நீதி சூப்பர்

samhitha said...

//நீதி : டியூட்டி நேரத்துல " தண்ணி " அடிக்கறது
ரொம்ப தப்பு..!
//
Wow wt a msg!! samugathukku romba nalla karuthu solli irukeenga
indha madhiri irukaravanga inimelavadhu thirundhattum :)

Chitra said...

நீதி : டியூட்டி நேரத்துல " தண்ணி " அடிக்கறது
ரொம்ப தப்பு..!


..... தத்துவம் # 18243

Madhavan Srinivasagopalan said...

//" இன்னும் ஒரு 3 ஆயிரம் அடி கிழே
போங்க..! ///

இது ஃப்ளைட்டு..
Not Excavation machine.

(பின்ன என்ன சார்.. ஃபிளைட்டு ஜஸ்ட் ரெண்டாயிரம் மீட்டர் உசரத்துல தான் பறக்குது)

Madhavan Srinivasagopalan said...

@ Mohammad //3000+ அடி மேலே போஹும் போது, கீழே உள்ள காடு+னெருப்பு தெரியுமா???? (டவுட்டு)//

Yes.. if not cloudy..

Madhavan Srinivasagopalan said...

/@ Mohamed /எதுவுமே பண்ணாம இருந்தா Automatic'ஆ கீழே போயிடும்.. இது கூட தெரியாம......//

ஹா.. ஹா.. ஹா..

samhitha said...

@faaique
//எதுவுமே பண்ணாம இருந்தா Automatic'ஆ கீழே போயிடும்.. இது கூட தெரியாம.//
ipdi nalla ideas ellam thareengale ella postlayum
experience neraya irukko??? :)

HVL said...

'பார்'ல உட்கார்ந்து யோசிப்பீங்களோ!

வெங்கட் said...

@ All.,

நான் கொஞ்சம் பிஸியா இருக்கறதால இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் ரிப்ளை
போட முடியல.. அடுத்த பதிவுல இருந்து ரிப்ளைஸ் தொடரும்..

RAMVI said...

//நீதி : டியூட்டி நேரத்துல " தண்ணி " அடிக்கறது
ரொம்ப தப்பு..!//
அருமையான நீதி, வெங்கட்.

M.R said...

ஹா ஹா ஹா

எதையும் கூர்ந்து கவனிக்கணும்

அப்பிடின்னு சொல்றீங்க
நல்லது .
கவனிச்சிட்டா போச்சி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ஒரு மெசேஜ்....? டியூட்டி நேரத்துல தண்ணியடிக்கக் கூடாதுனா, அப்போ பீரு, விஸ்கின்னு அடிக்கலாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த மாதிரி எஸ்.எம்.எஸ்களை வெங்கட்டுக்கு அனுப்பறவன் யாருன்னு மொதல்ல கண்டுபுடிக்கனும்....!

Mohamed Faaique said...

////நான் கொஞ்சம் பிஸியா இருக்கறதால இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் ரிப்ளை
போட முடியல.. அடுத்த பதிவுல இருந்து ரிப்ளைஸ் தொடரும்.. ///

பிளைட்`அ லேண்ட் பன்ரதுக்கு பைலட் வெங்கட் (ரைமிங் சூப்பர்) தீவிர முயற்சியில் பட்டன்களை தேடிக் கொண்டிருப்பதால் ரிப்ளை போடப் பட மாட்டாது.. பரசூட்`ல குதிக்கலாம்`னு பார்த்தா, மகனோட காலேஜ் பைய எடுத்துடு போயிருக்காராம்.. என்வே... எங்காவது பிளைட் லேண்ட் ஆகும் வரை வாசகர்கள் பொறுமையாக (சந்தோசமாக) இருக்கவும்..

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

/நீங்கதான் அந்த பைலட்னு எனக்கே தெரியுமே!//

உங்களுக்கு தெரியாதா பின்ன ஏன்னா நீங்கதான அந்த போட்டோகிராப்பர். என்னாது உங்க பேரு ஜீவா இல்லியா.. அப்போ பேர சொல்லுங்க... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@Mohamed Faaique

// ஒரு SMS'அ வச்சி ஒரு பதிவு... என்ன பொழ்ப்பு இது..... //

என்ன பன்றாது இப்படி எல்லாம் நாங்க எலிய யானையா மாத்தினா தான் உங்க (கமெண்ட் போடற) பொழப்பு ஓடுது.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@Mohamed Faaique

//இதுக்கு எதுக்கு`ங்க பிளைட்டு... //

துபாய்கூட தான் இலங்கைக்கு பக்கத்துல இருக்கு எதுக்கு பிளைட்டுனு நடந்து வாங்களேன்.


//கொஞ்ச நேரத்துல இழை,கிளையெல்லாம் விட்டு எரியுமோ?? //

ஹூம்ம்ம்.. காய், கனி எல்லாம் கூட விட்டு எரியும். ஆனா நெருப்புக்கு வெளிய இருந்து பார்த்தா தெரியாது.

TERROR-PANDIYAN(VAS) said...

@Mohamed Faaique

//3000+ அடி மேலே போஹும் போது, கீழே உள்ள காடு+னெருப்பு தெரியுமா???? (டவுட்டு) //

அவர் கையில இருக்க கேமராவுல சூம் பண்ணா தரையில் இருக்க பேக்டிரியா கூட தெரியும்... என்னாப்பா நீ இப்படி எல்லாம் டவுட்டு கேக்கர நீ போய்ட்டு பெரியவங்களை வர சொல்லு போ... :)

TERROR-PANDIYAN(VAS) said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்)

//ஹா...ஹா...ஹா....முதல்ல சைக்கிள ஒழுங்கா ஓட்ட சொல்லுங்க. //

மணி!! சைக்கிள் ஓட்டும்போது எதிர்ல லாரி, வேண் எல்லாம் வரும் ஆனா ப்ளைட் ஓட்டர அப்போ இது எல்லாம் வராது. இப்போ சொல்லுங்க ப்ளை ஓட்டரது ஈஸியா இல்லியா? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@Lakshmi

//ஆஹா , நல்ல காமெடி.ஹா ஹா ஹா //

நன்றி அம்மா! பாராட்ட ஒரு நல்ல மனசு வேணும்... நீங்க நல்லவங்க.

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

// நீதி சூப்பர் //

நீங்களுமா? நேத்து எங்ககிட்ட ஒரு கேஸுக்கு என்ன தீர்ப்பு சொல்றது அப்படினு எழுதி வாங்கிட்டு போன சுப்ரீம் கோர்ட் நீதிபதியும் இதான் சொன்னாரு.

TERROR-PANDIYAN(VAS) said...

@samhitha

//Wow wt a msg!! samugathukku romba nalla karuthu solli irukeenga
indha madhiri irukaravanga inimelavadhu thirundhattum :)//

அப்படி திருந்தின பல பேரு அமெரிக்க ஜனாதிபதியா, நாசா விஞ்ஞானியா, இப்படி நல்ல நிலமையில் இருக்காங்க. திருந்தாதவங்க எல்லாம் இன்னும் VKSல குப்பை கொட்டராங்க.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

Chitra

// ..... தத்துவம் # 18243 //

என்ன டீச்சர் நீங்க கணக்குல வீக்கா #18243 சொல்றிங்க இன்னும் #98765432101234567890 குறையுது.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@மாதவன்

//இது ஃப்ளைட்டு..
Not Excavation machine.//

நல்ல வேளை நீங்க Excavation Machine Driver இல்லை. அப்புறம் பள்ளத்துல இருந்து மேல போங்கன்னு சொன்ன இது என்ன ப்ளைட்ட கேப்பிங்க.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

samhitha

// ipdi nalla ideas ellam thareengale ella postlayum
experience neraya irukko??? :) //

என்ன இப்படி சொல்லிட்டிங்க? மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது கேள்விபட்டு இருக்கிங்க இல்லை. அதை பன்ணதே இவரு தான்.

TERROR-PANDIYAN(VAS) said...

@HVL

//'பார்'ல உட்கார்ந்து யோசிப்பீங்களோ! //

யூ மீன் பார் கவுன்சில்?

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//நான் கொஞ்சம் பிஸியா இருக்கறதால இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் ரிப்ளை
போட முடியல //

நான் வெட்டியாக இருப்பதால் இந்த பதிவுக்கு ரிப்ளை போட முடிகிறது.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

RAMVI

// அருமையான நீதி, வெங்கட். //

Headmasterக்கும் A, B, C, D சொல்லிதறனுமா என்ன... :)

TERROR-PANDIYAN(VAS) said...

M.R

//ஹா ஹா ஹா

எதையும் கூர்ந்து கவனிக்கணும்

அப்பிடின்னு சொல்றீங்க
நல்லது .
கவனிச்சிட்டா போச் //

நீங்க தமிழ்மணம் & தமிழ்10ல ஓட்டு போட்டிங்களா? அதை முதலில் கவனிங்க.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பான்னிகுட்டி

//என்ன ஒரு மெசேஜ்....? டியூட்டி நேரத்துல தண்ணியடிக்கக் கூடாதுனா, அப்போ பீரு, விஸ்கின்னு அடிக்கலாமா?//

இப்படியே பேசிகிட்டு இரு அப்புறம் உன் மேனேஜர் வந்து உன்னை போட்டு அடிப்பாரு.

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//இந்த மாதிரி எஸ்.எம்.எஸ்களை வெங்கட்டுக்கு அனுப்பறவன் யாருன்னு மொதல்ல கண்டுபுடிக்கனும்....!//

SMS அனுப்ப என்ன 11 பேரு கொண்ட குழுவா இருக்கும்? எல்லாம் உன்னை மாதிரி வேலை வெட்டி இல்லாத பசங்கதான்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

Mohamed Faaique

// எங்காவது பிளைட் லேண்ட் ஆகும் வரை வாசகர்கள் பொறுமையாக (சந்தோசமாக) இருக்கவும்.. //

அது எல்லாம் இருக்கட்டும். Land ஆனதும் சொல்லுங்க நான் கொஞ்சம் விதை நெல் எடுத்து வருகிறேன் அந்த லேண்ட்ல விவசாயம் பண்ணலாம் அப்படினு நீங்க SMS அனுப்பினத சொல்லாம விட்டிங்க.. :)

Mohamed Faaique said...

@ டெரர்,

டுபாய்`ல ஒட்டகமும் நோன்பு புடிக்குதா, ஒட்டகத்துக்கு தண்ணி காட்டுரத விட்டுடு , இந்த யாரும் இல்லாத கடைல டீ ஆத்துரீங்க....