சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

06 October 2011

இதெல்லாம் ஒரு தப்பா சார்..?!!


பசங்களுக்கு பாடம் சொல்லி
குடுக்கும் போது என் Wife ரொம்ப
Strict Officer..!

அடுத்த நாள் என் பையனுக்கு
Quarterly English Exam. என் Wife
அவனுக்கு Letter Writing Practice
குடுத்துட்டு இருந்தாங்க..

அப்ப அவன்கிட்ட...

"உன் பிறந்த நாள்க்கு Gift குடுத்ததுக்கு
உங்க சித்தப்பாவுக்கு Thanks சொல்லி
ஒரு லெட்டர் எழுதி வை"ன்னு சொல்லிட்டு
கிச்சன்ல வேலையை முடிக்க போனாங்க..

அவனும் "சரிம்மா"ன்னு எழுத
ஆரம்பிச்சிட்டான்...

Dear Small Father.,

How are you.? I'm Fine here.
How is My Small Mother.?
How is My Small Sister Harini..? and
How is My Small Small Sister Vandana..?

I Like Hero Pen., Writing is Super.
Colour is Supero Super. I Like it.
Thanks for Gift.

Thanking You

Your Big Brother's Son
Surya
IV Std "D"

இந்த லெட்டரை படிச்சிட்டு
என் Wife... அவனை திட்டினாங்க...

"டேய்.. நான் உன்னை தனியா
உக்காந்து தானே எழுத சொன்னேன்..? "

" ஆமாம்மா..!! "

" அப்புறம் எதுக்குடா உங்கப்பாகிட்ட
கேட்டு எழுதுன? "

இதை கேட்டுட்டு எனக்கு
பயங்கர " ஷாக்கா " போச்சு..

' பட் 'னு என் Wife-ஐ பாத்து கேட்டேன்..

"ஆமா... இந்த விஷயம் உனக்கு எப்படி
தெரிஞ்சது..?!! "
.
.

48 Comments:

Lakshmi said...

ஆஹா நல்லா சிரிக்க வச்சுட்டீங்க. பாவம் அந்த அப்பா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது வெங்கட்டு இங்கிலிபீஸ்ல அதுவும் லெட்டர் வேற எழுதுறாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////
"ஆமா... இந்த விஷயம் உனக்கு எப்படி
தெரிஞ்சது..?!! "//////

அதானே உங்களைவிட நல்ல இங்கிலிபீசுலதானே லெட்டர் இருக்கு, அப்புறமும் எப்படி கண்டுபுடிச்சாங்க?

Vinodhini said...

பையன் சரியாய் தானே எழுதிருக்கான் எதுக்கு உங்க wife திட்டினாங்க?? எப்படி எழுதினோம் என்றதா முக்கியம், சொல்ல வாறது புரிஞ்சா போராதா?? :P :P

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்க லெட்டரை கூகிளார் எப்படி புரிஞ்சிட்டிருக்கார்னு பாருங்க,

கண்ணே சிறிய தந்தையின்.,
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்.? நான் நல்லது here.How என் சிறு அம்மா நான்.? என் சிறு சகோதரி Harini இது எப்படி ..? andHow என் சிறு சிறு சகோதரி வந்தனா உள்ளது ..?
நான் ஹீரோ பென் போல., கட்டுரை எழுதுதல் Super.Colour Supero சூப்பர் தான் உள்ளது. நான் பரிசு it.Thanks போல.
நீங்கள் நன்றி

£€k#@ said...

:D :D sirichi mudiyala ponga
aama adhu ena neenga 10 std la eludhuna lr-a surya name potu reproduce panni irukeenga...

aana unga wife rombaaaaaa sharp dhaan
paartha udane sollitaangale yaar ipdi solli kuduthurukaanga nu

//அதானே உங்களைவிட நல்ல இங்கிலிபீசுலதானே லெட்டர் இருக்கு//
:D :D over damage-a irukke

வைகை said...

தாங்கள் ஆங்கில புலமை கண்டு மெச்சினோம் :))

வைகை said...

Thanking You
Your Big Brother's SonSuryaIV Std "D"/////////////


நல்ல வேளை.... your Pig Brother னு போடாம விட்டானே? :))

NAAI-NAKKS said...

நீங்க இடைல உங்க ஒய்ப் கிட்ட சந்தேகம் கேக்கறமாதிரி கேட்டுருந்தா
உங்க மேல சந்தேகம் வந்துருக்காது !!

இராஜராஜேஸ்வரி said...

"ஆமா... இந்த விஷயம் உனக்கு எப்படி
தெரிஞ்சது..?!! "

ஆமாம் எப்படி தெரிந்தது??

Mohamed Faaique said...

///பசங்களுக்கு பாடம் சொல்லி
குடுக்கும் போது என் Wife ரொம்ப
Strict Officer..!///

நீங்க ப்லாக் எழுதும் போதும் கொஞ்சம் Strict Officer`ஆ இருக்கலாமே!!!

வெங்கட் said...

@ லக்ஷ்மி மேடம்.,

// பாவம் அந்த அப்பா. //

என்ன மேடம் அது யாரோங்கற
மாதிரி பேசறீங்க.. அடியேன் தான்
அந்த அப்பாவி அப்பா.!

Mohamed Faaique said...

//" அப்புறம் எதுக்குடா உங்கப்பாகிட்ட
கேட்டு எழுதுன? "
//

இப்படியெல்லாம் சொன்னா, உங்களுக்கு அந்தளவு கூட இங்கிலீசு தெரியும்`டு நாங்க நம்பிருவோமா.....??

கோகுல் said...

"ஆமா... இந்த விஷயம் உனக்கு எப்படி
தெரிஞ்சது..?!! "

ஹா ஹா!
தெரியாம இருந்தா தான் ஆச்சர்யம்!

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// என்னது வெங்கட்டு இங்கிலிபீஸ்ல
அதுவும் லெட்டர் வேற எழுதுறாரா?. //

என்ன இப்படி கேட்டுட்டீங்க..?

I Can Speak 5 Languages in Tamil.

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// அதானே உங்களைவிட நல்ல
இங்கிலிபீசுலதானே லெட்டர் இருக்கு,
அப்புறமும் எப்படி கண்டுபுடிச்சாங்க? //

ஷேக்ஸ்பியர் வேற பெயர்ல எழுதினா கூட
ஈஸியா கண்டுபிடிச்சிடுவாங்களாம்.
அது மாதிரி இருக்குமோ..!?

வெங்கட் said...

@ வினோதினி.,

// பையன் சரியாய் தானே எழுதிருக்கான்
எதுக்கு உங்க wife திட்டினாங்க?? //

4th Std படிக்கிற பையனாச்சே..
இவனால இப்படி ஒரு ஆக்ஸ்போர்ட்
இங்கிலீஷ் எப்படி எழுதி இருக்க முடியும்னு
டவுட் பட்டு திட்டினாங்க போல..

அது சரி.. வினோதினி...

நான் லீவ் விட்டு இருந்தப்ப எல்லாம்
என் ப்ளாக்ல வந்து..

" ஒரு மாசம் ஆச்சி சார்...! "

" பாத்து பாத்து கண்கள் பூத்திருந்தேன்..
நீ வருவாய் எனன்னு..! "

செம பீலிங்க கமெண்ட் போட்டீங்க..
ஆனா என்னோட Re-Entry போஸ்ட்ல
உங்களை ஆளையே காணோமே..!

WHY..?!!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பசங்களுக்கு பாடம் சொல்லி
குடுக்கும் போது என் Wife ரொம்ப
Strict Officer..! ///

பசங்களுக்கு பாடம் சொல்லி குடுக்கும் போதுதான் உங்க wife ரொம்ப strict officer ஆனா உங்க கிட்ட எப்பவுமே உங்க wife ரொம்ப strict officer ன்னு உளவு துறைல இருந்து தகவல் வந்தது ஹி ஹி ஹி ஹி . . . அப்படியா?

Vinodhini said...

@வெங்கட் -
"2 மாசமா எங்கே போயிருந்தீங்க..? என்ன பண்ணிட்டிருந்தீங்கன்னு.? "
மட்டும் யாரும் என்னை கேக்காதீங்க" ன்னு நீங்களே சொன்னதுக்கப்பறம் எப்படி சார் நான் உங்கள திருப்பி கேள்வி கேக்குறது, நாங்க தொண்டர்கள் கேள்வி எல்லாம் கேக்க மாட்டோம், அது மட்டுமில்லாம அந்த பதிவு ending ல VKS தலைவி பிறந்த நாள் பத்தி போடிருந்திங்க, அதுதான் பேசாமலே இருந்துட்டேன்.. :)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@இதை கேட்டுட்டு எனக்கு பயங்கர
டென்ஷனா போச்சு...

' பட் 'னு என் Wife-ஐ பாத்து கேட்டேன்..

"ஆமா... இந்த விஷயம் உனக்கு எப்படி
தெரிஞ்சது..?!! "///

கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் கழிச்சு கேக்குற கேள்விய பாரு . . உங்கல கல்யாணம் பண்ண அன்னைக்கே அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் , இந்த மாதிரி வேலை எல்லாம் உங்க ஒருத்தராலதான் செய்ய முடியும் ன்னு ஹி ஹி ஹி

பொன். செந்தில்குமார் said...

ஓஓஓ...இதுக்கு பேர்தான் இங்கிலிபீஸா..நல்லவேள நான் இங்கு நகர்வலம் வந்ததால தெரிஞ்சிக்கிட்டேன்.. இவ்ளோநாளா எலே மங்குனி அமைச்சா இதத்தான் என்னாண்ட நீ இந்தின்னு சொன்னியாக்கும்....இரு வச்சிக்கிறேன் ஓ மணி எட்டுக்கு மேல ஆச்சா...

Mohamed Faaique said...

//நான் லீவ் விட்டு இருந்தப்ப எல்லாம்
என் ப்ளாக்ல வந்து..

" ஒரு மாசம் ஆச்சி சார்...! "

" பாத்து பாத்து கண்கள் பூத்திருந்தேன்..
நீ வருவாய் எனன்னு..! "

செம பீலிங்க கமெண்ட் போட்டீங்க..
ஆனா என்னோட Re-Entry போஸ்ட்ல
உங்களை ஆளையே காணோமே..!
///

உங்க எல்லா 2 பதிவ ஒரே நேரத்துல படிச்சதுல ரொம்ப சீரியஸாகி அட்மிட் ஆகி இப்பொத்தான் டிஸ்சார்ஜ் ஆகி இருக்காங்க... மறு உங்க லின்க்`க குடுத்துராதீங்க...

HVL said...

பின்னே! GRE TOFEL levelக்கு எழுதினா கண்டுபிடிக்காம இருப்பாங்களா?

வெளங்காதவன் said...

hi hi hi...

பெசொவி said...

Dear White Cut!
I like this impression for outshowing your aritortoise.

anbu 1000kilo

pesovi

:)

இங்கிலீஷ் தெரியாத வெங்கட்டுக்காக இதன் தமிழாக்கம்,

அன்புள்ள "வெங்"கட்,
உங்கள் அறி"யாமையை" வெளிக்காட்டியதற்காக இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

இப்படிக்கு அன்பு"டன்"
பெசொவி

பெசொவி said...

@venkat
//சொல்லிட்டு
கிச்சன்ல வேலையை முடிக்க போனாங்க.//

அப்போ கிச்சன்ல நீங்க பாதி வேலையை செஞ்சிருப்பீங்க, அவங்க வந்து முடிச்சு வைப்பாங்க, அப்படிதானே, வெங்கட்?

பெசொவி said...

@ VENKAT
//How are you? I'm Fine here//
//Thanking you//

நிச்சயமா இந்த லெட்டரை நீங்க எழுதியிருக்க மாட்டீங்க, நான் நம்பறேன்
பின்ன என்னங்க, இந்த லைன்லாம் சரியா வந்திருக்குதே, அப்புறம் எப்படி நீங்க எழுதியிருக்க முடியும்?

துபாய் ராஜா said...

ஹா...ஹா.. ஹா.

Lakshmi said...

என்ன மேடம் அது யாரோங்கற
மாதிரி பேசறீங்க.. அடியேன் தான்
அந்த அப்பாவி அப்பா.!வெங்கட் நீங்கதானா அந்த அப்பா அப்படின்னா நீங்க வெரும் பாவம் இல்லே. ஐயோ, ஐயோ பாவம் அப்பாதான்.:)

ஜெகன் said...

இதெல்லாம் ஒரு தப்பா சார்?
இதுக்கு காரணம் எங்க அப்பா சார்!

தமிழ்வாசி - Prakash said...

அண்ணே, கடிதம் ரொம்ப ரொம்ப ரொம்பவே நல்லா இருக்கு.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்க மனைவி உங்களை நல்லா புரிஞ்சு வச்சுருக்காங்க

Yoga.s.FR said...

காலை வணக்கம்!கழுதைக்குத் தெரியுமாம் கற்பூற வாசனைங்கிறாப்புல இருக்கு!

RAMVI said...

ஹா..ஹா..ஹா..

உங்க பையன தனியா எழுத விட்டிருந்தா அவனே ஒழுங்கா எழுதியிருப்பான்.

Avani Shiva said...

same blood

ஜெகன் said...

Actually, லக்ஷ்மி மேடம் சொல்ல வந்தது, 'வெங்கட், நீங்க பாவம் இல்லை.. உங்க அப்பா தான் பாவம், உங்களுக்கெல்லாம் சொல்லி குடுத்து ஹோம்வொர்க் செய்ய வைக்க என்ன பாடு பட்டாரோ'... அது தானே?

வெங்கட் said...

@ லேகா.,

// aama adhu ena neenga 10 std la
eludhuna lr-a surya name potu reproduce
panni irukeenga... //

இல்லையே.. இது வேற.., அது வேற..

அது நான் " எங்க Big Daddy-க்கு "
எழுதின லெட்டர்..

வெங்கட் said...

@ வைகை.,

// தாங்கள் ஆங்கில புலமை கண்டு
மெச்சினோம் :)) //

Thanks.. இதோ உங்களுக்காக
நான் எழுதிய ஒரு அருமையான
ஆங்கில பாடல்..

" Twinkle, Twinkle, little star,
How I wonder what you are.
Up above the world so high,
Like a diamond in the sky...! "

( " இது நான் எழுதிய பாடலா..? "
என்று சந்தேகப்படுபவர்கள்
என் வீட்டிற்க்கு வரவும்..

என் டைரியில்., என் கைப்பட
இதை எழுதி இருப்பதை காட்டுகிறேன்..! )

ராஜி said...

பாவம் உங்க வீட்டம்மா!!.

middleclassmadhavi said...

பதிவையும் பின்னூட்டங்களையும் மிகவும் ரசித்தேன் :-))

Madhavan Srinivasagopalan said...

ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..

பெசொவி said...

//என் டைரியில்., என் கைப்பட
இதை எழுதி இருப்பதை காட்டுகிறேன்..! )//

சரியா எழுதலைன்னு சொல்லி நூறு தரம் இம்போசிஷன் எழுதினீங்களே, அதை உங்க டைரியிலயா எழுதினீங்க?

வெங்கட் said...

@ மாதவன்.,

// ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா,
கீ போர்டு வீணாப் போயிடும்.. //

இதென்ன உங்க பரிட்சை பேப்பர்னு
நினைச்சீங்களா..? History-ல கேள்வி
கேட்டா.. Physics-ல இருந்து பதில்
சொல்றீங்க..?!! ( அதுவும் தப்பு தப்பா.! )

வெங்கட் said...

@ Mohamed.,

// நீங்க ப்லாக் எழுதும் போதும்
கொஞ்சம் Strict Officer`ஆ இருக்கலாமே!!! //

வாரத்து 7 பதிவு போட்டுட்டு
இருந்தவன்.. இப்பல்லாம் 2 பதிவு
தானே போடறேன்.. இன்னும் Strict-ஆ..?

வெங்கட் said...

@ ராக்ஸ் ராஜேஸ்.,

// ஆனா உங்க கிட்ட எப்பவுமே
உங்க wife ரொம்ப strict officer ன்னு
உளவு துறைல இருந்து தகவல் வந்தது //

இதெல்லாம் ஒரு உளவுதுறையா.?

இந்த தகவல் உலகத்துக்கே தெரியும்..
முதல்ல அந்த உளவுத்துறையை
மாத்துங்க..

வெங்கட் said...

@ வினோதினி.,

// நாங்க தொண்டர்கள் கேள்வி
எல்லாம் கேக்க மாட்டோம், //

ஆஹா.. பாலோயர்ஸ்னா இப்படில்ல
இருக்கோணும்.. பின்னிட்டீங்க..!!

:)

♔ம.தி.சுதா♔ said...

வெங்கட்டு ஆங்கில புளொக்கிற்கு மாறிட்டாரோ என ரொம்பவே குழம்பிட்டேனுங்க...

Madhavan Srinivasagopalan said...

உங்கள் பதிவில் சம்பந்தமில்லாமல் கமெண்டு போட்டதற்கான காரணம் எனது இந்தப்(சுட்டி) பதிவில்