சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

22 November 2011

7-ஆம் அறிவு vs வேலாயுதம்

இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன்..
எங்க டாக்குடரு விஜயை பாத்தா
உங்க எல்லாருக்கும் " கைப்புள்ள "
கணக்கா தெரியுதா..?

ஆனா, ஊனா அவர் நடிக்கிற படத்தை..
( சரி., சரி... இருக்குற படத்தை.. )
கிண்டல் பண்றீங்க..?!!

இப்ப லேட்டஸ்ட்டா வேற
வேலாயுதம் படமும், 7-ஆம் அறிவு
படமும் ஒரே கதை தான்னு
சில பேர் கதை கட்டி விடறாங்க..

இதையெல்லாம் கேக்கும் போது
எனக்கு செம டென்ஷன் ஆகுது..பின்ன தெலுங்கு, மலையாளம்,
இந்தி, ஹாலிவுட், அசஸின்கிரீட்-னு
அவர் ரேஞ்ச் எங்கேயோ போயிட்டு
இருக்கு போது..

இந்த மாதிரி ஒரு தமிழ்படத்தை.,
( அதுவும் வேற ஒருத்தர் நடிச்ச படத்தை )
காப்பி அடிச்சார்னு சொல்றது
சின்னப்புள்ள தனமால்ல இருக்கு..


இந்த 10 வித்தியாசங்களை படிங்க..
அப்ப புரியும் " வேலாயுதம் " எவ்ளோ
வித்தியாசமானவன்னு...

ஏழாம் அறிவு
வேலாயுதம்
1. வில்லன் சீனால இருந்து கிளம்பி வருவான்..

வில்லன் ஆப்கான்ல இருந்து கிளம்பி வருவான்..
2. Bio Weapon Use பண்ணி மக்களை கொல்லுவாங்க.

2. குண்டு வெச்சி மக்களை கொல்லுவாங்க.

3. முதல்ல சென்னைலதான் ஆரம்பிப்பாங்க..
3. இங்கேயும் சென்னை தான்.. ஆனா ஏரியா வேற

4. இதுல ஹீரோ சர்க்கஸ்காரர்

4. இதுல ஹீரோ பால்காரர்
5. இதுல ஸ்ருதி ஒரு Scientist.

5. இதுல ஜெனி ஒரு Reporter.
6. ஸ்ருதிதான் சூர்யாவுக்கு
' போதிதர்மர் ' யார்னு புரிய வெப்பாங்க.
6. ஜெனிதான் விஜய்க்கு
' வேலாயுதம் ' யார்னு புரிய வெப்பாங்க.
7. Senior Scientist ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு 7. உள்துறை மந்திரி லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு.
8.லஞ்சம் 300 கோடி

8. லஞ்சம் 5000 கோடி

9. சூர்யா ஒரு சீன்ல ஸ்ருதியை யானை மேல கூட்டிட்டு போவாரு 9.விஜய் ஒரு சீன்ல ஜெனியை குதிரை மேல கூட்டிட்டு போவாரு
10.கடைசி Fight-ல சூர்யா சட்டை பட்டனை கழட்டி விட்டுட்டு சண்டை போடுவாரு..
10.கடைசி Fight-ல விஜய்
சட்டையையே கழட்டிட்டு
சண்டை போடுவாரு..

இப்ப சொல்லுங்க.. இது ரெண்டும்
ஒரே கதையா..?!!!
( என்னாது கொஞ்சம் அப்படி தான்
தெரியுதா..? )

சரி இருங்க... நான் முக்கியமான
ஒரு வித்யாசம் சொல்றேன்..

வேலாயுதம் படத்துல விஜய்க்கு
மாமா பொண்ணு இருக்காங்க..

7-ஆம் அறிவுல சூர்யாவுக்கு
மாமா பொண்ணு இருக்காங்களா..?!
இருக்காங்களா..?! இருக்காங்களா..?!

எப்பூடி..?!!
.
.

18 Comments:

வெளங்காதவன் said...

இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன்..
எங்க டாக்குடரு விஜயை பாத்தா
உங்க எல்லாருக்கும் " கைப்புள்ள "
கணக்கா தெரியுதா..?

மேலே எழுதி இருக்கும் லைனை சத்தமா படிக்கவும்....

#பின்ன உங்களுக்கு எப்பூடி தெர்து சார்?

வெளங்காதவன் said...

//பின்ன தெலுங்கு, மலையாளம்,
இந்தி, ஹாலிவுட், அசஸின்கிரீட்-னு
அவர் ரேஞ்ச் எங்கேயோ போயிட்டு
இருக்கு போது..///

ம்ம்ம்... இருக்கும்போது??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன்../////

இனி தெரிஞ்சுக்கிட்டே கேளுங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வேலாயுதம் படத்துல விஜய்க்கு
மாமா பொண்ணு இருக்காங்க..
7-ஆம் அறிவுல சூர்யாவுக்கு
மாமா பொண்ணு இருக்காங்களா..?!
இருக்காங்களா..?! இருக்காங்களா..?!

எப்பூடி..?!!//////

இனி இருப்பாங்க.....

Mohamed Faaique said...

///இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன்..///

தெரியாததானே கேக்கனும்!!!!!

Mohamed Faaique said...

உங்க சினிமா விமர்சனம் சூப்பர் பாஸ்.. (நீங்க சினிமா விமர்சனம் எழுத மாட்டீங்கனு தெரிஞ்சாலும் நாம் கோர்த்து விடுவோம்)
ஆனாலும் அம்பி ஸ்டைல்’ல மார்ஜின் போட்டு சினிமா விமர்சனம் எழுதிய முதல் ஆழு நீங்கதான்,....

Mohamed Faaique said...

///இப்ப சொல்லுங்க.. இது ரெண்டும்
ஒரே கதையா..?!!! ( என்னாது கொஞ்சம் அப்படி தான் தெரியுதா..? )///

அடி ஆத்தீ....இவ்வளவு வித்தியாசம் இருக்கா???

Mohamed Faaique said...

படத்துட பேருல கூட வித்தியாசம் இருக்கே!!! நோட் பண்ணுங்க பாஸ்..

சந்தானம் as பார்த்தா said...

ஒரு point-ஐய miss பண்ணிட்டீங்களே...

Climax mokkai speach:

ஏழாம் அறிவு - உங்களுக்குள்ள போதி தர்மன் இருக்காப்ல... தட்டி எழுப்புங்க...

வேலாயுதம் - உங்களுக்குள்ள வேலாயுதம் இருக்காப்ல... தட்டி எழுப்புங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வேலாயுதம், ஏழாம் அறிவு இதெல்லாம் சினிமாங்களா சார்?

மனசாட்சி said...

அய்யோ அய்யோ முடியலைட சாமி - நா வரலப்பா இந்த விளையாட்டுக்கு

சத்ரியன் said...

எப்பூடி சார் கண்டுபுடிக்கிறீங்க இந்தமாதிரி வித்தியாசத்தையெல்லாம்...?

Madhavan Srinivasagopalan said...

நல்ல அலசல்.. உங்களுக்கு கௌரவ டாகுடர் பட்டம் பார்சல்..

middleclassmadhavi said...

Randu padauthuleyum assassin's creed varuthunnu theriyum! Ithu patri naanum oru pathivu pottirukken!

Ungal vettrumaikalil orrumai vaazhga!

ஈஸ்வரி said...

:)))))

மங்குனி அமைச்சர் said...

அப்போ நீ அந்த ரெண்டு படத்தையும் பாத்துட்ட? ....அடப்பாவி உன்னைய படிச்ச , அறிவுநிறைந்த , புத்திசாலிபபயல் அப்படின்னு தப்பா நினைச்சுட்டனே

Kadir said...

தல, இந்த வாரம்தான் Black Friday sale. உங்கள் அமெரிக்கா மச்சான் எதாவது வாங்கி அனுப்புகிறாரா?

வெங்கட் said...

@ கதிர்.,

// தல, இந்த வாரம்தான் Black Friday sale.
உங்கள் அமெரிக்கா மச்சான் எதாவது
வாங்கி அனுப்புகிறாரா? //

ஹோ.. அது இந்த வாரம் தானா..?!!
அதான் என் மச்சான் ஒரு வாரமா
தலைமறைவா இருக்கானா..?!!

@ கீர்த்தி ( என் மச்சான் )

பயப்படாம வெளியே வாப்பா..
நான் தான் கேமரா வாங்கிட்டேனேன்ல..

( ஆமா அங்கே இப்ப லேப்டாப் எல்லாம்
சீப்பா கெடைக்குதாமே.. :) )