சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

12 December 2011

" ரீஃபைண்ட் ஆயில் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

உங்க வீட்ல ரீஃபைண்ட் ஆயில்
Use பண்றீங்களா.? அப்ப இதை
கட்டாயம் படிங்க...


டிஸ்கி : " க்ரைம் நாவல்"-ல ராஜேஷ்குமார்
ஒரு வாசகர்க்கு எழுதின பதிலை இங்கே
அப்படியே போடறேன்..

உணவியல் பற்றி நன்கு அறிந்த திரு.S.சக்ரபாணி
ஒரு கட்டுரையில் நாம் உபயோகிக்கும்
சமையல் எண்ணெய் பற்றி சில அதிர்ச்சியான
விபரங்களை சொல்லியிருந்தார்.. அதை தான்
இப்போது சொல்லப் போகிறேன்.

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில்
ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,
நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்.,
மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த
எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.

இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு
தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,
தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,
கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ்,
வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும்
மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு
சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து
முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய
நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும்
வைத்து இருந்தனர்.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,
மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால்
அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றி
கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள்
இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக
" நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.
வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று
அழைக்கிறர்கள்.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும்
ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள்
எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான
உண்மை.

சரி., ரீஃபைண்ட் ஆயில் எப்படி
தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா..

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில்
காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க
வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு
எடுக்கிறார்கள்.

பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின்
மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து
அதில் இருக்கும் வாசனையை அறவே
நீக்கிவிடுகிறார்கள்.

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன்
மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.

இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில்
பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள்
எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால்
" சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று
நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து
கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது
அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது
சூடு தாங்காமல் உருக்குலைந்து
உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும்
ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்க்கையான
எண்ணெய்யை சூடுப்படுத்தினால்... அது
ரசாயன கலவையாக மாறாது. அதன்
தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல்
நமக்கு கிடைக்கும்.

எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால்
இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு
உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக
பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு
இருக்கிறார்கள்.

ரசாயன பொருட்களால் பாழ்படுத்தப்பட்டு.,
உடல் ஆரோக்கியத்திற்க்கு அவசியமான
பொருட்கள் நீக்கப்பட்ட ஒரு திரவத்தை
ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்பனை
செய்ய அரசாங்கமும்., மெடிக்கல் கவுன்சில்களும்
எப்படி அனுமதி அளிக்கின்றன...??

நாமும் யோசிக்கும் சக்தியை ஏன் இழந்து
விட்டோம்.?

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம்
சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான்
காரணம் என்று சொல்லி நம்மை நாமே
ஏமாற்றி கொள்கிறோம்.

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு
எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை
வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.
இதற்க்கான காரணங்களில் முக்கியமான
இடத்தை பிடித்து இருப்படி ரீஃபைண்ட் ஆயில்.

" விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கிறது
அதற்க்கு ஏற்றார்போல் நாமும் மாற வேண்டும்."
என்று சிலர் சொல்லக்கூடும்.

ஆனால் விஞ்ஞானம் தொழில்துறையில்
இருக்கலாம்.,நம்முடைய உடல் ஆரோக்கியத்தோடு
அந்த விஞ்ஞானம் விளையாடக்கூடாது..

===============================================
மேலும் சில பதிவுகளில்....

// எண்ணை உண்மை:

கொட்டைகள், விதைகளிலிருந்து நேரடியாக
எடுக்கப்படும் எண்ணை தான் சிறந்ததே தவிர,
ரீபைண்ட் ஆயில் அல்ல. அதில் நார்ச்சத்து
இழக்கப்பட்டு விடுகிறது. //

Source : உணவு பழக்கம்


// முற்றிலும் தண்ணீர் போன்ற ஒரு திரவம் தான்
ரீஃபைண்ட் ஆயில். சமையலில் உணவு பொறிக்கப்படும்
போது, அதிகச் சூட்டினால் இந்த எண்ணெய் போன்ற
திரவம் முற்றிலுமாய் சிதைந்து விடுகின்றதாம்.
இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் தான்,
ஆஸ்துமா, தைராய்டு, புற்று நோய் ஏற்படுகிறதாம். . //

Source : புற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்

எந்த விஷயமா இருந்தாலும் அதை
ஒரு இங்கிலீஷ்காரன் சொன்னா தானே
நாம " சரி "- ன்னு ஒத்துப்போம்..
( வெள்ளையா இருக்கறவன் பொய்
சொல்ல மாட்டான்ல...! )

Source : Refining Vegitable Oil : A Nasty Process

பின் டிஸ்கி : இன்னில இருந்து எங்க வீட்ல
ரீஃபைண்ட் ஆயிலுக்கு " டாட்டா.. பை பை.. "
.
.

52 Comments:

விக்கியுலகம் said...

பல விஷயங்கள் அறிந்து கொண்டேன் தகவல்களுக்கு நன்றி மாப்ள!

வெங்கட் said...

@ விக்கியுலகம்..

// பல விஷயங்கள் அறிந்து கொண்டேன்
தகவல்களுக்கு நன்றி மாப்ள! //

நன்றி.. அப்படியே இதை ஷேர் பண்ணினா
இந்த நல்ல விஷயம் இன்னும் நாலு பேர்க்கு
போயி சேரும்ல..

ஈஸ்வரி said...

நல்ல விஷயம்!.....

venkhat said...

Am a medical doctor in a village, the truth about refining processess continue to be hidden from the public, it is honest of the writer to bring out the details into the open.

i had been to an edible oil refinery and have witness the process and studied it, it is a shame that we trust these business folks.

Heating all oils is bad.
it turns them into disturbing chemical compounds.
best is using oil from the cold processes, then slowly changing to using the oil for podi, then for chutneys, then for oil massage
then slowly forgetting the use of heated oils altogether.
cooking can be possible with out oil too.

thanks venkatappa for sharing this dangerous topic.

RAMVI said...

நல்ல விஷயம். பகிர்வுக்கு நன்றி.

Rajesh said...

இதயம் நல்லெண்ணெய்., கடலை எண்ணெய் எல்லாம்
ரீபைண்ட் இல்லாம கிடைக்குதே. அதை பயன் படுத்தலாமே.

அருண் பிரசாத் said...

தப்பி தவறி இந்த பக்கம் வர்ற அன்னைக்கு தான்யா இந்த ஆளு கருத்து சொல்வாரு....

MANO நாஞ்சில் மனோ said...

அறியாத புதிய தகவல்கள் நன்றி வெங்கட்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

உடல்பயிற்சி முடிந்ததும் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் குடித்தார்களா ஆச்சர்யமா இருக்கேயய்யா...!!!

Madhavan Srinivasagopalan said...

thanks for Vital info.

வெளங்காதவன் said...

சிசுவேசன்:- மிசஸ் வெங்கட் அவர்கள், மிஸ்டர் வெங்கட் இருவரும் அமர்ந்துள்ளனர்.
________________________________
மிஸ்டர்.வெங்கட்- என்னமா, காலைல பிரேக் பாஸ்ட் நல்லாவே இல்லியே??

மிசஸ்.வெங்கட்- நீர்தானே அதைப் பிரிப்பேர் பண்ணுநீரு.....

மிஸ்டர்.வெங்கட்- அவ்வ்வ்வ்.. அனேகமா ஆயில் சரியில்லன்னு நெனைக்குறேன்.

மிசஸ். வெங்கட்- ஆமா, இவரு பெரிய ஐன்ஸ்டினு... ஆயில் சரியில்ல அது இதுன்னுட்டு... ஒழுங்கா சமைக்கவே தெரியல, குத்தம் சொல்லுரதுல மட்டும் உமக்கு டாக்டர் பட்டமே தராலம்....

மிஸ்டர்.வெங்கட்- ஐ... ஆயில் சரியில்ல.. டாக்டர் பட்டம்.... அடுத்த ரெண்டு போஸ்டுக்கு மேட்டர் சிக்கிடுச்சு.....

மிசஸ். வெங்கட்- உம்மைச் சொல்லி குத்தமில்ல... நீர் எழுதுனதை எல்லாம் படிக்கராங்களே அவிங்களச் சொல்லணும்...

மிஸ்டர். வெங்கட்- ???????

:-)

Mohamed Faaique said...

///உடல்பயிற்சி முடிந்ததும் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் குடித்தார்ள்///

இதுக்கே நிறைய பயிற்சி வேணுமே

Mohamed Faaique said...

ஆமா... ரீஃபைண்ட் ஆயில்’னா என்ன பாஸ்..??

வெங்கட் said...

@ ஈஸ்வரி.,

// நல்ல விஷயம்! //

பதிவு போட்ட 10 நிமிஷத்துல
ஈஸ்வரி மேடம் Chat-ல வந்து..

" இனிமே எங்க Family-க்கு செக்குல
ஆட்டின எண்ணெய் தான் வாங்க
போறேன்னு " சொன்னாங்க..

ரொம்ப ரொம்ப சந்தோஷம்..!!

வெங்கட் said...

@ Dr.Venkhat.,

// thanks venkatappa for sharing this dangerous topic. //

ரொம்ப நன்றி டாக்டர்..!

யாரும் வேணும்னே ரீஃபைண்ட் ஆயிலை
Use பண்ணலை.. அது தான் சிறந்ததுன்னு
திருப்பி திருப்பி டி.வில சொல்லும் போது
மக்கள் என்ன பண்ணுவாங்க..?

இந்த மாதிரி நல்ல விஷயங்களை
தெரிஞ்சவங்க., படிச்சவங்க யாராச்சும்
வெளில சொன்னா தானே அது நாலு
பேருக்கு போயி சேரும்..

வெங்கட் said...

@ ராஜேஷ்.,

// இதயம் நல்லெண்ணெய்., கடலை எண்ணெய்
எல்லாம் ரீபைண்ட் இல்லாம கிடைக்குதே.
அதை பயன் படுத்தலாமே.. //

அப்படியா..?! ரீபைண்ட் இல்லாம
கிடைக்குதா.. அப்ப தாராளமா
பயன்படுத்தலாமே..

எதுக்கும் எண்ணெய் வாங்கறவங்க
பாக்கெட் மேல " Refined "-னு போட்டு
இருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணி
வாங்கிக்கோங்க..

வெங்கட் said...

@ அருண்.,

// தப்பி தவறி இந்த பக்கம் வர்ற
அன்னைக்கு தான்யா இந்த ஆளு
கருத்து சொல்வாரு.... //

என்ன நினைச்சி வந்தீங்க..?!
என்னைய கலாய்க்கலாம்னா..
நான் தான் என்னை பத்தி எழுதாம
எண்ணெயை பத்தி எழுதிட்டேனே..

அப்ப நீங்க எண்ணெய்யை தான்
கலாய்க்கணும்.. என்னைய கலாய்க்க
முடியாது இல்லையா..?!!

ஆனா Unfortunately நீங்க அந்த
எண்ணெய்யையும் கலாய்க்க முடியாது.
ஏன்னா அது நல்ல எண்ணெய்.

( ஆஹா தமிழ்ல பூந்து விளையாடுறடா
வெங்கட்..! )

வெங்கட் said...

@ மனோ.,

// உடல்பயிற்சி முடிந்ததும் ஒரு கிண்ணம்
நல்லெண்ணெய் குடித்தார்களா ஆச்சர்யமா
இருக்கேயய்யா...!!!. //

ம்ம்.. ஆச்சரியம் தான்..!

அதே மாதிரி..

" தும்மல், இருமல், காய்ச்சல்
தொடங்கியவுடன் ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் குடித்தால் சளி
கரைந்து விடும்..! " - திரு.வலம்புரி ஜான்

( இந்த நாள் இனிய நாள். 2-ம் தொகுதி )

வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// மிஸ்டர்.வெங்கட்- ஐ... ஆயில் சரியில்ல..
டாக்டர் பட்டம்.... அடுத்த ரெண்டு போஸ்டுக்கு
மேட்டர் சிக்கிடுச்சு...... //

ரெண்டில்ல... மூனு போஸ்ட்..

" பிரேக் பாஸ்ட் " இதை வெச்சும்
ஒரு போஸ்ட் போடுவோம்ல..!!

வெங்கட் said...

@ Mohamed.,

// ஆமா... ரீஃபைண்ட் ஆயில்’னா
என்ன பாஸ்..?? //

ஏன் பாஸ்.. தெரியாதா..?

தேங்காய், கடலை, எள், சூரியகாந்தி
இதுல இருந்து எடுத்த எண்ணெய்கள்
பார்க்க டல் கலரா., Thick-ஆ இருக்கும்.

அதை கண்ட கண்ட Chemicals போட்டு.,
Bleach பண்ணி சும்மா கண்ணாடி
மாதிரி குடுப்பாங்க.. அதுக்கு பேருதான்
Refined Oil..

ஆமா நீங்க என்ன எண்ணெய் Use
பண்றிங்க.?!

வெளங்காதவன் said...

//" பிரேக் பாஸ்ட் " இதை வெச்சும்
ஒரு போஸ்ட் போடுவோம்ல..!! ///

இந்தப் பொழப்புக்கு......

வாழ்க!!!!!!

பெசொவி said...

A Very good and useful article. Thanks venkat for this post!

பெசொவி said...

@ Venkat

Refined எண்ணெய் உடல் நலத்திற்கு கேடு, புரிந்துகொண்டோம்.
Refined வெங்கட் ப்ளாக் நலத்திற்கு நல்லது, புரிந்து கொள்வீர்களா?
(VKS மெம்பரா இருந்துகிட்டு கலாய்க்காம போக முடியுமா?)

Kousalya said...

ஓரளவு இதை பற்றி கொஞ்சம் தெரிஞ்சும் அதுக்கென்ன பரவாயில்லை என்பது போல பலருக்கும் இருக்கும் மனப்பான்மை தான் எனக்கும் இருந்தது இந்த போஸ்ட் படிக்கும் முன்னால் வரை...!! அப்பளம், வடை, மற்றும் பிற பலகாரங்களுக்கு மட்டும் உபயோகபடுத்தி வந்தேன், மற்றவற்றுக்கு நல்லெண்ணெய் தான்...

உங்கள் போஸ்ட், கொடுத்திருக்கும் லிங்க் எல்லாம் படிச்ச பிறகு மொத்தமா தவிர்த்து விடனும் என முடிவு பண்ணிட்டேன்...

மிக்க நன்றிகள்.

Bala said...

Good post

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயனுள்ள தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

Bala said...

நல்ல பதிவு வெங்கட். இன்று முதல் நானும் ஒரு VAS உறுப்பினர் ஆகலாமா?
-பாலா

Advocate P.R.Jayarajan said...

ரொம்ப அதிர்ச்சியா இருக்கு... நல்லவேளை புரிஞ்சுகிட்டேன்

மார்கண்டேயன் said...

மிக்க நன்றி வெங்கட், பல நாட்களாக தேடிக்கொண்டிருந்த தகவல், தங்களின் முதல் மறுமொழிக்கான பதிலின் படி, இம்மறுமொழி எழுதும் முன், நான் இணைந்துள்ள பல்வேறு இனைய குழுக்கள், மற்றும் முக நூல் குழுக்கள் ஆகிவற்றில் தொடுப்பினை கொடுத்துவிட்டேன்,

வேதியல் முனைவராக இத்தகவல் என் ஆய்விற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,

நட்புடன்,
மார்கண்டேயன்

Anonymous said...

மிகவும் பயனுள்ள தகவல். இந்த மாதத்திலிருந்து தான் நாங்களும் நல்லெண்ணெய் கடலெண்ணெய் உபயோகப் படுத்த ஆரம்பித்தோம்......

NAAI-NAKKS said...

THANKS...

Jagan said...

☠☠☠
வெங்கட், உங்க ப்ளாக்கை யாரோ ஹேக் பண்ணிட்டாங்களா என்ன? ☻

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// Refined வெங்கட் ப்ளாக் நலத்திற்கு
நல்லது, புரிந்து கொள்வீர்களா? //

If Fine is fine.. Why Refine..?!!!

வெங்கட் said...

@ கவுசல்யா.,

// உங்கள் போஸ்ட், கொடுத்திருக்கும் லிங்க்
எல்லாம் படிச்ச பிறகு மொத்தமா தவிர்த்து
விடனும் என முடிவு பண்ணிட்டேன்... //

வரவேற்க்க தக்க மாற்றம்..!
மிக்க நன்றிகள்..!

வெங்கட் said...

@ பாலா.,

// இன்று முதல் நானும் ஒரு
VAS உறுப்பினர் ஆகலாமா?
-பாலா. //

VAS = Venkat-ஐ ஆதரிப்போர் சங்கம்
Members : உலகத் தமிழர்கள் அனைவரும்
( அந்த 6 பேரை ( VKS ) தவிர )

இதை படிக்கலையா..? நீங்க அல்ரெடி
VAS மெம்பர் தான்..!

ஸ்ரீராம். said...

Good and useful post.

துளசி கோபால் said...

அட ராமா..............


கனோலா எண்ணெய் பற்றி ஏதாச்சும் தீமை இருந்தாச் சொல்லுங்க.

இதயம் நல்லெண்ணெய் கிடைக்கறதில்லை. தப்பித்தவறி ஒரு இடத்தில் கிடைச்சது. விலை ஒரு லிட்டருக்கு 19 டாலர். இட்லிக்கு இருக்கட்டுமுன்னு வாங்கி வச்சுருக்கேன்.

வெங்கட் said...

@ மார்க்கண்டேயன்.,

// இம்மறுமொழி எழுதும் முன், நான்
இணைந்துள்ள பல்வேறு இனைய குழுக்கள்,
மற்றும் முக நூல் குழுக்கள் ஆகிவற்றில்
தொடுப்பினை கொடுத்துவிட்டேன், //

ரொம்ப நன்றிங்க..!

// வேதியல் முனைவராக இத்தகவல்
என் ஆய்விற்கு மிகவும் பயனுள்ளதாக
இருக்கிறது, //

ஓ.. உங்க ஆய்வு ரிசல்ட்க்காக
காத்திருக்கிறோம்.. எவ்ளோ நாள்
ஆனாலும் அதை எங்களுக்கு
மறக்காமல் தெரியப்படுத்தவும்.!

வெங்கட் said...

@ துளசி கோபால்.,

// கனோலா எண்ணெய் பற்றி ஏதாச்சும்
தீமை இருந்தாச் சொல்லுங்க. //

எனக்கு இது பத்தி எதுவும் சரியா
தெரியாது.. கொஞ்சம் பொறுங்க..
எங்க பேமிலி Dr.Venkhat-ஐ கேட்டு
சொல்றேன்.. இல்ல அவரையே
Comment போட சொல்றேன்..

துளசி கோபால் said...

நன்றி வெங்கட்.

இங்கே ஹார்ட் ஃபவுண்டேஷன் பரிந்துரைக்கிற எண்ணெய்களுக்கும் மற்ற பொருட்களுக்கும் சிகப்பு 'டிக்' ஒன்னு போட்டுருப்பாங்க.அதைப்பார்த்துத்தான் பொருட்கள் வாங்கும் வழக்கம்.

venkhat said...

Hello mr Thulasi Gopal, i had been requested by venkat to help with a few words on canola oil.

In India it is known as mustard oil, that which us used much in north India.

Generally speaking refined oil, irrespective of their kind , are not good as the essential fatty acids are removed, which makes an oil stale after 3 months, which is not good for the sales men.

Cold pressed oil, is the best, as the process does not cause harm to us, nor does it change the configuration of the content.

Indian rapeseed( mustard ) is not genetically manufactured, but not so if u are getting it from other countries.

They can be more dangerous to your health.

so why are u using canola oil?

we can see your reason and accordingly carry on the discussion

Sakeer said...

நீங்க சொல்றது எல்லாம் சரி தான் பாஸ்சு,,, ஆனா இப்போ செக்குல ஆட்டுன எண்ணைக்கு எங்க போறது,,, எதாவது நல்ல வழி காட்டுங்க பாஸ்சு,,,,

shunmuga said...

இதே போல் உணவில் செய்யப்படும் கலப்படங்களைப் பற்றி உணவு உலகம் என்ற பிளாக்கில் தெரிந்து கொள்ளலாம் .
food: unavuulagam blogspot.com by a.r.sankaralingam ,food safety officer , tirunelveli

துளசி கோபால் said...

தகவல்களுக்கு நன்றி. இங்கே நியூஸியில், கனோலா எண்ணெய் இந்தியாவில் இருந்து இறக்குமதி இல்லை.

நம் வீட்டில் கடந்த 30 ஆண்டுகளாக இதே எண்ணெய்தான். ஸாலட் & குக்கிங் ஆயில் என்று ஒரு எண்ணெய் கிடைக்கிறது. இது ஸோயா . ஒரு மீன் நாற்றம் வேற:( அதனால் அதை பயன்படுத்துவதில்லை.

Vinodhini said...

தகவல்களுக்கு நன்றி...

venkhat said...

Respects to the kiwi lander,
canola is expansion of Canadian oil with low acid.

mustard is actually a weed,it causes agglutination or clumping of rbc( red blood corpuscles) and that causes a variety of ailments with in the blood vessels, i hate to frighten u.

The next is they degenerate the nervous tissue.

http://www.laleva.cc/food/canola.html

read this if u still think it is safe to use it.

துளசி கோபால் said...

Thanks Venkhat,

Rice bran oil is available here. I am using it from today.

Hope this is a good one!

venkhat said...

welcome kiwi,
thanks to venkat for letting this terrific topic come on for discussion, and letting me do some heart searching myself.

ராஜி said...

நாங்களும் ரிஃபைண்ட் ஆயிலுக்கு டாட்டா பை பை சொல்லிட்டேன்

கோமாளி செல்வா said...

ரீ-பைனுடு ஆயில்ல இத்தன பிரச்சினை இருக்கா ? நல்ல வேளையாக நாங்க அத பயன்படுத்துறது இல்ல.

கோமாளி செல்வா said...

// Refined எண்ணெய் உடல் நலத்திற்கு கேடு, புரிந்துகொண்டோம்.
Refined வெங்கட் ப்ளாக் நலத்திற்கு நல்லது, புரிந்து கொள்வீர்களா?
(VKS மெம்பரா இருந்துகிட்டு கலாய்க்காம போக முடியுமா?)//

Refined ப்ளாக்னா எப்படி தயாரிக்கிறதுனு சொன்னீங்கனா தெரிஞ்சிக்குவோம். ஏன்னா உங்க (VKS )ஆளுங்களுக்குத்தானே தெரியும் இதப்பத்தி. உலகத்துல இருக்கிற எல்லா விசயமும் தெரிஞ்சமாதிரியே பில்ட் அப் குடுக்கிறதுனா சும்மாவா ? எங்களுக்கு அந்தக் கலை தெரியாது. எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாமே உண்மை, நேர்மை, நியாயம் :))

இராஜராஜேஸ்வரி said...

தகவல்களுக்கு நன்றி