சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

25 July 2011

ஐ.. பிஸ்கோத்து..!!

என் Friend ஜெகன் பெங்களூர்ல
இருந்து ஒரு வார லீவ்ல நேத்து
தான் ஊருக்கு வந்து இருக்கான்..

பாத்து ஆறு மாசம் ஆச்சேன்னு
அவனை பாக்க Evening அவங்க
வீட்டுக்கு போயிருந்தேன்..

அப்ப அவங்க வீட்ல ஒரு தட்ல
Biscuits கொண்டு வந்து வெச்சாங்க..
அந்த Biscuit பார்க்கவே புது மாதிரி
இருந்தது... ஒரு Biscuit எடுத்து சாப்பிட்டு
பார்த்தேன்.. ரொம்ப டேஸ்டா இருந்தது..

" என்ன Biscuit இது..? "

" இது Imported.. Made in Denmark..! "

" ஓ.. I Like Denmark..! "

" Biscuit-ஐ பாத்ததும் உனக்கு
Denmark பிடிக்குதா..? "

" ஹேய்.. எனக்கு பிடிச்ச ஒரே
Foreign Country டென்மார்க் தான்..
தெரியுமா..?! "

" அப்படியா..? டென்மார்க் எங்கே
கண்ணா இருக்கு..? "

" ஹி., ஹி.!! உலக மேப்ல...
ஒரு ஓரமா.... ! "

" அடிங்.... "

5 நிமிஷம் ஆகியிருக்கும்..

ஜெகன் பேசிட்டே Biscuit சாப்பிட்டுட்டு
இருந்தான்..

நான் Biscuit சாப்பிட்டுட்டே பேசிட்டு
இருந்தேன்..

( ரெண்டும் ஒண்ணுதனேன்னு
அப்பாவி மாதிரி கேக்கறவங்களுக்கு...

அவன் சாப்பிட்டது - 2 பிஸ்கட்
நான் சாப்பிட்டது - 5 பிஸ்கட்

இப்ப புரியுதா Difference..! )

திடீர்னு தட்டு காலி ஆகிட்டு
இருக்கறதை பார்த்த ஜெகன்..
ஷாக் ஆகிட்டான்..

" டேய்.. அந்த பிஸ்கட்டை அதிகமா
சாப்பிடாதே..! "

" ஏன்டா..?! "

" வயிறு எரியும்..! "

" அடப்பாவி..! முதல்லயே சொல்லாம்ல..
நான் வேற 5 பிஸ்கட் சாப்பிட்டுடேனே.!
இப்ப என்ன பண்றது..? "

" டேய்.. நான் வயிறு எரியும்னு சொன்னது
உனக்கில்ல., எனக்கு..! "

" என்ரா சொல்ற..? "

" ஒரு பிஸ்கட் 15 ரூபாடா..! "

" அட நாயே..!! "
.
.

51 Comments:

HajasreeN said...

inga enakku waay ooruthu

சேலம் தேவா said...

பாஸ்..நம்ம ஊரு இட்லி மாதிரியே இருக்கு.

அருண் பிரசாத் said...

இவர்கிட்ட இருக்கற கெட்ட பழக்கமே இதான்ய்யா.... ஓசில பினாயில் கிடைச்சாலும் விட மாட்டாரு... இதுல டென்மார்க பிஸ்கட்டையா விட போறாரு


KFC ல பாக்கெட்டை காலி பண்ண மனுஷந்தானய்யா நீங்க...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

My stomach also burning

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Good joke

பெசொவி said...

//என் Friend ஜெகன் பெங்களூர்ல
இருந்து ஒரு வார லீவ்ல நேத்து
தான் ஊருக்கு வந்து இருக்கான்..
//

அது நேத்து நியூஸ் வெங்கட். இன்னைக்கு நியூஸ் என்ன தெரியுமா, உங்க பிரெண்ட் ஜகன் லீவை கேன்சல் பண்ணிட்டு பெங்களூருக்கே திரும்பிப் போயிட்டாராம்.

வலையகம் said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

Mohamed Faaique said...

யார் அழைத்தாழும் அழைக்காவிட்டாலும், யார் வந்தாலும் வரா விட்டாலும்,எந்த கோவில்ல எப்போ கூல் ஊத்துராங்க, யாரு எப்போ லீவுல வர்ராங்க, யாருக்கு என்ன பிரச்சனை எப்போ வர்து`னு (பிரச்சனைய தீர்ர்க்குர சாக்குல போயி ஒரு சாப்பிடலாமே)ஒரு டைரியே வச்ச்சிருக்காரு நம்ம தல....

Mohamed Faaique said...

./////என் Friend ஜெகன் பெங்களூர்ல
இருந்து ஒரு வார லீவ்ல நேத்து
தான் ஊருக்கு வந்து இருக்கான்..//

MR.jegan ஒரு வாரத்துக்கு போட்ட பட்ஜெட்`அ 30`ஏ நிமிடத்தில் காலி செய்த vAS தலைவர் வாழ்க...

///பாத்து ஆறு மாசம் ஆச்சேன்னு
அவனை பாக்க Evening அவங்க
வீட்டுக்கு போயிருந்தேன்///

6 மாசமா தப்பிச்ச ஆளு நேத்து மட்டும் எப்படி மாட்டினாரோ!!!!

////அப்ப அவங்க வீட்ல ஒரு தட்ல
Biscuits கொண்டு வந்து வெச்சாங்க..
அந்த Biscuit பார்க்கவே புது மாதிரி
இருந்தது... ///

பழைய சோற்றையே ஒரு பிடி பிடிக்கிற ஆளு கைல புது மாதிரி பிஸ்கட் கெடச்சா எப்படி இருக்கும்?????

///ஒரு Biscuit எடுத்து சாப்பிட்டு
பார்த்தேன்.. ரொம்ப டேஸ்டா இருந்தது..///

உங்க சமையல சாபிடர ஆளுக்கு எத சாப்பிட்டாலும் டேஸ்ட்`ஆத்தான் இருக்கும்....

Mohamed Faaique said...

///என்ன Biscuit இது..? ////

ஜெகன் மனதுக்குள் `` என்ன`னு சொல்லாட்டி மட்டும் சாப்பிடாம விட்ருவானா????``

வெங்கட் மனதுக்குள் ``பதில் சொல்ல யோசிக்கிர கெப்`ல 2 பிஸ்கட்`அ வாய்க்குள அமுக்கிர்ரா கைப்புள்ள....``

////அப்படியா..? டென்மார்க் எங்கே
கண்ணா இருக்கு..? "

" ஹி., ஹி.!! உலக மேப்ல...
ஒரு ஓரமா.... ! "////

வெங்கட்ட்`க்கு பிடிச்ச நாட்ட காட்டி குடுக்க சொல்லி இருக்காரு... விடுவாரா வெங்கட்?????

Mohamed Faaique said...

///அவன் சாப்பிட்டது - 2 பிஸ்கட்
நான் சாப்பிட்டது - 5 பிஸ்கட்////

டிஸ்கி 1 : தட்டுல மொத்தம் 7 பிஸ்கட் இருந்திருக்கனும்...

டிஸ்கி 2: வெங்கடு பொய் சொல்லி இருக்கனும்.. (சாப்பிட்டதை குறைத்து...)

Mohamed Faaique said...

///" அடப்பாவி..! முதல்லயே சொல்லாம்ல..
நான் வேற 5 பிஸ்கட் சாப்பிட்டுடேனே.!
இப்ப என்ன பண்றது..? "////
ஜெகன்: டேய்!!! 15 பிஸ்கட் இருந்துதே!!! நான் 2 சாப்பிட்டேன். தட்டு காலியா இருக்கு!!!

வெங்கட்: நான் 5 பிஸ்கட், என் பொண்டாட்டி வரல்ல`ல அவ ஃபீல் பண்ணுவானு அவக்காக 4 பிஸ்கட். குழந்தைகளுக்கு குடுக்காம நாம சாப்பிட்லாமா 2 பிள்ளைகளுக்கும் 2,2 பிஸ்கட். இப்போ கூட்டி கழிச்சு பாரு..கணக்கு சரியா வரும்.

ஜெகன்: கிர்கிர்கிர்.........

வெங்கட்: இன்னொரு விஷயம்.. போகும் போது பார்சல் பண்ணியும் கிடைக்குமுள்ள.... !!!!

இப்போ சொல்லுங்க..... ஜெகன் வயிறு எரிந்தது நியாயம்தானே!!!!

Madhavan Srinivasagopalan said...

வெங்கட் பிலாகுப் பக்கம் போவேன்.. படிப்பேன்.. + கமென்ட் . ஒட்டு..
அவரு என்னோட பிலாகுப் பக்கம் வருவாரு படிப்பாரு..+ கமென்ட்.. ஒட்டு..
----------
அத்தோட வெச்சிக்கணும்.. தேவையில்லாம அவர வீட்டுக்கு கூப்பிட்ட....
ம்ம்.. தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு..
(நான் என்னையச் சொன்னேன்..)

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

பிஸ்கட் எங்கே வாங்குனாருன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க..
நான் வாங்கி உங்களுக்கும் அனுப்புறேன்..

புதுகை.அப்துல்லா said...

:)

Anonymous said...

ஹஹஹா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் தான் ;-)

RAMVI said...

உஙகளை வீட்டுக்கு கூப்பிட்டா நாங்க ஜாக்கிரதையா இருக்கணும்னு நீங்களே சொல்லிடீங்க. சரி......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுதான் பிஸ்கட்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிஸ்கட்ட பாலிடால்ல தொட்டுத்தான் சாப்புடுவேன்னு அடம்புடிச்சீங்களாமே?

£€k#@ said...

//" ஹேய்.. எனக்கு பிடிச்ச ஒரே
Foreign Country டென்மார்க் தான்..
தெரியுமா..?! "
//
yen venkat neenga school la clg la ella sub layum vaangina mark apdinradhaala vandha ottudhala?

//" அப்படியா..? டென்மார்க் எங்கே
கண்ணா இருக்கு..? "

" ஹி., ஹி.!! உலக மேப்ல...//
ada ada enna arivu!!
idha paaratama biscuit vilaiya poi perusa pesurare jagan :D

//நான் Biscuit சாப்பிட்டுட்டே பேசிட்டு இருந்தேன்..//
anga nikkureenga neenga!
ena dhaan pidicha biscuitnaalum adha sapiduradhulaye kuriya irukama
friend kittayum pesitu irundhu irukeengale!!u r grtttttttt

//ஒரு பிஸ்கட் 15 ரூபாடா.
இது Imported.. Made in Denmark..! சாப்பிட்டு
பார்த்தேன்.. ரொம்ப டேஸ்டா இருந்தது.//
venkat neenga indha biscuit epo vaanga poreenga nu sollunga? ;)
crcta vandhudurom :D

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// பாஸ்..நம்ம ஊரு இட்லி
மாதிரியே இருக்கு. //

நானும் ஆரம்பத்துல இப்படி
நினைச்சி தான் Careless-ஆ
இருந்துட்டேன்..

இல்லன்னா அவனாவது ரெண்டு
பிஸ்கெட்ஸ் சாப்பிடறதாவது..!

வெங்கட் said...

@ அருண்.,

// ஓசில பினாயில் கிடைச்சாலும்
விட மாட்டாரு... //

ஆமா விடமாட்டேன்.. அதை வாங்கிட்டு
வந்து பாத்ரூம்க்கு Use பண்ணுவேன்..
இப்ப அதுக்கு என்ன..?

// KFC ல பாக்கெட்டை காலி பண்ண
மனுஷந்தானய்யா நீங்க //

ஆமாங்க.. KFC-ல சாப்பிட்டுட்டு
கடைசில பில் குடுக்கும் போது..

ஒரு 500 ரூபா நோட்டு,
ஒரு 100 ரூபா நோட்டு.,
நாலு 10 ரூபா நோட்டு
பாக்கெட்ல இருந்து எடுத்து..
பில்லுக்கு பணம் குடுத்தவர்
இவர் தானுங்க..!!

ஆனா இவர் கைவிட்டு பணம்
எடுத்தது என் சட்டை பாக்கெட்ங்க..!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// உங்க பிரெண்ட் ஜகன் லீவை கேன்சல்
பண்ணிட்டு பெங்களூருக்கே திரும்பிப்
போயிட்டாராம். //

இனிமே அவன் ஊருக்கு போனா
என்ன..? இருந்தா எனக்கு என்ன..?

அதான் பிஸ்கெட் நேத்தே முடிஞ்சி
போச்சே..!!

வெங்கட் said...

@ Mohamed.,

// MR.jegan ஒரு வாரத்துக்கு போட்ட
பட்ஜெட்`அ 30`ஏ நிமிடத்தில் காலி
செய்த vAS தலைவர் வாழ்க... //

ஆபீஸ்ல எவ்ளோ வேலை இருக்கும்..!
அதை விட்டுட்டு ஒரு வாரம் லீவ்
போட்டுட்டு இங்கே என்ன கிழிக்கபோறான்..?

அதான் பிளான் பண்ணி நேத்தே
அவனை பெங்களூர்க்கு பார்சல்
பண்ணிட்டேன்..!

2020-ல நாம வல்லரசு ஆக வேணாடாமா.!?

அப்பாதுரை said...

:)
ஓசி பினாயில் இன்னும் :):)

HVL said...

நீங்க வீட்டுக்கு வந்தா ஸ்வீட் காரம் தான் கொடுக்கணும்னு, அவருக்கு தெரியல. (உபயம் 'சிவாஜி').

இனி உங்கள கூப்பிடறதுக்கு முன்ன ஒரு பதிவ போடச் சொல்லுங்க.

நாங்க கமெண்ட்டு போட்டு ஹெல்ப் பண்றோம்!

வெங்கட் said...

@ Mohamed.,

// 6 மாசமா தப்பிச்ச ஆளு நேத்து
மட்டும் எப்படி மாட்டினாரோ!!!! //

விதி வலியது..!

நான் உங்க பிளாக் வந்து மாட்டிக்கறேன்ல..
அது மாதிரி தான்..

வெங்கட் said...

@ Mohamed.,

// டிஸ்கி 1 : தட்டுல மொத்தம்
7 பிஸ்கட் இருந்திருக்கனும்... //

5+2=7.. ஆஹா.. எவ்ளோ ஈஸியா
கண்டுபிடிச்சிட்டீங்க..!

பெரிய கணித மேதையா இருப்பீங்க
போல தெரியுதே..!

Shalini(Me The First) said...

@வெங்கட்
//பெரிய கணித மேதையா இருப்பீங்க
போல தெரியுதே..!
//
அவர் கோல்ட் மெடலிஸ்ட் பாஸ் அடிக்கடி மூக்க ஒட்டி ஒட்டி எவர் கோல்ட் பிடிச்சனால ஜண்டு பாம் கம்பனிலருந்து தந்துர்கங்க

Shalini(Me The First) said...

@பெ.சொ.வி
//அது நேத்து நியூஸ் வெங்கட். இன்னைக்கு நியூஸ் என்ன தெரியுமா, உங்க பிரெண்ட் ஜகன் லீவை கேன்சல் பண்ணிட்டு பெங்களூருக்கே திரும்பிப் போயிட்டாராம்.//
நான் உங்கள பாக்க வரட்டுமான்னு நீங்க கேட்டதையும் சொல்லிடுங்க சார்

Shalini(Me The First) said...

@அருண்

// இவர்கிட்ட இருக்கற கெட்ட பழக்கமே இதான்ய்யா.... ஓசில பினாயில் கிடைச்சாலும் விட மாட்டாரு... இதுல டென்மார்க பிஸ்கட்டையா விட போறாரு//
எங்க பாஸாச்சும் ஃப்னாயில வாங்கி பாத்ரூம்க்கு யூஸ் பண்ணுவாரு ஆனா சில பேரு பிஸ்கட் தொட்டு சாப்பிட யூஸ் பண்றாங்களாம்

கோகுலத்தில் சூரியன் said...

//என் பொண்டாட்டி வரல்ல`ல அவ ஃபீல் பண்ணுவானு அவக்காக 4 பிஸ்கட். குழந்தைகளுக்கு குடுக்காம நாம சாப்பிட்லாமா 2 பிள்ளைகளுக்கும் 2,2 பிஸ்கட்.//

DADDY S BADDY
ஏன்பா எங்க பங்கு பிஸ்கட் எங்க? இன்னிக்கு எங்களுக்கு அந்த பிஸ்கோத் வாங்கிட்டு வரல, அம்மா கிட்ட சொல்லி உங்கள அடிக்க சொல்றேன் பாருங்க

வெங்கட் said...

@ மாதவன்.,

// தேவையில்லாம அவர வீட்டுக்கு கூப்பிட்ட //

உங்க மூட நம்பிக்கையை பாத்து
நான் பரிதாப படறேன்..!

கூப்பிடறவங்க வீட்டுக்கு மட்டும் தான்
நாங்க போவோம்னு யார் சொன்னது.?!

வெங்கட் said...

@ ரமேஷ் பாபு.,

// பிஸ்கட் எங்கே வாங்குனாருன்னு கொஞ்சம்
கேட்டு சொல்லுங்க.. நான் வாங்கி உங்களுக்கும்
அனுப்புறேன்.. //

அந்த பிஸ்கட் தான் சாப்பிட்டு பார்த்தாச்சே..
சரி., சரி.. நீங்க வேற ஆசையா கேக்கறீங்க..

சென்னையில உஸ்மான் ரோட்ல
லலிதா ஜிவல்லரி போயி அங்கேயிருந்து

2 தங்க பிஸ்கெட் வாங்கி அனுப்புங்க..!

வெங்கட் said...

@ ராம்வி.,

// உஙகளை வீட்டுக்கு கூப்பிட்டா நாங்க
ஜாக்கிரதையா இருக்கணும்னு நீங்களே
சொல்லிடீங்க. சரி...... //

என்ன அநியாயமா இருக்கு..?

அன்பா குடுத்தாங்களேன்னு குடுத்த
பிஸ்கட்டை சாப்பிட்டா அது ஒரு
குத்தமா..?!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// பிஸ்கட்ட பாலிடால்ல தொட்டுத்தான்
சாப்புடுவேன்னு அடம்புடிச்சீங்களாமே? //

பிஸ்கட் மேல ரெண்டு எறும்பு இருந்தது..
அதை அடிச்சு., அதனால பிஸ்கட்
உடைஞ்சிட்டா...

அதான் பாலிடால்ல தொட்டு சாப்பிடும்
போது..
எறும்பும் செத்து போகும்..
பிஸ்கட்டும் உடையாது..

" ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..! "
எப்பூடி..?!!

வெங்கட் said...

@ லேகா.,

// yen venkat neenga school la clg la ella sub layum
vaangina mark apdinradhaala vandha ottudhala? //

ஹி.,ஹி.., ஹி..!! அப்பல்லாம்
சாதாரணமா நான் 5 மார்க் கேள்விக்கே
" டென் மார்க் " தான் எடுப்பேன்னா
பாருங்களேன்..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்க சாப்பிட்டா அது கண்டிப்பா நாய் பிஸ்கட் தான்....

ராஜி said...

நான் முடிவு வேற மாதிரி இருக்குனு யூகிச்சேன். ஆனால் வேற மாதிரி முடிச்சுட்டீங்க.

cheena (சீனா) said...

வெங்கட்டு - ரொம்ப நாளாச்சு - உன் வூட்டுப் பக்கம் வந்து - வி.வி.சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா -

இந்திரா said...

வயிறு நல்லா எரிஞ்சது போலயே..

anony said...

@venkat
//கூப்பிடறவங்க வீட்டுக்கு மட்டும் தான்
நாங்க போவோம்னு யார் சொன்னது.?!
//
ohh naangalum idha adopt panikalaam illaiya?
ok yaar yaar ellam venkat veetukku vareenga?kaiya thookunga

//இனிமே அவன் ஊருக்கு போனா
என்ன..? இருந்தா எனக்கு என்ன..?
அதான் பிஸ்கெட் நேத்தே முடிஞ்சி
போச்சே..!!//
nanbendaa :D

@ramesh
//நீங்க சாப்பிட்டா அது கண்டிப்பா நாய் பிஸ்கட் தான்....//
thannai pol pirarai ninai case:D

//2 தங்க பிஸ்கெட் வாங்கி அனுப்புங்க..//
idhaan sondha selavil sooniyam vachikiradho?

வெங்கட் said...

@ ஷாலினி.,

// ஆனா சில பேரு பிஸ்கட் தொட்டு
சாப்பிட யூஸ் பண்றாங்களாம் //

அவங்கல்லாம் மொரீசியஸ்ல செட்டில்
ஆனவங்களா இருக்கும்.!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// நீங்க சாப்பிட்டா அது கண்டிப்பா
நாய் பிஸ்கட் தான்.... //

நீங்க சொன்னா.. அது கரெக்டா தான்
இருக்கும்.. எக்ஸ்பீரியன்ஸூ..?!!

வெங்கட் said...

@ கோகுலத்தில் சூரியன்.,
// DADDY S BADDY
ஏன்பா எங்க பங்கு பிஸ்கட் எங்க? இன்னிக்கு எங்களுக்கு அந்த பிஸ்கோத் வாங்கிட்டு வரல, அம்மா கிட்ட சொல்லி உங்கள அடிக்க சொல்றேன் பாருங்க //

யாருப்பா அது நம்மள மாதிரி
கமெண்ட் போடறது..?

அது என் கமெண்ட்டுன்னு நினைச்சி
தெரியாதனமா பப்ளீஷ் வேற பண்ணிட்டேன்..

வெங்கட் said...

@ சீனா சார்.,

// வெங்கட்டு - ரொம்ப நாளாச்சு
- உன் வூட்டுப் பக்கம் வந்து //

என்ன ஒரு ஆறுமாசம் இருக்குமா
சார்..!

ஆறுமாசமா எனக்கு டிமிக்கி கொடுத்துட்டு
சந்தோஷமா இருந்த ரெண்டு பேர்
இந்த மாசம் என்கிட்ட மாட்டிகிட்டாங்க..!

ஹா., ஹா., ஹா ( வில்லன் சிரிப்பு )

வெங்கட் said...

@ அனானி., ( லேகா )

// ok yaar yaar ellam venkat veetukku vareenga?
kaiya thookunga //

வாங்க.. வாங்க.. நீங்க வரும் போது
நான் யார் வீட்ல இருக்கேனோ..?!

ஹி., ஹி., ஹி..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said... @ ரமேஷ்.,

// நீங்க சாப்பிட்டா அது கண்டிப்பா
நாய் பிஸ்கட் தான்.... //

நீங்க சொன்னா.. அது கரெக்டா தான்
இருக்கும்.. எக்ஸ்பீரியன்ஸூ..?!!//

ஆமா நான் நாய் மேய்க்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வெங்கட் said... @ ரமேஷ்.,

// நீங்க சாப்பிட்டா அது கண்டிப்பா
நாய் பிஸ்கட் தான்.... //

நீங்க சொன்னா.. அது கரெக்டா தான்
இருக்கும்.. எக்ஸ்பீரியன்ஸூ..?!!//

ஆமா நான் நாய் மேய்க்கிறேன்...
////////

மாடு மேய்ச்சா பால் கெடைக்கும், நாய் மேய்ச்சா என்ன கிடைக்கும்?

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ஆமா நான் நாய் மேய்க்கிறேன்... //

" என் தகுதிக்கேத்த வேலை கிடைச்சி
இருக்குன்னு " நீங்க சொல்லும் போதே
நான் டவுட் பட்டேன்.. இது மாதிரி தான்
எதாச்சும் இருக்குன்னு..!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// மாடு மேய்ச்சா பால் கெடைக்கும்,
நாய் மேய்ச்சா என்ன கிடைக்கும்?//

நாய்க்கு வைக்கிற பிஸ்கட்., சிக்கன்
எல்லாம் கிடைக்கும்.. ஆனா நாய்க்கு
தெரியாம உஷாரா ஆட்டையை போடணும்..

இப்படிக்கு

" நாய் " எக்ஸ்பர்ட் ரமேஷ்