சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

19 December 2011

" ஈரோடு சங்கமம் " - வெளிவராத செய்திகள்..!

டிஸ்கி : " ஈரோடு சங்கமம் " பத்தி
இந்நேரம் பல பேர் எழுதி இருப்பாங்க..
இன்னும் எழுதுவாங்க..

So.. நாம எந்த ப்ளாக்லயும் வெளிவராத
மத்த விஷயங்களை பார்க்கலாம்.

" ஈரோடு சங்கமம் "நிகழ்ச்சில
கலந்துக்க நான் வர்றேன்னு தெரிஞ்சதும்.,
பஸ் ஸ்டேண்ட் அருகே என் வாசகர்கள்
வைத்த கலக்கல் கட்-அவுட்..!

( ஹி., ஹி., அடங்க மாட்டோம்ல..!! )

" வெங்கட் வரட்டும்னு " Wait
பண்ணிட்டு இருக்காம 10.15-க்கு
நிகழ்ச்சியை Sharp-ஆ ஆரம்பிச்ச
அந்த Punctuality எனக்கு ரொம்ப
பிடிச்சி இருந்தது.


வந்திருந்த 230 பதிவர்கள்ல என்னை
மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலா
கவனிச்சாங்க.

( எனக்கு குடுத்த க்ளாஸ்ல
எல்லோரையும் விட 5 ml ஜூஸ்
அதிகமா இருந்துச்சில்ல..!! )

( நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட மஞ்சள் கலர் ஜூஸ்.
டேஸ்ட்.. செம, செம..!! )

சிறந்த பதிவர்களை பாராட்டி
அவார்ட் குடுத்துட்டு இருந்தாங்க..
அப்ப செல்வா என்கிட்ட..

" தல.. உங்களுக்கும் அவார்ட் தருவாங்களா.? "

" கேட்டாங்க.. வேணாம்னு சொல்லிட்டேன்.! "


யார் போட்டோ எடுத்தாலும் உடனே
கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்ளும்

சி.பி.செந்தில்குமார். அசந்த நேரத்தில்

க்ளிக்கியது...மேடை ஏறி பதிவர்கள் தங்களை
பற்றி Intro பண்ணிக்கொள்ளும் போது
சேலம் தேவா பேசியது...

" நான் வலையுலகத்துக்கு வந்ததுக்கு
காரணமே வெங்கட் தான்..! அவரோட
கோகுலத்தின் சூரியன்
Blog-ஐ பாத்து
Inspire ஆகி தான் நானும் ஒரு Blog
ஆரம்பிச்சேன் "-னு சொன்னப்ப
கரகோஷம் விண்ணை பிளந்தது..

( நானு, சி.பி.செந்தில், " நாய் நக்ஸ் " நக்கீரன்,
செல்வா நாலு பேரும் ( மட்டும்.?! )
கையை தட்டிட்டே இருந்தோம்ல.. )

( சே..! எவ்ளோ Training குடுத்து அனுப்பினாலும்
ரெண்டு Points மிஸ் பண்ணிடுராரே..!!! )

டிஸ்கி :

மேலே இருக்குற கட்-அவுட்
நிஜம்னு
சில பேர்
நம்பிட்டதா எனக்கு தகவல்
வந்தது...
அது கிராபிக்ஸ் by Salem Deva

" இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது.?!! "
.
.

42 Comments:

சேலம் தேவா said...

சாரி பாஸ்..5 நிமிஷத்துக்கு மேல என்னால தொடர்ச்சியா பொய் சொல்ல முடியாது.கை கால் எல்லாம் நடுங்கும். அதான் வந்துட்டேன்..... :)

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட்கிட்டே எனக்கு பிடிச்சதே அசராம, மனசாட்சி உறுத்துமேங்கற கவலை இல்லாம பொய் பேசற சரளம்தான்

சி.பி.செந்தில்குமார் said...

>>சேலம் தேவா said...

சாரி பாஸ்..5 நிமிஷத்துக்கு மேல என்னால தொடர்ச்சியா பொய் சொல்ல முடியாது.கை கால் எல்லாம் நடுங்கும். அதான் வந்துட்டேன்..... :)

அப்போ கேப் விட்டு கேப் விட்டு பொய் பேசுவீங்களா?

சேலம் தேவா said...

@ சி.பி.செந்தில் குமார்

//அப்போ கேப் விட்டு கேப் விட்டு பொய் பேசுவீங்களா?//

நேத்து உங்கள் நேர்ல பாராட்டிட்டு இருந்தோமே...அது எல்லாம் என்னான்னு நெனச்சிங்க..?! :)

கோவை நேரம் said...

அட..இது புதுசா இருக்கே...அப்புறம்...கரகாட்டம். செண்டை மேளம் வரவேற்பு தரலையா..? அசந்த நேரத்தில் அண்ணனை கிளிக் பண்ணிடீங்களே...சாதனைதான்...இன்னும் வருமா...? நன்றாக இருக்கிறது

கோகுல் said...

இன்னும் எவ்வளவு உண்மைகள்(?) வெளிவரப்போகுதோ?

ViswanathV said...

// " நான் வலையுலகத்துக்கு வந்ததுக்கு
காரணமே வெங்கட் தான்.. அவரோட
" கோகுலத்தின் சூரியன் " ப்ளாக்கை
பாத்து Inspire ஆகி தான் நானும் ஒரு
ப்ளாக் ஆரம்பிச்சேன்.. "

இவர விடக் கன்றாவியா வா நாம எழுதுவோம்ன்னு தேவா நெனச்சிட்டாரோ என்னமோ ?

தமிழ்வாசி பிரகாஷ் said...

கோவை நேரம் said...
அட..இது புதுசா இருக்கே...அப்புறம்...கரகாட்டம். செண்டை மேளம் வரவேற்பு தரலையா..?///

மேளம் தாளம் இருந்துச்சே... விழாவில் கௌரவிக்கப்பட்டவர்கள் மேடையேறும் போது மேளம் தாளம் வரவேற்ப்பு இருந்தது...


வாசிக்க:
ஈரோடு பதிவர் சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ViswanathV said...

// " நான் வலையுலகத்துக்கு வந்ததுக்கு
காரணமே வெங்கட் தான்.. அவரோட
" கோகுலத்தின் சூரியன் " ப்ளாக்கை
பாத்து Inspire ஆகி தான் நானும் ஒரு
ப்ளாக் ஆரம்பிச்சேன்.. "

இவர விடக் கன்றாவியா வா நாம எழுதுவோம்ன்னு தேவா நெனச்சிட்டாரோ என்னமோ ? //


10000 times Like

வெளங்காதவன் said...

அந்தக் கேமரா மேட்டர் எண்ண ஆச்சுய்யா?

:-)

வெளங்காதவன் said...

//சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட்கிட்டே எனக்கு பிடிச்சதே அசராம, மனசாட்சி உறுத்துமேங்கற கவலை இல்லாம பொய் பேசற சரளம்தான்/////

lol

NAAI-NAKKS said...

Enakku juntion-la kudutha
varaverppu.....
Kani ----meen-i
ninaivu paduthiyathu.....
Enna nama...ualaga aalavu-la
sathanai pattaichittom-kira
mana niraivu

NAAI-NAKKS said...

Aama venkat....
MACHAAN kitta avar
camera patharama irukku-nu
kamicheengala....
Atleast thagaval sonneengala ????

MANO நாஞ்சில் மனோ said...

எடுலேய் அந்த அருவாளை,பிளக்ஸ் போர்டு வச்சவனை உடனே பிடிக்கணும் ஹி ஹி...!!!

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
>>சேலம் தேவா said...

சாரி பாஸ்..5 நிமிஷத்துக்கு மேல என்னால தொடர்ச்சியா பொய் சொல்ல முடியாது.கை கால் எல்லாம் நடுங்கும். அதான் வந்துட்டேன்..... :)

அப்போ கேப் விட்டு கேப் விட்டு பொய் பேசுவீங்களா?//

எல்லாரும் உன்னை மாதிரின்னு நினச்சியாக்கும் ராஸ்கல் பிச்சிபுடுவேன்...

விக்கியுலகம் said...

அது ஏன் போட்டோல பயந்தா போலயே இருக்கீங்க மாப்ள ஹிஹி!

சம்பத் குமார் said...

வணக்கம் அண்ணா..

சங்கமத்தில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

அந்த ப்ள்க்ஸ் போர்டு கடசி வரை சொல்லவே இல்லை..

பெசொவி said...

//சேலம் தேவா said...

சாரி பாஸ்..5 நிமிஷத்துக்கு மேல என்னால தொடர்ச்சியா பொய் சொல்ல முடியாது.கை கால் எல்லாம் நடுங்கும். அதான் வந்துட்டேன்..... :)//

ha....ha.....ha!

(One more person to VKS, வருக, வருக!)

பெசொவி said...

//ViswanathV said...

// " நான் வலையுலகத்துக்கு வந்ததுக்கு
காரணமே வெங்கட் தான்.. அவரோட
" கோகுலத்தின் சூரியன் " ப்ளாக்கை
பாத்து Inspire ஆகி தான் நானும் ஒரு
ப்ளாக் ஆரம்பிச்சேன்.. "

இவர விடக் கன்றாவியா வா நாம எழுதுவோம்ன்னு தேவா நெனச்சிட்டாரோ என்னமோ ?//

ஆஹா......நாம வராம போனாலும், நம்ம VKS ஆளுங்க பல பேர் இந்த ப்ளாக் பக்கம் வர ஆரம்பிச்சுட்டாங்க, போலிருக்கே!

cheena (சீனா) said...

வெங்கட்டு - உன்கிட்ட இருக்கற நக்கலு இவ்வளவு தானா- இன்னும் அள்ளி விடுவியா - ஆமா யாரோ 4 பேரு நீ ஈரோட்டுக்குள்ள வரும் போது கறுப்புக் கொடி காட்னாங்களாம் - என்னமோபா - பாத்துக்க - உடம்பு தாங்காது - அவ்ளோ தான் = சொல்லிப் புட்டேன் - வர்ட்டா

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// சாரி பாஸ்..5 நிமிஷத்துக்கு மேல
என்னால தொடர்ச்சியா பொய் சொல்ல
முடியாது.கை கால் எல்லாம் நடுங்கும். //

அது தெரிஞ்சி தானே 4 நிமிஷத்துக்கு
மேட்டர் ரெடி பண்ணி குடுத்தேன்..
அதையும் கரெக்டா சொல்லலைன்னா..

ஹூம்.. அப்ப காலைல டிபன் வாங்கி
குடுத்து., பஸ் டிக்கெட் எடுத்து குடுத்து
ஈரோட்டுக்கு கூட்டிட்டு போனது எதுக்காம்..?!!

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்

// வெங்கட்கிட்டே எனக்கு பிடிச்சதே
அசராம, மனசாட்சி உறுத்துமேங்கற
கவலை இல்லாம பொய் பேசற சரளம்தான். //

பொறாமை.. பொறாமை..!

அந்த கட்-அவுட்-ஐ நீங்க பார்க்கலைன்னா
அது பொய்யா..?!

இதுவரைக்கும் நீங்க அமெரிக்கால
இருக்குற " White House " -ஐ கூடத்தான்
பாத்தது இல்ல.. அதுக்காக அது பொய்யா.?!

அனு said...

உங்கள வரவேற்க போட்டிருந்த பேனர் கூடவே KMB Granites விளம்பரம் போட்டிருக்குதே.. அதைப் பார்த்த அப்புறம் கூடவா உங்களுக்கு புரியல.. :)

வெங்கட் said...

@ கோவை நேரம்.,

// இருக்கே...அப்புறம்...கரகாட்டம்..
செண்டை மேளம் வரவேற்பு தரலையா..? ) //

நான் கூட இப்படி எதாவது அநாவசிய
செலவு செஞ்சிடுவாங்களோன்னு
பயந்துட்டே தான் இருந்தேன்..

நல்லவேளை அப்படி எதுவும்
பண்ணலை..!
:)

வெங்கட் said...

@ கோகுல்.,

// இன்னும் எவ்வளவு உண்மைகள்(?)
வெளிவரப்போகுதோ? //

முதல்ல இந்த உண்மைகளுக்கு
ரெஸ்பான்ஸ் எப்படின்னு பார்க்கலாம்..

வெங்கட் said...

@ விஸ்வநாத்,

// இவர விடக் கன்றாவியாவா நாம
எழுதுவோம்ன்னு தேவா நெனச்சிட்டாரோ
என்னமோ ? //

ப்ளாக் எழுத அதிமேதாவித் தனம்
தேவையில்லை.. சமானியரும் ப்ளாக்
எழுதலாம் என்பதை இந்த உலகுக்கு
உணர்த்தவே யாம் அவ்வாறு எழுதுகிறோம்..

இது எமது திருவிளையாடல் No. 147 B / 2G

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// 10000 times Like //

சொந்தமா ஒரு கமெண்ட் போட
வக்கில்லன்னாலும்.. இதுக்கு ஒண்ணும்
குறைச்சல் இல்ல..!

சாதாரணமானவள் said...

ஹஹஹா.... கட் அவுட் மேட்டர் சூப்பர்.

Anonymous said...

எனக்கும் இந்த மாதிரி சந்திப்புகளில் கலந்து கொள்ள ஆசைதான். என்ன செய்ய சூழ்நிலை தடுகிறதுஇன்று.

காதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது என்ன கட்டவுட்டா இல்ல கெட்டவுட்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பின்னாடி ஒரு கிரானைட் கம்பேனி கட்டவுட் இருக்கே, அப்போ அண்ணன் அங்கதான் கல்லு உடைச்சிக்கிட்டு இருக்காரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
வெங்கட்கிட்டே எனக்கு பிடிச்சதே அசராம, மனசாட்சி உறுத்துமேங்கற கவலை இல்லாம பொய் பேசற சரளம்தான்///

அப்போ உங்க ஊர்ல அசராம பொய் சொன்ன வாய்க்கு போஜனம் போட்டு அனுப்பி இருக்கீங்க..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சேலம் தேவா said...
சாரி பாஸ்..5 நிமிஷத்துக்கு மேல என்னால தொடர்ச்சியா பொய் சொல்ல முடியாது.கை கால் எல்லாம் நடுங்கும். அதான் வந்துட்டேன்..... :)////

அப்போ தொடர்ந்து கை கால் நடுக்கத்துலேயே இருக்கீங்க? சேலத்துல வேற இருக்கீங்க, எதுக்கும் நம்ம சிவராஜ் வைத்தியரை பாத்துடுங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
அது ஏன் போட்டோல பயந்தா போலயே இருக்கீங்க மாப்ள ஹிஹி!////

யோவ் அது பயந்தா போல இல்ல, பயந்தேதான்........ !

Faaique Najeeb said...

கூப்பிடாத இடத்துக்கு போரதே தப்பு... அதுல இவ்ளோ தம்பட்டம் வேறயா... வசீகரா படத்துல வடிவேலுவுக்கு விஜய் ஒரு டயலாக் சொல்வாரே..... அது ஞாபகம் வந்து தொலைக்குது...

karthikkumar.karu said...

கட் அவுட் உண்மைய பொய்யா ?

திண்டுக்கல் தனபாலன் said...

கலாட்டா அருமை! (நண்பர்களின் கருத்துகளும்)
பகிர்விற்கு நன்றி நண்பரே!
படித்து விட்டீர்களா? :
"நீங்க மரமாக போறீங்க..."

சேலம் தேவா said...

//சேலத்துல வேற இருக்கீங்க, எதுக்கும் நம்ம சிவராஜ் வைத்தியரை பாத்துடுங்க.......//

அவரே இப்ப பயங்கர நடுக்கத்துலதான் இருக்காரு.... :)

வெங்கட் said...

@ சீனா சார்.,

// ஆமா யாரோ 4 பேரு நீ ஈரோட்டுக்குள்ள
வரும் போது கறுப்புக் கொடி காட்னாங்களாம் //

அது வந்து சார்.. அன்னிக்கு தானே யூடான்ஸ்
விழா சென்னையில நடந்தது.. அதுக்கும்
என்னைத்தான் Chief Guest-ஆ கூப்பிட்டு
இருந்தாங்க.. அதுக்கு போகாம இங்கே
வந்ததால காட்டினாங்க..

ஆகாயமனிதன்.. said...

அழகா நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க.... !

Rathnavel said...

வாழ்த்துகள்.

RAVI said...

இப்பத்தான்யா படிச்சேன்.
நான் ஒரு அஞ்சாறு கட்டவுட்டு பாத்தேனே.அதையும் போட்டுருக்கலாம்ல..?
:)))))))