சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

03 October 2011

உஷ்..!! ரகசியம்..!!

சீக்ரெட் நெ : 1

" 2 மாசமா எங்கே போயிருந்தீங்க..?
என்ன பண்ணிட்டிருந்தீங்கன்னு.? "
மட்டும் யாரும் என்னை கேக்காதீங்க..

ஏன்னா.. அது எங்க Department Secret..!!

நான் ஒரு CBI Officer-ங்கறதையே
வெளியே சொல்லக் கூடாது..

இதுல 2 மாசமா Spectrum Case-ல
துப்பறிஞ்சி பல உண்மைகளை
கண்டுபிடிச்சதை எப்படிங்க
வெளியே சொல்ல முடியும்..?!!

அதனால தயவு செஞ்சி புரிஞ்சிக்கோங்க..!

சீக்ரெட் நெ : 2

திடீர்னு ஒரு நாள் எனக்கு
ஒரு புது நம்பர்ல இருந்து
ஒரு Call வந்தது.." ஹலோ வணக்கம் சார்....!! "

" வணக்கம்.. ஆமா நீங்க..? "

" என் பெயர் கணேஷ் சார்..!
ஊரு சென்னை..! மங்குனி சார்
தான் உங்க நம்பர் குடுத்தாரு.. "

" ஓ.. அப்படியா..? சொல்லுங்க
கணேஷ்..!! "

" நான் உங்க Fan சார்..! உங்க
போஸ்ட் எல்லாம் ரெகுலரா
படிப்பேன்..!! ரொம்ப சூப்பரா
எழுதறீங்க.!! ""

" ரொம்ப Thanks கணேஷ்..!! "

" உங்க பதிவை எல்லாம் படிச்சா
என்னால சிரிப்பை Control பண்ணவே
முடியாது.. நாள் பூரா சிரிச்சிட்டே
இருப்பேன்..! "

" நீங்க என்னை ரொம்ப புகழ்றீங்க..!! "
( தன்னடக்கம்..!! )

" இல்ல சார்.. உண்மைய தான்
சொல்றேன்..! எப்படி இவ்ளோ
காமெடியா எழுதறீங்க...? "

" ஹி., ஹி., அதெல்லாம் தானா
வருது கணேஷ்..!! "

" சார்.. ஒரு சின்ன டவுட்..
கேக்கலாமா.? "

" கேளுங்க.. கேளுங்க..!! "

" உங்க Blog-ல ஏன் சார் வித்யாசமா
பெயர் வெச்சி இருக்கீங்க..? "

" ஓ.. அதுவா.. அது என் பசங்க பேரு..! "

" சார்ர்ர்ர்ர்ர்...!! தமாஷ் பண்ணாதீங்க..!
இப்படி எல்லாமா பசங்களுக்கு பெயர்
வெப்பாங்க..?? "

" ஏன் வெச்சா என்ன தப்பு..??! "

" போங்க சார்.. நீங்க என்கிட்ட
காமெடி பண்றீங்க..! "

" அட இதென்ன வம்பா இருக்கு..
நான் சொல்றது நிசம்...

கோகுல் + சூர்யா = கோகுலத்தில் சூரியன்..!! "

" கோகுலத்தில் சூரியனா..? அது என்ன
சார்..? "

" அது என்னவா..? அதான் என் Blog பேரு..! "

" ஐயோ..! அப்ப நீங்க பன்னிகுட்டி ராமசாமி
இல்லையா..? நான் அவருன்னு
நினைச்சில்ல இம்புட்டு நேரம் பேசிட்டு
இருக்கேன்.. !! "

" என்னாது....? பன்னிகுட்டி ராமசாமியா..?!!

கிர்ர்ர்ர்ர்ர்..!!!

இதுக்கு தான் நைட் 8 மணிக்கு மேல
மங்குனிகிட்ட நம்பர் வாங்காதீங்கன்னு
சொல்றது.....! "

( உஸ்ஸப்பா..., படுத்தறாங்களே...!!! )

சீக்ரெட் நெ : 3
இன்று பிறந்தநாள் காணும் VKS-ன்
மூத்த தலைவி அனு அவர்களை
வாழ்த்த வயதில்லை... வணங்குகிறோம்..!!

" பிறந்த நாள் வாழ்த்து பதிவு " போட
சொல்லி அனு கெஞ்சி கேட்டுக்
கொண்டாலும்..,

அதுக்கு நேரமில்லாத காரணத்தால்..
போன வருஷ பதிவையே அனைவரும்
படித்து குதூகலிக்குமாறு அன்போடு
கேட்டுக்கொள்கிறோம்.

. .

77 Comments:

வெங்கட் said...

@ VAS.,

இன்னிக்கு ஒரு வேலையா
நான் கோவை வரை போக வேண்டி
இருக்கு.. அதனால நம்ம Blog-ஐ
கொஞ்சம் கவனிச்சிக்கோங்கப்பா..!!

Mohamed Faaique said...

ஆஹா.... உங்க கடமை உணர்ச்சி என்ன கண் கலங்க வைக்குது பாஸ்

Mohamed Faaique said...

///" 2 மாசமா எங்கே போயிருந்தீங்க..?
என்ன பண்ணிட்டிருந்தீங்கன்னு.? "
மட்டும் யாரும் என்னை கேக்காதீங்க..///


அத நாங்க கேக்க மாட்டோம்.. எங்க கேள்வி, இப்போ ஏன் வந்தீங்க..??

Mohamed Faaique said...

///ஏன்னா.. அது எங்க Department Secret..!!////

ஆஹா... வந்த வேகத்துலயே மறுபடி புழுக ஆரம்பிச்சுட்டாரே!!!

//நான் ஒரு CBI Officer-ங்கறதையே
வெளியே சொல்லக் கூடாது..
///

ஆமா.. பொய் சொல்ரது கூடாதுதான்...

வைகை said...

ஏன்னா.. அது எங்க Department Secret..!!//

அடங்கொக்கமக்கா... இவ்ளோ நான் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்லதான் வேலை பார்க்கிறீங்களா? எடுபுடியா நீங்க? ஐயோ.. ஐயோ... :))

வைகை said...

வெங்கட் said...
@ VAS.,

இன்னிக்கு ஒரு வேலையா
நான் கோவை வரை போக வேண்டி
இருக்கு.. அதனால நம்ம Blog-ஐ
கொஞ்சம் கவனிச்சிக்கோங்கப்பா..!!//

இந்த ப்ளாக்க சும்மா கொடுத்தாவே ஒரு புள்ள சீன்டாதே? :))

வைகை said...

ஐயோ..! அப்ப நீங்க பன்னிகுட்டி ராமசாமி
இல்லையா..? நான் அவருன்னு
நினைச்சில்ல இம்புட்டு நேரம் பேசிட்டு
இருக்கேன்.. !! " //

அய்யய்யோ... நானும் இப்பிடி நினைச்சுதானே இவ்ளோ நேரம் இங்க கமென்ட் போட்டுக்கிட்டு இருக்கேன் :))

வைகை said...

@ அனு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Mohamed Faaique said...

///உங்க பதிவை எல்லாம் படிச்சா
என்னால சிரிப்பை Control பண்ணவே
முடியாது.. நாள் பூரா சிரிச்சிட்டே
இருப்பேன்..!///

உங்க போஸ்ட் படிச்சதால ஒருத்தருக்கு இவ்ளோ சீரியஸ் ஆகும்`னு நினைக்கவே இல்ல... மறுபடி சொல்றேன்.. உங்க ஒரு போஸ்ட் படிச்சா 10 விஜய் படம் பாத்த மாதிரி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ அனு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அனு பிறந்தநாளுக்கு முதல்நாள் ஏன் டாஸ்மாக் லீவ் விடுறாங்க? டவுட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் ஒரு CBI Officer-ங்கறதையே
வெளியே சொல்லக் கூடாது..//

ஏர்வாடி போயிட்டு வந்துமா உங்களுக்கு இன்னும் குணமாகலை?

வெளங்காதவன் said...

ஹி ஹி ஹி ஹி....

//இதுக்கு தான் நைட் 8 மணிக்கு மேல மங்குனிகிட்ட நம்பர் வாங்காதீங்கன்னு சொல்றது.....! "////

பிரிஞ்சிது.....
ஹி ஹி ஹி...
அந்த மனுஷன் போன எடுக்கவே மாட்டீங்குறாரு.......

வெளங்காதவன் said...

அனு ஆண்டி- ஹேப்பி பர்த் டே!

அனு said...

//நான் ஒரு CBI Officer-ங்கறதையே
வெளியே சொல்லக் கூடாது..//

ஆமா.. வெளிய சொன்னா உங்கள உள்ள புடிச்சு போட்டுவாங்கல்ல.. :)

என் பிறந்த நாள் அன்னைக்கு போஸ்ட் போடுவேன்னு கீழ உருண்டு புரண்டு அடம் பிடிச்சு அழுதீங்களே.. அத வெளில சொல்லலாம்ல..:)

ரசிகன் said...

VAS க்கு கத்தி,
VKS இன் சக்தி,
உலகப்ரசித்தி (சரி சரி பதிவுலகம்னு வச்சிகலாம்)
பெற்ற எங்கள் அனு,
வளமாக நலமாக பலமாக
பலகாலம் வாழ என் ப்ரார்த்தனைகள்.. :)

இம்சைஅரசன் பாபு.. said...

@ அனு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

அனு said...

வாழ்த்து சொன்ன வெங்கட், வைகை, ரமேஷ் மூணு பேருக்கும் ரொம்ப நன்றி.. :)

@ramesh

//அனு பிறந்தநாளுக்கு முதல்நாள் ஏன் டாஸ்மாக் லீவ் விடுறாங்க? //

அப்போ தானே டிமாண்ட் increase பண்ணி blackல விக்க முடியும்.. :)

Mohamed Faaique said...

///" ஐயோ..! அப்ப நீங்க பன்னிகுட்டி ராமசாமி
இல்லையா..? நான் அவருன்னு
நினைச்சில்ல இம்புட்டு நேரம் பேசிட்டு
இருக்கேன்.. !! " ///

உலக மகா பல்பு சார்...

//நான் உங்க Fan சார்..! உங்க
போஸ்ட் எல்லாம் ரெகுலரா
படிப்பேன்..!! ரொம்ப சூப்பரா
எழுதறீங்க.!///

இப்படி சொல்லும் போதே நீங்க அலார்ட் ஆகி இருக்கனும்..

NAAI-NAKKS said...

Post potta comedy-ya podanum..
Ippady ellam "SERIOUS" -a
podakkudathu !!!

Mohamed Faaique said...

//" ஓ.. அதுவா.. அது என் பசங்க பேரு..! "

" சார்ர்ர்ர்ர்ர்...!! தமாஷ் பண்ணாதீங்க..!
இப்படி எல்லாமா பசங்களுக்கு பெயர்
வெப்பாங்க..?? "///

பன்னிகுட்டி ராமசாமி`னு நெனச்சிடு பேசினவருக்கு உங்க பதிலை கேட்டதும் எப்படி இருந்திருக்கும்???? அய்யோ அய்யோ..

Mohamed Faaique said...

தலைவி அனு`விற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

அனு said...

@faaique

நன்றிகள் பல.. :)

ராஜி said...

நான் ஒரு CBI Officer-ங்கறதையே
வெளியே சொல்லக் கூடாது..

இதுல 2 மாசமா Spectrum Case-ல
துப்பறிஞ்சி பல உண்மைகளை
கண்டுபிடிச்சதை எப்படிங்க
வெளியே சொல்ல முடியும்..?!!
>>>>
அண்ட புளுகு ஆகாச புளுகு என்பது இதானா?

ராஜி said...

கணேஷ்கிட்ட செம பலப் போல. அதுசரி இதெல்லாம் உங்களுக்கு புதுசா

Sen22 said...

//" ஐயோ..! அப்ப நீங்க பன்னிகுட்டி ராமசாமி
இல்லையா..? நான் அவருன்னு
நினைச்சில்ல இம்புட்டு நேரம் பேசிட்டு
இருக்கேன்.. !! "//

:))) செம பல்பு சார்...

Happy B'day Anu...

பெசொவி said...

Happy Birthday, Anu!

சேலம் தேவா said...

தல ரிட்டர்ன்ஸ்...back...இன்னும் எது வேணா போட்டுக்கலாம்.அந்த ஸ்பெக்ட்ரம் கேஸ சீக்கிரம் முடிங்க தல... :)

@அனு பிறந்தநாள் வாழ்த்துகள்..!!

அனு said...

வாழ்த்து சொன்ன sen22, பெசொவி & தேவாவுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. :)

கோமாளி செல்வா said...

முதல்ல அனு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

எதிரியா இருந்தாலும் வாழ்த்து சொல்லனும்னு எங்க தல சொல்லிருக்காரு!

கோமாளி செல்வா said...

//இந்த ப்ளாக்க சும்மா கொடுத்தாவே ஒரு புள்ள சீன்டாதே? :))//

உண்மைதான் . ஆனா அதுக்கு காரணம் இருக்கு. இந்த ப்ளாக்க உலகத்துல இருக்கிற எல்லோருமே ஒரு நாளைக்கு பத்து தடவ வந்து பார்த்துட்டுப் போறாங்க.

ஒரு சமயம் கூகிள் காரங்களே அவுங்களோட சர்வர் பொகைஞ்சு போனதுக்கு இந்த ப்ளாக்கத்தான் காரணமா சொன்னாங்க. அவ்ளோ பேர் பாக்குற ஒரு வெப்ஸைட்ட மெயிண்டெய்ன் பண்ணுறது அவ்ளோ சுலபமில்லை. அதனாலதான் வேண்டாம்னு சொல்லுறது.

கோமாளி செல்வா said...

இங்க எங்க தல எழுதிருக்கிற Spectrum கேஸு புழுகுனு ஏன் சொல்லுறீங்கனு தெரியுது.. அவர் சொல்லுற Spectrum case பூமில நடந்தது இல்ல. அது செவ்வாய் கிரகத்துல நடந்தது. செவ்வாய்ல மனுசங்க இருக்காங்களான்னு உங்களுக்கு குழப்பமா இருக்கலாம். இருக்காங்க. அது எங்களோட VAS அறிஞர்களுக்கு மட்டும்தான் தெரியும். அங்க எதாச்சும் பிரச்சினைனாலும் எங்க தலதான் போய் தீர்த்து வெச்சிட்டு வருவாரு..

இப்பவாச்சும் புரிஞ்சதா.. இனிமேலாச்சும் VAS வாழ்கனு சொல்லிப்பழகுங்க :))

"என் ராஜபாட்டை"- ராஜா said...

கொன்னுடிங்க ... வாங்க ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்
நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

ஹா ஹா ஹா

முடியல வயிறு வலிக்குது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஏன்னா.. அது எங்க Department Secret..!!/////

என்ன இப்போ மாடு மேய்க்கறதுலாம் கூட சீக்ரெட் மேட்டராக்கிட்டாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நான் ஒரு CBI Officer-ங்கறதையே
வெளியே சொல்லக் கூடாது..//////

சொன்னா திருடனுங்க வந்து தூக்கிட்டு போய்டுவானுங்கன்னு பயமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இதுல 2 மாசமா Spectrum Case-ல
துப்பறிஞ்சி பல உண்மைகளை
கண்டுபிடிச்சதை எப்படிங்க
வெளியே சொல்ல முடியும்..?!!///////

சொன்னா மொதல்ல நீங்கதானே உள்ள இருப்பீங்க சிபிஐன்னு சொல்லி ஏமாத்துனார்னு........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////
" என் பெயர் கணேஷ் சார்..!
ஊரு சென்னை..! மங்குனி சார்
தான் உங்க நம்பர் குடுத்தாரு.. "
//////

இதுல மங்குனி வேறயா? அவருக்கு எவ்ளோ கொடுத்து வெச்சிருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////" ஐயோ..! அப்ப நீங்க பன்னிகுட்டி ராமசாமி
இல்லையா..? நான் அவருன்னு
நினைச்சில்ல இம்புட்டு நேரம் பேசிட்டு
இருக்கேன்.. !! "////////

யோவ் என்னோட ரசிகர்கிட்ட நீங்க பேசி டேமேஜ் பண்ணி இருக்கீங்க, இதுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி வரும் ஆமா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இதுக்கு தான் நைட் 8 மணிக்கு மேல மங்குனிகிட்ட நம்பர் வாங்காதீங்கன்னு சொல்றது.....! "//////

ஏன் எட்டுமணிக்கு மேலதான் அவர் நிதானமா இருப்பாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சீக்ரெட் நெ : 3 இன்று பிறந்தநாள் காணும் VKS-ன்
மூத்த தலைவி அனு அவர்களை
வாழ்த்த வயதில்லை... வணங்குகிறோம்..!!///////

அவங்களுக்கு இன்னிக்கு பிறந்தநாளுங்கறது சீக்ரெட்டா இல்ல, அவங்கதான் VKS மூத்த தலைவிங்கறது சீக்ரெட்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அதுக்கு நேரமில்லாத காரணத்தால்..
போன வருஷ பதிவையே அனைவரும்
படித்து குதூகலிக்குமாறு அன்போடு
கேட்டுக்கொள்கிறோம்.//////

அப்போ அடுத்த வருசமும் அதுதானா?

MANO நாஞ்சில் மனோ said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

MANO நாஞ்சில் மனோ said...

மங்குணியை இன்னும் காணலை????

samhitha said...

happy b'day anu :)
may god bless u with health and wealth

boss welcome to ur blog :P
boss neenga apdi velai senjadhaala dhaan ipo mukkiya pramugargal ellam maaturaangala :)

//பன்னிகுட்டி ராமசாமி`னு நெனச்சிடு பேசினவருக்கு உங்க பதிலை கேட்டதும் எப்படி இருந்திருக்கும்???? அய்யோ அய்யோ..//
ha ha :D sema shk-a irundhirukkum

சிவசங்கர். said...

ஆண்டிக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்!

ஆமா, இந்த பிளாக் ஓனர் யாருப்பா?

ஜெகன் said...

@வெங்கட்:
//இன்னிக்கு ஒரு வேலையா
நான் கோவை வரை போக வேண்டி
இருக்கு..//


இப்ப அங்க மாத்திட்டாங்களா, எப்ப விடுவாங்களாம்?

ஜெகன் said...

@அனு:

My "latest" birthday wishes! :)

அனு said...

@செல்வா

எதிர்க்கட்சியா இருந்தாலும் வாழ்த்தை ஏத்துக்கனும் என்பதால், நன்றி தம்பி.. :)

@ராம்ஸ்
கருமமே கண்ணாக கும்மியை மட்டும் தெளிவா செஞ்சுட்டு, வாழ்த்து சொல்லாம போன உங்களுக்கு #@$%$#@%$#%கள்!! :)

அனு said...

@நாஞ்சில் மனோ
ரொம்ப நன்றிங்க.. :)

@samhita
Thank you very much.. :)

@சிவசங்கர்

தேங்க்ஸ் தாத்தா.. :)

@ஜெகன்

லேட்டா வந்ததுமில்லாம பில்ட் அப் வேற?? தேங்க் யூ.. :)

வெங்கட் said...

@ ஆல்.,
காலாண்டு விடுமுறைக்காக தங்கை வீட்டிற்கு
வந்து இருப்பதால்.. ஊரை சுற்றவே நேரம்
சரியா இருக்கு.. லேப்டாப் பக்கமே என்னை
விட மாட்டேங்குறாங்க.. அதனால் தான் யாருக்கும்
பதில் போட முடியவில்லை.. இன்று இரவு
ஊருக்கு வந்து பதில் கமெண்ட்ஸ் போடுகிறேன்..

:)

£€k#@ said...

//காலாண்டு விடுமுறைக்காக தங்கை வீட்டிற்கு
வந்து இருப்பதால்//
யாருக்குனு தெளிவா போடுங்க வெங்கட்..
அப்புறம் நீங்க இன்னும் ஸ்கூலே முடிக்கலயானு கேட்க போறாங்க :D

ஜெகன் said...

@Lekha

Please see the title of the post again.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அனு said...
@ராம்ஸ்
கருமமே கண்ணாக கும்மியை மட்டும் தெளிவா செஞ்சுட்டு, வாழ்த்து சொல்லாம போன உங்களுக்கு #@$%$#@%$#%கள்!! :)////

பஸ்ல வாழ்த்துச் சொன்னதுக்கே ட்ரீட் எதுவும் வரப்போறதில்ல, சரி இங்கயும் எதுக்கு ஒரு வாழ்த்தை வெஸ்ட் பண்ணனுமேன்னுதான்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெங்கட் said...
@ ஆல்.,
காலாண்டு விடுமுறைக்காக தங்கை வீட்டிற்கு
வந்து இருப்பதால்.. ஊரை சுற்றவே நேரம்
சரியா இருக்கு.. லேப்டாப் பக்கமே என்னை
விட மாட்டேங்குறாங்க.. அதனால் தான் யாருக்கும்
பதில் போட முடியவில்லை.. இன்று இரவு
ஊருக்கு வந்து பதில் கமெண்ட்ஸ் போடுகிறேன்..

:)////////


விட்டா அந்த காலாண்டுத்தேர்வே நீங்கதான் நடத்துனீங்கன்னும் சொல்லுவீங்க போல இருக்கே....

அனு said...

@ராம்ஸ்

க்க்ர்ர்ர்.. உங்கள் பிறந்த நாளுக்கு நான் சொன்ன வாழ்த்தைத் திருப்பி கொடுக்கவும்.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அனு said...
@ராம்ஸ்

க்க்ர்ர்ர்.. உங்கள் பிறந்த நாளுக்கு நான் சொன்ன வாழ்த்தைத் திருப்பி கொடுக்கவும்.. :)/////////


ள்கக்துத்ழ்வா

கொடுத்தாச்சு கொடுத்தாச்சு....

ஜெகன் said...


அனு said...
வாழ்த்து சொல்லாம போன உங்களுக்கு #@$%$#@%$#%கள்!


இப்படியா உங்க paassword ஐ பப்ளிக்கா டைப் பண்றது?

பெசொவி said...

@Pannikutti Ramasamy
//ள்கக்துத்ழ்வா

கொடுத்தாச்சு கொடுத்தாச்சு....//

!LFOR

:))

பெசொவி said...

@ venkat
முக்கியமான சீக்ரெட் இது தான்:
பதிவு எழுதாம இருக்கும்போதுதான் தமிழ்மணத்துல ரேட்டிங் ஏறியது. அதுனாலதான் ரெண்டு மாசமா எதுவும் எழுதாம எட்டாவது இடத்துக்கு போனீங்க. இப்போ பாருங்க, எழுத ஆரம்பிச்சீங்க, ஒன்பதாவது இடத்துக்கு இறங்கிட்டீங்க!

பெசொவி said...

//மூத்த தலைவி அனு அவர்களை
வாழ்த்த வயதில்லை... வணங்குகிறோம்..!!//

அறிவிலும் ஆற்றலிலும் மூத்த தலைவி அப்படின்னு போட்டிருக்கணும், பாவம் விட்டு போச்சு போலிருக்கு!

ரசிகன் said...

@Venkat's Sister
//காலாண்டு விடுமுறைக்காக தங்கை வீட்டிற்கு
வந்து இருப்பதால்.. ஊரை சுற்றவே நேரம்
சரியா இருக்கு.. லேப்டாப் பக்கமே என்னை
விட மாட்டேங்குறாங்க.. அதனால் தான் யாருக்கும்
பதில் போட முடியவில்லை.. இன்று இரவு
ஊருக்கு வந்து பதில் கமெண்ட்ஸ் போடுகிறேன்.. //

ஏனுங்க.. Quarterly Leave atleast ஒரு வாரமாவது விடுவாங்கள்ல.. ரெண்டே நாள்ல உங்க அண்ணன‌ திருப்பி அனுப்பறீங்களே.. உங்களுக்கு கொஞ்சம் கூட சகோதர பாசமே இல்லயா.. இன்னும் 4 நாள் வச்சிருந்து அனுப்புங்க.. புண்ணியமா போகும்.. :)

வெங்கட் said...

@ Mohamed.,

// ஆஹா.... உங்க கடமை உணர்ச்சி
என்ன கண் கலங்க வைக்குது பாஸ் //

No.., No.. அழக்கூடாது.. நான்
என் கடமையை தானே செஞ்சேன்..!!

வெங்கட் said...

@ வைகை.,

// அய்யய்யோ... நானும் இப்பிடி
நினைச்சுதானே இவ்ளோ நேரம்
இங்க கமென்ட் போட்டுக்கிட்டு இருக்கேன் :))

3 October 2011 7:56 AM //

சிங்கப்பூர்ல எல்லாம் காலையில
8 மணிக்கேவா..??!!!

வெங்கட் said...

@ Mohamed.,

// உங்க போஸ்ட் படிச்சதால ஒருத்தருக்கு
இவ்ளோ சீரியஸ் ஆகும்`னு நினைக்கவே
இல்ல... மறுபடி சொல்றேன்.. உங்க ஒரு
போஸ்ட் படிச்சா 10 விஜய் படம் பாத்த மாதிரி.. //

இதுக்குதான் போஸ்ட்டை ஒழுங்கா
படிக்கணும்கறது..

அவர் சொன்னது பன்னிக்குட்டி பிளாக்
பத்தி.. அப்ப உங்க கமெண்ட்டும் அவர்
பிளாக் பத்தி தானே..?!!!

ஹி., ஹி., ஹி..!!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ஏர்வாடி போயிட்டு வந்துமா உங்களுக்கு
இன்னும் குணமாகலை? //

ஹி., ஹி., ஹி...!!!

என்னமோ உங்களுக்கு மட்டும்
குணமான மாதிரி பில்டப் குடுக்கறீங்க..?!

பொன். செந்தில்குமார் said...

இந்த வெங்கட்டோட அக்கப்போர எவ்ளோ நாளுக்குத்தான் பொறுத்துக்கிறது
பாவம் மங்குனி....மற்றும்...VKS நண்பர்கள் மனம் குளிர...விரைவில் எதிர்பாருங்கள்...என் பதிவை...
http://ponsenthilkumar.blogspot.com/

Madhavan Srinivasagopalan said...

போன் உரையாடல் சூப்பர்.. நல்ல யோசனை..

பொன். செந்தில்குமார் said...

@VKS & VAS

மங்குனி கடவுள்கிட்ட கேட்ட வரத்த பத்தி தெரிஞ்சிக்குனுமா....ஹி..ஹி..ஹி..
இங்கபோங்க......

http://ponsenthilkumar.blogspot.com/2011/10/blog-post_05.html

வெங்கட் said...

@ அனு.,

// என் பிறந்த நாள் அன்னைக்கு போஸ்ட்
போடுவேன்னு கீழ உருண்டு புரண்டு அடம்
பிடிச்சு அழுதீங்களே.. அத வெளில
சொல்லலாம்ல..:) //

யாரு அழுது., அடம் பிடிச்சது..?
நானா..?!!

// @ராம்ஸ்
கருமமே கண்ணாக கும்மியை மட்டும்
தெளிவா செஞ்சுட்டு, வாழ்த்து சொல்லாம
போன உங்களுக்கு #@$%$#@%$#%கள்!! :) //

ஒரு " ஹேப்பி பர்த் டே " வாழ்த்து சொல்லாம
போன நம்ம பன்னிகுட்டி ராம்ஸ்கிட்ட
கெஞ்சி அந்த வாழ்த்தை வாங்கறாங்க..

அப்படின்னா.. என்கிட்ட எப்படி அழுது
" பதிவு " போட சொல்லி கெஞ்சி
இருப்பாங்கன்னு நீங்களே கற்பனை
பண்ணிபாத்துக்கோங்க...

வெங்கட் said...

@ ரசிகன்.,

// VAS க்கு கத்தி //

ஆமா.. ரம்பம்., பிளேடு.,
ஆக்ஸா பிளேடு., இதெல்ல்லாம்
விட்டுட்டீங்க..

வெங்கட் said...

@ Mohamed.,

// இப்படி சொல்லும் போதே நீங்க
அலார்ட் ஆகி இருக்கனும்.. //

" மங்குனிகிட்ட நம்பர் வாங்கினேன்னு "
சொன்னப்பவே நான் அலார்ட் ஆகி
இருக்கணும்.. சே..! ஜஸ்ட் மிஸ்ஸு..!!

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// அந்த ஸ்பெக்ட்ரம் கேஸ சீக்கிரம்
முடிங்க தல... :) //

எங்கே முடிக்கிறது..?!! அதுக்குள்ள தான்
எனக்கு Promotion தந்து I.G ஆக்கிட்டாங்களே..!

" Promotion தர போறோம்.. I.G ஆகறீங்களா.?
D.I.G ஆகறீங்களான்னு.? " கேட்டாங்க..! .!!

நான் " D.I.G ஆகிக்கறேன்னு சொல்லிட்டேன்..! "

( I.G ரெண்டு எழுத்து., D.I.G மூனு எழுத்து..!!
அஸ்கு புஸ்கு யாரை ஏமாத்த பார்க்கறீங்க..?!)

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// யோவ் என்னோட ரசிகர்கிட்ட நீங்க
பேசி டேமேஜ் பண்ணி இருக்கீங்க,
இதுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி
வரும் ஆமா...... //

வேணும்னா என்னோட 2000 ரசிகர்களை
உங்க ப்ளாக்கை பாலோ பண்ண
சொல்லட்டுமா..?

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அப்போ அடுத்த வருசமும் அதுதானா? //

போன வருஷம் கொண்டாடின அதே
43வது பிறந்தநாளை அடுத்த வருஷமும்
கொண்டாடினா.. அடுத்த வருஷமும்
அதே தான்....

RAMVI said...

நல்வரவு..

வந்தவுடனேயே கலக்கா ஆரம்பிச்சுட்டீங்களே!