சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 October 2011

VKS... ஹேண்ட்ஸ் அப்..!வர வர எங்களை யாருக்குமே
தெரிய மாட்டேங்குதுன்னு
VKS Members எங்ககிட்ட ரொம்ப
பீல் பண்ணினதால..

அவர்களுக்காக அவர்களை பற்றிய
ஒரு சிறப்பு பதிவு..

VKS = எங்ககிட்ட அடி வாங்கறதுக்குன்னே
இருக்குற 6 பேர் கொண்ட ஒரு குழு..!

சிம்பிளா ஒரு லைன்ல சொல்லணும்னா..
VKS ஒரு " டம்மி பீஸ்...!! "

" வலிக்காத மாதிரியே நடிக்கும் "
அந்த 6 பேர்கள் இவிங்க தான்...

அனு : ( VKS தலைவலி.. சாரி தலைவி )
இவங்க தன்மான சிங்கம்..

தன் தகுதிக்கு ஏற்ப சம்பளம்
தர ஒரு கம்பெனி முன்வந்தும்,
அவ்ளோ 'சீப்'பான சம்பளத்துல
வேலை செய்ய மாட்டேன்னு
சொன்னவங்க..

ரமேஷ் :
இவர் இந்த நாட்டில் தான் பிறந்தார்..

இது மாதிரி கொடூரமான நிகழ்ச்சிகள்
வேற நாடுகள்லயும் நடக்கறது உண்டு..!

ரசிகன் :
இவருக்கு சங்கீதம் ரொம்பவே ஸ்பெஷல்..

இவர் சங்கீதம் கத்துக்க நிறைய
செலவு ஆச்சாம்..
( பக்கத்து வீட்டுக்காரங்க இவங்க அப்பா
மேல கேஸ் போட்டதால.. )

அருண் :
இவரால நிறைய பிக்பாக்கெட்ஸ்
திருந்தி இருக்காங்க..

இவர்கிட்ட எத்தனை தடவை
பிக்பாக்கெட் அடிச்சாலும்., வெறும்
Training மட்டும் தான் கிடைக்குமாம்..!

பெ.சொ.வி :
இவர் ஒரு " ஜென்டில்மேன் "...

ATM -ல பணம் எடுக்கும் போது கூட
அந்த Machine-க்கு " Thanks " சொல்லிட்டு
தான் வருவாருன்னா பாருங்களேன்..!

கார்த்தி :
இவருக்கு கம்ப்யூட்டர் மைண்ட்..

இவரை சொந்தமா யோசிக்க
வைக்க இப்போ நிறைய பேர்
Try பண்ணிட்டு இருக்காங்க..
.
.

74 Comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஏ யப்பா முடியல போங்க....

MANO நாஞ்சில் மனோ said...

யாருலேய் அது பூனையை சுடுறது, மேனகா பூந்தி'கிட்டே பிடிச்சு குடுத்துருவேன்...

வெங்கட் said...

@ மனோ.,

// யாருலேய் அது பூனையை சுடுறது,
மேனகா பூந்தி'கிட்டே பிடிச்சு குடுத்துருவேன்... //

ஹி., ஹி., ஹி...!!
அது தீபாவளி துப்பாக்கி சார்..

நியாயமா பாத்தா VKS-க்கு எலி
போட்டோ தான் போட்டு இருக்கணும்..
அவங்க அதிர்ஷ்டம் நான் தேடினப்ப
அது கிடைக்கல..!

Mohamed Faaique said...

///வர வர எங்களை யாருக்குமே
தெரிய மாட்டேங்குதுன்னு////

ஒரு வேல திரும்பி போகும் போது தெரிவாங்களோ!!!

Mohamed Faaique said...

///VKS Members எங்ககிட்ட ரொம்ப
பீல் பண்ணினதால..///

அவங்க (நாங்க...) போடுர கொம்மண்டுல நீங்கதானே ஃபீல் பண்ணி 2 மாசமா, பதிவுலக பக்கமே வரல்ல.. இனிமே கும்ம மாட்டோம்’னு ஆறுதல் சொல்லி எங்க டைம் பாஸ்’க்காக கூட்டி வந்தா மறுபடி வாலாட்டுரீங்களே!!!...

Mohamed Faaique said...

///அவர்களுக்காக அவர்களை பற்றிய
ஒரு சிறப்பு பதிவு..
///

ஒவ்வொரு முறையும் ஏதாவது சிறப்பு பதிவுதான் போட்ரீங்க.. பட், வழமை போல மொக்கையாத்தான் இருக்கு...

Mohamed Faaique said...

///சிம்பிளா ஒரு லைன்ல சொல்லணும்னா..
VKS ஒரு " டம்மி பீஸ்...!! "///

ஆனா,... அவங்க குடுக்குர அடி ஒவ்வொன்னும் அம்மி மாதிரி..அப்டித்தானே!!!!

Mohamed Faaique said...

//
கார்த்தி :
இவருக்கு கம்ப்யூட்டர் மைண்ட்..

இவரை சொந்தமா யோசிக்க
வைக்க இப்போ நிறைய பேர்
Try பண்ணிட்டு இருக்காங்க..///

அந்த நிறைய பேருல நீங்க இருக்க மாட்டீங்க.. ஏன்னா, அவரால உங்களுக்கு ஏற்கனவே சேதாரம் ரொம்ப ஜாஸ்தி...

Mohamed Faaique said...

///அருண் :
இவரால நிறைய பிக்பாக்கெட்ஸ்
திருந்தி இருக்காங்க..

இவர்கிட்ட எத்தனை தடவை
பிக்பாக்கெட் அடிச்சாலும்., வெறும்
Training மட்டும் தான் கிடைக்குமாம்..!///

அவர் ஏர்போர்ட்’அ அடையும் போதே அவர்கிட்ட போய் கடன் கேட்பீங்க..அவர் ஒரு தர்ம பிரபு....

Mohamed Faaique said...

///பெ.சொ.வி :
இவர் ஒரு " ஜென்டில்மேன் "...

ATM -ல பணம் எடுக்கும் போது கூட
அந்த Machine-க்கு " Thanks " சொல்லிட்டு
தான் வருவாருன்னா பாருங்களேன்..!///

பெயெரையே பெயர் சொல்ல விருப்பமில்ல’னு வச்சிருக்காரு பாருங்க... அதுதான்ப்பா தன்னடக்கம்... அவர்கிட்ட VAS’க்கு கிளாஸ் எடுக்க சொல்லனும்...

Mohamed Faaique said...

//ரமேஷ் :
இவர் இந்த நாட்டில் தான் பிறந்தார்..

இது மாதிரி கொடூரமான நிகழ்ச்சிகள்
வேற நாடுகள்லயும் நடக்கறது உண்டு..!
////

சேலத்துல இத விட கொரூரமான ஒரு சம்பவம் நடந்ததா கேள்விப்பட்டிருக்கேன்..

வெங்கட் said...

@ Mohamed.,

// அவங்க (நாங்க...) போடுர கொம்மண்டுல
நீங்கதானே ஃபீல் பண்ணி 2 மாசமா,
பதிவுலக பக்கமே வரல்ல.. //

ஹலோ... நம்மள பத்தி வெளில
விசாரிச்சு பாருங்க..எவ்ளோ பெரிய
ரவுடின்னு அப்ப தெரியும்..

இப்பல்லாம் தினமும் யாரையாச்சும்
கும்மலன்னா தூக்கமே வர மாட்டேங்குது..!

Anonymous said...

ஆமா பன்னிகுட்டி அண்ணே VKSஆ இல்ல VASஆ?
அப்புறம் பெ.சொ.வி மாதிரி ஒரு ஜென்டில்மேன பத்தி நா கேள்வி பட்டதே இல்லப்பா...

வெங்கட் said...

@ Mohamed.,

// சேலத்துல இத விட கொரூரமான
ஒரு சம்பவம் நடந்ததா கேள்விப்பட்டிருக்கேன்..//

ஹலோ ரசிகன்.......
நீங்க சேலத்துல பிறந்த விஷயம்
இவருக்கு எப்படியோ தெரிஞ்சி இருக்கு..!

வெங்கட் said...

@ Mohamed.,

// அந்த நிறைய பேருல நீங்க
இருக்க மாட்டீங்க...//

கண்டிப்பா... நடைமுறை சாத்தியமில்லாத
விஷயங்கள்ல நான் என்னிக்கும்
என் நேரத்தை வேஸ்ட் பண்றது இல்ல..!

அருண் பிரசாத் said...

ஒரு பூனைக்கு துப்பாக்கி காட்டுற வீரம் VASக்கு மட்டும்தான் வரும்....

ரொம்ப தைரியசாலி சார் நீங்க....

அருண் பிரசாத் said...

அநியாயம்...
அக்கிரமம்....
அராஜகம்...

வெங்கட் பிளாக்ல மாடரேஷனை யாரோ சுட்டுட்டாங்க....

இந்த வருஷமும் தீபாவளி வரைக்கும் மழைதான் போல....

வெங்கட் said...

@ Mohamed.,

// ஒவ்வொரு முறையும் ஏதாவது
சிறப்பு பதிவுதான் போட்ரீங்க.. பட்,
வழமை போல மொக்கையாத்தான் இருக்கு.../

சிக்கன் பிரியாணில சிக்கன் இருக்கும்.,
மட்டன் பிரியாணில மட்டன் இருக்கும்.,
அது மாதிரி
VKS பத்தி எழுதினா அது மொக்கையா
தானே இருக்கும்..!

வெங்கட் said...

@ மொக்கராசு..,

// ஆமா பன்னிகுட்டி அண்ணே
VKSஆ இல்ல VASஆ? //

இப்ப எதுக்கு அவரை இங்கே
கோத்து விடறீங்க..? அவரு
ரேஞ்சே வேற..

ஹி., ஹி., ஹி...!!

// அப்புறம் பெ.சொ.வி மாதிரி
ஒரு ஜென்டில்மேன பத்தி நா
கேள்வி பட்டதே இல்லப்பா... //

அதனால தான் சொல்றேன்..

வேணும்னா அவர் ப்ளாக் அட்ரஸ்
தர்றேன்.. நல்லா நோட் பண்ணி
வெச்சுக்கோங்க.. தப்பித் தவறி கூட
அந்த பக்கம் போயிடாதீங்க..

பெ.சொ.வி ப்ளாக்

வெங்கட் said...

@ அருண்.,

// ஒரு பூனைக்கு துப்பாக்கி காட்டுற
வீரம் VASக்கு மட்டும்தான் வரும்....
ரொம்ப தைரியசாலி சார் நீங்க.... //

ஹலோ.. யாரை பாத்து..

" புலி பக்கத்துல உக்காந்து
புல் மீல்ஸ் சாபிடறவங்க
நாங்க..!! "

( இது பஞ்ச் டயலாக் என்பதால்..
" புலியை " " புளின்னு " மாத்தி
கமெண்ட் போடுவது தடை செய்யப்படுகிறது..! )

வெளங்காதவன் said...

//
இப்பல்லாம் தினமும் யாரையாச்சும்
கும்மலன்னா தூக்கமே வர மாட்டேங்குது..! ////

இது தங்களின் எதேச்சதிகார மனப் பான்மையைக் காட்டுகிறது!(கருத்து உதவி- நாகராஜசோழன், எம்.ஏ., எம்.எல்.ஏ.)

வெளங்காதவன் said...

இனிமே நம்ம கமெண்டு நீங்களா ஸ்பேம் பண்ணுற வரைக்கும் அங்க போகாது மை லார்ட்!

வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// இது தங்களின் எதேச்சதிகார
மனப்பான்மையைக் காட்டுகிறது!
(கருத்து உதவி- நாகராஜசோழன்,
எம்.ஏ., எம்.எல்.ஏ.) //

ஓ.. மை காட்..! என்ன இது..?

ஒருவேளை கொஞ்ச நாள் அங்கே
இருந்தோமே..அந்த பழக்க தோஷமா
இருக்குமோ..?!!

:-)

* இங்கே.. நான் " அங்கே " என்று
சொன்னதை எங்கே என்று தெளிவாக
புரிந்து கொள்ளவும்..!

Madhavan Srinivasagopalan said...

இது ஒரு தொடர் பதிவுதான ?
பின்ன என்னங்க, நாட்டுல எவ்ளோ VKS இருக்காங்க. அவங்க எல்லாரையும் பத்தி எழுதவேனாமா ?

வெளங்காதவன் said...

//வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// இது தங்களின் எதேச்சதிகார
மனப்பான்மையைக் காட்டுகிறது!
(கருத்து உதவி- நாகராஜசோழன்,
எம்.ஏ., எம்.எல்.ஏ.) //

ஓ.. மை காட்..! என்ன இது..?

ஒருவேளை கொஞ்ச நாள் அங்கே
இருந்தோமே..அந்த பழக்க தோஷமா
இருக்குமோ..?!!

:-)

* இங்கே.. நான் " அங்கே " என்று
சொன்னதை எங்கே என்று தெளிவாக
புரிந்து கொள்ளவும்..!///
வெளங்கிடுச்சு!

Mohamed Faaique said...

///:-)

* இங்கே.. நான் " அங்கே " என்று
சொன்னதை எங்கே என்று தெளிவாக
புரிந்து கொள்ளவும்..!///
வெளங்கிடுச்சு! ///

வெளங்காதவனுக்கே வெளங்க வச்ச VAS தலைவர் வெங்கட் வாழ்க....

பெசொவி said...

//நியாயமா பாத்தா VKS-க்கு எலி
போட்டோ தான் போட்டு இருக்கணும்..
அவங்க அதிர்ஷ்டம் நான் தேடினப்ப
அது கிடைக்கல..! //

You could have used your photo, oh, sorry! don't use your photo for two reasons,
(1) Babies may be freightened to see it
(2) The all-world mouse association may file a suit against you.
:))

பெசொவி said...

//ATM -ல பணம் எடுக்கும் போது கூட
அந்த Machine-க்கு " Thanks " சொல்லிட்டு
தான் வருவாருன்னா பாருங்களேன்..!//

ஆனாலும் உங்க அளவுக்கு தேங்க்ஸ் சொல்ல எனக்கு தெரியாது, வெங்கட்!
நீங்க ATM=லேர்ந்து பணம் எடுத்ததும் அந்த டெபிட் கார்ட் ஓனருக்கும் சேர்த்து தேங்க்ஸ் சொல்வீங்களே, அதை சொன்னேன்!
(என்னிக்கு உங்க சொந்த டெபிட் கார்ட்லேர்ந்து பணம் எடுத்திருக்கீங்க?)

பெசொவி said...

பதிவு போட மெசேஜே இல்லை, உங்க குழு பத்தி எழுதினா ஒரு போஸ்டும் தேத்திடுவேன், டெபனட்டா, அது ஹிட்டும் ஆகும், தயவு செஞ்சு allow பண்ணுங்கன்னு என்கிட்டே நேத்திக்கு கெஞ்சினீங்களே, அதைப் பத்தி இங்கே எழுதறது அவ்வளவு நல்லா இருக்காது, அதுனால நான் எதுவும் சொல்லமாட்டேன்.

பெசொவி said...

//அவர்களுக்காக அவர்களை பற்றிய
ஒரு சிறப்பு பதிவு..//

எங்களைப் பத்தி எழுதினாலே அது சிறப்பு பதிவுதான், அதை நீங்க சொல்லித்தான் தெரியனுமா, என்ன?

பெசொவி said...

@venkat
//அனு : ( VKS தலைவலி.. சாரி தலைவி )//

உண்மைய சொல்லுங்க, VAS தலைவலின்னு தானே எழுத வந்தீங்க?

பெசொவி said...

//இவர் சங்கீதம் கத்துக்க நிறைய
செலவு ஆச்சாம்..//

செலவே இல்லாம சந்கீதம் கத்துத் தர்றேன்னு எல்லாரையும் கூப்பிட்டு, அப்புறம் "சொல்லுங்க, ச......ங்......கீ....த....ம்.....சங்கீதம், பாத்தீங்களா, சங்கீதம் கத்துக் குடுத்துட்டேன்"னு நீங்க பெருமையா சொல்லி எல்லார்கிட்டயும் தர்ம அடி வாங்கிக்கிட்டீங்களே, அதைப் பத்தி ஏன் சொல்லவே இல்லை.

பெசொவி said...

@ venkat
நீங்க இப்படி ஒரு பதிவு போடறீங்க. ஆனா, Oxford Dictionary போடறவங்ககிட்ட விசாரிச்சா, WASTE-ங்கறதை VASTE-னு மாத்தி பிரிண்ட் போடப் போறதா நான் கேள்விப்பட்டேனே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன சத்தம் சத்தம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருவழியா பூனை வெளியே வந்துடுச்சு, ஆனா அதப் போயி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ் :
இவர் இந்த நாட்டில் தான் பிறந்தார்..//////

ஆச்சர்யமா இருக்கே, எல்லாரும் ஆஸ்பத்திரிலதானே பொறப்பாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அருண் :
இவரால நிறைய பிக்பாக்கெட்ஸ்
திருந்தி இருக்காங்க../////

இவரு அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இவர்கிட்ட எத்தனை தடவை
பிக்பாக்கெட் அடிச்சாலும்., வெறும்
Training மட்டும் தான் கிடைக்குமாம்..!//////

அது என்ன ட்ரைனிங்னு சொல்லவே இல்லியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பெ.சொ.வி :
இவர் ஒரு " ஜென்டில்மேன் "...
//////

பார்ட் டூவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கார்த்தி :
இவருக்கு கம்ப்யூட்டர் மைண்ட்../////

அப்போ பவர் இல்லேன்னா ஷட் டவுன் ஆகிடுவாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இவரை சொந்தமா யோசிக்க
வைக்க இப்போ நிறைய பேர்
Try பண்ணிட்டு இருக்காங்க../////

(a+b = b+a) = (b+a=a+b) இந்த ஃபார்முலாவ அவர் கம்ப்யூட்டர் மைண்ட்ல லோட் பண்ணுங்க.... அப்புறம் பாருங்க....

துணிந்து சொல்பவன் said...

//சிக்கன் பிரியாணில சிக்கன் இருக்கும்.,
மட்டன் பிரியாணில மட்டன் இருக்கும்.,//

அப்போ மைசூர் பாக்குல மைசூர் இருக்குமா, இல்லை பாக்குதான் இருக்குமா?

துணிந்து சொல்பவன் said...

@பெ.சொ.வி
//VASTE-னு மாத்தி பிரிண்ட் போடப் போறதா நான் கேள்விப்பட்டேனே!//

அப்போ VAS + தூ தான் வாஸ்துவா?

ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் said...

வித் யூவர் கைண்ட் பெர்மிசன்...மே ஐ ஜாய்ன் வித் VKS...பிகாஸ்...அங்கே 6 அறிவாளிகள் மட்டும்தான் இருக்காங்க...ஏழாம் அறிவா மீ டூ ஜாய்ன் வித் தேர்....

வெற்றி...வெற்றி...
ஹி..ஹி..ஹி....

தமிழ்மணத்துல இருந்து என்னோட ப்ளாக்க தூக்கிட்டாங்களே....

ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் said...

\\VKS = Venkat-ஐ கலாய்போர் சங்கம்
( சரியான அக்கப்போர் சங்கம் )

Members : அனு, ரமேஷ், ரசிகன்,
அருண், பெ.சொ.வி & கார்த்தி
( Admission Closed )//

என்ன Admission Close ஆ...இந்த ஏமராமன்னனுக்கே அட்மிசன் இல்லையா... நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு...எப்படியா ...இதோ இப்பிடி..

Members : அனு, ரமேஷ், ரசிகன்,
அருண், பெ.சொ.வி, கார்த்தி & ஏமரா மன்னன் பொ.செ.கு

ஹி...ஹி...ஹி..

வெங்கட் said...

@ மாதவன்.,

// இது ஒரு தொடர் பதிவுதான ?
பின்ன என்னங்க, நாட்டுல எவ்ளோ
VKS இருக்காங்க. //

ஹையோ மாதவன்... அவங்க
எல்லாம் VKS மாதிரி நடிச்சிட்டு
இருக்கிற நம்ம உளவாளிங்க..!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// You could have used your photo, oh, sorry!
don't use your photo for two reasons,
(1) Babies may be freightened to see it
(2) The all-world mouse association may file a suit against you.
:)) //

இங்கிலிபீசு...!!

பெரிய " தமிழ்மணம் " நிர்வாகின்னு
நினைப்பா..?!!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நீங்க ATM=லேர்ந்து பணம் எடுத்ததும்
அந்த டெபிட் கார்ட் ஓனருக்கும் சேர்த்து
தேங்க்ஸ் சொல்வீங்களே, //

ATM Card எப்படி Use பண்றதுன்னு
தெரியாம என்னை கூப்பிட்டு...
பணம் எடுத்து தர சொன்னீங்க...
சரின்னு நானும் பணம் எடுத்து குடுத்தேன்..

அதுக்காக எனக்கு 100 ரூபா
அன்பளிப்பா தந்தீங்க.. அதுக்கு
நான் Thanks சொன்னேன்.. இது தப்பா.!?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கார்த்தி :
இவருக்கு கம்ப்யூட்டர் மைண்ட்../////

அப்போ பவர் இல்லேன்னா ஷட் டவுன் ஆகிடுவாரோ?//

UPS Use பண்ணுவாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஊர் புல்லா போய் அடிவாங்கும் அப்பாட்டக்கர் வெங்கட் வாழ்க

ரசிகன் said...

//இவருக்கு சங்கீதம் ரொம்பவே ஸ்பெஷல்..//
யெஸ் யெஸ்..
நான் மட்டும் மௌன ராகத்துல பாட ஆரம்பிச்சா நாள் பூரா கேக்கலாம்.. :)

ரசிகன் said...

//( பக்கத்து வீட்டுக்காரங்க இவங்க அப்பா
மேல கேஸ் போட்டதால.. )//

ஹ்ம்ம்ம்... என் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு எனக்கு சங்கீதம் தெரியாதது ப்ரச்சன..
உங்க பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு உங்களுக்கு இங்கிதம் தெரியாதது ப்ரச்சன..
ஒவ்வொரு பக்கத்துவீட்டுக்காரனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்க்க்... :(

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// உண்மைய சொல்லுங்க,
VAS தலைவலின்னு தானே எழுத வந்தீங்க? //

எப்படியோ " அனு " வை தலைவலின்னு
ஒத்துகிட்டீங்க.. அது போதும்..

இடது பக்கம் வலிச்சா என்ன.?
வலது பக்கம் வலிச்சா என்ன..?
தலைவலி தலைவலிதானே..!

பெசொவி said...

//வெங்கட் said...

எப்படியோ " அனு " வை தலைவலின்னு
ஒத்துகிட்டீங்க.. அது போதும்..

இடது பக்கம் வலிச்சா என்ன.?
வலது பக்கம் வலிச்சா என்ன..?
தலைவலி தலைவலிதானே..!//

இந்த திசை திருப்பல் வேலை எல்லாம் வேண்டாம். அனு VKS-க்கு தலைவி, VAS-க்கு தலைவலி, அதான் நான் சொன்னது.

பெசொவி said...

//வெங்கட் said...

பெரிய " தமிழ்மணம் " நிர்வாகின்னு
நினைப்பா..?!!!//

உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி!
:))

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// ஒரு வழியா பூனை வெளியே
வந்துடுச்சு, ஆனா அதப் போயி? //

ஹி., ஹி., ஹி...
சும்மா ஒரு ஷாக் Treatment...!

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// இவரு அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா...? //

இல்ல ( காலி ) டப்பாடக்கரு.!

ரசிகன் said...

//// சேலத்துல இத விட கொரூரமான
ஒரு சம்பவம் நடந்ததா கேள்விப்பட்டிருக்கேன்..//

ஹலோ ரசிகன்.......
நீங்க சேலத்துல பிறந்த விஷயம்
இவருக்கு எப்படியோ தெரிஞ்சி இருக்கு..!
//

ஆமா.. கம்சன் பிறந்த நாட்டில் தான் பின்னாடி கண்ணன் பிறந்தான்..
உங்களுக்கு அப்புறம் சேலத்தில நான் பிறந்தேன்..
எல்லாம் விதி... :)

£€k#@ said...

:D :D :D

ராஜி said...

இது தொடருமா? இல்லை முடிஞ்சுடுச்சா?

பெசொவி said...

//ராஜி said...

இது தொடருமா? இல்லை முடிஞ்சுடுச்சா? //

The members of VKS are equal to the number of stars in the sky. So, even if Venkat wants to finish this post, it is not practically possible.
:))

Vinodhini said...

சிரிப்பு தாங்க முடியல்ல, உங்களால மட்டும் எப்படி இப்படி???????

பெசொவி said...

@ Vinodhini
என்ன அப்படி சொல்லிட்டீங்க, மக்களை சிரிக்க வைக்கணும்ங்கற ஒரே காரணத்துக்குகாக பிறந்ததிலிருந்தே போய் சொல்ற ஒரே ஆளு நம்ம வெங்கட் தான்!

ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் said...

@ பொ.சொ.வி.
//பிறந்ததிலிருந்தே போய் சொல்ற ஒரே ஆளு//

அப்படியா போய்... பொய் சொல்வாரோ

பெசொவி said...

//ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் said...
@ பொ.சொ.வி.
//பிறந்ததிலிருந்தே போய் சொல்ற ஒரே ஆளு//

அப்படியா போய்... பொய் சொல்வாரோ

//

ஹிஹி அது போய் இல்ல, பொய்

By the way, பொ.சொ.வி no, it is பெ.சொ.வி :))

ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் said...

@ பெசொவி

சாரி ஃபார் எழுத்துப்பிழை இன் யுவர் பெயர்...அப்படி ஒருக்கா நம்ம வீட்டுக்கு வந்து கருத்து போடறது...

samhitha said...

// பிறந்ததிலிருந்தே பொய் சொல்ற ஒரே ஆளு நம்ம வெங்கட் தான்!//

அனு : இவங்க தன்மான சிங்கம்..

அருண் : இவரால நிறைய பிக்பாக்கெட்ஸ்
திருந்தி இருக்காங்க..


பெ.சொ.வி : இவர் ஒரு " ஜென்டில்மேன் "...

கார்த்தி : இவருக்கு கம்ப்யூட்டர் மைண்ட்..

அப்டி போடுங்க அப்போ இது எல்லாம் உண்மை இல்லையா?
அப்போ நீங்க கண்டிப்பா பொசொவி தான்[பொய் சொல்ல விருப்பமில்லை ;)]
VKS பத்தி மக்களுக்கு இப்போ நல்லா தெரிஞ்சிருக்கும் :D

பெசொவி said...

@ Samhitha

ROFL!

பி.கு. மாற்றான் தொட்டது மல்லிகையும் மணக்கும் :))

வெங்கட் said...

@ ராஜி.,

// இது தொடருமா? இல்லை முடிஞ்சுடுச்சா? //

மொத்த VKS-ன் கேம் ஓவர்..!

வெங்கட் said...

@ வினோதினி.,

// சிரிப்பு தாங்க முடியல்ல, உங்களால மட்டும் எப்படி இப்படி??????? //

அமைதியா இருக்கும் போது மனசுல
VKS-ஐ நினைச்சா.. இதெல்லாம்
தானா ( பத்திட்டு ) வருது..!

வெங்கட் said...

@ ஏமரா மன்னன்.,

// என்ன Admission Close ஆ...இந்த ஏமராமன்னனுக்கே அட்மிசன் இல்லையா... நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு... //

ஹி., ஹி., ஹி... முடியாதே..

VKS-க்கு ஆபீஸ்க்கு பெரிய பூட்டா
போட்டு., சாவியை கடல்ல தூக்கி போட்டுட்டோம்ல..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// அப்போ நீங்க கண்டிப்பா பொசொவி தான் [பொய் சொல்ல விருப்பமில்லை ;)] //

ஹா., ஹா., ஹா..! சூப்பர்..!

// பி.கு. மாற்றான் தொட்டது மல்லிகையும் மணக்கும் :)) //

@ பெ.சொ.வி.,

ஓ.கே.,ஓ.கே.. உங்க மீசையில
மண் ஒட்டலை.. ஒத்துக்கறோம்..!

:)

samhitha said...

பெசொவி
//பி.கு. மாற்றான் தொட்டது மல்லிகையும் மணக்கும் :))//

;) மாற்றான் மட்டும் இல்ல நீங்க தொட்டாலும் மல்லி மணக்கும் பாஸ் :D

ராஜி said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.