சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

08 November 2011

ஆசை., தோசை., மீசை..!!!

ஒருநாள் நான் என் மீசையை
லைட்டா ட்ரிம் பண்ணி இருந்தேன்..

என் Friend ஜெகன் வீட்டுக்கு
போயிருந்தப்ப அதை பாத்த அவன்..

" இப்ப உனக்கு 2 வயசு கம்மியான
மாதிரி இருக்குடான்-"னு சொன்னான்..!

" ஓ... Only 29..?? வாவ்..!! "

உடனே அவங்க வீட்டில இருந்த
சிஸ்ஸரை எடுத்து மீசையை
இன்னும் கொஞ்சம் ட்ரிம் பண்ணிட்டு..,
அவனை பாத்து கேட்டேன்...

" இப்ப..? "

" 3 வயசு கம்மி ஆன மாதிரி
இருக்கு...? "

" ஓ... வாவ்.. அப்ப 24...!! "

( 2 + 3= 5. அப்ப 29 - 5 = 24..
கணக்கு சரியா வருதுல்ல..!! )

கொஞ்ச நாள் இப்படியே போயிட்டு
இருந்தது.. ஆனா எனக்கு Bore அடிக்க
ஆரம்பிச்சது..

இதென்னா Instalment விளையாட்டு..?
டக்னு ஒரு நாள் மீசையை Shave
பண்ணிட்டேன்..!

திடீர்னு என்னை மீசையில்லாம
பாத்த என் Wife ஷாக் ஆகிட்டாங்க..

( விட்றா.., விட்றா.. ஓவர் நைட்ல
ஒருத்தன் ஷாகித் கபூர் கணக்கா
மாறி நின்னா யாருக்குதான் ஷாக்கா
இருக்காது..?!! )


( சைடு ஆங்கிளில்.. என்னை போலவே
இருக்கும் ஷாகித் கபூர் இவர்தான்.. )

அன்னிக்கு நான் Bank-க்கு போயிட்டு
வந்துட்டு இருக்கும் போது..

வழியில ஒரு தாத்தா என்கிட்ட
லிப்ட் கேட்டாரு..

" தம்பி.. பஸ் ஸ்டேண்ட் பக்கம்
என்னை கொண்டு போயி விடறியா..? "

( அது வேற ரூட் ஆச்சே..!!! )

" சரி உக்காருங்க தாத்தா " -ன்னு..
அவருக்கு லிப்ட் குடுத்தேன்..!

( என் " நல்ல உள்ளத்தை" பத்தி
இதுவரை நோட் பண்ணாதவங்க..
இப்பவாச்சும் பண்ணவும்..! )

அந்த தாத்தா " நான் யார் பையன் "-னு
விசாரிச்சாரு.. நானும் சொன்னேன்...

" ஓ. சின்ராஜ் மகனா நீ.? "

" ஆமாம் தாத்தா...! "

" ஆமா.. நீங்க ரெண்டு பேருல்ல...
அது உன் அண்ணனா..? தம்பியா..? "

" தம்பி..! "

அதுக்கு அப்புறம் அந்த தாத்தா
ஒரு கேள்வி கேட்டார் பாருங்க..
நான் ஆடி போயிட்டேன்...

" ஆமா தம்பி.. நீ என்ன படிக்கிற...?!! "

( அடங்கொன்னியா... மீசையை எடுத்ததும்..
ஸ்கூலு பையன் கணக்கா மாறிட்டோம்
போல இருக்கே..?! )

" படிச்சி முடிச்சிட்டேன் தாத்தா.! "
குஷியா சொன்னேன்.

( இம்புட்டு நாளா இந்த மீசைல தான்
நம்ம கிளாமர் ஒளிஞ்சிட்டு இருந்து
இருக்கு போல..! )

அப்படியே பேசிட்டே பஸ் ஸ்டேண்ட்
வரை வந்துட்டோம்..

" தாத்தா.. பஸ் ஸ்டேண்டு பக்கம்
வந்துட்டோம்.. உங்களை எங்கே
இறக்கி விடறது..? "

" ராஜன் ஆஸ்பத்திரில இறக்கி
விடுப்பா.. வர வர கண்ணு சரியா
தெரிய மாட்டேங்குது..! "

( அடப்பாவி தாத்தா... அப்ப இவ்ளோ
நேரம் குத்து மதிப்பா தான் பேசிட்டு
வந்தியா..?!!

அவ்வ்வ்வ்வ்...!!! )
.
.

40 Comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//அடப்பாவி தாத்தா... அப்ப இவ்ளோ
நேரம் குத்து மதிப்பா தான் பேசிட்டு
வந்தியா..?!!

//
பல்பு கண்ணா பல்பு

"என் ராஜபாட்டை"- ராஜா said...

மீசையில்ல மண்ணு

Mohamed Faaique said...

///ஒருநாள் நான் என் மீசையை
லைட்டா ட்ரிம் பண்ணி இருந்தேன்..///

அதுக்கு முன்னாடி வீரப்பன் மாதிரியா இருந்தீங்க...????

Mohamed Faaique said...

//விட்றா.., விட்றா.. ஓவர் நைட்ல
ஒருத்தன் ஷாகித் கபூர் கணக்கா
மாறி நின்னா யாருக்குதான் ஷாக்கா
இருக்காது..?!!//

இதைப் பார்த்துதான் நம்மளுக்கு ஷாக்’ஆ இருக்கு...

Mohamed Faaique said...

///" தம்பி.. பஸ் ஸ்டேண்ட் பக்கம்
என்னை கொண்டு போயி விடறியா..? "///

இப்படி பயணத்தை ஆரம்பிச்சவரு... கடைசில,

//ராஜன் ஆஸ்பத்திரில இறக்கி
விடுப்பா..///

இப்படி சொல்ல வசீட்டீங்களே... உங்களுக்கு ட்ரைவிங் லைசன்ஸ் இருக்கா... (டவுட்டு)

Mohamed Faaique said...

///" ஆமா தம்பி.. நீ என்ன படிக்கிற...?!! "///

நீங்க இன்னும் 4ம் வகுப்பு பாஸ் பண்ணாத மேட்டர் ஊருக்குள்ள அவ்ளோ பிரபலமா???

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

ராஜி said...

" ராஜன் ஆஸ்பத்திரில இறக்கி
விடுப்பா.. வர வர கண்ணு சரியா
தெரிய மாட்டேங்குது..!
>>>
தமிழ் சினிமாவில் கூட இப்புடி ஒரு டர்னிங் பாயிண்ட் வந்ததில்லை வெங்கட் சார்.

Mohamed Faaique said...

///அடங்கொன்னியா... மீசையை எடுத்ததும்..
ஸ்கூலு பையன் கணக்கா மாறிட்டோம்
போல இருக்கே..?!///

அரைக்கால் ட்ரவுசர் ஒன்னும் போட்டிருந்தா, ஒன்னாம் வகுப்பு பையன் மாதிரி இருந்திருப்பீங்க... ஜஸ்டு மிஸ்ஸு...

(இப்போகூட ஒன்னும் கெட்டுப் போகல்ல.. ட்ரை பண்ணி பார்க்கலாமே!!)

Mohamed Faaique said...

///இம்புட்டு நாளா இந்த மீசைல தான்
நம்ம கிளாமர் ஒளிஞ்சிட்டு இருந்து
இருக்கு போல..! //

கிளாமர்’னு சொன்னா எதாவது Black Hair Die பெயரா???

வெளங்காதவன் said...

ஏதாவது சொல்லணுமா?

Mohamed Faaique said...

//அடப்பாவி தாத்தா... அப்ப இவ்ளோ
நேரம் குத்து மதிப்பா தான் பேசிட்டு
வந்தியா..?!///

தொப்பி... தொப்பி...
உங்க பதுவுலயே ரொம்ப புடிச்ச வரிகள் இதுதான்...

வெளங்காதவன் said...

மீசைல மண்ணு ஒட்டலையா தல?

dheva said...

வெங்கட் @ அப்டியே பேச்சோட பேச்சா உங்க வயசு முப்பதுதான்னு சொன்னிங்க பாருங்க.. அதை யாருமே கவனிச்சு இருக்கமாட்டாங்க....நான் கவனிச்சுட்டேன்....

ஹா ஹா ஹா ! சிரிச்சுட்டே இருக்கேன்!

vinu said...

////dheva said...
வெங்கட் @ அப்டியே பேச்சோட பேச்சா உங்க வயசு முப்பதுதான்னு சொன்னிங்க பாருங்க.. அதை யாருமே கவனிச்சு இருக்கமாட்டாங்க....நான் கவனிச்சுட்டேன்....

ஹா ஹா ஹா ! சிரிச்சுட்டே இருக்கேன்!////

No deva sir U r wrong our venkat's age is 31!!!!!

naangellaam nakeeran parambarai he he he he

middleclassmadhavi said...

நல்ல ஹாஸ்யமான பதிவு!

ஷாகித் கபூர் வீட்டில் மீசை வைக்கச் சொல்லிட்டாங்களாமே, இந்தப் பதிவை பார்த்த பிறகு! :-))

அனு said...

இனிமேல் அடிச்சு ஆடலாம்.. எத்தனை தடவை கீழ விழுந்தாலும் மண் ஒட்டாதில்ல.. :)

கோகுல் said...

எம்.ஜி.ஆர் மாதிரி தக தக ன்னு மின்னுறிங்கன்னு சொன்னாரா?
//

ரசிகன் said...

// இப்ப உனக்கு 2 வயசு கம்மியான
மாதிரி இருக்குடான்னு " சொன்னான்..!
" ஓ... Only 29..?? வாவ்..!! "//

தப்பு தப்பா கணக்க போட்டுட்டு வாவ் வேற..
49 ல இருந்து 2 கழிச்சா 47. நீங்க தப்பா 20அ கழிச்சி 29ன்னு போட்டிருகீங்க.. கணக்கு தெரியலன்னா கணித மேதை எங்க பெ.சொ.வி சார் கிட்ட கேளுங்க.. :)

Mohamed Faaique said...

///அனு said...

இனிமேல் அடிச்சு ஆடலாம்.. எத்தனை தடவை கீழ விழுந்தாலும் மண் ஒட்டாதில்ல.. :) ///

இதுவர மண் ஒட்டினது மாதிரில்ல சொல்ரீங்க...

NAAI-NAKKS said...

:)

இந்திரா said...

//வர வர கண்ணு சரியா
தெரிய மாட்டேங்குது..! //


தொப்பி.. தொப்பி...

சேலம் தேவா said...

தல எதுக்கு இந்த ரகசியத்தையெல்லாம் பப்ளிக்ல..?! :)

வெங்கட் said...

@ Mohamed.,

// உங்களுக்கு ட்ரைவிங் லைசன்ஸ்
இருக்கா... (டவுட்டு) //

அதை ஏன் கேக்கறீங்க...

நான் டூ வீலர் டிரைவிங் லைசன்ஸ்
எடுக்க போனப்ப.. ஒரு பெரிய ஆபீசரு
எனக்கு லைசன்ஸ் தர மாட்டேன்னு
சொல்லிட்டாரு

எனக்கு வந்துச்சி பாருங்க செம கோவம்..

" ஏன் சார்... தர மாட்டீங்க..? நான்
எட்டு போட்டது சரியல்லையா..? "
இப்படி பயங்கரமா சத்தம் போட்டேன்..

அதை பாத்து அவர் பயந்துட்டார்னு
நினைக்கிறேன்..நைசா என் காதுகிட்ட
வந்து சொன்னாரு...

" சைக்கிள் ஓட்ட எல்லாம் ட்ரைவிங்
லைசன்ஸ் வேணாம்பா..! "

வெங்கட் said...

@ ராஜி.,

// தமிழ் சினிமாவில் கூட இப்புடி
ஒரு டர்னிங் பாயிண்ட் வந்ததில்லை //

ஹி., ஹி., ஹி.. கரெக்ட்...!

ஏன்னா அந்த டர்னிங் பாயிண்ட்
எங்க ஊர் பஸ் ஸ்டேண்ட்
பக்கத்துலல்ல இருக்கு.!

வெங்கட் said...

@ Mohamed.,

// அரைக்கால் ட்ரவுசர் ஒன்னும்
போட்டிருந்தா, ஒன்னாம் வகுப்பு
பையன் மாதிரி இருந்திருப்பீங்க... //

" LKG அல்லது UKG பையன் போல
இருப்பேன் " என்ற உண்மையை
மறைத்ததற்க்காக இதை நான்
வன்மையாக கண்டிக்கிறேன்..!

வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// ஏதாவது சொல்லணுமா? //

பெரிய மன்மோகன் சிங்னு நினைப்பு..
பர்மிசன் கேட்டுட்டு தான் எதுன்னாலும்
செய்வாரு..!

வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// மீசைல மண்ணு ஒட்டலையா தல? //

மண் எப்படி ஒட்டும்..?!!

நாம தான் தடுக்கி விழுந்தாலும்
Swimming Pool-லல்ல விழுகறோம்..!

வெங்கட் said...

@ தேவா.,

// வெங்கட் @ அப்டியே பேச்சோட பேச்சா
உங்க வயசு முப்பதுதான்னு சொன்னிங்க
பாருங்க.. அதை யாருமே கவனிச்சு
இருக்கமாட்டாங்க....நான் கவனிச்சுட்டேன்....//

ஹா., ஹா., ஹா..!

இதை விட சிம்பிளா ஒன்னு சொல்றேன்..
நோட் பண்ணிக்கோங்க..

உங்களை விட நான் ஒரு வயசு சின்னவன்..
( ஆனா அது போன வருஷம் வரைக்கும் )

நாம பழக ஆரம்பிச்சி இப்ப 2 வருஷம்
ஆகுது.. So. நான் இப்ப ரெண்டு வயசு
சின்னவன்..

வெங்கட் said...

@ வினு.,

// No deva sir U r wrong our venkat's age is 31...!
naangellaam nakeeran parambarai he he he he //

என்னாது " நக்கீரன் பரம்பரையா..? "
இப்படி எல்லாம் பீலா விட்டுட்டு
இருக்காதீங்க.. காலம் கெட்டு கெடக்கு..!

அப்புறம் நக்கீரன் DNA-ஐ தூண்டிவிடறேன்னு
சொல்லி உங்களை யாராச்சும் கடத்திட்டு
போயிட போறாங்க.. ஜாக்ரதை..!

வெங்கட் said...

@ மாதவி.,

// ஷாகித் கபூர் வீட்டில் மீசை வைக்கச்
சொல்லிட்டாங்களாமே, இந்தப் பதிவை
பார்த்த பிறகு! :-)) //

ஆமா பின்ன.. ரெண்டு பேருக்கும்
கொஞ்சமாச்சும் வித்யாசம் தெரியணும்ல..!

வெங்கட் said...

@ அனு.,

// இனிமேல் அடிச்சு ஆடலாம்..
எத்தனை தடவை கீழ விழுந்தாலும்
மண் ஒட்டாதில்ல.. :)//

அடிச்சி ஆடும்போது கீழே விழாம
Balance பண்ண இன்னுமா நீங்க
கத்துக்கலை..?!

வெங்கட் said...

@ கோகுல்.,

// எம்.ஜி.ஆர் மாதிரி தக தக ன்னு
மின்னுறிங்கன்னு சொன்னாரா? //

அது ஒண்ணு மட்டும் தான் சொல்லலை..!

£€k#@ said...

:D :D :D
cant ctrl my laugh
romba naal ku apram nalla sirichen :D

பொன்.செந்தில்குமார் said...

\\" LKG அல்லது UKG பையன் போல
இருப்பேன் " என்ற உண்மையை
மறைத்ததற்க்காக இதை நான்
வன்மையாக கண்டிக்கிறேன்..!//
ஆமா ஆமா நானும் கண்டிக்கிறேன்..
தென்னிந்திய ஷாகித்...
அண்ணன் வெங்கட் வாழ்க...

Mohamed Faaique said...

///தென்னிந்திய ஷாகித்...
அண்ணன் வெங்கட் வாழ்க... ///

தப்பு மன்னரே... தப்பு...வட இந்திய வெங்கட்’னு ஷாகித் கபூர்’ஐ கூப்பிடுங்க...

பெசொவி said...

@ venkat
//" இப்ப உனக்கு 2 வயசு கம்மியான
மாதிரி இருக்குடான்-"னு சொன்னான்..!

" ஓ... Only 29..?? வாவ்..!! "//

அம்பதுக்கு அப்புறம் ரிவர்ஸ்ல வயசை கணக்கு போட்டு சொல்லனும்னு யாரோ வெங்கட்கிட்ட சொல்லிட்டாங்க போலிருக்கு, அதான் தன் வயசு 31-ன்னு சொல்றாரு!

பெசொவி said...

@ Mohamed Faaique

//உங்களுக்கு ட்ரைவிங் லைசன்ஸ் இருக்கா...//

அவருக்கு ஏது அந்த லைசன்ஸ்? நம்ம VKS-க்கு தான் ட்ரைவிங் லைசன்ஸ் இருக்கு. அதனாலதான் நாம வெங்கட்டை இப்படி ஓட்ட முடியுது!

பெசொவி said...

//வெங்கட் said...

@ கோகுல்.,

// எம்.ஜி.ஆர் மாதிரி தக தக ன்னு
மின்னுறிங்கன்னு சொன்னாரா? //

அது ஒண்ணு மட்டும் தான் சொல்லலை..!//

சொல்லியிருந்தா எம்ஜியாரோட ஆவியே அந்த ஆளை அடிச்சிருக்கும்!

Anonymous said...

idavida betha bulb iduvaraikum yaarume vaanginadu illa,

venkat rockssssssssssss.....!