சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

25 October 2011

10% மேதை..!


அப்பாடா.. ஒரு வழியா நான்
ஆசைப்பட்ட Sony HX100-V கேமரா
வாங்கிட்டேன்..

( அமெரிக்கால இருக்குற
என் மச்சான் கீர்த்தி இனிமே
நிம்மதியா இருப்பான்..! )

எனக்கு அந்த கேமராவை
10% Discount-ல் வாங்கி தந்த
சேலம் தேவாவுக்கு என் நன்றிகள்..
( இவர் ஒரு Professional Photographer. )

அந்த கேமராவை பாத்துட்டு
தேவாவுக்கே ஆச்சரியம் தாங்கல..

என்னை பாத்து கேட்டாரு...

" இவ்ளோ பெரிய கேமரா உங்களுக்கு
எதுக்கு வெங்கட்..? "

" என்ன தேவா இப்படி கேட்டுடீங்க..?
சின்ன வயசுல இருந்தே Photography-னா
எனக்கு உசுரு..!! "

" ஓ.. அப்படியா..? "

" ஆமா.. இப்ப கூட PIT Blog-ல மாச மாசம்
போட்டி நடத்தறாங்கல்ல.. "

" ஆமா.. "

" அதுல அடுத்த மாச போட்டியில
ஜெயிக்கறது தான் என்னோட
அடுத்தகட்ட ப்ளான்.. "

" ஓ.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..! "

" Thanks தேவா..! ஆங்.. ஒரு சின்ன டவுட்.."

" சொல்லுங்க வெங்கட்...! "

" இதுல போட்டோ எடுக்க
எந்த Button-ஐ அமுக்கணும்..?!! "

" ?!!??!?! "

டிஸ்கி :

போட்டோகிராபி மேதை Ivars Gravlejs
எழுதின " 78 Photography Tips-ஐ "
நான் 10% படிச்சி இருக்கேன்..

இதோ அதுல இருந்து நான்
கத்துகிட்ட 7 Tips..Last But Not Least....


.
.

60 Comments:

£€k#@ said...

:D //" இதுல எந்த பட்டனை
அமுக்கினா போட்டோ விழும்..?!! "//
உங்க மச்சான் ஏன் உங்கள கண்டா ஓடி ஒளியறார்னு இப்பொ தான் தெரியுது

சேலம் தேவா said...

வருங்காலத்தில் உலகம் போற்றும் ஒளிப்பதிவாளராக(?!) வெங்கட் ஆவதற்கு நானும் ஒரு சிறு முயற்சி செய்ததில் மிக்க மகிழ்ச்சி..!!

//இதுல எந்த பட்டனை
அமுக்கினா போட்டோ விழும்..?!மனசாட்சி:அன்னைக்கு ஒரு முடிவு பண்ணேன்.அது என்னன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..//

Madhavan Srinivasagopalan said...

பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தை இதே ஆங்கிள்ள எடுக்கலாமா ?

Mohamed Faaique said...

//எனக்கு அந்த கேமராவை
10% Discount-ல் வாங்கி தந்த
சேலம் தேவாவுக்கு என் நன்றிகள்..//

சேலம் தேவாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இனிமே ப்லாக் எழுதிட்டு இருக்காம வெங்கட்’அ டைவர்ட் பன்னினதுக்கு...

Mohamed Faaique said...

///" ஆமா.. இப்ப கூட PIT Blog-ல மாச மாசம்
போட்டி நடத்தறாங்கல்ல.. "

" ஆமா.. "

" அதுல அடுத்த மாச போட்டியில
ஜெயிக்கறது தான் என்னோட
அடுத்தகட்ட ப்ளான்.. "///

அங்கயுமா???? அய்யோ.. முடியலயே!!

Mohamed Faaique said...

///" Thanks தேவா..! ஆங்.. ஒரு சின்ன டவுட்.."

" சொல்லுங்க வெங்கட்...! "

" இதுல எந்த பட்டனை
அமுக்கினா போட்டோ விழும்..?!! "///

நீங்க, ஃபில்ம் ரோல்’அ எந்த எடத்துல போடனும்’னு கேட்டது எங்களுக்கு தெரியாதாக்கும்.....ஹி..ஹி..

Mohamed Faaique said...

@ Madhavan Srinivasagopalan said...

//பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தை இதே ஆங்கிள்ள எடுக்கலாமா ? ///

வெங்கட் எந்த கோபுரத்த எடுத்தாலும் அது சாய்ந்த கோபுரமாத்தான் படத்துல வரும்.. கவலைய விடுங்க...

Mohamed Faaique said...

///என்ன தேவா இப்படி கேட்டுடீங்க..?
சின்ன வயசுல இருந்தே Photography-னா
எனக்கு உசுரு..!! "///

ஆமா.. மின்னல் வெட்டும் போதெல்லாம் பயங்கரமா போஸ் குடுப்பாராம்...

Lakshmi said...

பி.சி ஸ்ரீராம் சார்கிட்ட ட்ரெய்னிங்க் எடுக்கவேண்டிய ஆளு நீங்க.

Mohamed Faaique said...

//போட்டோகிராபி மேதை Ivars Gravlejs
எழுதின " 78 Photography Tips-ஐ "
நான் 10% படிச்சி இருக்கேன்..

இதோ அதுல இருந்து நான்
கத்துகிட்ட 7 Tips..///

இந்த 7 டிப்ஸ்’ஐயும் கத்துக் கொள்ள 7 வருடம் போகும்’னு சொல்வாங்க.. நீங்க மட்டும் எப்படி இவ்ளோ சீக்கிரமா???

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அடுத்த p.c ஸ்ரீராம் நீங்கதான்

MANO நாஞ்சில் மனோ said...

அவ்வ்வ்வ்வ்வ் நான் எங்கேயாவது மலைக்கு போறேன் என்னை விடுங்கப்பா..

இராஜராஜேஸ்வரி said...

கோகுலத்தில் சூரியனுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்

middleclassmadhavi said...

கடைசி டிப்ஸ் ரொம்ப முக்கியம்!!

தீபாவளி வாழ்த்துக்கள்!

samhitha said...

@faaique
//இந்த 7 டிப்ஸ்’ஐயும் கத்துக் கொள்ள 7 வருடம் போகும்’னு சொல்வாங்க.. நீங்க மட்டும் எப்படி இவ்ளோ சீக்கிரமா???//

அதெல்லாம் உங்கள மாதிரி ஆளுங்களுக்கு!!
பொறாமை!! பொறாமை !!
அது என்ன சொல்வாங்கனு சொல்றீங்க
உங்களுக்கு 7 வருஷம் ஆச்சுனு உண்மைய சொல்லுங்க :D

//அங்கயுமா???? அய்யோ.. முடியலயே!!//
இப்டி எல்லாம் அழுதா உங்களுக்கு பரிதாபப்பட்டு விட்டு குடுத்துடுவாரா?


//நீங்க, ஃபில்ம் ரோல்’அ எந்த எடத்துல போடனும்’னு கேட்டது எங்களுக்கு தெரியாதாக்கும்.....ஹி..ஹி..//
ஆமா, நீங்க டிஜிட்டல் கேமரால எந்த எடத்துல பிலிம் ரோல் போடுறதுனு கேட்டீங்கலாமே?

வெங்கட் said...

@ லேகா.,

// உங்க மச்சான் ஏன் உங்கள கண்டா
ஓடி ஒளியறார்னு இப்பொ தான்
தெரியுது //

ஹி., ஹி., ஹி.. அப்ப என் மச்சானுக்கும்
போட்டோ எடுக்க எந்த Button-ஐ Press
பண்ணனும்னு தெரியாதுன்னு
சொல்ல வர்றீங்க... ரைட்டு..!

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// வருங்காலத்தில் உலகம் போற்றும்
ஒளிப்பதிவாளராக(?!) வெங்கட் ஆவதற்கு
நானும் ஒரு சிறு முயற்சி செய்ததில்
மிக்க மகிழ்ச்சி..!! //

ம்ம்... இதெல்லாம் வருங்காலத்துல
சம்ச்சீர் பாடதிட்டத்துல வரும்.. புள்ளங்க
எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க..

// மனசாட்சி: அன்னைக்கு ஒரு முடிவு
பண்ணேன். //

அதான் நான் அன்னிக்கே தெளிவா
சொல்லிட்டேனே..

இன்னும் 68 Tips பாக்கி இருக்கு..
அதையும் படிச்சிட்டு அப்புறமா
உங்களுக்கு போட்டோ பிடிக்க
கத்து தர்றேன்னு..

அருண் பிரசாத் said...

இனி இவர் போஸ்ட் தொல்லையோட போட்டோஸ் தொல்லையும் தாங்க முடியாதே........

வெங்கட் said...

@ மாதவன்.,

// பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தை
இதே ஆங்கிள்ள எடுக்கலாமா ? //

ஓ.. தாராளமா எடுங்க..

ஆனா அதுக்கப்புறம்.. இந்த படத்துல
இருக்குறது " பைசா சாய்ந்த கோபுரம்னு "
நீங்க கற்பூரம் அடிச்சி சத்தியம்
பண்ணினாலும் யாரும் நம்ப மாட்டாங்க..

வெங்கட் said...

@ Mohamed.,

// சேலம் தேவாவுக்கு எனது மனமார்ந்த
நன்றிகள். இனிமே ப்லாக் எழுதிட்டு
இருக்காம வெங்கட்’அ டைவர்ட்
பன்னினதுக்கு... //

தப்பு கண்ணா தப்பு..!

கேமரா வாங்கினதையே ஒரு போஸ்ட்டா
போடறேன்னா.. அதுல எடுத்த போட்டோஸ்
வெச்சி எத்தனை போஸ்ட்ஸ் போடுவேன்..?!

ஹா., ஹா., ஹா..! ( வில்லன் சிரிப்பு )
என் கேரக்டரையே புரிஞ்சிக்க
மாட்டேங்கறீங்களே..!

வெங்கட் said...

@ Mohamed.,

// நீங்க, ஃபில்ம் ரோல்’அ எந்த எடத்துல
போடனும்’னு கேட்டது எங்களுக்கு
தெரியாதாக்கும்.....ஹி..ஹி... //

பொய்.. சுத்த பொய்..!
நான் இப்படி கேக்கவே இல்ல..

இந்த டவுட்டை கேக்கறதுக்குள்ள தான்
தேவா ஒரே ஓட்டமா ஓடி போயிட்டாரே...!!

வெங்கட் said...

@ Mohamed.,

// வெங்கட் எந்த கோபுரத்த எடுத்தாலும்
அது சாய்ந்த கோபுரமாத்தான் படத்துல
வரும்.. கவலைய விடுங்க...//

ஆமா.. ஸ்பெஷல் எபெக்ட்ஸ்..!!

வெங்கட் said...

@ லக்ஷ்மி மேடம்..,

// பி.சி ஸ்ரீராம் சார்கிட்ட ட்ரெய்னிங்க்
எடுக்கவேண்டிய ஆளு நீங்க..//

பி.சி.ஸ்ரீராமா..? அவரு யாரு..?
நிஜமாவே என்னைய விட
நல்லா போட்டோ எடுப்பாரா..?!!

எதோ நீங்க சொன்னா சரியா தான்
இருக்கும்..

சரி.., என் மச்சான் கல்யாணத்துக்கு
அவரையே போட்டோகிராப்ரா புக்
பண்ணிடறேன்..

வெங்கட் said...

@ மனோ.,

// அவ்வ்வ்வ்வ்வ் நான் எங்கேயாவது
மலைக்கு போறேன் என்னை விடுங்கப்பா..//

சார்.. நல்லா பாருங்க சார்..

எல்லோரும் உங்களுக்கு " டாட்டா "
தான் காட்டிட்டு இருக்கோம்..

வெங்கட் said...

@ ராஜேஸ்வரி & மாதவி.,

// கோகுலத்தில் சூரியனுக்கு
தீபாவளி வாழ்த்துக்கள் //

ரொம்ப நன்றிங்க..!

@ ஆல்...

அனைவருக்கும் இனிய தீபாவளி
வாழ்த்துக்கள்..!!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// உங்களுக்கு 7 வருஷம் ஆச்சுனு
உண்மைய சொல்லுங்க :D //

அதெப்படி சொல்வாரு...? 12 வருஷமா
கத்துக்கிட்டும் 4 Tips தானே முடிஞ்சி
இருக்கு..

// இப்டி எல்லாம் அழுதா உங்களுக்கு
பரிதாபப்பட்டு விட்டு குடுத்துடுவாரா? //

ஆமா... விட்டு குடுத்துட்டா மட்டும்
PIT Photography Award வாங்கற மாதிரி.
.
எல்லா மாசமும் கலந்துகிட்டும்
ஒரு தடவை கூட இவரு டாப் 10-ல
வந்ததில்ல..

வெங்கட் said...

@ அருண்.,

// இனி இவர் போஸ்ட் தொல்லையோட
போட்டோஸ் தொல்லையும் தாங்க முடியாதே......../

ஒண்ணும் கஷ்டமில்ல.. அந்த
சோடாபுட்டி கண்ணாடி எடுத்து
மாட்டிகிட்டு பாருங்க.. கொஞ்சம்
தெளிவா தெரியும்..!

ராஜி said...

சேலம் தேவா என்ன ஆனார்ன்னு சொல்லவேயில்லையே

வெங்கட் said...

@ ராஜி.,

// சேலம் தேவா என்ன ஆனார்ன்னு
சொல்லவேயில்லையே //

இதுக்கு பேருதான் போட்டு வாங்கறதா.?!!

இப்படி கேட்டா.. நான் உடனே அவரு
என்னை வாய்க்கு வந்தபடி திட்டினதை
எல்லாம் சொல்லுவேனாக்கும்..
ஆசை ஆசை.!

ராஜி said...

வெங்கட் said...

@ ராஜி.,

// சேலம் தேவா என்ன ஆனார்ன்னு
சொல்லவேயில்லையே //

இதுக்கு பேருதான் போட்டு வாங்கறதா.?!!

இப்படி கேட்டா.. நான் உடனே அவரு
என்னை வாய்க்கு வந்தபடி திட்டினதை
எல்லாம் சொல்லுவேனாக்கும்..
ஆசை ஆசை.!
>>>
வந்த வேலை முடிந்தது. நன்றி!

ராஜி said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரா. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

Rathnavel said...

நல்ல பதிவு.
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அப்பாடா.. ஒரு வழியா நான்
ஆசைப்பட்ட Sony HX100-V கேமரா
வாங்கிட்டேன்..////

எதுக்கு? பர்மா பஜார்ல விக்கவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////( அமெரிக்கால இருக்குற
என் மச்சான் கீர்த்தி இனிமே
நிம்மதியா இருப்பான்..! )/////

கேமரா வாங்கியாச்சு, இனி பிலிம் ரோல் வேணும்னு (?) தொந்தரவு செய்யாம இருங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எனக்கு அந்த கேமராவை
10% Discount-ல் வாங்கி தந்த
சேலம் தேவாவுக்கு என் நன்றிகள்..
( இவர் ஒரு Professional Photographer. )///////

பாவம் தேவா, இனிமேத்தான் அவரு எச்சரிக்கையா இருக்கனும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////" இதுல போட்டோ எடுக்க
எந்த Button-ஐ அமுக்கணும்..?!! "//////

வெள்ளையா வட்டமா இருக்கே.... அதுக்குப் பேருதான் ஷட்டர்...... அத அமுக்குனா பளிச்னு ஃப்ளாஷ் வரும்......
.
.
.
என்னண்ணே அதுக்குள்ள உடைச்சிட்டீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////போட்டோகிராபி மேதை Ivars Gravlejs
எழுதின " 78 Photography Tips-ஐ "
நான் 10% படிச்சி இருக்கேன்../////

அதென்ன 10%..... ? ஒவ்வொரு பக்கத்துலயும் 10 வார்த்தை படிச்சீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இனி ப்ளாக்ல உங்க போட்டோ, ச்சீ நீங்க எடுத்த போட்டோதான் வருமா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழகத்தின் போட்டோ மாமேதை வெங்கட் வாழ்க....

Anonymous said...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ...

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// எதுக்கு.? பர்மா பஜார்ல விக்கவா? //

ஹி., ஹி., ஹி.. அது முடியாதே..
என்கிட்ட தான் பாஸ்போர்ட் இல்லையே..!

// பாவம் தேவா, இனிமேத்தான் அவரு
எச்சரிக்கையா இருக்கனும்.... //

அதை இந்த ரெண்டு நாள்லயே
அவரு நல்லா உணர்ந்து இருப்பாரு..!

Mohamed Faaique said...

///எல்லா மாசமும் கலந்துகிட்டும்
ஒரு தடவை கூட இவரு டாப் 10-ல
வந்ததில்ல.. ////

பப்லிக்..பப்லிக்... அவங்க எதுவும் டீட்டெயில் கேட்டாங்களா???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// எதுக்கு.? பர்மா பஜார்ல விக்கவா? //

ஹி., ஹி., ஹி.. அது முடியாதே..
என்கிட்ட தான் பாஸ்போர்ட் இல்லையே..!//////

அடடடா..... நீங்க பர்மாபஜார் போக பாஸ்போர்ட் வேணுமான்னு கேட்ட ஆளாச்சே... தெரியாத்தனமா கேட்டுப்புட்டேன் சாமி.....!

Mohamed Faaique said...

இந்த பதிவுக்கு எதிர் பதிவை சேலம் தேவாவிடமிருந்து எதிர் பார்க்கிறோம். இந்த ஆளுக்கு கேமரா வாங்கி குடுத்துட்டமே’னு எந்த இடத்துல குந்தி அழுதுட்டு இருக்காரோ????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Mohamed Faaique said...
இந்த பதிவுக்கு எதிர் பதிவை சேலம் தேவாவிடமிருந்து எதிர் பார்க்கிறோம். இந்த ஆளுக்கு கேமரா வாங்கி குடுத்துட்டமே’னு எந்த இடத்துல குந்தி அழுதுட்டு இருக்காரோ????//////

அவருக்கு இன்னேரம் கேமரா எடுக்குறது எப்படின்னே மறந்து போய் ஏதாவது ரெஃபரென்ஸ் எடுத்து படிச்சிட்டு இருப்பாரு....

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// வெள்ளையா வட்டமா இருக்கே....
அதுக்குப் பேருதான் ஷட்டர்...... //

இல்ல.. அதை அமுக்குனா வெளிச்சம்
வருது.. So அது டார்ச் லைட்டுன்னு
நினைக்கிறேன்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமாண்ணே கேமரா எல்லாப்பக்கமும் ஒரேமாதிரி இருக்கே,எதுல கரண்டு கனெக்சன் கொடுப்பீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// வெள்ளையா வட்டமா இருக்கே....
அதுக்குப் பேருதான் ஷட்டர்...... //

இல்ல.. அதை அமுக்குனா வெளிச்சம்
வருது.. So அது டார்ச் லைட்டுன்னு
நினைக்கிறேன்..!///////

அடேங்கப்பா பெரிய கேமராவாத்தான் வாங்கி இருக்கீங்க, டார்ச் லைட்லாம் கூட வெச்சிருக்கானே.....?

Mohamed Faaique said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அடேங்கப்பா பெரிய கேமராவாத்தான் வாங்கி இருக்கீங்க, டார்ச் லைட்லாம் கூட வெச்சிருக்கானே.....? ///

ஆனாலும், ரொம்ப நேரம் டார்ச் எரிய மாட்டேங்குது’னு ஃபீல் பண்ணிட்டு இருக்காரு.. தெரிஞ்சவங்க யாராவது சொல்லிக் குடுங்கப்பா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Mohamed Faaique said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அடேங்கப்பா பெரிய கேமராவாத்தான் வாங்கி இருக்கீங்க, டார்ச் லைட்லாம் கூட வெச்சிருக்கானே.....? ///

ஆனாலும், ரொம்ப நேரம் டார்ச் எரிய மாட்டேங்குது’னு ஃபீல் பண்ணிட்டு இருக்காரு.. தெரிஞ்சவங்க யாராவது சொல்லிக் குடுங்கப்பா...//////

பட்டனை அமுக்குறதுக்கு பதிலா பல்பையே அமுக்கிட்டாரோ?

சேலம் தேவா said...

கேமரா வாங்குன ரெண்டு நாள்ல 42 டவுட் மட்டும்தான் கேட்ருக்காரு...

இதுலயே தெரியலயா..?! அவரு சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகப்போறார்ன்னு...

:( Sorry... ஸ்மைலி போடறதுக்கு கை தவறி(நிஜமாதான்)இத போட்டுட்டேன். :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சேலம் தேவா said...
கேமரா வாங்குன ரெண்டு நாள்ல 42 டவுட் மட்டும்தான் கேட்ருக்காரு...

இதுலயே தெரியலயா..?! அவரு சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகப்போறார்ன்னு.../////

ஃபிலிம் ரோல் எப்படி மாட்டனும்னு 42 வாட்டி கேட்டிருப்பாரு, எங்களுக்குத் தெரியாதா?

சேலம் தேவா said...

இதுக்கெல்லாம் காலம்(அவரு எடுக்கற படம்)பதில் சொல்லும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சேலம் தேவா said...
இதுக்கெல்லாம் காலம்(அவரு எடுக்கற படம்)பதில் சொல்லும்./////

நல்ல பஞ்ச் டயலாக் உள்ள படமா எடுக்க சொல்லுங்க.... இல்லேன்னா நாங்களே பார்க்க மாட்டோம்...

சேலம் தேவா said...

கேமராவுக்கு தேவை ப்ளாஸ்.
வெங்கட் எப்பவும் "மாஸ்"
அவர் எடுக்கற போட்டோவுக்கு நீங்கல்லாம் கொடுப்பீங்க ஒருநாள் "போஸ்"

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சேலம் தேவா said...
கேமராவுக்கு தேவை ப்ளாஸ்.
வெங்கட் எப்பவும் "மாஸ்"
அவர் எடுக்கற போட்டோவுக்கு நீங்கல்லாம் கொடுப்பீங்க ஒருநாள் "போஸ்"/////

பஞ்ச் டயலாக்கும் ரெடி..... கேமராவும் ரெடி.... ஹீரோவும் ரெடி..... ஆனா பாவம் கேமராமேன் இன்னேரம் எங்க அடிவாங்கிட்டு இருக்காரோ....? சீக்கிரம் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணுங்க.... அப்புறம் கால்ஷீட் கிடைக்காது....

HVL said...

ஐயா! இன்றையிலிருந்து நீங்க தான் எங்க குரு!

பெசொவி said...

//வெங்கட் said...

@ Mohamed.,

// நீங்க, ஃபில்ம் ரோல்’அ எந்த எடத்துல
போடனும்’னு கேட்டது எங்களுக்கு
தெரியாதாக்கும்.....ஹி..ஹி... //

பொய்.. சுத்த பொய்..!
நான் இப்படி கேக்கவே இல்ல..

இந்த டவுட்டை கேக்கறதுக்குள்ள தான்
தேவா ஒரே ஓட்டமா ஓடி போயிட்டாரே...!!
//

என்ன கொடுமை இது? மிசஸ் வெங்கட் தான் எங்க கட்சின்னு நினைச்சிருந்தேன். இப்ப, வெங்கட்டும் VKS-ல சேர்ந்துட்டாரு போலிருக்கே! :))

பெசொவி said...

//Mohamed Faaique said...

///எல்லா மாசமும் கலந்துகிட்டும்
ஒரு தடவை கூட இவரு டாப் 10-ல
வந்ததில்ல.. ////

பப்லிக்..பப்லிக்... அவங்க எதுவும் டீட்டெயில் கேட்டாங்களா??? //
சரிதான், இவரு VAS பக்கம் போயிட்டாரு போலிருக்கு. இவர் ப்ளேஸ்ல தான் வெங்கட் ஜாயின் பண்ணி இருக்காரா?

எஸ்.கே said...

//10% மேதை!//
ஒரு 0 விட்டுப்போச்சு!:-(