சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 November 2011

மாஸ்டர் ப்ளான்..!!

என் டேபிள் மேல ஒரு Bag
இருந்தது.. அதை பார்த்த என் Wife...

" என்னங்க இது Bag..? "

" அதெல்லாம் மாஸ்டர் பிளான்..
சொன்னா உனக்கு புரியாது..! "

" மாஸ்டர் பிளானா..?! அப்ப அது
நீங்க போட்டதா இருக்காதே..
கரெக்ட்டா..?!! "

" நீ ஒரு ஜீனியஸ்கிட்ட பேசிட்டு
இருக்கேன்னு அடிக்கடி மறந்துடற..! "

" ஹி.,ஹி., முதல்ல உங்க ப்ளான்
என்னான்னு சொல்லுங்க.. அப்புறம்
நீங்க ஜீனியஸா இல்ல ஜீனியஸ்க்கு
எதிர்வீட்டுக்காரரான்னு பார்க்கலாம்..!  "

" என் Friend ரவியோட பொண்ணு
' ஹோலி கிராஸ்ல ' 2nd Std
படிக்கிறால்ல.."

" ஆமாம்..! "

" அவ வீட்ல கூட இங்கிலீஷ்ல தான்
பேசறாளாம்.. "

" சரி.. அதுல என்ன பிரச்னை..? "

" நம்ம ஆளுக்கு தான் இங்கிலீஷ்
சரளமா பேச வராதே.. "

" அட.. என்னமோ நீங்க தினமும்
இங்கிலீஷ்ல எட்டு பாட்டு எழுதற
மாதிரி பேசறீங்க.. இங்கேயும் அதே
கதை தானே..?! "

" ஹி., ஹி., ஹி.. இருக்கலாம்.. ஆனா
இன்னும் ஒரு மாசம் கழிச்சி இப்படி
எல்லாம் நீ எங்களை கிண்டல்
பண்ண முடியாது.. "

" ஏன் ரெண்டு பேரும் எதாவது
ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்
போக போறீங்களா..?! "

" சே., சே., அதெல்லாம் கஷ்டம்..
நாங்க வேற ஒரு ஈஸியான
மாஸ்டர் ப்ளான் வெச்சி இருக்கோம்ல.. "

" அட அது என்னான்னு தான்
சொல்லுங்களேன்.. "

" அந்த Bag-ஐ திறந்து பாரு..
உனக்கே புரியும்..! "

பையை திறந்து பார்த்த
என் Wife ஆச்சரியத்தோட..." என்ன இது... எல்லாம் இங்கிலீஷ் பட
DVD-யா இருக்கு..! "

" ம்ம்.. தினமும் ஒரு இங்கிலீஷ் படம்
பாக்கறது., ஒரு மாசத்துல சரளமா
இங்கிலீஷ் பேசறது.. இதான் எங்க ப்ளான்..!!
எப்பூடி..?! "

" அது சரி.., அதுக்கு எதுக்கு தமிழ்ல டப்
பண்ணின இங்கிலீஷ் பட DVD-ஐ வாங்கிட்டு
வந்து இருக்கீங்க..? "

" Oh My God..! அவ்வ்வ்வ்வ்..!! "

( யானைக்கும் அடி சறுக்கும்னு
சொல்றது எம்புட்டு கரெக்ட்டு..! )
.
.

27 Comments:

விக்கியுலகம் said...

ஏன்யா இந்த இங்க்லீஸ் கறி ச்சே வெறி...அங்கயும் சேம் ப்ளட்டா ஹிஹி.. ஐயோ சாமி நான் இல்ல!

வெளங்காதவன் said...

வொய் திஸ் கொலைவெறி?

MOHAMED YASIR ARAFATH said...

அற்புதம்,
அப்போ இங்கிலீஷ் படம் பார்த்தா இங்கிலீஷ் கத்துக்கலாம், சும்மா விடாதிங்க பாஸ். நான் எத்தன மலையாள படம் பார்த்திருப்பேன், எனக்கு மலையாளம் தெரியுமா என்ன?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கழுதை மேய்க்கிறதுக்கு எதுக்கு பாஸ் இங்கிலீஷ்?

Madhavan Srinivasagopalan said...

சப்-டைட்டல் இங்கிலீசுல வருமே.. அதப் பாத்து கத்துக்கலாம், படிக்கத் தெரிஞ்சா.. (சமாளிங்க வெங்கட்.. சமாளிங்க..)

Anonymous said...

haio haio

பொன்.செந்தில்குமார் said...

இங்கிலிஷ் படம் பாத்தா இங்கிலீஷ் கத்துக்கலாம் என்கின்ற ஒரு மகத்தான உண்மையை உலகுக்கு எடுத்துரைத்த அண்ணன் வெங்கிஷ் சாரி வெங்கட் வாழ்க...
\\" நீ ஒரு ஜீனியஸ்கிட்ட பேசிட்டு
இருக்கேன்னு அடிக்கடி மறந்துடற..! "//

இந்த டயலாக்க எங்க சுட்டிங்க..இது உங்க கீபோர்டுல கண்ட்ரோல் C ல லாக் ஆயிடிச்சி போல.. சீக்கிரம் கீபோர்ட சர்வீஸ் விடுங்க....
இல்லைன்னா அடிக்கடி எல்லா பதிவிலேயும் தானா காபி பேஸ்ட் ஆயிடும்...அப்புறம் உலகம் உங்கள தப்பா ஜினியஸ்னு நினைச்சிடும்...
நமக்கு எதுக்கு தல இந்த வம்பெல்லாம்...

பொன்.செந்தில்குமார் said...

\\( யானைக்கும் அடி சறுக்கும்னு
சொல்றது எம்புட்டு கரெக்ட்டு..! )//

அப்படியாண்ணே!?

" Oh My God..! எம்புட்டு அறிவு... அவ்வ்வ்வ்வ்..!! "

ஆமா...யானைக்கு அடி எப்படிண்ணே சறுக்கும்...

Lakshmi said...

haa, haa, haa

Mohamed Faaique said...

///" அட.. என்னமோ நீங்க தினமும்
இங்கிலீஷ்ல எட்டு பாட்டு எழுதற
மாதிரி பேசறீங்க.. இங்கேயும் அதே
கதை தானே..?! "///

English பாட்டுக்கு கீழ ரிப்பீட்டு’னு எழுதுவாரு. அவ்ளோ பெரிய படிப்பு படிச்சவரு நம்ம வெங்கட்..

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//கழுதை மேய்க்கிறதுக்கு எதுக்கு பாஸ் இங்கிலீஷ்?//

அதனால தான் மச்சி உங்க அப்பா உன்னை இங்கிலீஷ் படிக்க வைக்கவில்லை அப்படினு சொன்னா ரொம்ப பழசா இருக்குமே.. ஹும்ம்

அதுவா இப்போ கழுதைங்க எல்லாம் இங்கிலீஷ்ல பேசுதாம், சாப்ட்வேர் கம்பனியில் மேனேஜரா இருக்காம். அதனால தான்... :P

TERROR-PANDIYAN(VAS) said...

//ஏன்னா.. இதெல்லாம் தமிழ்ல டப்பிங்
பண்ணின இங்கிலீஷ் படங்க..!//

சோ வாட்?? நாங்க இங்கிலீஷ்ஐ தமிழ்ல டப் பண்ணி பேசிட்டு போரோம்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//Bag , Wife, Friend, 2nd Std, Oh My God..! //

இப்பவே நல்லாதான பாஸ் இங்கிலீஷ் பேசறிங்க. இதுவே VKS க்கு புரியாதே.. :)

Madhavan Srinivasagopalan said...

// Bag , Wife, Friend, 2nd Std, Oh My God..! //

அலைபேசியில் ஒருவர் பேசுகிறார்..
A bagu, you forgettu hearu.. that uvaru waifu bagaa..
... hmm friendaa.. oooch.. 2nd Std studentaa ? oh my godu..

கீதா லட்சுமி said...

Manamvittu sisrika mudiyuthu :D

மனசாட்சி said...

மாஸ்டர் பிளான் தான் ஒய் -

ரசிகன் said...

நீங்க போட்டா அது Master plan இல்ல Waster Plan ன்னு Prove பண்ணிட்டீங்க.. வாழ்த்துக்கள் :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//Waster Plan ன்னு Prove பண்ணிட்டீங்க.. வாழ்த்துக்கள் :)//

அப்போ உங்களுக்கு Use ஆகும் வச்சிகோங்க.. :)

ரசிகன் said...

//Waster Plan ன்னு Prove பண்ணிட்டீங்க.. வாழ்த்துக்கள் :)//

அப்போ உங்களுக்கு Use ஆகும் வச்சிகோங்க.. :)//

இதன் மூலம் அறியப்படுவது யாதெனின், தன் பாஸ் போடுவதெல்லாம் Waster Plan என்று பாண்டிய மாமன்னர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.. :P

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//இதன் மூலம் அறியப்படுவது யாதெனின், தன் பாஸ் போடுவதெல்லாம் Waster Plan என்று பாண்டிய மாமன்னர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.. :P//

1. அந்த ப்ளான் உங்களுக்கு உதவும் சொல்லி இருக்கேன். அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கால அப்போ நீங்க வேஸ்ட் தானா?

2. பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்தா வைத்தியருக்கும் பைத்தியம் அர்த்தமா? :)

பெசொவி said...

//" ஹி.,ஹி., முதல்ல உங்க ப்ளான்
என்னான்னு சொல்லுங்க.. அப்புறம்
நீங்க ஜீனியஸா இல்ல ஜீனியஸ்க்கு
எதிர்வீட்டுக்காரரான்னு பார்க்கலாம்..! "//

இதில என்ன சந்தேகம், அவர் ஜீனியசுக்கு வீட்டுக்காரர் தான்!
(என்ன இருந்தாலும் எங்க சங்கத்து ஆளை வாழ்த்தலைனா எப்படி?)

பெசொவி said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//கழுதை மேய்க்கிறதுக்கு எதுக்கு பாஸ் இங்கிலீஷ்?//

அதனால தான் மச்சி உங்க அப்பா உன்னை இங்கிலீஷ் படிக்க வைக்கவில்லை //

ஆனா ஒட்டகம் மேய்க்கறதுக்கு இங்கிலீஷ் தேவையாச்சே, எப்படி பாண்டியன் மட்டும் சமாளிக்கிறாரு?

பெசொவி said...

@Terror
//பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்தா வைத்தியருக்கும் பைத்தியம் அர்த்தமா? //
அது சரிதான், ஆனா தனக்கு வைத்தியம் தெரியுமா, தெரியாதான்னே தெரியாம வைத்தியம் பார்த்தா, பைத்தியம்னுதான் அர்த்தம்!
:))

TERROR-PANDIYAN(VAS) said...

@பெசொவி

//இதில என்ன சந்தேகம், அவர் ஜீனியசுக்கு வீட்டுக்காரர் தான்!//

மாடி வீட்டுகாரர் என்று சொன்னால் மாடி வீட்டில் வசிப்பவர் என்று அர்த்தம். ஆனா மாடி வீடு எப்படி வந்துச்சி? அவர் பார்த்து பார்த்து உருவாக்கினது. அது மாத்ரி வெங்கட் தான் அவங்களை ஜீனியஸ் ஆக்கினார் சொல்றிங்களா? ஓ.கே ஓ.கே.. :)

(தல! இதுக்கு மூளையை கசக்காம ஒரே லைனல கவுன்டர் இருக்கு. கண்டுபிடிங்க பாக்கலாம்)

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//ஆனா ஒட்டகம் மேய்க்கறதுக்கு இங்கிலீஷ் தேவையாச்சே //

ஏன்?? Hey Camel! eat this. அப்படினு சொன்னாதான் ஒட்டகம் சாப்பிடுமா.. :) என்னா பாஸ் நீங்க ஒட்டகம் மேய்க்ககூட சரிவர மாட்டிங்க போல... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//ஆனா தனக்கு வைத்தியம் தெரியுமா, தெரியாதான்னே தெரியாம வைத்தியம் பார்த்தா, பைத்தியம்னுதான் அர்த்தம்!//

தனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது அப்படினே தெரியாத பைத்தியத்துக்கு தனக்கு வைத்தியம் பாக்கர வைத்தியருக்கு பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்க தெரியுமா இல்லை தெரியாதான்னு எப்படி தெரியும்?

ஜெகன் said...

Me the last..