சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

05 December 2011

Why this கொலைவெறி டி..!?!!!


ரெண்டு நாள் முன்னாடி தான்
என் Friend ஹரி போன் பண்ணி

Youtube-ல " Why this கொலைவெறி டி..! "
பாட்டு பாத்தியான்னு கேட்டான்..

இன்னும் இல்லன்னு சொன்னதும்...

" ?!!@?##?#!@!?@### "

" ஹேய்.. ஹேய்... No Bad Words..! "

" அப்ப முதல்ல போயி அதை பார்டா..! "

சரின்னு.. நானும் அவசர அவசரமா
Youtube-ல தனுஷ் பாடின அந்த பாட்டை
பாத்துட்டேன்..!

( அப்பாடி.. இனிமே ஊருக்குள்ள
தலை நிமிந்து நடக்கலாம்..! )

என்னா ஒரு பாட்டு..! என்னா ஒரு Lyrics..?!

( தம்பி..! பாட்டும், Lyrics-ம் ரெண்டும்
ஒண்ணுதான்பா.! )

ஹி., ஹி., ஹி.. இப்ப தான் பாட்டை
பாத்துட்டு வர்றேன்.. அதான்...

சரி அதை விடுங்க...

இதே பாட்டை பஞ்சாபி பொண்ணு
ஒண்ணு பாடின வீடியோவும் இருக்கு..


சும்மா சொல்லக்கூடாது.. இந்த பாட்டும்
நல்லாத்தான் இருக்கு..

ஆனா நிறைய பேர் இந்த பாட்டுக்கு
" Dislike " போட்டு இருக்காங்க..!

சிலர் இந்த பாட்டை திட்டி கமெண்ட்
வேற போட்டு இருந்தாங்க..

அங்கே இருந்த கமெண்ட்ஸ்ல சில
என்னை அப்படியே புல்லரிக்க
வெச்சது...

இதோ சில சாம்பிள் கமெண்ட்ஸ்..

" Pls dont kill TAMIL language.. "

" உனக்கு தமிழ் மேல என்ன கொலைவெறி டி..!"

" Go get a lesson on Tamil and come back. "

" தமிழ் இனி மெல்லச்சாகும்..! "

இதை எல்லாம் படிச்சதுக்கு அப்புறம்
தான் எனக்கு அந்த உண்மையே
தெரிஞ்சது...
.
.
.
ஆஹா.., அப்ப நம்ம தனுஷ் பாடினது
" தமிழ்ப் பாட்டா..!?! "

=========================================================

போனஸ் Track :

ஜூனியர் Nigam ( Nevaan Nigam ) பாடினது..


.
.

19 Comments:

MANO நாஞ்சில் மனோ said...

பஞ்சாபி பாடுறதும், குழந்தை பாடுறதும் நல்லாதானே இருக்கு ஹாய் ஹாய் இனி தமிழ் மெல்ல வாளும்னு ச்சே ச்சீ வாழும்ன்னு சொல்லுய்யா ஹா ஹா ஹா...

சத்ரியன் said...

பாட்டு பாடற பஞ்சாபி பொண்ணு டக்க்க்க்க்கரா இருக்கண்ணே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏன் இந்த கொலைவெறி பதிவு?

Rishvan said...

kola panratha solli.. neengale kolaiyum panringa... naama thaan konjam maaranum.... www.rishvan.com

வெங்கட் said...

@ மனோ.,

// பஞ்சாபி பாடுறதும், குழந்தை பாடுறதும்
நல்லாதானே இருக்கு //

கரெக்ட்..!

என்னமோ ஒரிஜினல் பாட்ல
தமிழ் கொஞ்சி விளையாடின மாதிரியும்.,
அதை இந்த பஞ்சாபி டீம் கெடுத்த மாதிரியும்
என்னாமா கமெண்ட் போட்டு இருக்காங்க
தெரியுமா அந்த Youtube Video-ல..!

வெங்கட் said...

@ சத்ரியன்.,

// பாட்டு பாடற பஞ்சாபி பொண்ணு
டக்க்க்க்க்கரா இருக்கண்ணே! //

ஹி., ஹி., ஹி... ஆனாலும் உங்களுக்கு
ரொம்ப குறும்பு..! பாட்டை கேக்க சொன்னா..

Mohamed Faaique said...

பொறாம... இங்க்லீசு பாட்டு புரியல’னு பொறாம...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

டமில்லை வாழ வைக்க வந்த பாட்டு அது

வெளங்காதவன் said...

Pls..

Never blog in English....

Take care....

:)

NAAI-NAKKS said...

இன்னும் அந்த கொலை வெறியே முடியலை....
இப்ப அடுத்ததா???

டேய் ..தனுசு....நீ பாட்டுக்கும் ஒரு பாட்டு பாடிட்டே ....
அதுக்கு அப்புறம் வருது பார் ...
அது எல்லாம்தான் உண்மையான கொலை வெறி ....
இன்னும் ஆறு மாசம் இதே மாதிரி வந்து
தொலைக்குமே ....

யப்பா கூகிள் யு டியூப்-ஐ மொதல்ல க்ளோஸ் பண்ணு ...

£€k#@ said...

apdi indha song la ena iruku nu theriyalaiye
anyhow 3 songs-um ennala epdiyum keka mudiyadhu
so neenga solradhu seriya dhaan irukanum :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவு எங்கண்ணே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரிஜினலைவிட பஞ்சாபி பாட்டுதான் நல்லாருக்கு..... என்ன காரணமா இருக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஏன் இந்த கொலைவெறி பதிவு?//

ஏன் இந்த கொலவெறி கமெண்டு?

வெங்கட் said...

@ Mohamed.,

// பொறாம... இங்க்லீசு பாட்டு புரியல’னு
பொறாம... //

ஹி., ஹி., ஹி... அவர் பாடின பாட்டு
இங்கிலீஷ்காரங்களுக்கே புரியலையாமாம்..

அப்ப அதுக்கு பேரு என்ன சார்..?!!

வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// Pls.. Never blog in English.... //

இங்கிலீஷ் தெரியாதவங்களை பாத்து
இருக்கேன்.. தமிழ் தெரியாதவங்களையும்
பாத்து இருக்கேன்..

ஆனா....
இங்கிலீஷ் எது.? தமிழ் எதுன்னே
தெரியாதவங்களை இப்ப தான்
பார்க்குறேன்.!

Madhavan Srinivasagopalan said...

// ஆஹா.., அப்ப நம்ம தனுஷ் பாடினது
" தமிழ்ப் பாட்டா..!?! " //


Point..

பெசொவி said...

hihi!

skcomputers said...

எனக்கும் அதே டவுட்டுதான்???அப்ப நம்ம தனுஷ் பாடினது " தமிழ்ப் பாட்டா..!?! "