சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 November 2011

சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5

டிஸ்கி : 4-ஆம் வகுப்பு படிக்கும் என் மகன்
பள்ளி சுதந்திர தின விழாவில் பேசியது.!

தலைப்பு : ஜாதிகள் இல்லையடி பாப்பா..!செட்டியாரு., ரெட்டியாரு., முதலியாரு.,
கோனாரு., நாடாரு., கவுண்டரு.,
ஐயரு., தேவரு., மறவரு, குறவரு.,
கோடா., இடிகா...

உஸ்ஸப்பா..! இப்பவே கண்ணை கட்டுதே..!

இது மாதிரி இந்தியால 28,000 ஜாதிகள்
இருக்கு..

ஜாதீ - அதுலயே ஒரு " தீ " இருக்கு.
நல்லா நோட் பண்ணுங்க..

மரத்துக்கு தீ பிடிச்சா - அது
காட்டையே அழிச்சிடும்..
மனுஷனுக்கு ஜாதீ பிடிச்சா - அது
நாட்டையே அழிச்சிடும்..

அந்த காலத்துல நம்மகிட்ட ஒத்துமை
இல்ல.. அதனால தான் இங்கிலீஷ்காரங்க
நம்மள 200 வருஷம் அடிமையா வெச்சி
இருந்தாங்க..

அப்ப அவங்க வெறும் 30 லட்சம்.
நம்ம ஆளுங்க 30 கோடி.

ஆனா 30 லட்சம் பேர் சேர்ந்து
30 கோடி பேரை அடிமையா வெச்சி
இருந்தாங்க..

என்ன கொடுமை சார் இது..?!!

இப்ப புரியுதா...

புலிக்கு முன்னாடி ஓடற மானும்.,
ஒத்துமையா இல்லாத நாடும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல..!

அந்த காலத்துல ஜாதி கொடுமை
எப்படி இருந்துச்சுன்னு ஒரு சின்ன
உதாரணம்...

Dr.அம்பேத்கர் - அவர் ஒரு தாழ்த்தப்பட்ட
ஜாதியை சேர்ந்தவர்.

அவர் ஸ்கூல்ல படிக்கும் போது.,
எல்லா பசங்களும் பெஞ்ச்ல தான்
உக்காருவாங்க.. ஆனா அவரை மட்டும்
கீழே தான் உக்கார வெப்பாங்க.

அவர்கூட யாரும் பேச மாட்டாங்க.,
பழக மாட்டாங்க..

ஒருநாள் அம்பேத்கரோட கை
பக்கத்துல இருந்த பையனோட
டிபன் பாக்ஸ் மேல பட்டுடுச்சி..

அதுக்கு அந்த பையன்.. டிபன் பாக்ஸ்
" தீட்டு " ஆயிடிச்சின்னு சொல்லி
அதுல இருந்த சாப்பாட்டை எல்லாம்
கீழே கொண்டு போயி கொட்டிட்டான்..

ஆனா.. யார் கைபட்டா தீட்டுன்னு
சொன்னாங்களோ.. அவர் தான்
பின்னாளில் இந்தியாவின் சட்டத்தையே 
தீட்டு தீட்டுன்னு தீட்டினார் என்பது வரலாறு..!

இது மாதிரி பல நிகழ்வுகளை
பாத்துட்டுட்டு தான் பாரதி
Feel பண்ணி பாடினார்.....
" வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ் சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை
யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் இஃது
ஏற்றமென்றும் சொல்லலாமோ..! "

எந்த சாதியா இருந்தாலும்..
நாமெல்லாம் ஒரே மனிதஜாதின்னு
பாரதி அழுத்தமா சொன்னாரு.

சரி.. இன்னைக்கு " ஜாதி காய்ச்சல் "
எப்படி இருக்குன்னு பார்க்கலாம்..

கொஞ்சம் குறைஞ்சி இருக்கு..
ஆனா இன்னும் குணமாகலை..

" ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு "
பாடினாரு பாரதி..

ஆனா அவர் பெயர்ல இருக்குற
யுனிவர்சிட்டில சேரணும்னா கூட
ஜாதி சர்டிபிகேட் கேக்கறாங்க..

இப்ப மட்டும் பாரதி இருந்தார்னா..
இதை பாத்து நொந்து நூடுல்ஸ்
ஆகியிருப்பார்..

அவர் என்ன மேற்கோளுக்காவா
எழுதினார்..?!
குறிக்கோளுக்கல்லவா எழுதினார்..

இலங்கையை ஆண்ட ராவணன் தான்
ஆண்டவனையே சோதிச்சான்..
பத்து தலை இருந்தும் கூட
தப்பு தப்பா யோசிச்சான்னு சொல்லுவாங்க..

அது மாதிரி.. படிச்சவங்களே ஜாதி கட்சி
ஆரம்பிச்சு.. நம்மள ஒத்துமையா
இருக்கவிடாம பண்றாங்களே..
இது நியாயமா..?!!

உலகத்துக்கே திருக்குறள்கிற
பொதுமறையை தந்த நாம..
ஜாதீங்கற விஷசெடியை
வளர்ப்பது சரியா..?!

கடைசியா ஒரு பஞ்ச் டயலாக்
சொல்றேன். நல்லா நோட்
பண்ணிக்கோங்க..

ஆம்லட் போடணும்னா முட்டையை
உடைக்கணும்..
நாம ஒத்துமையா இருக்கணும்னா
ஜாதியை அழிக்கணும்..

நன்றி..!


டிஸ்கி : மேலும் சில பேச்சுப் போட்டிகள்..


பேச்சுப்போட்டி - 6
.
.

39 Comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

/ஆம்லட் போடணும்னா முட்டையை
உடைக்கணும்..
நாம ஒத்துமையா இருக்கணும்னா
ஜாதியை அழிக்கணும்..
//
உண்மைதான்

வெளங்காதவன் said...

உங்க வீட்டு வாண்டு பேசுன மாதிரி தெரியலையே.....
:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெளங்காதவன் said...

உங்க வீட்டு வாண்டு பேசுன மாதிரி தெரியலையே.....
:)//

அது மிசஸ்.வெங்கட் எழுதி கொடுத்தது. பையனுக்கு வாழ்த்துக்கள்

வெளங்காதவன் said...

//அது மிசஸ்.வெங்கட் எழுதி கொடுத்தது. பையனுக்கு வாழ்த்துக்கள்///

:)

கும்மாச்சி said...

நல்ல நச்சுன்னு இருக்கு, பையனுக்கு வாழ்த்துகள்.

உதவாக்கரை said...

அவர் என்ன மேற்கோளுக்காவா
எழுதினார்..?!
குறிக்கோளுக்கல்லவா எழுதினார்..///

இந்த வரி எழுதி குடுத்த மிசஸ்.வெங்கட் க்கு பாராட்டுக்கள்

NAAI-NAKKS said...

பரிசு என்ன ஆச்சி ???
வழக்கம் போல உங்க MRS..-KU தானே????

உதவாக்கரை said...

முதல்ல ஒன்னாம் வகுப்பு சேர்க்கும் போது எந்த சாதின்னு கேட்பதையும் சேர்த்த பிறகு சாதியை அடிப்படையாக வைத்து ஸ்காலர்சிப் கொடுப்பதையும் நிறுத்தினாலே அடுத்த தலைமுறையிலாவது இந்த சாணி ஒழிந்து விடும் ..

Mohamed Faaique said...

@ உதவாக்கரை said...

//// அவர் என்ன மேற்கோளுக்காவா
எழுதினார்..?!
குறிக்கோளுக்கல்லவா எழுதினார்..///

இந்த வரி எழுதி குடுத்த மிசஸ்.வெங்கட் க்கு பாராட்டுக்கள்///

நீங்க VAS ஆளுதானே!!!! இத மட்டும் மிசஸ் வெங்கட் எழுதினது’னு சொல்லி.. மற்றையதெல்லாம் வெங்கட் எழுதினது’னு நம்ப வைக்க பாக்குறீங்க... ஆனாலும் நாம நம்ப மாட்டோமே!!!!

-தோழன் மபா, தமிழன் வீதி said...

'சாதி சிலருக்கு வரம். சிலருக்கு அதுவே சாபம்'

middleclassmadhavi said...

சூப்பர்!

Lakshmi said...

அவர் என்ன மேற்கோளுக்காவா
எழுதினார்..?!
குறிக்கோளுக்கல்லவா எழுதினார்..///

சேலம் தேவா said...

கலக்கல் குழந்தைகள் தின கட்டுரை. எப்பயும் போல 1st ப்ரைஸா..?!

MANO நாஞ்சில் மனோ said...

எந்த சாதியா இருந்தாலும்..
நாமெல்லாம் ஒரே மனிதஜாதின்னு
பாரதி அழுத்தமா சொன்னாரு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

எனது எண் : 9789066498

ஓய்வாக இருந்தால் என்னை அழைக்கமுடியுமா வெங்கட்?

Dhileepan said...

//ஆனா.. யார் கைபட்டா தீட்டுன்னு
சொன்னாங்களோ.. அவர் தான்
பின்னாளில் இந்தியாவின் சட்டத்தையே
தீட்டு தீட்டுன்னு தீட்டினார் என்பது வரலாறு..!//

சூப்பர் பன்ச்..

நான் கோயம்புத்துர்ல இருக்கேன் நான் அரசுப்பள்ளியில் தான் படிச்சேன்.எங்க ஊர் பள்ளியில என்ன முதல் வகுப்பு சேர்க்கும் போது எங்க அப்பா என்னை ஜாதி பேர் சொல்லாம பொது வகுப்புல தான் சேர்த்தார். அப்ப எங்க ஊர் பள்ளி தலைமை ஆசிரியர் எங்க அப்பவோட நண்பர் அப்டிங்கரதுனால சேத்திட்டார்.ஆனா நான் உயர்நிலை பள்ளி போகும் போது ஜாதி சான்றிதழ் கேட்டாங்க.., எங்க அப்பா ஜாதி சான்றிதழ் தரனும்ன்கிற சொல்ல கட்டாயம் இல்லை அப்டிங்கற அரசு ஆணையை தலைமை ஆசிரியர் கிட்ட கொடுத்தாரு... இதனால் மூக்குடைப்பட்ட அவருக்கும் எங்க அப்பாக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுவிட்டது. நான் தான் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்தேன்.அந்த சண்டைனால அந்த HM மாறுற வரை நான் பட்ட பாடு தனி கதை...ஆனாலும் இன்னிக்கு வரை ஜாதி சான்றிதழ் இல்லாம தா படிக்கறேன்.நான் இப்ப B.com இரண்டாம் வருடம் படிக்கறேன்.பள்ளி படிக்கும் போது மத்த டீச்சர்ஸ் எல்லாம் வந்து நைசா கேட்பாங்க என்ன ஜாதி என்ன ஜாதி அப்டின்னு கடைசி வரை சொல்லவே இல்லையே என்னோட மாற்றுச்சான்றிதழ் DASH போட்டுத்தான் தான் வந்துச்சு............எங்களை பாத்து எங்க அப்பா நண்பர்கள் நிறைய பேர் இப்டி பண்றாங்க.... 'last but not least'
"தந்தை முன்னெடுப்பார்
தனயன் வழி நடப்பான்"

வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// உங்க வீட்டு வாண்டு பேசுன மாதிரி
தெரியலையே..... :) //

பின்ன.. பக்கத்து வீட்டு பையனுக்கா
இம்புட்டு கஷ்டப்பட்டு எழுதி குடுப்பேன்..?!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// அது மிசஸ்.வெங்கட் எழுதி கொடுத்தது
பையனுக்கு வாழ்த்துக்கள் //

என் Wife Handwriting என்னுதை விட
அழகா இருக்கும்.. அதான் நான் Points
சொல்ல சொல்ல அவங்க எழுதினாங்க..

வெங்கட் said...

@ உதவாக்கரை.,

// இந்த வரி எழுதி குடுத்த மிசஸ்.வெங்கட்க்கு
பாராட்டுக்கள் //

இப்படி எல்லாம் சொல்லக்கூடாது..
அப்புறம் கவிஞர் வைரமுத்து
கோவிச்சுக்குவாரு..!

ஹி., ஹி., ஹி...

வெங்கட் said...

@ நாய் நக்ஸ்.,

// பரிசு என்ன ஆச்சி ???
வழக்கம் போல உங்க MRS..-KU தானே???? //

" Best Actor Award " - நடிகருக்கு தர்றது..

அதை டைரக்டருக்கு தந்தாங்களான்னு
நீங்க கேட்டா கூட பரவாயில்ல..
அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம்..

ஆனா நீங்க படத்தை பாத்தவங்களுக்கு
தந்தாங்களான்னுல்ல கேக்கறீங்க..!

வெங்கட் said...

@ உதவாக்கரை.,

// முதல்ல ஒன்னாம் வகுப்பு சேர்க்கும் போது
எந்த சாதின்னு கேட்பதையும் சேர்த்த பிறகு
சாதியை அடிப்படையாக வைத்து ஸ்காலர்சிப்
கொடுப்பதையும் நிறுத்தினாலே அடுத்த
தலைமுறையிலாவது இந்த சாணி ஒழிந்து விடும் .. //

கரெக்ட் தான்..! ஆனா எந்த காலத்திலும்,
எந்த அரசியல் கட்சியும் இதுக்கு
முயற்சி எடுக்காது..

அப்புறம் அரசியல் பண்ண முடியாது.!

வெங்கட் said...

@ Mohamed.,

// நீங்க VAS ஆளுதானே!!!! இத மட்டும்
மிசஸ் வெங்கட் எழுதினது’னு சொல்லி..
மற்றையதெல்லாம் வெங்கட் எழுதினது’னு
நம்ப வைக்க பாக்குறீங்க... ஆனாலும் நாம
நம்ப மாட்டோமே!!!! //

என்ன இப்படி சந்தேகப்படறீங்க...

அந்த பதிவுல " வெள்ளை நிறத்தொரு
பூனைன்னு " ஒரு பாட்டு இருக்குல்ல...
அதுவே நான் எழுதினது தான்..
( என் டைரில... )

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// கலக்கல் குழந்தைகள் தின கட்டுரை.
எப்பயும் போல 1st ப்ரைஸா..?! //

இது குழந்தைகள் தினம் இல்ல..
சுதந்திர தின விழா பேச்சுப் போட்டி.

ஆகஸ்ட் 15-ம் தேதியே மேடையில பேசி
1st Prize வாங்கியாச்சு..!

வெங்கட் said...

@ ஆதி.,

// ஓய்வாக இருந்தால் என்னை அழைக்க
முடியுமா வெங்கட்? //

நாளை கட்டாயம் அழைக்கிறேன்..
:)

வெங்கட் said...

@ திலீபன்.,

// எங்களை பாத்து எங்க அப்பா நண்பர்கள்
நிறைய பேர் இப்டி பண்றாங்க.... //

ஓ.. கிரேட்..!

மேடையில கைத்தட்டல் வாங்க
என்ன வேணா பேசலாம்.. ஆனா
நடைமுறையில அதை பின்பற்றதுக்கு
ஒரு " தில் " வேணும்.. அது உங்கப்பாகிட்ட
இருக்கு..!

அவருக்கு என் மரியாதைக்குரிய வணக்கங்கள்.!

// "தந்தை முன்னெடுப்பார்
தனயன் வழி நடப்பான்" //

உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
தொடருங்கள்..!

ஹேமா said...

இது நீங்க எழுதின மாதிரியே இல்லையே! உங்க ப்ளாகை முழுசா படிச்சுட்டு இதை சொல்றேன்!

வெங்கட் said...

@ ஹேமா.,

// இது நீங்க எழுதின மாதிரியே இல்லையே!
உங்க ப்ளாகை முழுசா படிச்சுட்டு இதை
சொல்றேன்! //

ஆஹா.. என்ன எல்லாம் ஒரே மாதிரி
பேசறாங்க.?!

ஒருவேளை எனக்கு " புக்கர் பரிசு "
கிடைக்க கூடாதுன்னு வெளிநாட்டுக்காரங்க
பண்ற சதியா இருக்குமோ..?!

Dhileepan said...

//எனக்கு " புக்கர் பரிசு " //

இன்னாது புக்கர் பரிசா....????
புக் வாங்கி வெச்சுகிட்டு கர்ர்ர்ர் னு கொறட்டை விட்டு தூங்கறதுக்கு எல்லாம் "புக்கர்" பரிசு குடுக்க மாட்டங்க....!! வெங்கட் சார்...........வேற பரிசு தா குடுப்பாங்க....

//வெளிநாட்டுக்காரங்க
பண்ற சதியா இருக்குமோ..?!//

உள் "ஸ்டேட்" லையே உங்களுக்கு 'சதி' பண்ண ஆளில்ல....!!!
இதுல வெளி "நாட்டுல" வேற சதி பண்றங்கலாமா.....!!!

உங்க பதிவ விட இந்த மாதிரி கமெண்ட் தாப்பா செம காமெடி...........
ஒரு விசயத்தை உண்மையான்னு கண்டுபிடிக்க மெஜாரிட்டி வெச்சு தான் பார்ப்பாங்க......
அது மாதிரி இந்த கட்டுரை "ஜாதிகள் இல்லையடி பாப்பா" எழுதினது உங்க மனைவி தான்னு நிறையா பேர் கருத்து சொல்லிருக்காங்க....

அதே போல நீங்க எழுதினதுனும் "தைரியமா" ஒருத்தர் சொல்லிருக்கார்.... ஹி ஹி ஹி ஹி.... அந்த தைரியசாலி நீங்க தான்.......சரி நடு நிலையோட சொல்றேன் பெரும்பான்மையானோர் கருத்துப்படி என் கருத்தும் இத எழுதியது உங்க மனைவி தான் அப்டிங்கறேன்........இது எப்படி இருக்கு

//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா// எப்பிடியோ இவர் தான் முதல்ல குட்டை உடச்சு உங்க மனைவி னு ஒரு சின்ன தீக்குச்சி உரைச்சு போட்டார்.......அது பெருசா வளந்துடுச்சு...................ஹி ஹி ஹி ஹி.....!?!?!?!?!?!?!?!?!?

பெசொவி said...

Excellent write-up!

Good preparations!

Hats off!

பொன்.செந்தில்குமார் said...

புல்லரிக்குதுப்பா....தல இதான் உங்களோட மொக்கையில்லாத மெகா பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவுன்னு நினைக்கிறேன் சரியா.....

ராஜி said...

வெங்கட் said...

@ உதவாக்கரை.,

// இந்த வரி எழுதி குடுத்த மிசஸ்.வெங்கட்க்கு
பாராட்டுக்கள் //

இப்படி எல்லாம் சொல்லக்கூடாது..
அப்புறம் கவிஞர் வைரமுத்து
கோவிச்சுக்குவாரு..!
>>>
உங்க மிசஸ் எழுதினதோ இல்லை வைரமுத்து எழுதுனதோ ஆகமொத்தம் உங்க சரக்கில்லைன்னு தெரிஞ்சு போச்சு. அப்புறம் வேறென்ன சொல்ல, பையனுக்கு வாழ்த்துக்கள்

சந்தானம் as பார்த்தா said...

// ஜாதிகள் இல்லையடி பாப்பா..!

அரசியல்வாதிகள் இருக்கும்வரை இதெல்லாம் செல்லாது...

TERROR-PANDIYAN(VAS) said...

//செயற்குழு : வெங்கட், டெரர், ஷாலினி
செல்வா, ஷம்ஹிதா //

என்ன நடக்குது இங்கே? எல்லாருக்கும் லீவ் கேன்சல் A CALL BACK TO MY TEAM

TERROR-PANDIYAN(VAS) said...

@வெளங்காதவன்

//உங்க வீட்டு வாண்டு பேசுன மாதிரி தெரியலையே.....
:)//

பின்ன? பாடின மாதிரி இருக்கா? அணக்கோண்டாவிடம் ஆட்டோகிரப் வாங்க வந்த சிறுவனே. அப்படியே ஓடி விடு. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

// அது மிசஸ்.வெங்கட் எழுதி கொடுத்தது. பையனுக்கு வாழ்த்துக்கள்//

இவருதான் பேனாவுக்கு இங்க் வாங்கி கொடுத்து பக்கத்தில் உக்காந்து டிக்டேட் பண்ணாரு. இந்திய அரசியல் சட்டத்தில் ஓசி சேறு பற்றி என்ன சொல்லி இருக்காங்கனு லாயரை கண்சல்ட் பண்ணவன்தானடா நீ

TERROR-PANDIYAN(VAS) said...

@NAAI-NAKKS

// பரிசு என்ன ஆச்சி ???
வழக்கம் போல உங்க MRS..-KU தானே??? //

சிறந்த கணவரை அடைந்தவர்னா? அது எப்பவும் அவங்களுக்கு தான்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@Faaiqu

//நீங்க VAS ஆளுதானே!!!! இத மட்டும் மிசஸ் வெங்கட் எழுதினது’னு சொல்லி.. மற்றையதெல்லாம் வெங்கட் எழுதினது’னு நம்ப வைக்க பாக்குறீங்க... ஆனாலும் நாம நம்ப மாட்டோமே!!!!//

நீங்க புத்திசாலி. ஒரு வரி விடாம எல்லாம் வெங்கட் தான் எழுதினாரு அப்படினு பதிவில் சொல்லாமலே கண்டுபிடிச்சிடிங்க.

TERROR-PANDIYAN(VAS) said...

@Dhileepan

// புக் வாங்கி வெச்சுகிட்டு கர்ர்ர்ர் னு கொறட்டை விட்டு தூங்கறதுக்கு எல்லாம் "புக்கர்" பரிசு குடுக்க மாட்டங்க....!! //

அதனாலதான் உங்களுக்கு கொடுக்கவில்லை.

//உள் "ஸ்டேட்" லையே உங்களுக்கு 'சதி' பண்ண ஆளில்ல....!!!//

எப்படி இருப்பாங்க? நாங்க தான் எல்லாரையும் காலி பண்ணிட்டோமே.

// ஒரு விசயத்தை உண்மையான்னு கண்டுபிடிக்க மெஜாரிட்டி வெச்சு தான் பார்ப்பாங்க..//

அண்ணே நான் 100 கிலே இரும்பு தரேன் நீங்க ஒரே ஒரு கிலோ தங்கம் தாங்களேன்.

//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) எப்பிடியோ இவர் தான் முதல்ல குட்டை உடச்சு உங்க மனைவி னு ஒரு சின்ன தீக்குச்சி உரைச்சு போட்டார்... //

இரவில் ஒளி வீசினாலும் அந்த ஒளி நிலவுக்கு சொந்தமில்லை என்று அறியாத சிறுவன் அவன்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ராஜி

//உங்க மிசஸ் எழுதினதோ இல்லை வைரமுத்து எழுதுனதோ ஆகமொத்தம் உங்க சரக்கில்லைன்னு தெரிஞ்சு போச்சு. அப்புறம் வேறென்ன சொல்ல, பையனுக்கு வாழ்த்துக்கள்//

அட இல்லிங்க.. பதிவை படிச்சிட்டு இந்த வரி நல்லா இருக்கு. யாராவது கேட்ட நான் எழுதினது சொல்லுங்க ப்ளீஸ் அப்படினு ரொம்ப கெஞ்சி கேட்டு இருந்தாரு. இப்போ வெங்கட் மனைவி எழுதினது சொன்னா ஏன் என்னோட பெயரை சொல்லவில்லைன்னு அவர் கோச்சிபாரு இல்லை.. :)