சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

13 October 2011

ஸ்பெஷலான நாள்..!


அக்டோபர் 13..
ஒரு ஸ்பெஷலான நாள்..

ஏன்னா..
இன்னிக்கு ஒரு புத்திசாலிக்கு Birthday..

Stop..,Stop.., Stop..!!

யாருப்பா அது.. அதுக்குள்ள
" Happy Birthday to You "-ன்னு பாடறது..?

நான் Genius-க்கு Birthday-ன்னா
சொன்னேன்..?
( நம்ம Birthday April 13.. )

நான் சொன்ன அந்த புத்திசாலி
என் மனைவி மாலா.!

" Happy Birthday to Mala.! "

என் மனைவியின் புத்திசாலிதனத்துக்கு
ஒரு சின்ன உதாரணம்...

எங்களுக்கு கல்யாண Fix ஆனப்ப...

" இந்த பையனா.. நல்லா யோசிம்மானு "
பல பேர் குழப்பினாங்க..

அப்ப எல்லாம்..

" அவரு ரொம்ப நல்லவரு., வல்லவரு.,
அன்பானவரு., பண்பானவருன்னு.. "
மத்தவங்ககிட்ட என்னை பத்தி
எனக்கே தெரியாததை எல்லாம்
எடுத்து சொல்லி..

" என்னை தான் கல்யாணம்
பண்ணிக்கணும்னு " ஒரு
புத்திசாலித்தனமான Decision
எடுத்தவங்க.. என் மனைவி..!

அதே மாதிரி எனக்கு என் Wife-கிட்ட
பிடிச்ச இன்னொரு விஷயம்..

என் மனைவி ரொம்ப சிம்பிள்..!

ஒரு பிரபல பிளாக்கரோட மனைவிங்கற
பந்தா அவங்ககிட்ட கொஞ்சம் கூட
கிடையாது..! ( ஹி., ஹி.! )

ஆங்.. முக்கியமான மேட்டரு
சொல்ல மறந்துட்டேனே....

இந்த வருஷம் அவங்க Birthday-க்கு
ஒன்ரை பவுன்ல ஒரு நெக்லஸ்
வாங்கி தரலாம்னு யோசிச்சிட்டு
இருக்கேன்..

என்ன அப்படி சந்தேகமா
பார்க்கறீங்க..?

இதே மாதிரி..

2008-ல - 7000 ரூபாய்க்கு ஒரு பட்டுப்புடவை.
2009-ல - 10000 ரூபாய்க்கு ஒரு மொபைல்.
2010-ல - 15000 ரூபாய்க்கு ஒரு LED Tv..

எல்லாம் வாங்கி தரணும்னு யோசிச்சி
இருந்தேன் தெரியுமா..! ( ஹி., ஹி.! )
.
.

82 Comments:

Kannan said...

"எல்லாம் வாங்கி தரணும்னு யோசிச்சி
இருந்தேன் தெரியுமா..! "

அப்ப இதுவரைக்கும் வாங்கி குடுத்தது இல்லையா........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

வைகை said...

என்னை தான் கல்யாணம்
பண்ணிக்கணும்னு " ஒரு
புத்திசாலித்தனமான Decision
எடுத்தவங்க.. என் மனைவி..!//

அத நினைச்சுதான் இன்னும் வருத்தப்படறாங்க போல? :)

வைகை said...

எல்லாம் வாங்கி தரணும்னு யோசிச்சி
இருந்தேன் தெரியுமா..! ( ஹி., ஹி.! )//


.வரப்போற உங்க பர்த்டேக்கு நானும் ஒரு கார் வாங்கி தரலாம்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்னா பார்த்துக்கங்களேன் :))

Lakshmi said...

இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

முதல்ல அவங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க எங்க சார்பில

அப்பறம் இந்த நெக்லஸ் மேட்டர்
எல்லா வீட்டுலயும் நடக்குறது தான்
இதுலே எந்த தப்பும் இல்ல.

ஆனா அவங்க கிட்ட மட்டும் சொல்லிடாந்தீங்க இப்ப வேணாம்ன்னு சொல்லுவாங்க அடுத்த மாசம் வாங்கித்தரச்சொல்லி மூக்கு சிந்துவாங்க உஷார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Happy birthday Mala Madam

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு பிரபல பிளாக்கரோட மனைவிங்கற
பந்தா அவங்ககிட்ட கொஞ்சம் கூட
கிடையாது..! ( ஹி., ஹி.! )///

ஆமா உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு வருத்தம்தான் பட முடியும். பந்தாவா பண்ண முடியும்?

பெசொவி said...

//இந்த வருஷம் அவங்க Birthday-க்கு
ஒன்ரை பவுன்ல ஒரு நெக்லஸ்
வாங்கி தரலாம்னு யோசிச்சிட்டு
இருக்கேன்..//

எப்படி? இனிமேலாவது நல்ல பதிவு எழுதலாமான்னு யோசிசுகிட்டிருக்கீங்களே, அது மாதிரியா?

பெசொவி said...

எங்கள் சங்கத்தின் முக்கிய உறுப்பினரான திருமதி வெங்கட் அவர்களை வாழ்த்துவதில் பேருவகை அடைகிறேன்.

பெசொவி said...

@ Venkat
//நான் Genius-க்கு Birthday-ன்னா
சொன்னேன்..?
( நம்ம Birthday April 13.. )//

அது எப்படி? நீங்க ஜீனியஸ்னு சொன்னா அன்னிக்கு ஏப்ரல் ஒண்ணாந்தேதியா தான இருக்க முடியும்?

பெசொவி said...

//ஒரு பிரபல பிளாக்கரோட மனைவிங்கற
பந்தா அவங்ககிட்ட கொஞ்சம் கூட
கிடையாது..! ( ஹி., ஹி.! )//

அது உண்மைதான? ஒட்டு மொத்த பந்தாவையும் நீங்களே குத்தகைக்கு எடுத்துகிட்டா அவங்ககிட்ட பந்தா எப்படி இருக்கும்?

பெசொவி said...

@ venkat
//" இந்த பையனா.. நல்லா யோசிம்மானு "
பல பேர் குழப்பினப்பினாங்க..//

இப்படி எல்லாம் தமிழ் எழுதினா குழப்பாம என்ன செய்வாங்க? :))

ஜெகன் said...

மாலா, பழசையே நினைச்சு feel பண்ணாதீங்க.. Life'ல இதெல்லாம் சகஜம்.

Many more happy returns of the day!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//நான் சொன்ன அந்த புத்திசாலி
என் மனைவி மாலா.!
//
அப்புறம் எப்படி உங்களை கட்டிகிட்டாங்க ?

samhitha said...

:) happy b'day mala mam
may all ur dreams come true

//இந்த வருஷம் அவங்க Birthday-க்கு
ஒன்ரை பவுன்ல ஒரு நெக்லஸ்
வாங்கி தரலாம்னு யோசிச்சிட்டு
இருக்கேன்..//
என்ன பாஸ் இது எப்போ செயல் வீரரா மாறுவீங்க?? :D

அப்புறம் எல்லோரும் உங்களுக்கும் ஏதாவது வாங்கித் தரணும்னு யோசிக்க போறாங்க ...

@மாலா
விட்ராதீங்க இது நல்ல சான்ஸ்!!எல்லோர் முன்னாடியும் சொல்லிட்டார்..
உடனே கூட்டிட்டு போய் நெக்லஸ் வாங்கிடுங்க!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

யோசிச்ச உங்கள சும்மாவா விட்டாங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மனைவிக்கு மரியாதை...

உங்களை செலைக்ட் பண்ணி புத்திசாலிதனமாக முடிவெடுத்தாக கூறியுள்ளீர்...
இதை அவர்கள் ஒத்துகொள்கிறார்களா..

சகோதரிக்கு என்னுடைய
வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க பாஸ்...

Sen22 said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாலா...

நீங்க இன்னும் யோசிச்ட்டே இருங்க பாஸ்...
அதுக்குள்ள அடுத்த பிறந்த நாள் வந்துடும்... :)))

வெளங்காதவன் said...

எனக்குத் தரவேண்டிய பார்ட்டிய மங்குனிக்கு தரவும்........

வெளங்காதவன் said...

வெங்கட்டும் கூகிளும் பார்ட்னர்களா?

#கமெண்டு டிஸ்பிளே ஆவல, மை லார்ட்!

HVL said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!- உங்கள் மனைவிக்கு.

ஒரு ரசிகர் மன்றம் தொடங்கலாம்ன்னு நினைக்கிறேன் - இது உங்களுக்கு
அப்படீன்னு நினைச்சா தப்பு.அதுவும் உங்க பொறுமைசாலி மனைவிக்கு. ஒரு கீபோர்டை மட்டுமே ஆயுதமா வச்சி இப்படி மொக்கை போடறீங்களே! அவங்களா நெனச்சா பாவமா இருக்கு!

பெசொவி said...

@ Samhitha
//என்ன பாஸ் இது எப்போ செயல் வீரரா மாறுவீங்க?? :D//

Welcome to VKS!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

ஹாப்பி பர்த்டே மேடம் ,
இவ்வளவு அதி புத்திசாலியான நீங்க இவற கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு இருந்துருக்கலாம் . .

இந்திரா said...

மாலாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

இந்திரா said...

இன்னும் அந்த டைல்ஸ் பூரிக்கட்டை உடையலையா???

அருண் பிரசாத் said...

Many More Happy Returns of the Day Mrs.Venkat :)

Mohamed Faaique said...

///
ஏன்னா..
இன்னிக்கு ஒரு புத்திசாலிக்கு Birthday..//

அப்போ, ஒக்டோபர் 13 பிறந்த மத்தவங்கெல்லாம் மடையர்களா??? (இந்த கொம்மண்ட்`அ இன்று பிறந்த யாரவது ஒருவர் பாத்துட்டு உங்க வீட்டு ஜன்னல்`ல கல்ல வீசி எறிந்தாலும் நமக்கு சந்தோசம்தானே)

Mohamed Faaique said...

///Stop..,Stop.., Stop..!!//

இன்னும் ஸ்டார்ட்`ஏ பண்ணல...

Mohamed Faaique said...

//யாருப்பா அது.. அதுக்குள்ள
" Happy Birthday to You "-ன்னு பாடறது..?///

யாரோ உங்க பிறந்த நாளு`னு நெனச்சிட்டாங்க போல... உங்களுக்கு வயசு போரதுல அவ்ளோ சந்தோசம்...

Mohamed Faaique said...

///நான் Genius-க்கு Birthday-ன்னா
சொன்னேன்..?
( நம்ம Birthday April 13.. )
///

இனிமேல் முட்டால்கள் தினம் ஏப்ரல் 1`லிருந்து ஏப்ரல் 13`க்கு மாற்றப்படுகிறது என்பதை அறியத்தருகிறோம்..

Mohamed Faaique said...

///" இந்த பையனா.. நல்லா யோசிம்மானு "
பல பேர் குழப்பினாங்க..///

பெரியங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...

TERROR-PANDIYAN(VAS) said...

பாசமலருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!! :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//அத நினைச்சுதான் இன்னும் வருத்தப்படறாங்க போல? :)//

அது ஆனந்த வருத்தம். ஆனந்த கண்னீர் இருக்கலாம் ஆனந்த வருத்தம் இருக்க கூடாதா? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//Happy birthday Mala Madam//

மச்சி!! எங்க இருந்து காப்பி பேஸ்ட் பண்ண? உனக்கு தன் இங்கிலீஷ் வராதே.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பெசொவி

//எப்படி? இனிமேலாவது நல்ல பதிவு எழுதலாமான்னு யோசிசுகிட்டிருக்கீங்களே, //

அட்லீஸ்ட் நாங்க யோசிக்கவாது செய்யரோம். நீங்க... :)

TERROR-PANDIYAN(VAS) said...

//அது எப்படி? நீங்க ஜீனியஸ்னு சொன்னா அன்னிக்கு ஏப்ரல் ஒண்ணாந்தேதியா தான இருக்க முடியும்?//

எப்ரல் ஒண்ணாந்தேதியை ஜீனியஸ் தினம்னு மாத்தனும் ஆசைபடறிங்க.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெகன்

//மாலா, பழசையே நினைச்சு feel பண்ணாதீங்க.. Life'ல இதெல்லாம் சகஜம்.//

லேட்டா கல்யாணம் பண்ணிகிட்டோமே அப்படினு இன்னுமா பீல் பண்றாங்க.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பெசொவி

// Welcome to VKS! //

இன்னும் பயம் தெளியலை போல. கூட்டம் சேர்ப்பதை நிறுத்தவே மாட்டறிங்க... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//Many More Happy Returns of the Day Mrs.Venkat :)//

நீ மட்டும் தான் மச்சி பெரிய மனுஷன்.. :)

ரசிகன் said...

Happy Birth Day Mrs.Venkat. :)

பெசொவி said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//Happy birthday Mala Madam//

மச்சி!! எங்க இருந்து காப்பி பேஸ்ட் பண்ண? உனக்கு தன் இங்கிலீஷ் வராதே.. ://

ங்கொய்யால, நீ ஒழுங்கா தமிழ்ல எழுது!

TERROR-PANDIYAN(VAS) said...

@பெசொவி

//ங்கொய்யால, நீ ஒழுங்கா தமிழ்ல எழுது! //

1. 100 மார்க் எடுத்தாதான் பாஸா? 99.75 எடுத்தா பாஸ் இல்லியா. எனக்கு இந்த ரிப்ளை டைப் பண்ணிட்டு அதில் ஏதாவது தப்பு இருக்கான்னு நீங்க நாலு வாட்டி படிக்கவில்லைன்னு சொல்ல்ங்க.. :))

2. //அவர்களை வாழ்த்துவதில் பேருவகை அடைகிறேன். //

என்னாது இது... :))

பெசொவி said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

நீ மட்டும் தான் மச்சி பெரிய மனுஷன்.. :)//

அப்போ வெங்கட் பெரிய மனுஷன் இல்லையா? Welcome to VKS-னு சொன்னா, ஆள் சேர்க்கறோம்னு சொல்லுவே. அதால நீயே தனியா வெங்கட்டை மட்டம் தட்டுவோர் சங்கம்னு ஒன்னு ஆரம்பிச்சுடு!

TERROR-PANDIYAN(VAS) said...

@பெசொவி

//அப்போ வெங்கட் பெரிய மனுஷன் இல்லையா? //

மனிதர் உணர்ந்து கொள்ள அவர் மனித ஜாதியல்ல..யல்ல..ல்ல.. அதையும் தாண்டி புனிதமானவர்.. :))

பெசொவி said...

@ Terror

//என்னாது இது... :))//

பேருவகை = பெருமை + உவகை அதாவது பெரிய மகிழ்ச்சி.

பண்புத்தொகை
(ஈறு போதல் என்ற விதிப்படி "மை" கெட்டு பெரு + உவகை என்று ஆனது.
ஆதி நீடல் விதிப்படி பேரு+உவகை ஆகும்.
இனமிகல் விதிப்படி பேர்+உவகை அதாவது பேருவகை)

(ஆண்டவா, என்னை ஏன் இவ்ளோ தமிழ் அறிவோட படைச்சே?)

TERROR-PANDIYAN(VAS) said...

@பெசொவி

//"மை" கெட்டு , இனமிகல் //

நல்ல நாளும் அதுவுமா ஏன் சார் கெட்டு போனது மீந்து போனது எல்லாம் சொல்லி வாழ்த்தறிங்க.. :))

இம்சைஅரசன் பாபு.. said...

தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ...!!

பெசொவி said...

@ Terror

இலக்கணம் அதை முற்றிலும் விளக்கனும் அப்படின்னு நான் நினைக்கிறேன், ஆனா

இலக்கணம் அதை முற்றிலும் விலக்கனும் அப்படின்னு நினைக்கற உனக்கு சொல்லித் தர நினைச்சது என் தப்புதான்
(என்னா ரைமிங்கு, என்னா டைமிங், என்னமோ போடா - மைன்ட் வாய்ஸ்)

Vinodhini said...

அண்ணிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

பெசொவி said...

@Terror
//எனக்கு இந்த ரிப்ளை டைப் பண்ணிட்டு அதில் ஏதாவது தப்பு இருக்கான்னு நீங்க நாலு வாட்டி படிக்கவில்லைன்னு சொல்ல்ங்க.. :))
//

உண்மைதான் என்னோட ரிப்ளை நாலு தடவை படிச்சாதான் ஏதாவது தப்பு (ஒருவேளை) இருந்தா தெரியும், ஆனா உன்னோட கமெண்டை ஒரு தடவை படிச்சாலே போதும், தப்பெல்லாம் கண்ணுல பட்டுடும் :))

பெசொவி said...

//TERROR-PANDIYAN(VAS) said...

//அது எப்படி? நீங்க ஜீனியஸ்னு சொன்னா அன்னிக்கு ஏப்ரல் ஒண்ணாந்தேதியா தான இருக்க முடியும்?//

எப்ரல் ஒண்ணாந்தேதியை ஜீனியஸ் தினம்னு மாத்தனும் ஆசைபடறிங்க.. :)
//

இப்படியே பேசிகிட்டிருந்தா, அந்த நாளை TERROR-PANDIYAN (VAS) தினம்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க, அதுக்குள்ளே யாராவது இவனை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில சேர்த்துடுங்களேன்!

TERROR-PANDIYAN(VAS) said...

@பெசொவி

//நினைச்சது என் தப்புதான்//

இப்போவாது ஒத்துகோங்க. நீங்க செய்யரது நினைக்கிரது எல்லாம் தப்புன்னு... :P

TERROR-PANDIYAN(VAS) said...

@பெசொவி

//உண்மைதான் என்னோட ரிப்ளை நாலு தடவை படிச்சாதான் ஏதாவது தப்பு (ஒருவேளை) இருந்தா தெரியும்,//

ஆமாம். நம்ம முதுகில் இருக்கது தெரியரது கஷ்டம் தான்... வெவ்வ்வவே... (எங்க நீங்க செய்யுங்க பாக்கலாம்)... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பெசொவி

//அதுக்குள்ளே யாராவது இவனை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில சேர்த்துடுங்களேன்! //

கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க உங்களை கூட்டிகிட்ட போக ஏற்கனவே ஆம்புலன்ஸ் கிளம்பிடுத்தாம் அதுலே போய்டலாம்.. :)

பெசொவி said...

@ TERROR
//கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க உங்களை கூட்டிகிட்ட போக ஏற்கனவே ஆம்புலன்ஸ் கிளம்பிடுத்தாம் அதுலே போய்டலாம்.. :) //

அதுவும் சரிதான், பேஷன்ட் கூடவே டாக்டரும் வந்தா நல்லாத்தான் இருக்கும், நானும் உன்கூடவே வர்றேன்
:))

பெசொவி said...

@ terror

.வேவவ்வ்வெ

நீ செஞ்சதை நான் திருப்பி செஞ்சேன் :))

Mohamed Faaique said...

///ஒரு பிரபல பிளாக்கரோட மனைவிங்கற
பந்தா அவங்ககிட்ட கொஞ்சம் கூட
கிடையாது..! ( ஹி., ஹி.! )//

நீங்க பதிவர்`னு அவங்க கூட ஒத்துக் கொள்ள இல்ல... எப்டியெல்லாம் சமாளிக்குரீங்க,,,

Mohamed Faaique said...

வாழ்த்துக்கள்...
தமிழ் மணத்தை காணலையே!!!

ரசிகன் said...

//இன்னிக்கு ஒரு புத்திசாலிக்கு Birthday.
நான் Genius-க்கு Birthday-ன்னா
சொன்னேன்..?( நம்ம Birthday April 13.. )//
உங்களுக்கு இவ்ளோ தமிழ் பற்றா? பொய் கூட இங்க்லீஷ்(Genius) ல தான் சொல்வீங்களா..
தமிழ்ல(புத்திசாலி) சொல்லமாட்டீங்களா..
(நீங்க புத்திசாலி இல்லை - உண்மை
நீங்க Genius- பொய் )

samhitha said...

boss
இங்க பாருங்க நீங்க மாடரேசன் எடுத்தாலும் எடுத்தீங்க VKS நம்பர் போட்டு விளையாடுறாங்க (ஒரு வேலை கத்துக்குறாங்களோ?)

பெசொவி அண்ட் டெரர் :D

ஜெகன் said...

@ரசிகன்:
1. //உங்களுக்கு இவ்ளோ தமிழ் பற்றா?//
2. //பொய் கூட இங்க்லீஷ்(Genius) ல தான் சொல்வீங்களா.. //
3. //தமிழ்ல(புத்திசாலி) சொல்லமாட்டீங்களா..//

அவர் சொல்ல வந்தது Genieousங்க.. ரெண்டு எழுத்து மிஸ் ஆனதுக்கெல்லாமா இப்படி தப்பு கண்டுபிடிச்சு மூணு கேள்வி கேப்பாங்க?

Mohamed Faaique said...

///
//இந்த வருஷம் அவங்க Birthday-க்கு
ஒன்ரை பவுன்ல ஒரு நெக்லஸ்
வாங்கி தரலாம்னு யோசிச்சிட்டு
இருக்கேன்..//
என்ன பாஸ் இது எப்போ செயல் வீரரா மாறுவீங்க?? :D

அப்புறம் எல்லோரும் உங்களுக்கும் ஏதாவது வாங்கித் தரணும்னு யோசிக்க போறாங்க ...

@மாலா
விட்ராதீங்க இது நல்ல சான்ஸ்!!எல்லோர் முன்னாடியும் சொல்லிட்டார்..
உடனே கூட்டிட்டு போய் நெக்லஸ் வாங்கிடுங்க!///

கட்சி மாறிட்டாங்களா??? இவ்வளவு காலம் இருந்ததே பெரிய விஷயம்தான்!!!

அனு said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், மாலா.. :)

@வெங்கட்

// என்னை தான் கல்யாணம்
பண்ணிக்கணும்னு " ஒரு
புத்திசாலித்தனமான Decision
எடுத்தவங்க..//

நல்ல நாளும் அதுவுமா அவங்க செஞ்ச தப்பை சொல்லிக்காட்டி அவங்கள அழ வைக்கலன்னா உங்களுக்கு தூக்கம் வராதே.. :)

சத்ரியன் said...

சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வருஷா வருஷம் - எதையாவது வாங்கி கொடுக்க நினைக்கும் நண்பனுக்கு பாராட்டுக்கள்.

பெசொவி said...

@வெங்கட்

// என்னை தான் கல்யாணம்
பண்ணிக்கணும்னு " ஒரு
புத்திசாலித்தனமான Decision
எடுத்தவங்க..//

எப்படியும் உங்களையும் புத்திசாலியா மாத்தியே தீருவது என்று எண்ணித்தான் அந்த முடிவு எடுத்தாங்க, என்ன செய்ய? விதி வலியது :))

TERROR-PANDIYAN(VAS) said...

பெசொவி

// மாதியே தேறுவது //

:)) விளக்கம் ப்ளீஸ்...


(வெங்கட் ப்ளாக் பாவம்)

பெசொவி said...

@ TERROR

Elephant time, Cat also time

hihi!

TERROR-PANDIYAN(VAS) said...

@பெசொவி

//Elephant time, Cat also time//

unfortunately Cat subscribed for Follow-up comments.. :) மறுபடியும் உங்களுக்கு வெவ்வ்வவே... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெகன்

//Test comment for the cats.. :) //

மீயாவ்... :)

(Comment acknowledged)

Madhavan Srinivasagopalan said...

// 2010-ல - 15000 ரூபாய்க்கு ஒரு LED Tv.. //

இந்த ரேட்டுக்கு வெறும் சி.ஆர்.டி டி.வி தான் கெடைக்கும்..
எல்.ஈ.டி டிவியாம்.. எல்.ஈ.டி..

RAMVI said...

//" என்னை தான் கல்யாணம்
பண்ணிக்கணும்னு " ஒரு
புத்திசாலித்தனமான Decision
எடுத்தவங்க.. என் மனைவி..!//

இப்ப ரொம்ப வருத்தப்படறேன்னு சொன்னாங்க!!

மாலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சேலம் தேவா said...

திருமதி.மாலா வெங்கட் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!!

எங்க தல மாதிரி ஜீனியஸ் கணவரா கிடைச்சதுக்கு எவ்வளவு புண்ணியம் செஞ்சிங்களோ..?! :)

மாய உலகம் said...

வாழ்த்துக்கள் சகோதரிக்கு...

மாலா வெங்கட் said...

என் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.!

vinu said...

75 happy birth day to you mrs.venkat

selvam said...

anna unga yella postum romba nalla irukku.................

karthikkumar said...

தல அண்ணிக்கு என் சார்பா பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிருங்க .. :)

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
பாசமலருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!! :)////@ டெரர்

பரவாயில்லையே போன வாரம்தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுத பழகனும் சொல்லி என்கிட்டே வந்தீங்க.. பார்த்தீங்களா ஒரே வாரத்துல பழகிட்டீங்க ....உங்களுக்கும் வாழ்த்துகள் மாம்ஸ் . :)

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ரமேஷ்

//Happy birthday Mala Madam//

மச்சி!! எங்க இருந்து காப்பி பேஸ்ட் பண்ண? உனக்கு தன் இங்கிலீஷ் வராதே.. :)////மாம்ஸ் எங்க இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுனீங்க?.. உங்களுக்குத்தான் தமிழே வராதே .. :))

ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் said...

மங்குனி: மன்னா சேலத்திலிருந்து நம் ஒற்றன் ஒரு தகவல் கொண்டு வந்துள்ளான் மன்னா...
ஏ.மன்னர்:உடனே வரச்சொல் மங்குனி...தகவலை உடனுக்குடன் தெரிவிப்பதில் அவனுக்கு நிகர் அவனே...
ஒற்றன்: மன்னா நான் உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை கொண்டுவந்துள்ளேன்..மன்னா...
ஏ.மன்னா:அப்படியா உடனே சொல்..ஒற்றா..
ஒற்றன்:மன்னா வலைப்பூவின் வார்த்தைவித்தகர் வெங்கட்டின் இல்லத்தரசிக்கு Oct13அன்று பிறந்தநாளாம்...
ஏ.மன்னர்:ம்ம்ம்... ஒற்றா இன்றைக்கு என்ன தேதி தெரியுமா..
ஒற்றன்:Oct14..மன்னா
ஏ.மன்னர்:ஏன் இன்னும் 2 நாள் கழித்துசொல்லியிருக்கலாமே...
இவ்வளவு சீக்கிரமாக சொல்லிவிட்டாயே ஒற்றா...
ஒற்றன்:மன்னா அது வந்து... வரும் வழியில் என் மாமன் எனக்கு கிடாவைத்து விருந்து வைத்தான்,அதான் விழாவை சிறப்பிக்கலாமென...
ஏ.மன்னன்:என்ன...விழாவை சிறப்பித்தாயா இரு உன் விலாவை உடைக்கிறேன் பார்...மங்குனி நேற்றுதானடா.. என் சகோதரியிடம் முதல்முறையாக சாட்டில் பேசினேன்...பிறந்தநாள் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டதே....என் சகோதரியை பிறந்தநாள் அன்று வாழ்த்தமுடியாமல் போய்விட்டதே...அனைத்திற்கும் காரணம் இதோ இந்த ஒற்றன் தான் உடனே கழுவில் ஏற்றுங்கள்...

சகோதரி மாலாவுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....வலைப்பூவின் விகடகவி வெங்கட்டுக்கு பிறந்தநாள் ஏப்ரல் 13 என் சகோதரி மாலாவுக்கு அக்டோபர் 13..என்ன ஒற்றுமை...

வாழ்க இத்தம்பதியர் பல்லாண்டு....வளமுடன்...

மங்குனி இதைதான் MADE FOR EACH OTHER என்று ஆங்கிலத்தில் சொல்வார்களோ....

வெங்கட் said...

@ ஆல்.,

இங்கே கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றிகள்..!

இந்த பதிவில் என்னால் கமெண்ட் ரிப்ளை
போட முடியவில்லை.. அட்ஜஸ்ட் பண்ணிக்கவும்.

காரணம்..

1. தீபாவளி சேல்ஸ் ஆரம்பித்து விட்டது.
வேலை அதிகம்.

2. எங்கள் டெரர் கும்மி Vs தமிழ்மணம் பிரச்னை.,

http://www.terrorkummi.com/2011/10/blog-post_10.html

Cpede News said...

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com