சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

01 August 2011

ரெடி., ஸ்மைல்., க்ளிக்..!


எனக்கு அமெரிக்கால இருந்து
ஒரு கேமரா வாங்கணும்னு
ரொம்ப நாளா ஆசை..

அமெரிக்கால தான் நவம்பர் மாசம்
" Thanks Giving Day Deals " போடுவாங்களாம்..
அப்ப 50% வரை Offer இருக்கும்னு
என் மச்சான் கீர்த்தி சொல்லி இருக்கான்..

போன வருஷம் அவன் Friend-க்கு
Canon SX30 வாங்கிட்டு வந்தான்.
$ 435 -க்கு விக்குற அந்த கேமரா
Offer-ல $ 370 தானாம்..

போன மாசம் போன் பண்ணி பேசிட்டு
இருந்தப்ப...

" உங்களுக்கு கேமரா எதாவது
வேணுமா மாமான்னு " கேட்டான்..!

" எனக்கு Gift-ஆ குடுக்கற மாதிரி ஐடியா
இருந்தா.. Canon SX30 ஒண்ணு வாங்கிட்டு
வான்னு சொன்னேன்..! "

" ஹலோ.. ஹலோ.. ஹலோ..!
இங்கே சிக்னல் சரியா கிடைக்கலை
மாமான்னு " போனை கட் பண்ணிட்டான்..!

( நமக்கு மேல கில்லாடியா இருக்கானுங்க..)

இதை பத்தி என் Wife-கிட்ட சொன்னேன்..
அதுக்கு அவ

" நான் வேணா அவனை கேமரா
வாங்கிட்டு வர சொல்லட்டுமா..? "

" ம்ம்.. சொல்லு.. சொல்லு..!
கூடவே உங்க மாமா நீ போனை
' கட் ' பண்ணினதால பயங்கர
கோவமா இருக்கார்னு சொல்லு.. "

" வேணாங்க.. இப்ப போனை தான் கட்
பண்ணினான்.. அப்புறம் உங்களையே
கட் பண்ணிடுவான்.! "

" ஓ..! சரி.. நீ கேமரா பத்தி மட்டும் பேசு..! "  

" அதுக்கு முன்னாடி நமக்குள்ள
ஒரு டீலிங்..! "

" என்னா டீலிங்..? "

" கேமரா வங்கிட்டு வந்ததுக்காக
அவன் கல்யாணத்துல அவனுக்கு
1 பவுன்ல மோதிரமும்.,

வாங்கிட்டு வர சொன்னதுக்காக
எனக்கு 1 பவுன்ல கம்மலும் செஞ்சி
தர்றீங்களா..?! "

" ஆணியே புடுங்க வேணாம்..! "

இவங்க இல்லன்னா நாம்மளால
அமெரிக்கால இருந்து கேமரா
வாங்க முடியாதா என்ன..?

டக்னு ஒரு சூப்பர் ஐடியா தோணிச்சு..!

நம்ம Friends-க்கு தெரிஞ்சவங்க
யாராச்சும் அமெரிக்காவுல
இருப்பாங்கல்ல.. அவங்ககிட்ட
வாங்கிட்டு வர சொல்லலாம்..
வந்ததும் காசு குடுத்துடலாம்..

என் தேடுதலை தொடங்கினேன்..

ஆனா என் கெரகம்.. நான் முதல்ல
கேட்டது என் Friend சுரேஷை..

" டேய்.. உனக்கு தெரிஞ்சவங்க
யாராவது அமெரிக்கால இருக்காங்களா..? "

" ஓ.. நாலெஞ்சு பேர் இருக்காங்களே..! "

" அப்படியா..? யார்றா..? "

" ஓபாமா., பில் கிளிண்டன், பில் கேட்ஸ்..! "

" கிர்ர்ர்ர்ர்..! "
.
.

35 Comments:

சங்கவி said...

:))))

HVL said...

//
ஓ.. நாலெஞ்சு பேர் இருக்காங்களே..! "

" அப்படியா..? யார்றா..? "

" ஓபாமா., பில் கிளிண்டன், பில் கேட்ஸ்..! //

அது எப்படி உங்க friends உங்கள மாதிரியே இருக்காங்க?

கோகுல் said...

கிளிக்.கிளிக்.கிளிக்.
சிரிப்புதான் இப்படி கேக்குது.

மதுரை சரவணன் said...

super... vaalththukkal

வெங்கட் said...

@ HVL.,

// அது எப்படி உங்க friends உங்கள
மாதிரியே இருக்காங்க? //

ஹா., ஹா., ஹா.. என்னை மாதிரியே
இருக்காங்களா..?! நோ.. சான்ஸ்..!

" ஓபாமா., பில் கிளிண்டன், பில் கேட்ஸ்
எல்லோரையும் இவனுக்கு தெரியுமாம்.! "
அவங்களுக்கு தான் இவனை தெரியாதாம்..
இதான் அவன் சொல்ல வந்தது..

ஆனா நான் எப்படி சொல்வேன் தெரியுமா.?

" ஓபாமா., பில் கிளிண்டன், பில் கேட்ஸ்
எல்லோருக்கும் என்னை தெரியும்..! "

இந்திரா said...

நம்மள மாதிரி தானே நம்ம நண்பர்களும் இருப்பாங்க..

Chitra said...

" வேணாங்க.. இப்ப போனை தான் கட்
பண்ணினான்.. அப்புறம் உங்களையே
கட் பண்ணிடுவான்.! "


..... practical...... :-))))))

Mohamed Faaique said...

////எனக்கு அமெரிக்கால இருந்து
ஒரு கேமரா வாங்கணும்னு
ரொம்ப நாளா ஆசை.. ///

ஏன் ஸார்??? அமெரிக்கா கெமரா`ல போட்டோ எடுத்தா 30 வயசு கொரஞ்சு 40 வயசு ஆளு போல தெரிவீங்க`னு யாராச்சும் சொன்னாங்களா????

///அப்ப 50% வரை Offer இருக்கும்னு ////
///$ 435 -க்கு விக்குற அந்த கேமரா
Offer-ல $ 370 தானாம்.. ///

பாஸ்.. உங்களுக்குள்ள ஒரு கணித மேதை ஒளிஞ்சுகிட்டு இருக்காரு`ங்குரத வாண்டட்`ஆ நிரூபிச்சுடீங்க...

Mohamed Faaique said...

///போன மாசம் போன் பண்ணி பேசிட்டு
இருந்தப்ப...///

தெளிவா சொல்லுங்க ஸார்... "அவர் போன் பண்ணி நீங்க பேசிகிட்டு இருக்குரப்ப....."

////" உங்களுக்கு கேமரா எதாவது
வேணுமா மாமான்னு " கேட்டான்..! ///

ஹி..ஹி... நாங்க நம்பிட்டோம்... சார்.. நீங்கதானே கேட்டீங்க.. ச்சும்மா சொல்லுங்க ஸார்...

Mohamed Faaique said...

///
" ம்ம்.. சொல்லு.. சொல்லு..!
கூடவே உங்க மாமா நீ போனை
' கட் ' பண்ணினதால பயங்கர
கோவமா இருக்கார்னு சொல்லு.. " ///

நீங்க கோவமா இருக்குர கெட்டப்`அ நெனச்சு அவரு கெக்கே பிக்கே`னு சிரிச்சுர போராரு.... ஜாக்ரத...

Mohamed Faaique said...

///ஆனா என் கெரகம்.. நான் முதல்ல
கேட்டது என் Friend சுரேஷை..///

இதையேதான் சுரேஷும் சொல்லிகிட்டு இருக்காராமே!!!

எது எப்படியோ... உங்க மச்சான் தப்பிச்சுட்டாரு... அமெரிக்க வாசகர்கள் (இருந்தால்) Thanks Giving Day Deals முடியும் வரை இந்தப் பக்கம் வந்துராதீங்க...சொல்லிபுட்டேன்..)

royal ranger said...

நல்ல காமெடி ஒரு சின்ன டவுட் ............நீங்க எழுதுரது எல்லாம் ...............உண்மையிலேயே நடந்ததா இல்ல கற்பனையா ...?!

vinu said...

/////வெங்கட் said...
" ஓபாமா., பில் கிளிண்டன், பில் கேட்ஸ்
எல்லோருக்கும் என்னை தெரியும்..!///

இதை இன்னும் சிறப்பா... அவங்க எல்லாருக்கும் வெங்கட்ன்னு ஒருத்தரைத் தெரியும்... ஆனா அந்த வெங்கட் நானானுதான் அவங்களுக்குத் /எனக்குத் தெரியாதுன்னு நீங்க சொல்லி இர்ருகலாம்.... ஹி ஹி ஹி ஹி ஹி

மருதமூரான். said...

////" கேமரா வங்கிட்டு வந்ததுக்காக
அவன் கல்யாணத்துல அவனுக்கு
1 பவுன்ல மோதிரமும்.,

வாங்கிட்டு வர சொன்னதுக்காக
எனக்கு 1 பவுன்ல கம்மலும் செஞ்சி
தர்றீங்களா..?! "

" ஆணியே புடுங்க வேணாம்..! "////

பாருங்க பாஸ். இந்தப் பொம்பிளைப் பிள்ளைங்க பிறந்த வீட்டை எப்பவும் மறக்கிறது இல்லை. அதுபோல, கஸ்ரப்படுத்திறதும் இல்ல.

HVL said...

//
" ஓபாமா., பில் கிளிண்டன், பில் கேட்ஸ்
எல்லோருக்கும் என்னை தெரியும்..! " //

என்னைக் கூடத்தான் தெரியும்! (நான் தற்பெருமையெல்லாம் பேசறது இல்லை)
என்ன அதுக்கு ஃப்ளைட் புடிச்சு அமெரிக்கா போகணும்.


பின்ன என்னங்க? எதிர்ல நின்னும் கூட தெரியலைன்னா அவங்களுக்கு கண்ணு தெரியலைன்னு அர்த்தம்.

HVL said...

//
" ஓபாமா., பில் கிளிண்டன், பில் கேட்ஸ்
எல்லோருக்கும் என்னை தெரியும்..! " //

நீங்க ஒசாமா பின் லேடன் friendஆ?

Anbu.Bala said...

Venkat sir,
enna vennum unngallukku..nan vaanki annupurane.(unnmai sir unnmai).aanna oru condition..neenga nallatha orae oru post podannum..

Anbu

Anonymous said...

//அப்ப 50% வரை Offer இருக்கும்னு

$ 435 -க்கு விக்குற அந்த கேமரா
Offer-ல $ 370 தானாம்.. //

பாஸ்.. உங்களுக்குள்ள ஒரு கணித மேதை ஒளிஞ்சுகிட்டு இருக்காரு`ங்குரத வாண்டட்`ஆ நிரூபிச்சுடீங்க...//

ada arivu kolundhu 50% "varai" offer apdina from 1% to 50% nu artham :D

samhitha said...

//" எனக்கு Gift-ஆ குடுக்கற மாதிரி ஐடியா
இருந்தா.. Canon SX30 ஒண்ணு வாங்கிட்டு
வான்னு சொன்னேன்..! "//
:D idhu nalla idea va irukke

// டேய்.. உனக்கு தெரிஞ்சவங்க
யாராவது அமெரிக்கால இருக்காங்களா..? "
//
yen boss namma clinton kitta apove solli irundha hillary apdiye parcel delivery panni irupaanga illa :)

DRபாலா said...

நல்ல நகைச்சுவை பதிவு

பெசொவி said...

//வெங்கட் said...

ஆனா நான் எப்படி சொல்வேன் தெரியுமா.?

" ஓபாமா., பில் கிளிண்டன், பில் கேட்ஸ்
எல்லோருக்கும் என்னை தெரியும்..! "//

கீழ்ப்பாக்க ஆஸ்பத்திரியில இருக்கற டாக்டருக்குக் கூட உங்களை (பத்தி) தெரியுமாமே?
(ஆமாமா, தலை சிறந்த டாக்டரை அவங்களுக்கு தெரியாம இருக்குமா? அப்படின்னு கமென்ட் போட தடை விதிக்கப் படுகிறது)

பெசொவி said...

//நம்ம Friends-க்கு தெரிஞ்சவங்க
யாராச்சும் அமெரிக்காவுல
இருப்பாங்கல்ல.. அவங்ககிட்ட
வாங்கிட்டு வர சொல்லலாம்..
வந்ததும் காசு குடுத்துடலாம்..
//

கடைசி வரி கவிதை தானே!
(கவிதைக்கு பொய் அழகு)

வெங்கட் said...

@ Mohamed.,

// ஏன் ஸார்??? அமெரிக்கா கெமரா`ல
போட்டோ எடுத்தா 30 வயசு கொரஞ்சு
40 வயசு ஆளு போல தெரிவீங்க`னு
யாராச்சும் சொன்னாங்களா???? //

அங்கிள்..! அப்படி யாராச்சும் சொன்னதை
நம்பி தான் நீங்க அந்த கேமரா
வாங்கினீங்களா..?

வெங்கட் said...

@ Mohamed.,

// பாஸ்.. உங்களுக்குள்ள ஒரு கணித மேதை
ஒளிஞ்சுகிட்டு இருக்காரு`ங்குரத வாண்டட்`ஆ
நிரூபிச்சுடீங்க... //

அது சரி.. ஆமா.. இப்ப எல்லாம் சம்பளம்
வாங்கினதும்.. அதை நீங்களே எண்ணிக்கறீங்களா..?
இல்ல எப்பவும் போல உங்க பிரண்ட் தான்
எண்ணி சரியா இருக்கான்னு சொல்றாரா..?!

வெங்கட் said...

@ Mohamed.,

// உங்க மச்சான் தப்பிச்சுட்டாரு...
அமெரிக்க வாசகர்கள் (இருந்தால்)
Thanks Giving Day Deals முடியும் வரை
இந்தப் பக்கம் வந்துராதீங்க...சொல்லிபுட்டேன்..)//

இப்படி எல்லாம் சொல்லி.. எனக்கு
கேமரா வர்றதை தடுக்க முடியாது..

செல்சியா ( கிளிண்டன் பொண்ணு )
" நவம்பர் மாசம் நான் இந்தியா வர்றப்ப
உங்களுக்கு ஒரு கேமரா வங்கிட்டு
வர்றேன்னு." நேத்தே போன் பண்ணி
சொல்லிட்டாங்க..

வெங்கட் said...

@ ராயல்.,

// நல்ல காமெடி ஒரு சின்ன டவுட்,
நீங்க எழுதுரது எல்லாம் உண்மையிலேயே
நடந்ததா இல்ல கற்பனையா ...?!//

எனக்கும் ஒரு டவுட்..

நான் அடிவாங்கினதா எழுதற
பதிவுக்கு எல்லாம் உங்களுக்கு
" இது கற்பனையான்னு " டவுட்
வர மாட்டேங்குதே ஏன்..?

வெங்கட் said...

@ வினு.,

// அவங்க எல்லாருக்கும் வெங்கட்ன்னு
ஒருத்தரைத் தெரியும்... ஆனா அந்த
வெங்கட் நானானுதான் அவங்களுக்குத்
/எனக்குத் தெரியாதுன்னு நீங்க சொல்லி
இர்ருகலாம்.... ஹி ஹி ஹி ஹி ஹி//

எனக்கு இப்படி எல்லாம் பொய் பேச
வராதுங்க..

என்னை அவங்களுக்கு நல்லா தெரியும்..
அவங்க பசங்களும், நானும் ஒரே மிஸ்கிட்ட
தான் டியூசன் போனோம்..

அதுலயும் செல்சியா எனக்கு பக்கத்து
சீட்..!

வெங்கட் said...

@ HVL.,

// நான் தற்பெருமையெல்லாம்
பேசறது இல்லை //

" தற்பெருமை " அப்படின்னா என்னாங்க..?
நான் இதுவரை கேள்விப்பட்டதே
இல்லையே..!

வெங்கட் said...

@ அன்பு பாலா.,

// enna vennum unngallukku..nan vaanki annupurane.
(unnmai sir unnmai).aanna oru condition.. neenga
nallatha orae oru post podannum.. //

கேமரா வாங்கி ரெடியா வெச்சுக்கோங்க..
அடுத்த பதிவு " நல்ல போஸ்ட் " தான்..

ஐ மீன். தலைப்பு " நல்ல போஸ்ட் "

வெங்கட் said...

@ அனானி ( லேகா )

// ada arivu kolundhu 50% "varai" offer
apdina from 1% to 50% nu artham :D. //

விடுங்க., விடுங்க.. அவரே கஷ்டப்பட்டு
கூட்டல், கழித்தல் எல்லாம் போட்டு..
நான் போட்ட கணக்கு தப்புன்னு
கண்டு பிடிச்சி இருக்காரு.. நீங்க வேற..

( Mohamed போட்ட கணக்கு..

$435 - $370 = $65

SO.. 65% வருது.. வெங்கட் 50% னு
சொல்லி இருக்காரே..! அது தப்பு..! )

ராஜி said...

கேமரா வங்கிட்டு வந்ததுக்காக
அவன் கல்யாணத்துல அவனுக்கு
1 பவுன்ல மோதிரமும்.,

வாங்கிட்டு வர சொன்னதுக்காக
எனக்கு 1 பவுன்ல கம்மலும் செஞ்சி
தர்றீங்களா..?! "
>>
உங்க வீட்டு அம்மணியோட லிஸ்ட்டை கணக்கு போட்டு பார்த்தால், இப்ப தங்கம் விக்குற விலைவாசிக்கு, நீங்க டிஸ்கவுன்ட் இல்லாமயே 3 கேமரா வாங்கலாம் போல இருக்கே.

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// yen boss namma clinton kitta apove
solli irundha hillary apdiye parcel delivery
panni irupaanga illa :) //

சொல்லி வெச்சது தான்.. பிளைட்
பிடிக்கிற அவரசத்துல மறந்துட்டு
வந்துட்டாங்களாம்..!

வெங்கட் said...

@ பெ.சொ.வி,

// கீழ்ப்பாக்க ஆஸ்பத்திரியில இருக்கற
டாக்டருக்குக் கூட உங்களை (பத்தி)
தெரியுமாமே? //

தெரியாம இருக்குமா..?

உங்களை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு
வரும்போது சொளையா 1 லட்ச ரூபா
Fees குடுத்தேனே..!!

ராக்கெட் ராஜா said...

//" டேய்.. உனக்கு தெரிஞ்சவங்க
யாராவது அமெரிக்கால இருக்காங்களா..? "

" ஓ.. நாலெஞ்சு பேர் இருக்காங்களே..! "

" அப்படியா..? யார்றா..? "

" ஓபாமா., பில் கிளிண்டன், பில் கேட்ஸ்..! "
//

செம தமாசு

ராக்கெட் ராஜா said...

///போன மாசம் போன் பண்ணி பேசிட்டு
இருந்தப்ப...///

அது போன மாசம்