சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

07 February 2010

ஹார்லிக்ஸ் Vs காம்ப்ளான்
Horlicks ( 500 கிராம் ) - Rs 125
Complan ( 500 கிராம் ) - Rs 175

ஏதோ மளிகை கடை List-ன்னு
நினைச்சிக்காதீங்க..!

6 மாசத்துக்கு முந்தி
Horlicks தேவையில்லாம
Complan -ஐ வம்புக்கு இழுத்துச்சி..

" விலை கம்மியா Horlicks கிடைக்கும்
போது அதிக விலை கொடுத்து Complan
ஏன் வாங்கணும்..? " - இது Horlicks விளம்பரம்..

" தகரத்தோட விலையில தங்கம்
கிடைக்காது.. குழந்தைங்க ஆரோக்கியத்தில
Risk எடுக்கணுமா..? " - இது Complan பதிலடி.

இது நமக்கு தெரிஞ்சது தான்..
இப்போ விஷயம் என்னான்னா..

Horlicks - Pro Height -ன்னு
புது பானம் அறிமுகப்படுத்தி இருக்கு..
Complan மாதிரியே இதுல 23 Vitamins.

விலை..?
அதிகமில்லை 400 கிராம் - Rs 200
( அப்போ 500 கிராம் - Rs 250 )

Complan - விலை அதிகம்னு
சொன்ன Horlicks.,

இப்போ..,
அதைவிட 75 ரூபாய் அதிகத்துல
அதே மாதிரி ஒரு பானம்
கொண்டுவர்றது யாரை நம்பி..?

இதுல என்ன சந்தேகம்..?
நம்மள நம்பித்தான்...

திரிஷா சொன்னாங்கன்னு
" Vivel Soap " வாங்குன
ஆளுங்களாச்சே நாம..!

இனிமேலாவது உஷாரா
இருக்கணும்பா...,

நம்மள மாதிரி குழந்தை பசங்கள
இவிங்க ஏமாத்திபுடுவாங்க..!
.
.

3 Comments:

Anonymous said...

nammalai maathiri...!!!!!! venkat maathiri nu sollungka

PNS said...

Hi Venkat,

Oru pinnootathula "boost enna vilai"-nu kelvi vandha, Adhai vaichu or post ezhudhurayyaaa....

Po... Po.... Poikitte iru....

Nangaulumm Salem pakkam dhan!!!!!!!

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட் - விளம்பர உலகம் இது - அதிகம் பேர் ஏமாறுவதில்லை - குழந்தைச் பசங்க கூட சிரிச்சிட்ட்டுப் போய்டுவானுங்க

அப்புறம் பிஎனெஸ் சாதார்ணமா உங்கூர் பக்கத்துல இருக்கதாலே உரிமையோட கிண்டல் பண்றார். அதியும் மகிழ்ச்சியோட எடுத்துக் கிட்டது சரி - ஒரு வருத்த இழை ஓடுதே - லூஸ்லே வுட்ப்பா - சரியா

நல்வாழ்த்துகள் வெங்கட்