சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 February 2010

தேவையா இந்த விளம்பரம்.??!!

.

என் Friend-க்கு அவங்க வீட்டுல
ஒரு பொண்ணு பார்த்திருந்தாங்க.
ரெண்டு பேர் வீட்டுலயும் OK.,

ஆனா., என் Friend-க்கு மட்டும் Not OK..

அவன்கிட்ட சம்மதம் வாங்கற
பொறுப்பு என்கிட்டே வந்தது..

எப்படியோ பேசி சரிகட்டி.,
பொண்ணு பார்க்க கூட்டிட்டு போயி.,
பொண்ணுகிட்ட பேச வெச்சி.,
ஒரு வழியா OK வாங்கியாச்சு..

கல்யாண மண்டபத்துல....,

" டேய்.. இந்த கல்யாணம் நடக்கவே
நான்தான் காரணம்..! அதை
மனசுல வெச்சுக்கோ..! "
இப்படி ரெண்டு மூணு தடவை
மாப்பிள்ளைகிட்ட சொன்னேன்.

அப்ப என்கூட வந்த இன்னொரு நண்பன்
என் காதை கடிச்சான்..,

" டேய்..! உனக்கு பொது அறிவு கம்மியா..?
இல்ல.., பொதுவாவே அறிவு கம்மியா..? "

" ஏன்டா ..? "

" நாளைக்கு அவனுக்கும்.,
அவன் Wife-க்கும் ஏதாவது சண்டை வந்தா..,
முதல் அடி உனக்கு தான் தெரியுமுல்ல..? "

" ஐயோ சாமி..!!
இதை நான் யோசிக்கவே இல்லையே..! "

மீனே மசாலாவ தடவிக்கிட்டு.,
எண்ணையில குதிக்குதுன்னு
சொல்லுவாங்களே.
.!  - அது இதுதானா..?
.
.

12 Comments:

Dr.P.Kandaswamy said...

A good experience for youngsters

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நல்ல பொன்மொழி

யாத்ரீகன் said...

ok !

திருவாரூரிலிருந்து சரவணன் said...

//இதைதான்
" மீனே மசாலாவ தடவிக்கிட்டு.,
எண்ணையில குதிக்குதுன்னு
சொல்லுவாங்களோ..!? "//

உதாரணம் ரொம்ப நல்லா இருக்கு. நீங்க சொல்லி இருக்குற விஷயம் ரொம்ப சரி. வருஷத்துக்கு பத்து லட்சம் சம்பாதிச்சு குடும்பத்துல ரொம்ப குழப்பம் இல்லாம போன, நம்மள அவங்க வீட்டு விஷேஷத்துல கூட கண்டுக்க மாட்டாங்க.ஆனா வீட்டுக்குள்ள வில்லங்கம் வந்தா அவ்வளவுதான். டைட்டானிக் கப்பலை கவுத்ததே இவந்தான்னு எல்லார்கிட்டயும் சொல்லி நம்ம பெறரிப்பேராக்கிடுவாங்க.

Anonymous said...

மீனே மசாலாவ தடவிக்கிட்டு.,ரூம்போட்டு யோசிச்சியானு சொவாங்களே...அப்படித்தான் யோசிச்சீங்களா..புது மொழி!!!!!!

சொந்த செலவில் சூனியம் வைச்சிகிட்டா..அப்படித்தன் எழுதுவாங்க... இப்ப புதுசா இப்படி ஒரு பழமொழியா
nice....

ஆனால் அந்த நண்பன் கூறியது உண்மைத்தாங்க... இதைமாதிரி நிறைய அனுபவம் இருக்கிறதோ...

வெங்கட் said...

---- > டாக்டர் அய்யா வணக்கம்..,
உங்க மாதிரி பெரியவங்க நம்ம
Blog-க்கு வர்றதே பெரிய சந்தோசமுங்க..!

-----> சரவணன்..,
நல்லா சொன்னீங்க..,

Raj said...

meene masala thadavikitu ennaila kuthikirathu ...intha line romba nalla erruku da ..romba yosipeyo ?? hmm good da .

வெங்கட் said...

ராஜ்..,
உன் வாழ்த்துக்கு நன்றி..
Regulara- வந்து படிடா..!

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

மீனே தானே மசாலா தடவிக்கிட்டு எண்ணையிலே ஸ்விம் பண்ணறதுக்கு குதிச்சா - எப்பிட்ப்பா யோசிக்கிறீங்க - அதுக்குன்னு ஒரு படம் வேறே - பலே பலே -ரசிச்சேன்

விளைவுகளை எதிர் பாராமல் கடமையைச் செய்ததற்கு பாராட்டுகள்.

நல்வாழ்த்துக்ள் வெங்கட்

வெங்கட் said...

சீனா சார்..,
கடமையை செய்..,
பலனை எதிர்பார்க்காதே..
அது தானே சார் நம்ம பாலிசி..

Mohamed Faaique said...

"மீனே மசாலாவ தடவிக்கிட்டு.,
எண்ணையில குதிக்குதுன்னு
சொல்லுவாங்களே..! " - அது இதுதானா..?"
நாங்க உங்க மொக்கைய தேடி வந்து படிக்கிறது இல்லையா..
அது மாதிரி இருக்கு..

Raja said...

//மீனே மசாலாவ தடவிக்கிட்டு.,
எண்ணையில குதிக்குதுன்னு
சொல்லுவாங்களே..!//

சூப்பர்ணா.. ரெம்ப நேரம் சிரிச்சிட்டு இருந்தேன்....