சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 February 2010

வாசகர்களை Comment எழுத வைப்பது எப்படி..?

ஐயோ பாவம்.,
உங்களுக்கும் இது தெரியாதா,,?
சரி வாங்க சேர்ந்தே யோசிப்போம்...

1. Comment எழுதி., ஓட்டு போடுற
வாசகர்களுக்கு பரிசு குடுக்கலாம்..
எவ்வளவு குடுக்கலாம்கிறது
உங்க Choice..
( இப்பல்லாம் ஓட்டுக்கு Rate ஏறிபோயிடுச்சி
அதையும் மனசுல வைங்க..)

2. சிறந்த Comment எழுதும் வாசகர்களை
குலுக்கல் முறையில தேரிந்தேடுத்து
Singapore Tour கூட்டிட்டு போகலாம்..
( 5 Days & 4 Nights )

3. தொடர்ந்து Comment எழுதும்
வாசகர்களுக்கு நேரு Stadium-ல
பாராட்டு விழா எடுக்கலாம்.

4. அதை விட முக்கியம்..,
நாம நல்ல பதிவா எழுதணும்..,
அப்ப அவங்களே Comment எழுதுவாங்க..

பின் குறிப்பு:
சரி வந்தது வந்தீங்க..
ஒரு Comment எழுதிட்டு போங்களேன்..
.
.

12 Comments:

நாஞ்சில் பிரதாப் said...

அஹா...எவ்ளோ பெரிய கண்டுபிடிப்பு... இது தெரியாம போச்சே...
கமெண்ட்டும் ஓட்டும் சும்மா வாரி வழங்கிடமாட்டோம்...

அக்கவுண்ட் நம்பர் தர்றேன் எதாச்சம் பார்த்துப்பண்ணுங்க...

வெங்கட் said...

பிரதாப் சார்..,

எவ்வளவோ பண்ணிட்டோம்.,
இதை ப்ண்ண மாட்டோமா..?

ஹி., ஹி., ஹி.,

அக்பர் said...

இவ்வளவு டெக்னிக் இருக்கா. சரி இந்த டெக்னிக்கையும் சேர்த்துகிங்க.

நானும் எழுதியிருக்கேன். எனக்கும் கமெண்ட் போடுங்க. :)

வெங்கட் said...

அக்பர்..,
உங்க வருகைக்கு நன்றி..!
நாமதான் கைகாசு செலவாகாம
யார் என்ன கேட்டாலும் செய்வோமே..!
உங்க ஆசையா நிறைவேத்திட்டேனா..?

jana said...

En Iniya Venkat...

Unnoda padivugal ellam muthu...
Nee namma friendsoda sothu...
Romba polambitte podum niruthu..

ippadikku...

Unakku sollikudutha Nanban...

Chitra said...

1. எனக்குள்ள பரிசு எங்கே? ஓட்டுக்கு Rate ஏறிபோயிடுச்சி அதையும் மனசுல வைங்க..

2. சிங்கப்பூர் ட்ரிப் எல்லாம் வேண்டாங்க .......... அந்த காசையும் அக்கௌன்ட்ல சேத்து போட்டுருங்க......

3. Nehru Stadium வந்துட்டு போற செலவை அனுப்ப மறக்காதீங்க. .....

4. நல்ல பதிவு எழுதிட்டு சொல்லுங்க. ..... ஹா,ஹா,ஹா,ஹா.......

ரசிகன் said...

My Tips...
Option 1 : மதுரைக்கு போய் market நிலவரம் தெரிஞ்சிகிட்டு வாங்க‌
Option 2 : Air Asia ல‌ cheaper packages இருக்கு போல‌
option 3 : Avoid தல.. அது பயமில்லாத பய புள்ள‌...
option4 : எங்கள மாதிரி 4 பேர் இருக்கோம்ல.. dont worry be happy

வெங்கட் said...

சித்ரா,,,
உங்க Comment-க்கு நன்றி.,
கடைசியில உங்க Punch-ஐ மறக்காம
வெச்சிட்டீங்க,,,

வெங்கட் said...

ரசிகன்.,
உங்க Comment ரசிக்கும்படி
உள்ளது.. நிஜமாலுமே நீங்க
நல்ல ரசிகன் தான்.

cheena (சீனா) said...

உண்மையிலேயே எனக்குத்தான் நேரு ஸ்டேடியம்ல பாராட்டு விழா நடத்தணும் - தெரியுமா - நான் கொஞ்சம் பிஸி - டேட் எல்லாம் என் பிஏ கிட்டக் கேட்டுக்கங்க - சரியா

வெங்கட் said...

சீனா சார்..,
நேரு ஸ்டேடியம்ல விழா
எல்லாம் ஓ.கே தான்..
அப்புறம் அங்கே வந்து.,
விழாவுக்கு வரச் சொல்லி
கட்டாயப்படுத்தறாங்கன்னு
ஏதும் சொல்லக்கூடாது..!

மங்களூர் சிவா said...

கமெண்ட் எழுதிட்டேன்
:)