
( படித்ததில் பிடித்தது...)
வணக்கம் சொல்லி
சந்திக்கையிலும்..,
வருகிறேன் என
விடைபெறுகையிலும்..,
இயல்பாய் பேசி
விலகுகிறாய் நீ..
இயக்கமே தடைப்பட்டு
நிற்கிறேன் நான்..
------------------------------------
" நீதான் " என்று சொல்ல
உனக்கு தைரியம் இல்லை..
" நானா..? " என்று கேட்க
எனக்கும் தெம்பில்லை..
உன் கவிதைப் பெண் யாரடா..??!!
------------------------------------
இருபது நிமிடம்
தாமதமாய் வந்த
என்னை
திட்டுகிறாய் நீ..,
இருபத்தியொரு வருடம்
தாமதமாய் வந்த
உன்னை
எதுவுமே சொல்லாமல்
அனுசரித்துக் கொள்கிறது
என் காதல்..!
------------------------------------
நீ கேட்டுக் கொண்டதால்
இந்த கவிதையைக் கூட
அழகாகவே எழுத
ஆசைப்படுகிறேன்..
ஆனாலும்
எழுதப்போவதில்லை..
காதலை விடவும்
அழகான ஒன்று
நமக்கெதற்கு..??!!
------------------------------------
பிரிந்து போன நாளில்
எல்லோரும் கொடுத்தார்கள்
நினைவு பரிசு..
நீ மட்டும் கொடுத்தாய்
உன் நினைவுகளை பரிசாக..
------------------------------------
விக்கலில் நான்
தண்ணீர் குடிப்பதில்லை..,
நினைப்பது நீயாக
இருந்தால் நீடிக்கட்டுமே..!!
------------------------------------
பின் குறிப்பு : உங்களுக்கு பிடிச்ச
காதல் கவிதைகளையும்
Comment Section-ல எழுதலாமே...!!
.
. Tweet
36 Comments:
அருமை
வாழ்த்துகள்....
பிரிந்து போன நாளில்
எல்லோரும் கொடுத்தார்கள்
நினைவு பரிசு..
நீ மட்டும் கொடுத்தாய்
உன் நினைவுகளை பரிசாக.//
பிடித்த வரிகள்
இங்கே கும்மினால் கவிதை எழுதியவரையே சாரும் என்பதால், கும்மியை நிறுத்திக் கொள்கிறேன்.
பிரிந்து போன நாளில்
எல்லோரும் கொடுத்தார்கள்
நினைவு பரிசு..
நீ மட்டும் கொடுத்தாய்
உன் நினைவுகளை பரிசாக..
Super
என்குப் பிடித்த கவிதை ஒன்று-
எழுது எழுது எனக்கொரு கடிதமெழுது
என்னைக் காதலிக்கிறாய் என்றல்ல..
வேறு ஒருவரையும் காதலிக்கவில்லை என்று...
க.க.க.போ.,
புரியல?
கலக்கல்
கவிதை
கலேக்ஷன்ஸ்
போங்கள்
//விக்கலில் நான்
தண்ணீர் குடிப்பதில்லை..,
நினைப்பது நீயாக
இருந்தால் நீடிக்கட்டுமே..!!//
இதே போல ஒரு கவிதை.
யாராவது நினைத்தால் விக்குமா?
அப்படி எனில் இந்நேரம்,
விக்கி விக்கியே செத்துபோய் இருப்பாயடி!
தபு சங்கர் கவிதைகள் போல தெரிகிறதே ....
ALL ARE GOOD..
எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். பந்த் அறிவிச்சு முடிச்சதும் பயந்துட்டு இந்த மாதிரி பதிவு போட்டா விட்டுடுவோம்னு நினைப்பு.
//நீ கேட்டுக் கொண்டதால்
இந்த கவிதையைக் கூட
அழகாகவே எழுத
ஆசைப்படுகிறேன்..
ஆனாலும்
எழுதப்போவதில்லை..
காதலை விடவும்
அழகான ஒன்று
நமக்கெதற்கு..??!!//
Good one...
Keep Rocking..!!!
இதுதாண்டா காதல்
அன்பே !
உன்னைக் கண்டதும்...
என்னையே மறந்தேன் !!
உன் தங்கையைக் கண்டதும்
உன்னையே மறந்தேன் !!!
பெயர் சொல்ல விருப்பமில்லை
// இங்கே கும்மினால் கவிதை எழுதியவரையே சாரும் என்பதால், கும்மியை நிறுத்திக் கொள்கிறேன். //
என்ன VKS மெம்பெர் பதுங்குறாரு......
@அருண்
//க.க.க.போ.,
புரியல?
கலக்கல்
கவிதை
கலேக்ஷன்ஸ்
போங்கள் //
அட அருண் நமக்கு சப்போர்ட் பண்றாரு அப்போ VKS ல இனி 4 பேரு தன?
@ரமேஷ்
//எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். பந்த் அறிவிச்சு முடிச்சதும் பயந்துட்டு //
ஹலோ யாருப்பா அது கூட்டத்துல கல்லு விடறது... உங்க கட்சில மத்த பிள்ளைங்க எல்லாம் எப்படி அமைதியா இருக்கு...
என்ன தலைவா மனசு எதவது சரி இல்லையா?? இப்படி காதல் கவிதை....
நேத்து எனக்கும் வெங்கட்டுக்கும் நடந்த தொலைபேசி உரையாடல்(நாங்களும் பேசுவோம்ல)
நான்: வெங்கட் பாத்தீங்களா. நானும் பிரபல பதிவர் ஆயிட்டேன். பதிவ எடுக்க சொல்லி கொலை மிரட்டல் எல்லாம் வருது.
வெங்கட்: ஹஹா (நம்பியார் சிரிப்பு அப்டின்னு அவரே சொன்னார்). மிரட்டல் விட்டதே நாங்கதான்.
நான்: போங்க வெங்கட் தமாஸ் பண்ணிக்கிட்டு. நீங்க பிரியாணியும், ஐநூறு ரூபாயும் கொடுத்து "Terror Pandiyan - (VAS) " அவர்களை VAS-la சேத்துடீங்க. நீங்க பிஸினெஸ் பிஸினெஸ் -னு சேலம் போயிடுறீங்க. அவருக்கு தனியா இருக்க பயமா இருக்கு அப்டின்னு எங்க கட்சில அடைக்கலம் கேக்குறாரு.
வெங்கட்: அடப்பாவி அப்படியா சொன்னாரு. அத வெளில சொல்லகூடதுன்னுதான அவருக்கு இன்னொரு 500 ரூபாய் கொடுத்தனே
நான்: ஒரு ஆளு தனியா எப்படி சங்கத்துல உக்கார்த்திருக்குறது. அதான் மக்கள் சக்தி அதிகமா இருக்குற எங்க கட்சில வரதுக்கு யோசிசுகிட்டு இருக்கார்.
உன்னையும்
எல்லோருக்கும்
பிடிக்கும்...
என்னையும்
எல்லோருக்கும்
பிடிக்கும்...
எங்களைத்தான்
எவருக்குமே
பிடிக்கவில்லை...
@ To All.,
இந்த Collections-ஐ பாராட்டிய
அனைவருக்கும் நன்றி..
இங்கே Powercut ரொம்ப
அதிகமா இருக்கு..
அதான் பதில் உடனே
போட முடியலை..
@ தனிகாட்டு ராஜா.,
// தபு சங்கர் கவிதைகள் போல
தெரிகிறதே //
கவிதை யார் எழுதி இருந்தா என்னங்க..?!!
" குழந்தைக்கு அம்மாவோட
பெயரா முக்கியம்..??!!
அம்மா தான் முக்கியம்..!! "
அதே மாதிரி
நமக்கு கவிதை தான் முக்கியம்..
@ ரமேஷ்..,
// எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்.//
என்ன ஒரு 50 மைல் இருக்குமா..?
@ டெரர்..,
// என்ன தலைவா மனசு எதவது சரி
இல்லையா?? இப்படி காதல் கவிதை //
கராத்தே.., குங்-பூ மாதிரி
இதுவும் ஒரு தற்காப்பு கலை..!!
என்ன யாருக்காவது
நான் சொல்றது புரியுதா..??!!
@ டெரர்..,
// அட அருண் நமக்கு சப்போர்ட் பண்றாரு //
ஓ.. உங்களுக்கு இந்த விஷயம்
தெரியாதோ...!! புதுசில்ல நீங்க...
அருணை நான் தான் அங்கே அனுப்பி
வெச்சி இருக்கேன்..
அவரு நம்ம SPY..
சம்பளம் : $ 12,000 ( வருஷத்துக்கு )
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ..
//நேத்து எனக்கும் வெங்கட்டுக்கும் நடந்த தொலைபேசி உரையாடல்(நாங்களும் பேசுவோம்ல)//
ஹி ஹி ஹி பொய் சொல்லாதிங்க. எங்க தலைவர் பிரபல பதிவர் ஆகிட்டாரு (நாங்களே சொல்லிப்போம்) அதனால (VKS கிட்ட இருந்து)கொலை மிரட்டல் அதிகம் வருது சொல்லி போன் பேசறதே இல்ல.
// நீங்க பிரியாணியும், ஐநூறு ரூபாயும் கொடுத்து "Terror Pandiyan - (VAS) " அவர்களை VAS-la சேத்துடீங்க//
(பிரியாணி வந்தது ஐநூறு ரூபா வரவே இல்லையே!!!!! இத பத்தி தலைவர் கிட்ட பேசணும்....)
//அவருக்கு தனியா இருக்க பயமா இருக்கு அப்டின்னு எங்க கட்சில அடைக்கலம் கேக்குறாரு.//
நாங்க இரண்டு பேரு, எங்களுக்கு பயமே கிடையாது, எப்பவும் ஒன்னதான் அடி வாங்குவோம்....
//ஒரு ஆளு தனியா எப்படி சங்கத்துல உக்கார்த்திருக்குறது.//
சிங்கள இருந்தாலும் சிங்கம்லே.....
//அதான் மக்கள் சக்தி அதிகமா இருக்குற எங்க கட்சில வரதுக்கு யோசிசுகிட்டு இருக்கார்.//
கோகுலத்தில் சூரியன் ப்ளாக் கலாய்கிற எல்லோரும் மக்கள் விரோத சக்தின்னு நேத்து BBC ல சொன்னது நீங்க இன்னும் கேள்வி படலய??
@வெங்கட்
// கராத்தே.., குங்-பூ மாதிரி
இதுவும் ஒரு தற்காப்பு கலை..!!
என்ன யாருக்காவது
நான் சொல்றது புரியுதா..??!! //
(ரகசியமாக...) தலைவா நம்ப ப்ளாக் வரதே 5 பேரு . அந்த 5 பேரும் உங்க போஸ்ட் kalaikaradu புல் டைம் வேலை & ஆபீஸ் வேலை பார்ட் டைம் பக்கரங்க... அவங்களையும் இப்படி அடிச்சி தொரத்தின நம்ப பொழப்பு எப்படி நடக்கும்??
@வெங்கட்
//அருணை நான் தான் அங்கே அனுப்பி
வெச்சி இருக்கேன்..
அவரு நம்ம SPY..
சம்பளம் : $ 12,000 ( வருஷத்துக்கு )//
ஆஹா.... அப்போ நந்தன் ஓலரிடன... இருந்தாலும் VKS spy பண்ண $12 ,௦௦௦ ரொம்ப ஓவரு. ஒரு 500 ருபாய் (வருசத்துக்கு) எக்ஸ்ட்ரா கொடுத்த நானே போயி இருப்பேன்.
டிஸ்கி : தலைவா நம்ப VKS மெம்பெர் மனம் புன்படும்படி எதாவது கமெண்ட் இருந்த அதா நீங்களே publish பண்ணாம DEL பண்ணிடலாம்...
// இங்கே Powercut ரொம்ப
அதிகமா இருக்கு..
அதான் பதில் உடனே
போட முடியலை //
காதலுக்கு பல எதிர்ப்பு இருக்கறது ok. காதல் கவிதை பற்றி blog எழுதறதுக்கும் தடையா?
Reminded by அருண் பிரசாத்'s விக்கல் கவிதை
ஒரு நாள் dinner சாப்பிடும்போது எனக்கு விக்கல் வந்தது. எனது நண்பன்
Swami: "டேய் அவனுக்கு தண்ணிய குடுங்கடா. விக்கி செத்துரப்போறான்"
நான்: விக்கிக்கொண்டே "நான் தண்ணி குடிக்கலன்னா, vicky ஏன்டா சாவறான்"
Vikram @ Vicky is another friend in my room.
/விக்கலில் நான்
தண்ணீர் குடிப்பதில்லை..,
நினைப்பது நீயாக
இருந்தால் நீடிக்கட்டுமே..!!//
இதே போல ஒரு கவிதை.
யாராவது நினைத்தால் விக்குமா?
அப்படி எனில் இந்நேரம்,
விக்கி விக்கியே செத்துபோய் இருப்பாயடி
வர்றவங்க எல்லாம் ஒரு விக்கல் கவிதை சொல்லனும்னு எதாவது ரூல்ஸ் போட்டிருக்கீங்களா வெங்கட்?
சரி.. வந்ததுக்கு நானும் சொல்லிடுறேன்..
--------------------------
நூறு முறை விக்கல் வந்த போதும் தண்ணீர் குடிக்க முடியாமல் தவிக்கிறேன்!
எங்கே அவள் என்னை நினைப்பதை நிறுத்தி விடுவாளோ என்று...
---------------------------
அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..
நான் அவளை
சுற்றினேன் காதலோடு..
அவள் அப்பா என்னை
சுற்றினார் அரிவாளோடு...
------------------------------
யார் கூட இருந்தால் நல்லா இருப்போம்னு நினைக்குறது பசங்க மனசு..
யார் கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு நினைக்குறது பொண்ணுங்க மனசு...
-----------------------------
சரி.. கடை ஏன் இவ்வளவு அமைதியா இருக்கு?? தனியா இருக்க பயமா இருக்கு..
எல்லாமே நெஞ்சில் நிற்கும் கவிதைகள்.
கூடவே யார் எழுதியது என்று போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
மீண்டும் உங்கள் ரசனைகளை எதிர்பார்க்கிறேன். மிக அருமை நன்பரே
//யாராவது நினைத்தால் விக்குமா?
அப்படி எனில் இந்நேரம்,
விக்கி விக்கியே செத்துபோய் இருப்பாயடி!//
யாருப்பா அது? நம்ம பிளாக்குக்கு தான், Followers இருக்காங்கனு பார்த்தா நம்ம Comment ஐயும் Follow பண்ணுறது.
அப்படியே காப்பி பேஸ்ட் செய்து இருக்கிறது
@அனு
//சரி.. கடை ஏன் இவ்வளவு அமைதியா இருக்கு?? தனியா இருக்க பயமா இருக்கு.. //
அன்புள்ள அருண், ரமேஷ், ரசிகன் மற்றும் பெ.சொ.வி. இங்கு உங்கள் தங்க தலைவி VAS பாத்து பயந்து போய் இருப்பதால் வேகமாக வந்து ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறேன்.
மிஸ்டர்.டெர்ரர் அனு இன்னும் வாக்கியத்த முடிக்கவே இல்ல. அதுக்குள்ளே என்ன. அதாவது என்னன்னா.
சரி.. கடை ஏன் இவ்வளவு அமைதியா இருக்கு?? தனியா இருக்க பயமா இருக்கு அப்டின்னு வெங்கட் புலம்புறாரு. என்ன டெர்ரர் எஸ்கேப் ஆயிட்டாரா. என்ன இருந்தாலும் நம்ம வெங்கட் ஆதரவு கொடுத்துடுவோம். (ஒரு சோடா குடிச்சிட்டு வர்றதுக்குள்ள என்ன அக்கபோரு)
என்ன பாஸ் ஒரே காதல் கவிதையா இருக்கு :)
அனைத்தும் அருமை.
(VAS மேல சத்தியமா கபி & பேஸ்ட் பன்னது)
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
--------------------------------
அம்மா பெயர் என்னவென்று கேட்டால்
“அம்மா” என்றே சொல்லுகிற குழந்தையைப்போல
உன்னை ஏன் பிடித்திருக்கிறதெனக் கேட்டால்
உன்னைப் பிடித்திருக்கிறது
என்று மட்டுமே சொல்ல முடிகிறது.
Vannakm Sir
romba nala poidu iruku pola
Superb!
Raasa!
அன்பின் வெங்கட்
காதல் கவிதைகள் குறுங்கவிதைகள் அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா
கையளவு மனசு!
எண் இதயம்
அவளின் உள்ளங்கையளவு தாண்!!
Post a Comment