சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

04 July 2011

Google-க்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு..?!!

 
வர வர இந்த கூகுள்காரனுக்கு
திமிர் அதிகமாயிட்டே இருக்கு..

ரெண்டு நாள் முன்னாடி எல்லா
Blog-லயும்  Problem இருந்தது.. ஆனா
அதை கூகுள் கண்டுக்கலை.. உடனடியா
சரி பண்ண எந்த Step-ம் எடுக்கலை..

பல பிளாக் ஓனர்ஸ்க்கு இது தெரியும்..
ஆனாலும் " இந்த பூனைக்கு யார்ரா
மணி கட்டறதுன்னு " பயந்துட்டு
அமைதியா இருந்துட்டாங்க...

ஆனா என்னால எல்லாம் அப்படி
இருக்க முடியாது..

" நாங்கல்லாம் புலிக்கே நெயில் பாலீஷ்
போடறவங்க...! "

வந்த கோவத்துல உடனே கூகுளை
செமையா திட்டி ஒரு Mail போட்டேன்
பாருங்க..

அவங்க பதறிட்டு அன்னிக்கு நைட்டே
Problem-ஐ சரி பண்ணிட்டாங்க..

ம்ம்.. அந்த பயம் இருக்கோணும்..!

அந்த மெயில் இதோ....


Hi Gokul.. sorry.. Google,

I ' Gokulathil suriyan ' Blog owner Venkat..
Two days my blog No Working,
No Commenting, No Voting..

This do.. Problem., That do.. Problem..
All do Problemo Problem..

First, I think.. I grow, You Jealous
and do Sadhi.. I angry a lot..

Then I talk other Blog owners..
find all same Problem..
So, Coming angry I control..

You Idiot.. Why No steps u take..?

You think ..You Big Appatakkar..??
You think Nobody ask..??

I here.. I ask.. Keep Mind..!!

Respectfully You problem solve now..
Else, I bad angry..

Once I angry, I dont know what do..
Then i no porumai asking.. only Attacking..

So You go and do the Problem right...

With Love.,
Venkat

டிஸ்கி : இப்பவாச்சும் நான் " Oxford University-ல "
தான் படிச்சேங்கறதை நம்பறீங்களா..?
.
.

47 Comments:

Shalini(Me The First) said...

பாஸ்! இப்படி இங்கிலீஸ்ல பதிவை போட்டா


VKS -காரங்களுக்கு எப்படி புரியும்?
அவங்களுக்கு புரியணுமேன்னு
அந்த மெயிலின் தமிழ் Translation இதோ

###
நான் " கோகுலத்தின் சூரியன் " பிளாக் ஓனர்
வெங்கட்.. ரெண்டு நாளா என் பிளாக் சரியா
ஓபன் ஆகல., கமெண்ட் போட முடியல.,
வோட்டும் போட முடியல.. எல்லாம் பிராப்ளம்.

என் வளர்ச்சி பிடிக்காம நீங்க தான்
எனக்கு எதிரா சதி பண்றீங்களோன்னு
நான் முதல்ல சந்தேகப்பட்டேன்.. அப்புறம்
தான் தெரிஞ்சது எல்லோருக்குமே அப்படி தான்
இருக்குன்னு.. அதான் வந்த கோபத்தை கண்ட்ரோல்
பண்ணிட்டேன்..

இதை சரி பண்ண நீங்க இதுவரை எந்த
முயற்சியும் எடுக்கலை.. ஏன் உங்களை
கேள்வி கேட்க யாருமே இல்லைங்கிற திமிரா..

நான் இருக்கேன்..! நான் கேப்பேன்..
மனசுல வெச்சுக்கோங்க..!

மரியாதையா இப்பவே இந்த பிரச்னையை
சரி பண்ணி தரணும்.. தர்றீங்க..!

இல்லன்னா.. எனக்கு கோவம் வந்தா
என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது..

அப்பல்லாம் நான் இவ்ளோ பொருமையா
பேசிட்டு இருக்க மாட்டேன்.. அடிதடிதான்..
சீக்கிரம் சரி பண்ற வேலைய பாருங்க..

அன்புடன்
வெங்கட்
###

பெசொவி said...

//டிஸ்கி : இப்பவாச்சும் நான் " Oxford University-ல "
தான் படிச்சேங்கறதை நம்பறீங்களா..?
.//

Flash News : Oxford University காலவரையின்றி மூடப் பட்டது, புரொபசர்கள் தற்கொலை முயற்சி!

பெசொவி said...

@ Shalini //அப்பல்லாம் நான் இவ்ளோ பொருமையா
பேசிட்டு இருக்க மாட்டேன்//

தலைவருக்கு English தெரியலைனா, தொண்டருக்கு தமிழ் தெரியாது போலிருக்கு,
யம்மா, அது "பொருமையா" இல்லை, "பொறுமையா"

பெசொவி said...

@ Shalini

மொழிபெயர்த்தா முழுசா பெயர்க்கனும். You Big Appatakkar..??-க்கு தமிழ்ல எப்படி வரும்னு சொல்லவே இல்லையே?

வெங்கட் said...

@ ஷாலினி.,

// அவங்களுக்கு புரியணுமேன்னு
அந்த மெயிலின் தமிழ் Translation
இதோ... //

வாவ்.. What a Translation...!!!

நானே Translate பண்ணி இருந்தா கூட
இவ்ளோ சிறப்பா செஞ்சி இருக்க
முடியாது.. பாராட்டுக்கள்..!

// VKS -காரங்களுக்கு எப்படி புரியும்? //

ம்ம்.. அதுவும் கரெக்ட்டு தான்..
தமிழையே எழுத்து கூட்டி.., அதுவும்
தப்பு தப்பா படிக்கிறவங்க தானே அவங்க...!

பெசொவி said...

@ venkat

இந்த லெட்டர் உங்களோடதுதான்னு நான் நம்பறேன், அண்ணன் கல்யாணத்துக்கு லீவ் லெட்டர் எழுதும்போது As I am suffering from my brother's marriage-னு எழுதினவர்தானே, நீங்க?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// Flash News : Oxford University காலவரையின்றி
மூடப் பட்டது, புரொபசர்கள் தற்கொலை
முயற்சி! //

நான் படிச்சி முடிச்சிட்டு., இந்தியா
வந்துட்டேனாம்.. நான் திரும்பி அங்கே
வந்து Professor-ஆ வேலையில ஜாயின்
பண்ற வரைக்கும் இப்படி தான் Strike
பண்ணுவாங்களாம்...!!

பெசொவி said...

@ venkat
இருந்தாலும் உங்க gutter சாரி, letter நல்லாத்தான் இருக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இத பாத்தா Oxford Dictionary படிச்சவரி மாதிரி கூட இல்லியே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Johnny Johnny yes papa
eating sugar
No papa
Telling lies
No papa
Open your mouth
o ha! ha!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

I ' Gokulathil suriyan ' Blog owner Venkat..//

ஊசி பாசி விக்கிரவநேல்லாம் தொழிலதிரா?

விக்கியுலகம் said...

உங்க அளவுக்கு யாருக்கும் தில்லு இல்லீங்க!

பெசொவி said...

By the way, இந்த லெட்டரைப் படிச்சுட்டு Googleகாரங்க ப்ளாக் சேவையையே நிறுத்திடலாம்னு முடிவு பண்ணிட்டாங்களாமே, உண்மையா வெங்கட்?

ஐத்ருஸ் said...

கூகுள் காரன் மிரண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை;-);-).

"என் ராஜபாட்டை"- ராஜா said...

60 வருழதுக்கு முன்னாடி நீங்க இருந்து இருந்தா சுதந்திரம் எளிதா கிடைத்து இருக்கும் . இந்த இங்கிலிஷ படித்து அவன் ஓடிருப்பன்வலைசரத்தில் நான் ..
வாங்க வசமா மாட்டிகிட்டிங்களா ?

RAMVI said...

google blog எல்லாம் ஏன் உடனே சரி செய்துவிட்டர்கள் என்பது இப்பொழுது புரிந்தது.......
வெங்கட்கிட்டயிருந்து இன்னுமொரு letter வந்துவிட்டால் என்ன பண்ணறதுன்னு அதிர்ச்சியில் தான்!!!!!

koodal bala said...

அடடே கவுண்டமணி இங்க்லீசு ......

சேலம் தேவா said...

தலைவரே..என்னா ஸ்டைலா லெட்டர் போட்ருக்கீங்க...நம்ம VAS சங்கம் மட்டுமில்லாம வீட்டா மாதிரி ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்புகள் கூட எடுக்கலாம்ன்னு நெனைக்கிறேன்.கொஞ்சம் யோசனை பண்ணுங்க... :)

அனு said...

நீங்க oxford universityல படிச்சேன்னு சொன்ன உடனே புதுசா ஆடு மேய்க்கிறதுக்கு எல்லாம் course ஆரம்பிச்சுட்டாங்களான்னு ஆச்சரியப்பட்டேன்.. இப்போ தான தெரியுது மாட்டு வண்டியில (ox-ford) வூட்டாண்ட இருக்கிற இஸ்கூலுக்கு போனதுக்கு தான் இவ்வளவு பில்ட் அப்புன்னு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இங்கிலீசு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"Google-க்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு..?!!"///////

ஒத்த கொம்பா ரெட்ட கொம்பா? (இங்லீப்பீஸ்லயும் கொம்பு இருக்காண்ணே?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////என் வளர்ச்சி பிடிக்காம நீங்க தான்
எனக்கு எதிரா சதி பண்றீங்களோன்னு
நான் முதல்ல சந்தேகப்பட்டேன்.. ///////

நீங்க ஹார்லிக்ச ஜாஸ்தி சாப்புடுறீங்கண்ணே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////" நாங்கல்லாம் புலிக்கே நெயில் பாலீஷ்
போடறவங்க...! "///////

அப்புறம் எப்படிண்ணே கொழம்பு வெப்பீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////I ' Gokulathil suriyan ' Blog owner Venkat.. ///////

நீங்க ப்ளாக் ஓனர்னா அப்போ கூகிள் என்ன உங்க ப்ளாக்ல வேல பாக்குறவரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி : இப்பவாச்சும் நான் " Oxford University-ல "
தான் படிச்சேங்கறதை நம்பறீங்களா..? ///////

உங்க ஊரு டுட்டோரியல் காலேஜுக்கு இப்படி ஒரு பேரா? எல்லாம் ரொம்பத்தான் டெவலப் ஆகிட்டாங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி : இப்பவாச்சும் நான் " Oxford University-ல "
தான் படிச்சேங்கறதை நம்பறீங்களா..? ///////

இந்த யுனிவர்சிட்டி பீகார்லதானே இருக்கு?

Mohamed Faaique said...

////இப்பவாச்சும் நான் " Oxford University-ல "
தான் படிச்சேங்கறதை நம்பறீங்களா..?///

தப்பு தல... oxford University'ஏ உங்க கிட்டதான் படிச்சுசு’ண்டு சொல்லுங்க...

Sen22 said...

//i grow //

வளர்சி வளர்சி -nu சொல்றீங்களே..

எவவளவு தூரம் வளர்ந்து இருக்கீங்க..lol

Doubt#..

royal ranger said...

mee padiching you luttar ..........i have some kulappams......yechoochmee .........melapakkam epdi varanum

middleclassmadhavi said...

அருமையா இங்கிலிஷ்ல எழுதிருக்கீங்க, ஹிஹி

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// இத பாத்தா Oxford Dictionary படிச்சவர்
மாதிரி கூட இல்லியே.. //

உங்களை பாத்தா கூடத்தான்
" Oxford Dictionary " -ஐ பார்த்தவர்
மாதிரி கூட இல்ல.. அதெல்லாம்
நாங்க சொன்னோமா.?!

தமிழ்வாசி - Prakash said...

நல்லது செஞ்சா சரி தான்.

கிச்சா said...

பாருடா துர இங்கிலீஸ்ல(?) லெட்டர்லாம் எழுதுது
பாவா நீ இதை தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல வெட்டிவச்சு பக்கத்துலயே உக்காந்துக்கோ பின்னாடி வர்ற சந்ததிகள் படிச்சி காரித்துப்பட்டும் சாரி வாழ்த்தட்டும்

Yoga.s.FR said...

உங்ககிட்ட இங்கிலீசுபிசு டியூசன் வச்சுக்கலாமா?யூனிவசிட்டியில (இந்த "சிட்டி" எந்த நாட்டில இருக்கு?)படிச்சிருக்கீங்க,அதனால வச்சுக்கலாம்னு(டியூசன்)இருக்கேன்!எப்புடி வசதி?

cho visiri said...

//////" நாங்கல்லாம் புலிக்கே நெயில் பாலீஷ்
போடறவங்க...! "///////

அப்புறம் எப்படிண்ணே கொழம்பு வெப்பீங்க?.....


Neyyildhaan.......Hi..Hi

ரசிகன் said...

குற்றம் நடந்தது என்ன.
வெங்கட் அவர்களுக்கு ஆக்ஸ்ஃபோர்ட்ல் சீட் கிடைத்த மர்மம்ம்ம்ம்..
ஆங்கிலத்தை அழிக்க ஸ்பெயின் நாட்டவர் செய்த திட்டமிட்ட சதி..
Reason: To make spanish the Largest used Language, overtaking English.

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// By the way, இந்த லெட்டரைப் படிச்சுட்டு
Googleகாரங்க ப்ளாக் சேவையையே
நிறுத்திடலாம்னு முடிவு பண்ணிட்டாங்களாமே, //

அப்படியா.. அந்த அளவு பயந்துட்டாங்களா..?!
சரி விடுங்க.. அவங்களுக்கு தைரியம்
சொல்லி இன்னொரு லெட்டர் எழுதிடறேன்..

வெங்கட் said...

@ ராஜபாட்டை.,

// 60 வருழதுக்கு முன்னாடி நீங்க இருந்து
இருந்தா சுதந்திரம் எளிதா கிடைத்து
இருக்கும். இந்த இங்கிலிஷ படித்து
அவன் ஓடிருப்பன் . //

இப்ப கூட நம்ம நாடு கூட எவனும்
சண்டைக்கே வர்றதில்லையே...
( பாகிஸ்தான் தவிர.. ஏன்னா.. அவங்களுக்கு
இங்கிலீஸ் அவ்வளவா புரியாது..! )

வெங்கட் said...

@ ராம்வி.,

// வெங்கட்கிட்டயிருந்து இன்னுமொரு
letter வந்துவிட்டால் என்ன பண்ணறதுன்னு
அதிர்ச்சியில் தான்!!!!! //

நோ. நோ..! இந்த லெட்டர்லயே பிராப்ளமை
சரிபண்ணலைன்னா என்ன பண்ணுவேன்னு
தெளிவா சொல்லி இருக்கேன்ல..
அதை பாத்து பயந்திருப்பாங்க..

// Respectfully You problem solve now..
Else, I bad angry..
Once I angry, I dont know what do..
Then i no porumai asking.. only Attacking.. //

Rajan said...

முடியல. உங்களோட ஆங்கில புலமையை பாராட்டி இந்த கடிதத்தை சமசீர் கல்வி புக்குல போட சிபாரிசு செய்கிறேன் நண்பரே!

ராவி said...

நீங்க சேலத்தில இருக்கீங்க நினைச்சிட்டு இருந்தேன் இப்பதான் தெரியுது நீங்க ஆந்திராவில் இருக்கிங்கனு

இராஜராஜேஸ்வரி said...

துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.

arul said...

nalla pathivu nanba

கோவை மு.சரளா said...

வெங்கட் என்னமா யோசிகிறீங்க நிறைய சிரிக்க வைத்திருகிறீர்கள் பாராட்டுக்கள்

Anonymous said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு குலுங்கி, குலுங்கி சிரித்தோம். நன்றிகள் பல.

கலைவேந்தன் said...

இந்த லட்டர் எழுதிய வெங்கட் இன்று முதல் ’’ஆங்கிலத்தை கூறுகட்டிவித்த வித்தகர்’’ என்று அழைக்கப்படுவார்.

-மங்குனிப்பாண்டியன்

r.v.saravanan said...

வலைச்சரத்தில் தங்கள் தளம் பற்றி குறிப்பிட்டுள்ளேன் வாருங்கள்

http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_745.html