சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

07 February 2010

உட்கார்ந்து யோசிப்போம்ல..!
B.Com படிக்கும் போது நடந்தது..

Economics Class...

" மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும்
பாதிப்புகள் " பத்தி Class நடந்துகிட்டு இருந்தது...

எங்க Professor ஒவ்வொருத்தரா எழுப்பி
ஒரு பாதிப்பை சொல்ல சொன்னார்..

" உணவு பற்றாக்குறை..! "

" இடப் பற்றாக்குறை..! "

" வேலை இல்லா திண்டாட்டம்..! "

இப்படி ஆளாளுக்கு ஒன்னு சொல்லிட்டு
இருந்தாங்க.. நம்ம முறை வந்தது...,

நான் எந்திரிச்சேன்..

மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும்
மிக பெரிய பாதிப்பு.....

" மீண்டும் மக்கள் தொகை பெருக்கம்னு..! "
சொன்னேன்..

எங்க Professor ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டாரு..!

இத்தனை வருஷ Service- ல இப்படி ஒரு பதில்
யாருமே சொன்னது இல்லையாம்..!!

# நாங்கல்லாம் உட்கார்ந்து யோசிப்போம்ல..!!!
.
.

4 Comments:

Anonymous said...

sooparappu :))

வெங்கட் said...

நன்றியப்பு..!

cheena (சீனா) said...

எப்பா அறிவுக் கொழுந்தே ! உண்மையிலேயே இதுதான் சரியான விடை - முக்கியமான பாதிப்பு - ரூம் போட்டு உக்காந்தா யோசிச்சே ? ( இல்லையே மல்லாந்து படுத்து விட்டத்தப் பாத்து யோசிச்ச மாதிரில்ல இருக்கு ) - ம்ம்ம்ம் - சூப்பர் இடுகை

வெங்கட் said...

சீனா சார்..,
நீங்க ரொம்ப புக்ழ்றீங்களே..!