சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

19 February 2010

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!


1. யாராவது Time கேட்டா..,
செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில
அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,
பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம்
கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா.,
8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..
" அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! "
இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா.,
Wife Phone பண்ணி கூப்பிடற
வரைக்கும் வர மாட்டாங்க ..!

6. " உன்னாலே., உன்னாலே..! " இந்த படம்
இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv- கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும்
அமைதியா பார்க்க மாட்டாங்க..,
" ஏன்டா Leg Side-Ball போடுற "
இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க
.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா.,
மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி
சமாளிச்சிடுவாங்க.. - அது வேற விஷயம்.. )

9. திடீர்ன்னு Walking., Exercise,Yoga
பண்ண ஆரம்பிப்பாங்க..
எல்லாம் 4 நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு Homework
சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..!
( குழந்தைகளாவது நல்லா
படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )

பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது
உங்களுக்கு ஒத்து வரலையின்னா..,
ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு
அர்த்தம்..

உடனே நல்ல
டாக்டரா போயி
பார்க்கிறது
Better.
.
.

21 Comments:

omega said...

//10. குழந்தைகளுக்கு Homework
சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..!
( குழந்தைகளாவது நல்லா
படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )//

நாங்க‌ அம்பூட்டு ந‌ல்ல‌வ‌ங்க‌...த‌ப்பா எல்லாம் நினைக்க‌க்கூடாது. :)))))))))))))))))))))

கண்ணகி said...

:)....ஆமாமா....பின்குறிப்பு நல்லா இருக்கு....

வெங்கட் said...

நன்றி Omega.. கருத்தை ஆதரிச்சதுக்கு..!

வெங்கட் said...

கண்ணகி மேடம்..,
விருந்து சாப்பிட்டுட்டு.,
தண்ணி நல்லா இருந்துச்சீன்னு
சொன்ன மாதிரி.,

நீங்க பதிவ படிச்சிட்டு.,
பின்குறிப்பு நல்ல இருக்குன்னு
பொசுக்குன்னு சொல்லிபுட்டீங்களே..!

Anonymous said...

thidirnu ean intha santheakam ellaam..

nallaththaan poykittirukku....

poka poka ennavellaam ezhuthapporeengalo theriyalaiyea

வெங்கட் said...

அன்பு பெயரில்லா..,
நீங்க நெறைய Comments எழுதறீங்க..
நீங்க யாருன்னு எனக்கு தெரியும்..
மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே..
உங்கள் பெயரையும் அடுத்த முறை எதிர் பார்ப்பேன்..

Anonymous said...

its amazing

manivannaraj

cheena (சீனா) said...

நல்ல வேளை - எனக்கு 7 ஒத்து வருது - நான் டாக்டரப் பாக்க வேணாம் - கோகுலத்தில் சூரியன் பாத்தாப் போதும்

பரிதி நிலவன் said...

10 விஷயமும் ஒத்து வருது, அப்ப நான் உண்மையான ஆண்பிள்ளை :)

வெங்கட் said...

சீனா சார்..,
நல்ல வேளை உங்களுக்கு
7 ஒத்து வந்துருச்சி..
இல்லைன்னா திட்டுவீங்களோ..?

வெங்கட் said...

பரிதி.,
10-ம் OK-வா..? வாவ்..,
ஒரு சின்ன திருத்தம்..,
" உண்மையானவுக்கு " பதிலாக
" நல்ல ஆண் பிள்ளை.."
ஓ.கே..!

ANU said...

பார்ரா இந்தக்கொடுமையை ...


ஹா ஹா ஹா


நல்லாயிருக்குப்பா

Gayathri said...

நிங்களே இப்படி ஆம்பிள்ளைங்ககளை போட்டு குடுத்திட்டீங்களே..இந்த சேவையை தொடரவும்.இனி பெண்களுக்கு நீங்கத்தான் consultant
hahaha

கார்த்திக் said...

ஒன்பது விசையம் ஒத்துவருது :-))

அதுலையும் என்ன அடிச்சுக்க யாரும் லேட் பண்ணமுடியாது

கார்த்திக் said...

அந்த home work மேட்டர் மட்டும் தான் என்னாகும்னு தெரியல :-))
குசும்பு எதிர் பதிவையும் பாருங்க :-))

ஆதிமூலகிருஷ்ணன் said...

சுவாரசியமான லிஸ்ட்.!

நாஞ்சில் பிரதாப் said...

நல்லாருக்குங்க.... எல்லாமே உண்மைதான்

வழிப்போக்கன் said...

ரசித்து சிரித்தேன்.

Deepa said...

//7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும்
அமைதியா பார்க்க மாட்டாங்க..,
" ஏன்டா Leg Side-ல Ball போடுற "
இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.// This one was my favorite! :))))

அமைதிச்சாரல் said...

நல்லாருக்கு :-))

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க.