சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

10 February 2010

ஒரு பொண்ணு சிரிச்சா..!?நானும்., என் நண்பன் விமலும்
College வராண்டாவில் நடந்து
வந்திட்டு இருந்தோம்..

அப்போ எங்களுக்கு கொஞ்சம்
முன்னாடி 4 பொண்ணுங்க
நின்னு பேசிட்டு இருந்தாங்க..
அவங்க எங்க Juniors...

அதுல ஒரு பொண்ணு
விமலை பார்த்து சிரிச்சாங்க..

அதை நானும் பார்த்திட்டேன்..
அவனும் பார்த்திட்டான்..,

அதுக்கு அப்புறம் நடந்தது தான்
இது...

" அந்த பச்சை கலர் சுடிதார் போட்ட
பொண்ணு என்ன பார்த்து சிரிக்குதுடா..! "

" சரி அதுக்கு என்ன..? "

" என்னடா.. சாதாரணமா சொல்லுற..? "

" பின்ன உன்னை பார்த்து ஊரே
கைகொட்டி சிரிக்குது., அந்த பொண்ணு
சிரிக்க கூடாதா..? "

( அதுக்கு அப்புறம் அவன் எனக்கு
அன்பாய் கொடுத்த பரிசில்
என் உடம்பெல்லாம் வலித்தது.. )

பின் குறிப்பு :
கடந்த " இந்த இடுகையை படிக்காதீங்க "
இடுகையை படித்தவர்கள்
இதுவரை - 586 பேர்
.
.

5 Comments:

Anonymous said...

:)

Anonymous said...

Vanakam Thaliva...

Neengallam poranthingala... ille ungala senchangala..

Mootapoochi...

jana said...

Nice one

cheena (சீனா) said...

வெங்கட் - நகைச்சுவையின் உச்சம் இதுதான் - ஆமா பச்சைச் சுடிதார் சிரிச்சா - பக்கத்துலே போயி ....ஆக வேண்டியதப் பாக்கறது தானே - ! இதுக்கெல்லாம வருத்தப்பட்டு - உன்னை அடிச்சி - பாவம்பா

வெங்கட் said...

சீனா சார்..,
அதானே.,
அதை விட்டுட்டு என்னை
போய் அடிச்சிக்கிட்டு..!