சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

26 July 2010

ஹலோ..!! Busy-யா..? Free-யா..??!போன வாரம் ஒரு நாள்..

எனக்கு என் Friend Mani-கிட்ட
இருந்து Phone...

" ஹலோ வெங்கி..!! "

" சொல்லுடா மங்கி..!! "
( மங்கிகள் மன்னிக்க.. )

" என்னடா பண்ணிட்டு இருக்கே..!! "

" சும்மாதான் இருக்கேன்.."

" நான் மட்டும் என்ன நீ சேலம் கலக்டரா
இருக்கேன்னா சொன்னேன்..? நீ வெட்டியா
இருக்கேன்னு தான் இப்ப உலகத்துக்கே
தெரியுமே..!! "

" கிர்ர்ர்ர்... " ( அடப்பாவி... Blog எழுதினா
இந்த கெட்ட பேர் வேற தாங்கிக்கணுமா..? )

இனிமே இவன் போன் பண்ணினா
உஷாராதான் இருக்கணும் போல...

4 நாள் கழிச்சி மறுபடியும் Mani's போன்..

" ஹலோ வெங்கி..!! "

" சொல்லுடா மணி... "
( பட்டதே போதும்டா சாமி.. )

" என்னடா பண்ணிட்டு இருக்கே..!! "

( ஆஹா மறுபடியும் Same Question..!!
உஷார்.. உஷார்...!! )

" ரொம்ப Busy-யா இருக்கேன்டா.."

" ஓ.. அப்படியா... சரி சாப்பிட்டு முடி..
அப்புறமா கூப்புடுறேன்..! "

டொக்...

அட., அட., அடப்பாவி...!!

கால் வெக்கிற இடமெல்லாம்
கண்ணிவெடி வெக்குறாங்களே..!!

ஆமா இவன் போன வாரம் வரை
நம்ம கூட தானே இருந்தான்..!!
எப்ப கட்சி மாறினான்..??!


இன்று ஒரு தகவல் :
------------------------

" ஊரார் பதிவுக்கு Vote போட்டால்.,
நம் பதிவு தானே Popular ஆகும்..!! "

- Blog அறிஞர் வெங்கட்.
.
.

44 Comments:

அருண் பிரசாத் said...

//இவன் எப்ப கட்சி மாறினான்..??!!//

சே... இந்த கட்சி காரங்க கூட இதே பிரச்சினையா போச்சு...

அப்போ Terror இப்போ Mani உளறியே காட்டி குடுத்துடறாங்க.... VKS ஆளுனு

ப.செல்வக்குமார் said...

நான் எந்த கட்சில இணையறதுன்னு குழப்பத்துல இருக்கேன் ..
VASலையா இல்ல VKSலையா ...?
என்னோட ப்ளாக் வந்து உங்க ஓட்ட போட்டுட்டு வந்திடுங்க .. சீக்கிரமா ஒரு முடிவுக்கு வந்திடறேன் .. அதுமட்டுமில்லாம இந்த ல இருக்குற அந்த 5 பேரோட கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். ஒருத்தர் சொல்லிட்டார் ..
சீக்கிரமா வாங்க ...
இங்கே வந்து பாருங்க

தனி காட்டு ராஜா said...

சூரியனுக்கே பல்பா ?

Riyas said...

//நீ வெட்டியா தான் இருக்கேன்னு
இப்ப உலகத்துக்கே தெரியுமே..!!//

உலகத்துக்கேவா...?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அதெல்லாம் சரி, இப்ப சொல்லுங்க free-யா busy-யா; busy-யா இருந்தா என்ன சாப்பிட்டுக் கிட்டிருக்கீங்க?

அப்புறம் ஒரு சந்தேகம்: G-மெயிலுல எப்ப பாத்தாலும் உங்க Status busy-ன்னே இருக்கே, எப்பவும் ஈட்டிங் தானா?

// Blog அறிஞர் வெங்கட்.//

ஸ்பெல்லிங் மிஸ்டேக் - அது Blog அரிஞர்-ன்னு தான் இருக்கணும்

அக்பர் said...

மணி ஒரு நிலையில இருக்காது பாஸ். :)

அருண் பிரசாத் said...

அச்சச்சோ! Flag Counter ல Trindad & Tobaco Flag 50 போட்டுடுச்சி, அடுத்த பதிவு அதை பத்தி வந்தாலும் வரும்.

Be Careful (நான் எல்லாரையும் சொன்னேன்)

@ Terror

சொன்ன மாதிரியே அடக்கி வாசிக்கிறயே. இப்படியே Maintain பண்ணு அப்பதான் VAS நீ அவங்க கூட இருக்கிறதா நம்பும்

அனு said...

VASனு ஒரு சங்கம் இல்லவே இல்லைன்னு நான் சொல்லும் போது யாரும் நம்பவே இல்ல.. இப்போ பாருங்க, so called VAS தலைவரே எங்க கட்சி தான்னு நிருபிச்சுட்டாரு..

வாங்க வெங்கட் வாங்க.. எங்க கட்சியில வந்து officially ஐக்கியமாகிடுங்க.. உங்களுக்கு சாப்பாட்டு பிரச்சனையே இருக்காது.. உங்களுக்கு குடுக்கறதுக்காகவே நிறைய வச்சிருக்கோம், அல்வா..

ரசிகன் said...

//அடப்பாவி... Blog எழுதினா இந்த
கெட்ட பேர் வேற தாங்கிக்கணுமா..? //

என்னமோ blog எழுதறதுக்கு முன்னாடி மட்டும்
நல்ல பேர் இருந்தாமாதிரி!!
why buildup..??

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//சொன்ன மாதிரியே அடக்கி வாசிக்கிறயே. இப்படியே Maintain பண்ணு அப்பதான் VAS நீ அவங்க கூட இருக்கிறதா நம்பும் //

எலேய் பிளான் பண்ணி என் லேப்டாப் சூனியம் வச்சிட்டு இங்க இப்படி ஒரு கம்மெண்ட? லேப்டாப் கடன் வாங்கி உள்ள வந்து பாத்த என்னையும் வெங்கட்டும் பிரிக்க சதி. நடக்காது மக்கா.... நானும் வெங்கட்டும் சூரியனும் டர்சும் மாதிரி.

Chitra said...

நீ வெட்டியா தான் இருக்கேன்னு
இப்ப உலகத்துக்கே தெரியுமே..!!

( அடப்பாவி... Blog எழுதினா இந்த
கெட்ட பேர் வேற தாங்கிக்கணுமா..? )..... இதுல உள்குத்து இல்லையே...... நான் தப்பிச்சேன்.... ஹா,ஹா,ஹா....

Chitra said...

இன்று ஒரு தகவல் :
------------------------

" ஊரார் பதிவுக்கு Vote போட்டால்.,
நம் பதிவு தானே Popular ஆகும்..!! "

- Blog அறிஞர் வெங்கட்.


......interesting!
http://kazhuhu.blogspot.com/2010/07/blog-post_26.html
போன வாரம், நான் இப்படி பதில் சொல்லி இருந்தேன்.
great minds think alike..... ha,ha,ha...

TERROR-PANDIYAN(VAS) said...

ரயில் ஓட்டரவண ராக்கெட் ஓட்ட சொன்ன முடியுமா?
VKS க்கு வெங்கட் பெருமை சொன்ன புரியுமா?

தட்டிவிட்டு போய்டே இருங்க தல...

வெங்கட் said...

@ அருண்..,

// அப்போ Terror இப்போ Mani உளறியே
காட்டி குடுத்துடறாங்க.... VKS ஆளுனு //

அதானே...!!
சரி., சரி.., நீங்களாவது
அங்கே ( VKS-ல ) ஊளறாம.,
மாட்டிக்காம இருங்க..

வெங்கட் said...

@ செல்வா.,

// நான் எந்த கட்சில இணையறதுன்னு
குழப்பத்துல இருக்கேன்..
VASலையா இல்ல VKSலையா ...? //

நாங்கல்லாம் இங்கே வாங்க,
இங்கே வாங்கன்னு யாரையுமே
கேன்வாஸ் பண்ண மாட்டோம்..

ஏன்னா..

VKS-ல மெம்பர் ஆகறது.,
அரசியல்வாதி ஆகுற மாதிரி - அது
ரொம்ப ஈஸி..

VAS-ல மெம்பர் ஆகறது
IAS ஆகுற மாதிரி - அது
கொஞ்சம் கஷ்டம்..


// காண்டமிருகத்துக்கு பயந்தா
காட்டுக்கு போக முடியாது. //

// ரயில் ஓட்டறவனை
ராக்கெட் ஓட்ட சொன்னா முடியுமா..?? //

இதெல்லாம் எங்க
சங்கத்து சிங்கம்.,
என் தளபதி Terror சொன்னது..

இப்ப புரியுதா..??!!

VAS-ல Only திறமைசாலிகளுக்கு
மட்டுமே இடம்...

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// Blog அறிஞர் வெங்கட்.//

// ஸ்பெல்லிங் மிஸ்டேக் -
அது Blog அரிஞர்-ன்னு தான் இருக்கணும் //

அதுல ஒரு சூட்சுமம் என்னான்னு
கேட்டீங்கன்னா..

சின்ன அரிஞர்ன்னா - சின்ன " ரி "
பெரிய அறிஞர்ன்னா - சின்ன " றி "

இதை பத்தி தொல்காப்பியத்துல
விரிவா சொல்லி இருக்கு..

வெங்கட் said...

@ அருண்..,

// அச்சச்சோ! Flag Counter ல
Trindad & Tobaco Flag 50 போட்டுடுச்சி,
அடுத்த பதிவு அதை பத்தி வந்தாலும் வரும். //

ஹா., ஹா., ஹா..

I Like this.. Nice..

வெங்கட் said...

@ அனு.,

ஹி., ஹி., ஹி..!!
ஒவ்வொரு தடவையும்
டிஸ்கி போட மறந்துடுறீங்களே...

// உங்களுக்கு குடுக்கறதுக்காகவே
நிறைய வச்சிருக்கோம், அல்வா.. //

டிஸ்கி : எல்லாம் VAS-ல எங்களுக்கு
குடுத்தது..

அனு said...

//போன வாரம், நான் இப்படி பதில் சொல்லி இருந்தேன்.
great minds think alike//

என்ன சித்ரா நீங்க.. உங்ககிட்ட இருந்து காப்பி அடிச்சு தன் பதிவுல போட்டிருக்கார்.. அதை எதிர்த்து சண்டைப் போட்டு பதிவுலகத்தையே ரணகளம் ஆக்க வேணாமா? இப்படி ஸ்ம்பிளா முடிச்சுட்டீங்க??

அனு said...

@அருண்

//Flag Counter ல Trindad & Tobaco Flag 50 போட்டுடுச்சி, அடுத்த பதிவு அதை பத்தி வந்தாலும் வரும்.//

நீர் என் கட்சி அய்யா!!!

அனு said...

@பெ.சொ.வி

//ஸ்பெல்லிங் மிஸ்டேக் - அது Blog அரிஞர்-ன்னு தான் இருக்கணும்//

எனக்கு இது உண்மையாவே புரியல.. இதுல எதாவது உள்குத்து இருக்குதா? இல்ல, அரிஞர்-ன்னு தான் எழுதனுமா? நானும் இவ்வளவு காலமா அறிஞர்-ன்னு தான் எழுதிகிட்டு இருக்கேன்..

அனு said...

@வெங்கட்

//டிஸ்கி : எல்லாம் VAS-ல எங்களுக்கு
குடுத்தது..//

ஓ.. ஆமால்ல.. போட மறந்திட்டேன்.. எல்லாம் VAS எங்களுக்கு குடுத்தது தான்.. அவங்க ஊர்ல இருக்குற எல்லோர் கிட்டயும் அல்வா வாங்கிட்டு, store பண்றதுக்கு இடம் இல்லாம எங்க கட்சி அலுவலகத்திலும் கொஞ்சம் அல்வா-வ store பண்ணியிருக்காங்க..

எதிர்கட்சின்னாலும் உங்க கஷ்டத்துக்கு தோள் (இடம்) குடுக்குற எங்களை நீங்க பாராட்டனும்..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// என்னமோ blog எழுதறதுக்கு
முன்னாடி மட்டும் நல்ல பேர்
இருந்த மாதிரி.!! why Buildup..?? //

எங்க ஊருக்கு வந்து பாருங்க...

நான் வீதியில நடந்து போறப்ப
மக்கள் ரெண்டா பக்கமும் விலகி
நின்னு வழி விடுவாங்க..

அப்புறம் என் காலடி மண்ணை
எடுத்து நெத்தியில வெச்சுப்பாங்க...

அப்படியே Backround-ல
" எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில வெச்சிக்குவோம்னு... "
ஒரு பாட்டு சன்னமா கேட்கும்..

Yes., Yes.. இது எஜமான் படத்துல
வர்ற சீன் தான்..

R.V.உதயக்குமார்
ஒரு கல்யாணதுக்கு வந்தப்ப

எங்க ஊர்ல இந்த நிகழ்ச்சியை
பார்த்துட்டு ( இது தான் Daily நடக்குமே )
அப்படியே சினிமாவுல வெச்சிட்டார்..

Faaique Najeeb said...

உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கு வெங்கட். (எத்தனை பல்பு வாங்கியிருக்கீங்க......)

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்
//சின்ன அரிஞர்ன்னா - சின்ன " ரி "
பெரிய அறிஞர்ன்னா - பெரிய " றி " //

அட இந்த மேட்டர் சூப்பரா இருக்கே. ஏற்கனவே நம்ம VAS சாதனைகள் வச்சி தஞ்சாவூர் கோவில் புல் ஆகிடுத்து. அதனால இந்த mattera பாரிஸ்ல இருக்க eiffel Tower மேல வச்ச flight ல போற வரவங்க படிச்சி தெரிஞ்சிபங்க.

ப.செல்வக்குமார் said...

VAS ற்கு வாக்களித்தவர்கள் :
*.வெங்கட்.,
*.TERROR-PAANDIYAN.,
*.ஜில்த்தண்ணி.,
*.jey .,

VKS ற்கு வாக்களித்தவர்கள் :
*.அருண் பிரசாத்.,
*.அனு.
*.பெயர் சொல்ல விருப்பமில்லை
*.ரசிகன்

அதனால இன்னும் நடுநிலையாதான் இருக்கு.. நாளை வரி வாக்குப்பதிவு நடைபெறும். அதனால உங்களது பொன்னான வாக்குகளை விரைவில் பதிவு செய்து ஒரு மாபெரும் திறமைசாலியான என்னை உங்களது கட்சியில் இணைந்து தொல்லை கொடுக்க உதவுமாறு வேண்டுகிறேன்..!!

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

//VKS-ல மெம்பர் ஆகறது.,
அரசியல்வாதி ஆகுற மாதிரி - அது
ரொம்ப ஈஸி..

VAS-ல மெம்பர் ஆகறது
IAS ஆகுற மாதிரி - அது
கொஞ்சம் கஷ்டம்..//

எது? இந்த IAS னா இடைவிடாமல் அடிவாங்குவோர் சங்கம்முங்லான்னா

// ரயில் ஓட்டறவனை
ராக்கெட் ஓட்ட சொன்னா முடியுமா..?? //

அதைதான் நானும் சொல்லுறேன், எங்களையே சமாளிக்க முடியலை. அப்புறம் எதுக்கு பதிலுக்கு ஓட்டுறமாதிரியே பில் டப் குடுக்கறீங்க

அருண் பிரசாத் said...

@ Chitra

//....interesting!
http://kazhuhu.blogspot.com/2010/07/blog-post_26.html
போன வாரம், நான் இப்படி பதில் சொல்லி இருந்தேன். //

அது போன வாரம் இல்லை, நேத்துதான் போட்டீங்க. இவர் உங்க வடை கூட இதையும் சுட சுட சுட்டுட்டு வந்துட்டார்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//@ அனு

அரிஞர்-ன்னு தான் எழுதனுமா? நானும் இவ்வளவு காலமா அறிஞர்-ன்னு தான் எழுதிகிட்டு இருக்கேன்..//

சங்கத் தலைவி நீங்க தப்பாவா எழுதுவீங்க? நான் சொல்ல வந்தது அறிஞர்னா அறிவாளிதான். ஆனா அரிவாள் என்ன பண்ணுமோ அதை பண்றவருக்கு அரிஞர்னு பேரு.அவ்வளவுதான்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//VAS-ல Only திறமைசாலிகளுக்கு
மட்டுமே இடம்...//

ஆனா அந்த சங்கத் தலைவருக்கு மட்டும் exception உண்டு போலிருக்கே!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//சின்ன அரிஞர்ன்னா - சின்ன " ரி "
பெரிய அறிஞர்ன்னா - சின்ன " றி "

இதை பத்தி தொல்காப்பியத்துல
விரிவா சொல்லி இருக்கு..//
அது தொல்காப்பியம் அன்று அரிஞரே
தொல்(லை)காப்பியம்.

"எல்லாம் அறிந்த புலவர் அறிஞரே
எல்லாரையும் அறுப்பவர் அரிஞர் - சொல்லால்
சிறிய ரியினையும் மற்றும் பெரிய
றியினையும் கொண்டுநீ சொல்".

இது தான் அந்த தொல்(லை)காப்பிய செய்யுள்!

திருக்குறளே எழுதின எங்களுக்கு இதெல்லாம் ஜுஜூபி

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// Chitra said...

" ஊரார் பதிவுக்கு Vote போட்டால்.,
நம் பதிவு தானே Popular ஆகும்..!! "

......interesting!
http://kazhuhu.blogspot.com/2010/07/blog-post_26.html
போன வாரம், நான் இப்படி பதில் சொல்லி இருந்தேன். //

ஓகே, வெங்கட்! இப்ப இதைப் பூர்த்தி செய்யுங்க,

ஊரார் சொன்னதை காப்பி அடித்தால்...........................?

ப.செல்வக்குமார் said...

/// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//VAS-ல Only திறமைசாலிகளுக்கு
மட்டுமே இடம்...//

ஆனா அந்த சங்கத் தலைவருக்கு மட்டும் exception உண்டு போலிருக்கே!

////

மாசம் 20000 ரூபாய் மிச்சப்படுத்துவது எப்படி..
நம்ம வெங்கட் அண்ணாவோட திறமைய
இதுலே

உங்களால கண்டுபிடிக்க முடியும் .. படிச்சு பாருங்க ..!! படிச்சிட்டு அப்புறம் பேசுங்க ..

ப.செல்வக்குமார் said...

ஓ.. சாரி .. மேல லிங்க் தப்பா கொடுத்திட்டேன் ..
இதுல படிங்க

வெங்கட் said...

@ அனு.,

// என்ன சித்ரா நீங்க..
உங்ககிட்ட இருந்து காப்பி அடிச்சு
தன் பதிவுல போட்டிருக்கார்..
அதை எதிர்த்து சண்டைப் போட்டு
பதிவுலகத்தையே ரணகளம் ஆக்க வேணாமா? //

ஆஹா.. என்ன நல்ல எண்ணம்..?!!

ஏம்பா அமைதிக்கான நோபல் பரிசை
யார் யாருக்கோ தர்றீங்களே
இவங்களுக்கும் ஒண்ணு குடுங்கப்பா..

ரொம்ப ராசிக்காரங்க...

அடுத்த வருஷம் நோபல் பரிசு
குடுக்கிற கமிட்டிலயும்
Minimum ரெண்டு கோஷ்டியாவது
இருக்கும்..

வெங்கட் said...

@ செல்வா.,

// ஒரு மாபெரும் திறமைசாலியான
என்னை உங்களது கட்சியில் இணைந்து
தொல்லை கொடுக்க உதவுமாறு வேண்டுகிறேன்..!! //

எங்க கட்சியில சேரலாம்னு
முடிவெடுத்துட்டா உடனே
கட்சியில இணைஞ்சிடலாம்னு
நினைக்காதீங்க..

உங்களை சேர்த்துக்கறதா..?
வேண்டாமானு எங்க கட்சி செயற்குழுவும்.,
பொதுக்குழுவும் கூடி விவாதித்து
தன் முடிவை சொல்லும்..

அந்த முடிவு எப்படி வேணாலும்
இருக்கும்.. இப்பவே சொல்லிடறேன்..

வெங்கட் said...

@ அருண்..,

// இந்த IAS னா இடைவிடாமல் அடிவாங்குவோர்
சங்கம்முங்லான்னா //

இல்ல..,

IAS = இடைவிடாமல் அடிப்போர் சங்கம்

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

"எல்லாம் அறிந்த புலவர் அறிஞரே
எல்லாரையும் அறுப்பவர் அரிஞர் - சொல்லால்
சிறிய ரியினையும் மற்றும் பெரிய
றியினையும் கொண்டுநீ சொல்".

ஹலோ யாருப்பா அது..
தொல்காப்பியத்தில எல்லாம்
என்னை கேட்காம கை வெச்சது..??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உங்களை சேர்த்துக்கறதா..?
வேண்டாமானு எங்க கட்சி செயற்குழுவும்.,
பொதுக்குழுவும் கூடி விவாதித்து
தன் முடிவை சொல்லும்..//

வெங்கட்டும் வெங்கட்டும் பேசி முடிவெடுப்பாங்க. அவர்தான் அங்க ஆள் இன் ஆள் அடிவாங்குற ராசா...

Prabu said...

ஆமா,
இங்க VAS சங்க தலைவர் யாரு?

டெரர்: (வெங்கட் அவர்களை கை காட்டி)
ம்ம்ம்...சங்கமும் இவர்தான்...
தலைவரும் இவர்தான்;


//அப்புறம் ஒரு சந்தேகம்: G-மெயிலுல எப்ப பாத்தாலும் உங்க Status busy-ன்னே இருக்கே, எப்பவும் ஈட்டிங் தானா?//
எனக்கும் அதே சந்தேகம்...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
// வெங்கட்டும் வெங்கட்டும் பேசி முடிவெடுப்பாங்க. அவர்தான் அங்க ஆள் இன் ஆள் அடிவாங்குற ராசா... //

ரமேஷ் நாங்க பயந்தவங்கள அடிக்கறது இல்ல.... நீங்க ஒரு வாரம் ஊற விட்டு போக வேண்டாம்...இங்க இப்படி ஒரு கமெண்ட் அங்க அப்படி ஒரு பதிவு.

ரசிகன் said...

@வெங்கட்

//நான் வீதியில நடந்து போறப்ப
மக்கள் ரெண்டா பக்கமும் விலகி
நின்னு வழி விடுவாங்க..

இது எஜமான் படத்துல
வர்ற சீன் தான்..
//

Just 2 corrections

1. ரெண்டா பக்கமும் விலகி நின்னு இல்ல‌
நாலா பக்கமும் சிதறி ஓடி..

2. படம் எஜமான் இல்ல..பிதாமகன்..


//உங்களை சேர்த்துக்கறதா..?
வேண்டாமானு எங்க கட்சி செயற்குழுவும்.,
பொதுக்குழுவும் கூடி விவாதித்து
தன் முடிவை சொல்லும்.. //


பின்ன‌ .. உங்க‌ளை யாரு வேணா க‌லாய்க்க‌லாம்..
ஆன‌ VKS கிட்ட அடி வாங்க‌ற‌துன்னா சும்மாவா...
தாக்குபிடிப்பாரான்னு check ப‌ண்ண‌னுமில்ல‌... :-)

வெங்கட் said...

@ ரசிகன்..,

// படம் எஜமான் இல்ல..பிதாமகன்.. //

ஓ.. சூர்யா Character-ஆ..??
Very Good., Very Very Good..!!

ரசிகன் said...

//ஓ.. சூர்யா Character-ஆ..??
Very Good., Very Very Good..!!//

ஒண்ணு பேசாமயே சிதறி ஓட வைக்கும்
ஒண்ணு பேசி பேசியே ஓட வைக்கும்..
இதுல எதுவா இருந்தா என்ன...
அதுல ஒரு பெரும வேற.. ம்ஹீம்ம்..