சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

23 February 2010

அத்தை பொண்ணுங்க 3 பேரு..!


என் Friend ரவிக்கு 3 அத்தைகள்.,
ஆளுக்கு ஒரு பொண்ணு.,
So., 3 அத்தை பொண்ணுங்க..!

அந்த மூணு பேருக்கும்
ரவியை கட்டிக்கணும்னு ஆசை..
அவங்களுக்குள்ள ஒரு
போட்டின்னே சொல்லலாம்..!

நம்ம ஆளுக்கு ஒரு குழப்பம
யாரை கட்டிக்கிறதுன்னு..!

அவனோட அக்கா கல்யாணத்துக்கு
நான் போயிருந்தேன்.,
அவங்க 3 பேரும் வந்திருந்தாங்க..

அதுல ஒரு அத்தை பொண்ணு " பிரியா "
மட்டும் எனக்கு ஓரளவுக்கு பழக்கம்.,
அந்த பொண்ணுகிட்ட விளையாட்டா..,

" பிரியா.., நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..!
அப்படின்னு ரவி சொல்ல சொன்னான்னு.. "
சொல்லிட்டேன்.

அந்த பொண்ணு சிரிச்சிகிட்டே போயிடுச்சி..!

பக்கத்துல இருந்த ரவிதான்
டென்ஷன் ஆயிட்டான்..

" ஏன்டா அப்படி சொன்ன..? "

" சும்மா விளையாட்டுக்கு.., "

" எதுல விளையாடுறதுன்னு இல்லையா..? "

" Sorry-டா., நான் வேணா ப்ரியாகிட்ட
மன்னிப்பு கேட்டுட்டு வந்துடட்டுமா..? "

" அதெல்லாம் ஒன்னும் வேணாம்...
நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு..! "

" டென்ஷன் ஆகாதடா.. நான் பண்ணின
தப்பை நானே சரி பண்ணிடறேன்.."

"அப்படீங்கற..!! "

" ஆமா.. நான் போயி ப்ரியாகிட்ட Sorry
சொல்லட்டுமா..?!!

" Sorry எல்லாம் வேணாம்.. நான் சொல்ற
மாதிரி செய்யி போதும்.....! "

" என்ன சொல்லு.. "

" மத்த ரெண்டு பேர்கிட்டயும் போயி.."

" ம்ம்.. "

 " நீங்களும் அழகா இருக்கீங்கன்னு
சொல்லிட்டு வா..! "

" ?!!!?!?!?!!?! "

எனக்கு சிரிக்கிறதா..,
அழுவறதான்னே தெரியல..!
.
.

11 Comments:

Madurai Saravanan said...

எப்படி இப்படி ...சிரிப்புக்கு அர்த்தம்...நீங்கள் சொல்வதா...? பாவம் உங்கள் அத்தை பொண்ணு...மன்னிக்கவும் உங்கள் நண்பர். அருமை ரசிக்கும் படியான குறும்பு.

வெங்கட் said...

நன்றி சரவணன், ரசிச்சதுக்கு..!

Anonymous said...

மத்த ரெண்டு பேர்கிட்டயும் போயி
" நீங்களும் அழகா இருக்கீங்கன்னு
சொல்லிட்டி வா..! " அப்படின்னு சொன்னான்.


நண்பர் பிழைத்து கொள்வார்..நல்ல தெரிந்து வைத்திருக்கிறார்....

எனக்கு சிரிக்கிறதா..,
அழுவறதான்னே தெரியல..பாவம்தான்...

நண்பனுக்காக இதுகூடசெய்யலனா எப்படி...

எப்படியாவது உங்களுக்கு ஒரு மேட்டர் கிடைத்துவிடுகிறதே...இதேநிலை தொடர்ந்தாள், நிலைத்து நிற்க்கலாம்

வெங்கட் said...

நன்றி பெயரில்லா..,
நீங்க தான் பெயர் எழுத மாட்டேன்னு குல தெய்வத்து
மேல சத்தியம்னு சொல்லுட்டீங்க..

A.சிவசங்கர் said...

பார்த்தேன் ரசித்தேன்
உங்க நன்பர கவனமாய் இருக்க சொல்லுங்க (பொறாமை நமக்கு ஒரு அத்தை பொன்னும் இல்ல )

வெங்கட் said...

சிவசங்கர்..,
பொறமை படாதீங்க.
3 அத்தை பொண்ணுங்கள்ல
யாரை கட்டிக்கிட்டாலும்
மத்த ரெண்டு அத்தை குடும்பத்தோட
பிரச்சினை வரும்னு..
என் நண்பன் வேறு
பொண்ணை தான் கல்யாணம்
பண்ணிக்கிட்டான்..

Anonymous said...

//எனக்கு சிரிக்கிறதா..,
அழுவறதான்னே தெரியல..!

அழுதுருங்க துக்கத்தை மனசுல வைக்காதீங்க...

cheena (சீனா) said...

ஆகா ஆகா - கொடுத்து வசவன் - 3 அத்தை பெண்களா ... கட்டிக்கிட்டது இன்னொரு பெண்ணை - அதுதான் சூப்பர்

வெங்கட் said...

சீனா சார்..,
என் நண்பன் குடும்பத்துக்குள்ள
பிரச்சினை வரக்கூடாதுன்னு
எவ்வளவு தியாகம் பண்ணி இருக்கான்..
நீங்க கிண்டல் பண்றீங்களே சார்..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல உசாரான ஆளுதான் உங்க நண்பர்..

அஹமது இர்ஷாத் said...

எல்லாம் சரி அந்த 3 பெண்கள் அழகா,

அத சொல்லவே இல்லையே...