சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 February 2010

திகில் பாடம்..!எனக்கு அடிக்கடி வர்ற கனவு
என்ன தெரியுமா..?

+2 கணக்கு பரிட்சை..!

அதுல எனக்கு புரியாத விஷயமே..,

அது ஏன் கணக்கு பரிட்சைக்கு
முந்தின நாள் நான் தமிழை
படிச்சிட்டு போறேன்..?

இப்பகூட எங்க Maths Master
என் கனவுல வந்தா.,
எந்திரிச்சி., நெத்தியில
விபூதி வெச்சிகிட்டு தான்
தூங்குவேன்..!

அல்ஜீப்ரா., தேற்றம்.,
அணிகள்., அணிக்கோவைகள்.,
வகைகெழு., தொகைக்கெழு.,
லாகரிதம்., நிகழ்தகவு.,
திரிகோணமிதி ( அதை போட்டு மிதி )

[ Algebra, Theorem,
Matrix, Calculus,
Logarithm, Probability,
Trigonometry ]

உஷ்ஷப்பா., இப்பவே கண்ண கட்டுதே..?!

எத்தனை., எத்தனை Formula.,
என்னை இருக்க விடலையே Normala..!

இதுல ஏதாவது.,
நம்ம வாழ்க்கையில
எங்கயாவது Use ஆவுதா..?

பின்ன ஏன்..?
ஒரு குழந்தைய ( அட நம்மளதாம்பா..!)
இப்படி டார்ச்சர் பண்ணினீங்க..?

இதெல்லாம் கணக்குல
இருக்குங்கறதுக்காக
நாம படிக்கணுமா.?

Rocket விடக்கூடத்தான்
ஏதாவது கணக்கு இருக்கும்..,
அதையெல்லாம்கூட படிக்க
சொல்லுவாங்களோ..?!
.
.

10 Comments:

Maths Master said...

டேய் வெங்கட்.. இன்னுமா உனக்கு புரியல? சரி வா இன்னொரு டைம் டியூஷன் வெச்சுக்கலாம்.
- Maths Master
(சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம், அடுத்தவங்களுக்கு maths சொல்லி குடுக்கறது தான்!) (a+b)2 = a2 + b2 + 2ab

Chemistry Master said...

தம்பி, உண்மைய சொல்லு.. உனக்கு maths மட்டுமா வரல?

வெங்கட் said...

ஆஹா..! கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்க..!

கவிதை காதலன் said...

யப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே

சசிகுமார் said...

உங்களுக்கு பரவாயில்ல தல maths மற்றும் தான் வராது. நம்பளுக்கு எதுவுமே வாராது

V.A.S.SANGAR said...

நல்லா கணக்கு பண்ணி இருக்கிங்க

Sen22 said...

//எத்தனை., எத்தனை Formula.,
என்னை இருக்க விடலையே Normala..!//

Same blood... :((


Senthil,
Bangalore

cheena (சீனா) said...

எப்பா வெங்கட் - ( a + b ) 2 = a2 + b2 + 2ab

இது இன்னும் மாறலியா - மாத்திட்டதாச் சொனனாங்களே ... ம்ம்

நாங்க பொறியியல் படிச்சப்போ - அதென்னது - அணிக்கோவையா - அது நாங்க நாலெஞ்சு பேரு சேந்து குழுமமாப் படிப்போம் - சூப்பராப் பொழுது போகும் - பாயிண்டுக்கு இவ்வளவு காசுன்னு வச்சி வெளையாடுவோம் - அதுக்குப் பேருதான் கால்குலஸ் சேந்து படிக்கறதுன்னு பேரு - தெரியுமா

வெங்கட் said...

சீனா சார்..,
பெரிய., பெரிய Formula
எல்லாம் எழுதி இருக்கீங்க..,
நான் Maths-ல Month சார்
( வீக்-க்கு மேல )

Gayathri said...

''எத்தனை., எத்தனை Formula.,
என்னை இருக்க விடலையே ணொர்மல..!''

எதன அருமையா சொல்லி இருக்கிங்க!!

''இதுல ஏதாவது.,
நம்ம வாழ்க்கையில
எங்கயாவது Use ஆவுதா..?

பின்ன ஏன்..?
ஒரு குழந்தைய ( அட நம்மளதாம்பா..!)
இப்படி டார்ச்சர் பண்ணினீங்க..?''

இத மொதல்ல யாராவது என் கனக்கு வத்தியாருக்கு அனுப்பனும் மொதல்ல

எப்படித்தான் இப்படிலாம் யோசிக்கரீங்க சார்?

எனக்கு கூட இப்படிலாம் கனவு வருது அப்பா... நெஜத்தை விடவும் கனவு மிகவும் திகிலா இருக்கும்!

எல்லம் நமக்கு கனக்கு வத்தியார் விட்ட சாபம் !

பதிவு மிக மிக அருமை சார் ..