சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 February 2010

" நச்...! "டிஸ்கி : இது தல பத்தின
பதிவு இல்ல..,
தலைக்கு கிடைச்சதை
பத்தின பதிவு..!

விகடன் படிச்சிட்டிருந்த
என் மனைவி கேட்டாங்க...

மனைவி : ஏங்க.., உங்க Blog-ம் இப்படி
விகடன் வரவேற்பறையில வருமா..?

நான் : இதென்ன பிரமாதம்.,
நான் School-ல படிக்கும் போதே
விகடன்ல நிறைய எழுதியிருக்கேன்..
ஆனா., எங்க அப்பா திட்டினாருன்னு
விட்டுட்டேன்..

மனைவி : ஏன் திட்டினாரு..?

நான் : பின்ன.., புது Book-ல பேனாவ வெச்சி
கண்டபடி கிறுக்கினா, பார்த்திட்டு சும்மாவா
இருப்பாங்க..?!

என் மனைவி முறைச்சாங்க..!

அப்புறம் என்ன நடந்து இருக்கும்னு
புரியாதவங்க...,
முதல் வரி + தலைப்பு
சேர்த்து படிச்சி புரிஞ்சிக்கோங்க..!

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா..!
.
.

13 Comments:

திருவாரூரிலிருந்து சரவணன் said...

முடியல...

வெங்கட் said...

பழகிக்கோங்க சரவணன்.,

T.V.ராதாகிருஷ்ணன் said...

நச்...!

வெங்கட் said...

T.V.ராதாகிருஷ்ணன் சார்..,
" நீங்க கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்..!
நாங்க கொட்டி கிடக்கிற செங்கல்..! "

உங்க கிட்ட பாராட்டை பெறுவதே
சந்தோஷம்..!
அடிக்கடி வாங்க..!

நாஞ்சில் பிரதாப் said...

யப்பா...முடில...ரத்தம் வருது...

அப்படி பார்த்தா நான் எழுதாத புத்தகங்களா? ஒரு பெரிய லிஸ்ட்டே வரும் :)

நாஞ்சில் பிரதாப் said...

//நீங்க கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்..!
நாங்க கொட்டி கிடக்கிற செங்கல்..!//

அடேங்கப்பா...என்னமா பில்டப் கொடுக்குறாங்கப்பா..

டிவிஆர் சார் இதுகும்மேல நீங்க இங்கவந்து கமண்ட் போடலன்னா நல்லாருக்குது...வேறவழியில்ல அடிக்கடி வந்துருங்க...

வெங்கட் said...

பிரதாப் சார்..,
TVR சாரை பத்தி நான் எழுதினது
உண்மைதான்..
நீங்க ஏத்தி விட்டு Air Check பண்ணிடுவீங்க
போல இருக்குதே..!

ரசிகன் said...

அண்ணே..... உங்க பல பதிவுகளுக்கு விதை போடுறது அண்ணியார் தான் போல.... கிண்டலும் கவிதையும் போட்டி போட்டுட்டு பொங்கும் போல.....

வெங்கட் said...

ரசிகன்..,
நீங்க சொன்னது உண்மைதானுங்கோ..

பழமைபேசி said...

:-0)

வெங்கட் said...

பழமைபேசி..!
ரசிச்சதுக்கும்., சிரிச்சதுக்கும்
நன்றி..

cheena (சீனா) said...

சூப்பர் - நச்சுன்னு இருக்கு - வி.வி.சி

ஆமா தலைலெ வுழ்ந்த நச்சுக்கு என்ன வைத்தியம் வெங்கட்

வெங்கட் said...

சீனா சார்..,
அடிக்கிற கைதானே
அணைக்கும்..!