சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

01 March 2010

ஆடு சைவமா.? அசைவமா..?






















ஆடு அசைவமா..?
நல்லா இருக்கே கதை..

சைவத்தை சாப்பிடறவங்க
சைவனா.. ஆடு மட்டும் என்ன
சிக்கன் வருவல், மீன் ரோஸ்ட்னா
சாப்பிடுது..??

அது பாட்டுக்கு இலை., தழை.,
புல்லுன்னு சைவ விஷயத்தை
தானே சாப்பிடுது..?!

இப்படி முழுக்க முழுக்க சைவத்தை
சாப்பிடற ஆட்டை " அசைவம்னு "
எப்படி சொல்லலாம்..?!!

ஆடு சமுதாயத்துக்கு ஏற்பட்ட
இந்த தீராத களங்கத்தை
சரி பண்ணியே ஆகணும்..

அது நம்ம பொறுப்பு..

உங்களை பாத்தா பெரிய மனுஷரா
தெரியுது... நீங்க நல்லா யோசிச்சி
சொல்லுங்க...

ஆடு சைவம் தானே..?

அப்ப..
அப்ப..

Mutton பிரியாணியும்
சைவம் தானே..??!!

ஹி., ஹி., ஹி..!
.


.

22 Comments:

Anonymous said...

இப்படிஎல்லாமா யோசிப்பது...இந்த விளையாட்டுக்கெல்லாம் நான்வரலை...தெரியாம படிச்சு தொலைத்துவிட்டேன்..மண்டகாயிது விடவும் முடிலை......


இப்ப சொல்லுங்க..,
ஆடு சைவம் தானே..?
இல்லனு யார் சொன்னது...சத்தியமாக ஆடு சைவம்தான்..
அப்ப
Mutton பிரியாணியும்
சைவம் தானே..?....அய்யோ... அப்ப எதை அசைவம் என்கிறீங்க உங்கள் பாசையில்...
சைவத்தை சாப்பிடும் ஆட்டை அடித்து கொன்று உண்டால் சைவம் அசைவமாகிறது...விட்டா பால் சைவமா அசைவமா என்பீர்கள்போல...ஆளைவிடுங்க...
avb

Keerthi Kumar said...

இந்த பஞ்சாயத்துக்கு நான் வரல... ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இது Jurassic Park-la பலியான ஆடா இது?

வெங்கட் said...

பெயரில்லா..,
கல்கத்தாவுல சில பேரு மீனை
சைவம்னு சொல்லுறாங்களாம்..,
நம்ம ஊருக்குள்ளயே பல பேரு
முட்டைய சைவம்னு சொல்லுறாங்க..
அதை எல்லாம் ஒதுக்குவீங்க..
நான் ஆட்டை சைவம்னு சொன்னா
மட்டும் 547 கேள்வி கேட்பீங்க..!

வெங்கட் said...

கீர்த்தி..,
ஓ.. டைனோசரஸ் சாப்பிட்ட
ஆடு..!
அப்ப டைனோசரஸும்
சைவமான்னு கேட்கறீங்க..?
இது கூட யோசிக்க வேண்டிய
விஷயம் தான்..

Keerthi Kumar said...

இந்த இடுகையையும் கருத்துரைகளையும் படித்த எனது நண்பர் FB-ல்

Nandakumar டேய்...ஒன்ன ஒங்க மாமா எல்லாரையும் செத்து குண்டு போட்டு தூக்கணும்

Keerthi ஏன் இந்த வெறி

Nandakumar அத தான் நான் கேக்கறேன்

வால்பையன் said...

அதானே!

வெங்கட் said...

என்னப்பா பண்றது கீர்த்தி..!

உங்க அக்காகிட்ட கேட்டேன்..
" இந்த பதிவ மொக்கையா எழுதிட்டேனோன்னு..? "

அதுக்கு உங்க அக்கா சொல்லுறா..
" ஏங்க உங்களுக்கு இந்த தன்னடக்கம்..,
ரொம்ப மொக்கையா எழுதிட்டேனான்னு
கேளுங்களேன்..! "

ரசிகன் said...

ஆட்டுகிட்ட நீ veg / Non veg னு கேட்டா என்ன சொல்லும்? "நான் Vegiterian" . அதுவே சொல்லுதுல்ல .. ஒத்துகோங்க... ஆடு ஒரு "Non vegiterian"

வெங்கட் said...

வாங்க வால்பையன்..,
நமக்கு ஒரு ஆதரவு ஓட்டாவது
இருக்குதே..! சந்தோஷம்.

வெங்கட் said...

ரசிகன்..,
நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க..
போற போக்க பார்த்தா நம்மளயே
மிஞ்சிடுவீங்க போல..
வாழ்த்துக்கள்..

வெங்கட் said...

ரசிகன்..,
ஆமா.., எங்க ஊரு ஆடெல்லாம்
" மேன்னு " தான் கத்தும்..,
உங்க ஊரு ஆடு " Non - Vegeterian "
இங்கிலிபீஷ் எல்லாம் பேசுமா..?

Prathap Kumar S. said...

அய்யா ராசா...கண்ணுல தண்ணி வருது....

வெங்கட் said...

நாஞ்சில் பிரதாப் Sir..,
இதை படிச்சிட்டு கண்ணுல தண்ணி
வந்ததால - நீங்க சைவம்..
நாக்குல தண்ணி வந்தா - அசைவம்..

ரசிகன் said...

என்னது.. ஆட்டுக்கு ஆங்கிலம் தெரியாதா? எந்த ஆட்டுகிட்ட வேணா போய் ஏப்ரல் கு அடுத்த மாசம் என்னன்னு கேளுங்க... கேட்டுதான் பாருங்களேன்....

cheena (சீனா) said...

இன்றைய தினத்திற்குத் தேவையான விவாதம். ஆரம்பித்து வைதத் அருமை நண்பர் வெங்கட்டுக்கு நன்றி - தொடர்ந்து விவாதித்த அனைவருக்கும் நன்றி

இப்பொழுது தீர்ப்பு வழங்கும் நேரம்

ஆடு சைவமா அசைவமா - நலல் கேள்வி

பெற்றோர் சிவமாய் இருந்தால் பிறக்கும் ஆடும் சைவம் தான் - இல்லை என்றல் அசைவம்.

மட்டன் பிரியாணிக்கும் இதே பதில்தான் - இதே தீர்ப்புதான் - நான் பிறவிச் சைவம்


ஆமா சாப்பப்டு எங்கே மட்டன் பிரியாணி வாசம் ஆளத் தூக்குதே

வெங்கட் said...

னா சார்..,
நன்றி ஐயா.,
அருமையான தீர்ப்பு
வழங்கினீர்கள்..
கடைசியில் மட்டன் பிரியாணி
வாசம் உங்கள் மூக்கை துளைத்ததே
அது தான் Punch..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வலைச்சரம் மூலமாக வந்தேன், ஸ்டார்ஜனுக்கு நன்றி

வெங்கட் said...

சுரேஷ்..,
நன்றிகள் உங்களுக்கும்..,
நண்பர் ஸ்டார்ஜன்னுக்கும்..

மதுரை சரவணன் said...

சைவமாய் நினைத்து சாப்பிடிகிறவர்களுக்கு சைவம். அசைவமாய் சாப்பிடுகிறவர்களுக்கு அசைவம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

///SUREஷ் (பழனியிலிருந்து) கூறியது...

வலைச்சரம் மூலமாக வந்தேன், ஸ்டார்ஜனுக்கு நன்றி.///

//வெங்கட் கூறியது...

சுரேஷ்..,
நன்றிகள் உங்களுக்கும்..,
நண்பர் ஸ்டார்ஜன்னுக்கும்..///

நன்றிகள் இருவருக்கும்.

சேலம் தேவா said...

அந்த ஆட்டை இன்னும் கொஞ்சம் உயரமான இடத்திலிருந்து குதிக்க சொல்லுங்க.அப்பதான் அது non veg ஆகும் .

என்னது நானு யாரா? said...

யாருப்பா சீக்கிரம் ந்யூஸ் ரிபோர்ட்டர்ஸ்சை கூப்பிடுங்க அப்பா! என்ன ஒரு ஸ்கூப் ந்யூஸ் கிடைச்சிருக்கு!

இதை சும்மா விடலாமா?

இந்த உலகத்தில சைவம் அசைவம்ன்னு ரெண்டு பிரிவெல்லாம் இல்லை!

உலகம் பூராவும் இருக்கிறது எல்லாமே சைவ பொருள்தான் அடிச்சி சொல்லி இருக்காரு நம்ப வெங்கட்.

அவருக்கு கூடிய சீக்கிரம் நோபல் பரிசு வேற கிடைக்கிறதுக்கு பரிந்துரைக்க போறாங்கன்னு அரசல் புரசலா பேசிக்கிறாங்க!

இந்த விஷயம் முதல்ல நம்ப ந்யூஸ்பேபரில தான் வரணும் தெரிஞ்சுதா?