சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

12 March 2010

நாட்டாம.! தீர்ப்ப மாத்தி சொல்லு.!எதாவது சிக்கலான விஷயம்.,
அதை பத்தி எங்க H.O.D-கிட்ட
பேசணும்னா என் நண்பர்களோட
Choice நான்தான்..

நானும் " நாட்டாமை " மாதிரி
போவேன்..

அங்க போனப் பிறகு தான் தெரியும்..
நான் நாட்டாமை இல்ல
கைபுள்ளன்னு..

இப்படிதான் ஒரு தடவை.,
எங்க Professor ஒரு Tour
ஐடியா கொடுத்தார்

" எங்கேயாவது ஒரு Education Tour
Plan பண்ணுங்களேம்பா.. H.O.D-கிட்ட
Permission வாங்கிட்டு போயிட்டு வரலாம்.. "

உடனே என் நண்பர்கள் Tour
போறதை பத்தி Discuss பண்ண
ஆரம்பிச்சிட்டாங்க.

H.O.D Permission வேணுமே..?
எங்கிட்ட வந்தாங்க..

" H.O.D-கிட்ட Education Tour போக
Permission வாங்கிட்டு வா..! "

" எந்த ஊருன்னு கேட்பாரே..! "

" GOA-ன்னு சொல்லு.. "

" என்னது GOA-வா..? GOA போறதெல்லாம்
Education டூராடா..? "

" நம்ம பாட புக்கெல்லாம் எடுத்திட்டு
போயிடலாம்..,அங்கே Beach-ல
உக்கார்ந்து படிக்கலாம்டா..! அப்ப
அது Education Tour தானே..!! "

" ??!!?!?!! "

( ஆஹா.. நம்மள காலேஜ் விட்டு
தொரத்த ப்ளான் பண்ணிட்டானுகளே..!
மீ எஸ்கேப்..! )

.
.

6 Comments:

Vijay Anand said...

//" சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..! //
- நீங்க ரொம்ப நல்லவர் போல அது தான் உங்கள அனுப்பி இருகாங்க

வெங்கட் said...

விஜய்..,
இப்படி எல்லோரும்
உசுப்பேத்தி., உசுப்பேத்தி தான்
உடம்பே ரணகளமா போயிடிச்சி.,

Vijay Anand said...

hahahahaha.....

ரசிகன் said...

கருத்து:
நாட்டாமை ( நாட்டு + ஆமை) க்கு தோல் Strong .. அதான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவார்னு நண்பர்கள் ப்ளான் பண்ணி sketch போட்டுடாங்க போல. பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்.. Feel பண்ணாதீங்க‌... விடுங்க விடுங்க‌...

புலம்பல்:
உங்க நண்பர் எஙக college ல படிச்சிருக்கலாம்.. (Beach-ல உக்கார்ந்து படிக்கலாம்டா..!அப்ப அது Education Tour தானே..!! ) இந்த யோசனை பண்ணாம நாங்க எல்லாம் Botanical garden ஐ சுத்தி சுத்தி வந்து இருக்கோம்..

cheena (சீனா) said...

ஹா ஹா ஹா வெங்கட் நாங்கல்லாம் ஆல் இண்டியா டூர் போனப்ப பங்களாதேஷ் - சண்டை - எல்லாக் கனவும் நொறுங்கி - மதுரை சென்னை பெங்களூரு அவ்ளோதான் - அந்த டூர்ல தான் நான் மொத மொதலா கட்டிக்கிட்ட ரிஸ்ட் வாட்ச் காணாமப் போச்சி - ம்ம்ம்ம்ம்

வெங்கட் said...

சீனா சார்..,
எல்லா Tour-ம் ஒரு வித
அனுபவம்தானே..,
உங்க Wrist Watch-ஐ நீங்க
இன்னும் மறக்கலை
பார்த்தீங்களா..?!