சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

17 March 2010

செக்கு மாடும்., MBA படித்தவனும்..!

MBA படிச்ச ஒருத்தன்
கிராமத்துக்கு போறான்..,

அங்கே ஒரு செக்கு மாடு மட்டும்
தனியா செக்கு சுத்திட்டு இருக்கு..

அவனுக்கு ஆச்சரியமா இருக்கு..,

பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள
ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு
இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்...

" மாடு மட்டும் தனியா செக்கு
சுத்திட்டு இருக்கே..? "

" அது பழகின மாடு தம்பி.., அதுவே
சுத்திக்கும்..! "

" நீங்க உள்ளே வந்த உடனே
அது சுத்தறத நிறுத்திட்டா...!
எப்படி கண்டுபிடிப்பீங்க..? "

" அது கழுத்தில ஒரு சலங்கை
இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா
அந்த சலங்கை சத்தம் வராது..
அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்.. "

" அது சுத்தறதை நிறுத்திட்டு.,
ஒரே இடத்துல நின்னு..,
தலைய மட்டும் ஆட்டினா..
அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..? "

" இதுக்குதான் தம்பி., நான் என் மாட்டை
காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..! "

" ?!?!!?!? "

பின் குறிப்பு :

" சரியாவே யோசிக்க மாட்டேன்னு..,"
குலதெய்வத்துக்கு எதாவது சத்தியம்
பண்ணி குடுத்திருப்பானோ..!
.
.

22 Comments:

வரதராஜலு .பூ said...

//விவசாயி : இதுக்குதான் தம்பி.,
நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம்
படிக்க அனுப்பலை..!//

நச்.
:)

Anonymous said...

where you got this photo..b'coz...now-a-days, i don't think this kind is available..

he must have promised you...

வெங்கட் said...

வரதராஜீலு சார்..
மிக்க நன்றி..!
:)

வெங்கட் said...

பெயரில்லா..,
இந்த படத்தை நான்
Google Image Search-ல்
இருந்து எடுத்தேன்..

bhuvanendar said...

joke was very crispy ..... good job

கக்கு - மாணிக்கம் said...

ஹ..ஹ.. ஹ.. ஹா..
நல்ல கூத்து.இது போன்ற கூத்துக்களை நாங்கள் எங்கள் கம்பெனியில் பார்த்து வருகிறோமே!

வெங்கட் said...

புவனேந்தர்.,
ரசிச்சதுக்கு நன்றி ..!

வெங்கட் said...

கக்கு-மாணிக்கம்..,
உங்க கம்பெனியில இந்த மாதிரி
ஆளுங்க இருக்காங்களா..?
அப்புறம் கம்பெனி என்ன ஆகுறது..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ayyaa raasa ithu pazhaiya kathiyaache..

irunthaalum superappu........

jana said...

வெங்கட்
நம்ம Collegeக்கு போயும் இன்னும் வெகுளியா இருக்கோமெ
அந்த மாடு மாதிரி
எப்படி அது...
நமக்கு அறிவு வளரலையா இல்ல
நமக்கு குழந்த மனசா...?

வெங்கட் said...

ரமேஷ்..,
கதை பழசு தான்..,
ஆனா நல்ல கதை
இல்லியா..!
தெரியாதவங்க நாலு பேரு
தெரிஞ்சிக்கட்டுமே..!

வெங்கட் said...

ஜனா..,
நாம எப்பவுமே குழந்தை பசங்க
தான்.. இந்த விஷயதில மட்டும்
உனக்கு எப்பவும் Doubt வரக்கூடாது..
நமக்கு அறிவு வளரலையான்னு
கேட்டு இருக்க..
ஆமா..,
அறிவுன்னா என்ன..?

VASUDEVAN said...

yappa..| MBA Romba palasuppa..! adahrkum un comment parthenappa..!

வெங்கட் said...

வாசுதேவன் சார்..,
நான் தான் பழசுன்னு ஒதுக்கறேனே..!
Inter College பேச்சு போட்டியில
நான் இந்த ஜோக்கை சொன்னப்ப.,
எனக்கு நிறைய கைதட்டல் கிடைச்சது..,
அந்த ஆசையில இதை எழுதிட்டேன்..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வெங்கட் said...

அனாமிகா..,
பார்த்து..,
ஜோக்கை ஜோக்கா
எடுத்துகிட்டா பரவாயில்ல..,
Tension ஆயிடப்போறாங்க..!!!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வெங்கட் said...

அனாமிகா..,
நம்மள மாட்டி விட்டுடாதீங்க..!

NIZAMUDEEN said...

நல்ல வேளை எம்.பி.ஏ. ஆட்களை மட்டும்தான்
நக்கலடிச்சீங்க; மற்ற படிப்பாளிகளை போனாப்
போவுதுன்னு விட்டுட்டீங்களா!
அறிந்த கதை அருமை.

வெங்கட் said...

நிஜாமுதீன்..,
டாக்டர் ஜோக்., வக்கீல் ஜோக்
மாதிரி இது MBA ஜோக்
அவ்வளவு தான்..
யாரும் இதை சீரியஸா
எடுத்துக்க கூடாது..

cheena (சீனா) said...

ம்ம்ம் இது மாதிரி பல கத இருக்கு - பால் கறக்கறது எப்படி - பால் உறபத்தி அதிகரிக்க என்ன பண்ணனும் - இப்படிஎல்லாம் ஒரு மாட்ட வச்சி ஒரு மனி நேரம் லெக்சர் கொடுத்தாராம் ஒரு அக்ரி க்ராஜுவேட் -ஒரு கிராமத்துல - விவசாயிகள் கூட்டத்துலே

கடசில்ச் நச்சுன்னு ஒரு பெருசு சொன்னுச்சாம் - தம்பி காளை மாட்டுலெ இப்படி எல்லாம் பால் கறக்கலாம்னு எங்களுக்குத் தெரியாமப் போச்ச்செ தம்பினு

அக்ரி கிராஜுவேட்ஸ் - டேக் இட் ஈசி - ஜஸ்ட் எ ஜோக்

வெங்கட் said...

சீனா சார்..,
ஹா., ஹா.., ஹா..!
நல்ல Joke...!