சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

22 March 2010

சொன்ன பேச்ச கேளு..!!D.Pharm படிச்ச என் Friend சுரேஷ்
எங்க ஊருலயே Medical Shop
வெச்சி இருக்கான்...

ஜலதோசம்., தலைவலி..,மாதிரி
சின்ன விஷயத்துக்கெல்லாம்
அவன் தான் எனக்கு டாக்டர்...

( ஓ.சி Treatment. ஹி., ஹி., ஹி..!! )

அப்படி தான் நான் ஒரு தடவை
அவன்கிட்ட போயி...

" தலைவலி., உடம்பு வலி., காய்ச்சல்
வர்ற மாதிரி இருக்கு.., எதாவது
மாத்திரை குடு.. "

உடனே அவனும் கலர்., கலரா
பெருசு., பெருசா 3 மாத்திரை
குடுத்தான்..

" ஐயோ.. என்னடா இம்புட்டு பெருசா
இருக்கு..?! சின்ன மாத்திரையா குடுடா...! "

அவனும் உள்ளே போயி., வேற மாத்திரை
எடுத்திட்டு வந்து...

" இந்தா நீ கேட்ட மாதிரி சின்ன மாத்திரை..! "

" ரொம்ப Thanks..! "

" மறக்காம வேளைக்கு 40 சாப்பிடு...! "

" என்னாது நாப்பதா...??!! அந்த
மூணு மாத்திரையவே குடு ராசா..!! "
.

.

16 Comments:

jana said...

நல்லவேளை நம்ம Suresh (medical Shop) டாக்டரா இல்ல.
மாத்திரைக்கு பதிலா ஊசி இருந்திருக்கும்...
யோசிச்சி பார்த்தா எனக்கு தல சுத்துது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ottu pottachu. saththiyamaa ennaala mudiyala. yaaraavathu enakku 100 thookka maaththirai kodungalen......

வெங்கட் said...

ஜனா..,
ஆமா ஆமா..,
யோசிச்சி பார்த்தா எனக்கும்
தலை சுத்துதுபா...

வெங்கட் said...

ரமேஷ்..,
100 தூக்க மாத்திரையா..?
அதை நம்ம Friend கடையில
வாங்குங்க..
Recommend பண்ணி Discount
வாங்கி தர்றேன்..

" All in tha Game ya..
Take it Easy..! "

meenamuthu said...

அடடா! என்னமா யோசிக்கிறீங்கப்பா!:))

என்னாலேயே நம்ப முடியலை உள்ளே வந்ததுதான் தெரியும் முழுக்க முழுக்க ஒரு பதிவு விடாமல் படிச்சிட்டேன்!

எப்போதும் இப்படியே தொடர வேண்டும் என்று கேட்டுக்கறேன் வெங்கட்.

வடிவேலன் (கணினி மென் பொருட்களின் கூடம்)பக்கத்தில் கண்டு இங்கு வந்தேன்!அருமையான பரிந்துரை! நன்றி வடிவேலனுக்கு.

வெங்கட் said...

மீனா.,
உங்கள் வருகைக்கு நன்றி..
அனைத்து பதிவுகளையும்
படித்து விட்டீகள் தானே..!!
சந்தோஷம்...
தொடர்ந்து வாருங்கள்..,

வடிவேலன் சார் உங்களுக்கு
மீண்டும் ஒரு SPL Thanks..

ரசிகன் said...

Suresh உங்க பதிவுகளை படிச்சிருப்பார்.. பழிக்குப்பழியா உங்க வயிற்றை புண்ணாக்கலாம்னு 40 மாத்திரை குடுத்திருக்கார். நியாயம் தானே..
உங்க blogs படிக்கிற டாக்டர் நண்பர்கள் எல்லாம்,Prescription இல்லாம மாத்திரை சாப்பிடறயானு கொட்ட போறாங்க இருங்க....

வெங்கட் said...

ரசிகன்..,
ரொம்ப நாளா காணோம்..??
வந்த உடனே ஆரம்பிச்சாச்சா
என்னை கலாய்க்க..
நடத்துங்க.. நடத்துங்க...

ரசிகன் said...

இது கலாய்க்கறது இல்லங்க... தமிழ் இலக்கணத்துல இதுக்கு பேரு வஞ்சப்புகழ்ச்சி...

"எங்க வயிற்றை நீங்க நகைச்சுவையாலே புண்ணாக்கறதாலே உங்க நண்பர் மாத்திரை மூலம் பழிவாங்க முயன்றிருக்கிறார்" ‍நகைச்சுவை பதிவருக்கு இது நல்ல certificate தானே..

"உங்க விசிறி பட்டாளத்துல doctors இருக்கறது உண்மை மற்றும் பெருமை தானே.. "

(எப்படி.. தப்பிசோம்ல..)

வெங்கட் said...

ரசிகன்..,
எனக்கு தெரிஞ்ச வரைக்கும்
வஞ்சப் புகழ்ச்சின்னா
புகழ்ற மாதிரி புகழ்ந்து.,
நிஜத்துல கலாய்க்கிறது...

நீங்க மாத்தி சொல்லுறீங்களே..!

தமிழ் said...

வஞ்சப்புகழ்ச்சி அணி! கவிஞன் (ரசிகன்?) தான் கூறவருகின்ற ஒன்றைப் புகழ்வதுபோல் இகழ்ந்தோ, இகழ்வதுபோல் புகழ்ந்தோ உரைப்பது வஞ்சப் புகழ்ச்சி ...

http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2009/01/blog-post.html

வெங்கட் said...

தமிழ்..,
ஓ.., அப்படியா..?
இப்ப தெரிஞ்சிக்கிட்டேங்க..
நன்றி...!!

ரசிகன் said...

அணி இலக்கணத்துல வஞ்சப்புகழ்ச்சி அணின்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு புகழ்வது போல் இகழ்தலும் , இகழ்வது போல் புகழ்தலும் வஞ்சப்புகழ்ச்சி எனப்படும்னு சிறு குறிப்பு வரைஞ்சது நல்லா நியாபகம் இருக்குங்க.
( எ.கா னு போட்டு ‍ நீ மட்டுமா கொடுக்கிறாய் மழையும் தான் கொடுக்கிறது னு ஔவை பாரிகிட்ட சொன்னதா எழுதினதா நியாபகம்). தமிழ் வாத்தியார் என்ன மார்க் போட்டார்னு மட்டும் மறந்துடுச்சி..

வெங்கட் said...

ரசிகன்..,
நான் : ஐயா.., ஏன் இதை எனக்கு
சொல்லி தரலை...??

தமிழ் ஐயா : அன்னிக்கு தான்டா
நீ Class-ஐ Cut அடிச்சிட்டு
சினிமாவுக்கு போனே..!!

cheena (சீனா) said...

ஏம்பா - இடுகையைப் படிச்சிட்டு சிரிச்சிட்டு - ஒரு ஸ்மைலி மறுமொழி போடறத வுட்டுட்டு - இத்ந் ரசிகனுக்கு வேற வேல இல்லையா - தம்ழி இலக்கணமெல்லாம் சொல்லிக்கொடுத்து - ம்ம்ம்ம் - இதெல்லாம் இப்ப வெங்கட்டுக்குத் தேவையா - பாருங்க்ப்பா - மத்தவங்க எல்லாம் ஓடியே பொய்ய்ட்டாங்க

வெங்கட் said...

சீனா சார்..,
பாவம் சார் ரசிகன்..
விட்டுடுங்க..
எனக்கு தெரியாததை சொல்லி
குடுக்கிற ஆர்வத்தில எழுதிட்டாரு..