சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

31 March 2010

ஹாய் - ஹைகூ...!!( படித்ததில் பிடித்த ஹைகூக்கள் )

வெளியே மழை.,

சாரலடிக்கிறது
உன் நினைவுகள்..!

சுத்தம் சோறு போடும்.,
சுத்தம் வயிறு..,
சோறு..?

அறுவடைக்கு பின்னும்
வளர்ந்துகொண்டே இருக்கிறது
வங்கி கடன்..

காவிரி பிரச்சினை.,
பேசிப் பேசியே
வறண்டு போகும் நாக்கு..

கர்ணன் எவ்ளோ பெரிய வள்ளல்.,
வாரி வழங்கியதென்னவோ
துரியோதனன் வீட்டு பொருள்..

பின் குறிப்பு :
முதல் ஹைகூ மட்டும்
என் நண்பன் ஜெகன் எழுதியது..
.
.

32 Comments:

மங்குனி அமைச்சர் said...

//பின் குறிப்பு :
முதல் ஹைகூ மட்டும்
என் நண்பன் ஜெகன் எழுதியது..//

இன்னொரு பின் குறிப்பு : மற்ற எல்லா "ஹைகூ"வும் நம்ம மங்குனி அமைசர் எழுதியது

jana said...

அருமையான ரசனை வெங்கட்....

படித்ததில் எனக்கு பிடித்த சில....

சவப்பெட்டி அழுகிறது...
இறந்தது மனிதன் தானே..?
என்னை என் புதைக்கிறார்கள்...!

அனுமதி கேட்கவும் இல்லை...
அனுமதி கொடுக்கவும் இல்லை...
பிடிவாதமாய் ஒரு முத்தம்...
கன்னத்தில் "கொசு கடி"...!

உயிரெழுத்துக்கள் எத்தனை?
என்றார்கள்...
சட்டென்று சொன்னென்...
இரண்டு(!!?)
ஆம்...
அவள் பெயரில் (பூஜா) உள்ள எழுத்துக்கள்
அத்தனைதான்...

இன்னும் இருக்கிறது... நீளம் கருதி...

அனாமிகா தொடர்வார்கள்...(கரடி கதையைப் போல்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

intha vayasula imputtu arivaa?

வெங்கட் said...

மங்குனி..,
ஆமாங்க இவருதாங்க
எழுதினாரு..,
( நான் சொல்ல சொல்ல.. )

அனாமிகா said...

@jana
என் சார்பில் நீங்க commitment கொடுத்துட்டீங்களா?

ராமுவின் மனைவி இறந்தாள்
பொங்கி அழுதான்
சோமு

இதெல்லாம் ஹைகூல சேர்த்தியாகுமா?? இன்னும் இருக்கு.. ஆணி புடுங்கிட்டு வீட்டுக்கு வந்து பொடுறேன்

வெங்கட் said...

ஜனா..,
Super..,
வர வர நம்ம Comment Section
செம Interesting-ஆ போவுது..
பாத்துப்பா நம்மள
ஓரம் கட்டிடாதீங்க..!

வெங்கட் said...

ரமேஷ்..,
ரொம்ப புகழதீங்க..,
சின்ன வயசுல நான்
நிறைய Complan குடிச்சேன்..,
இந்த அறிவுக்கு காரணம்
Complan தான்..

வெங்கட் said...

அனாமிகா..,
உங்க ஹைகூ படிச்ச
உடனே சிரிப்பு தாங்கல..,
ஏன் ஒன்னோட நிறுத்திட்டீங்க.,

ஓ..இன்னும் இருக்கா...,
அப்ப சரி..
கண்டிப்பா எழுதணும்..

ரசிகன் said...

அடடா... ஹைக்கூ சொல்லலைனா ஆட்டத்துல சேத்துக்க மாட்டாங்க போல.

அந்தியானால் காணவில்லை
ஆகாயத்தில் சூரியன்..
Non stop entertainment தான் (Nonsense தான்! )
கோகுலத்தில் சூரியன்.!!

(ஆச்சர்யக்குறி போட்டிருக்குல்ல...
ஒத்துகோங்க.. ஹைக்கூ தான்.
அப்பாடி commentம் போட்டாச்சி..)

ஜனா..
நல்ல‌ ரசிகனா..
பாசமான தகப்பனா *
கலக்குறீங்க..
(* - பொண்ணு பேர்ல இருக்கற ரெண்டுதான் உயிரெழுத்தாம்ல..)

வெங்கட் said...

ரசிகன்.,
வித்தியாசமா யோசிக்கிறதுக்கு
உங்களால மட்டும் தான் முடியும்..!!
வர வர எனக்கு Medal தர்றீங்களா.,
இல்ல Mental-ன்னு சொல்லுறீங்களான்னு
புரிய மாட்டேங்குது..

ஆச்சரியக்குறி போட்டு
இருக்கறதால பாராட்டி
இருக்கீங்கன்னு வெச்சுக்கறேன்..

அனாமிகா said...

என்னையே நான் எங்கெங்கோ தேடி அலைந்தேன்
சுற்றி அலைந்து இறுதியில் கண்டுபிடித்தேன்
கூகுளில்...

உலகே நம் காதலை பேச
நாம் மட்டும் அமைதியாய்
கல்லரையில்...

அதற்கும் (என்னைப் போல்) விளம்பரம் பிடிக்காதோ
அசோக சக்கரத்தின்
நான்காவது சிங்கம்...

உன்னை மீண்டும் மீண்டும் இழக்கின்றேன்
வலியை மீண்டும் மீண்டும் உணர்கிறேன்
தினம் உன் நினைவை கிளறும்
இரங்கல் கடிதங்கள்...

சிரித்ததை நினைத்து அழுதேன்
அழுததை நினைத்து சிரித்தேன்
பிரிந்த நண்பனின் நினைவுகள்...

"பொண்ணு கருப்பாம்" தரகர் சொல்ல,
அவள் வீசிய போது உடைந்தது
கண்ணாடி மட்டும் அல்ல...

அவ்ளோ தான் என் quota முடிந்தது.. இதுல, நான் சுட்டது எது சுடாதது எதுன்னு சொல்ல மாட்டேனே...

அனாமிகா ரசிகன் said...

தானைய தலைவி அனாமிகாவிற்கு...

ஒரு ஹைகூவே
ஹைகூ
சொல்கிறதே!!! (ஆச்சரியக்குறி)

note பண்ணுங்கப்பா...
note பண்ணுங்கப்பா...

jana said...

அனாமிகா

உங்களுடைய ஹைகூ எல்லாம் " High"கூ.

நன்றி, என் பின்னுட்டத்தை மதித்ததற்க்கு.

உங்களை நம்பி களம் இறங்கலாம்.
தொடர்வோம் இனி...!

ரசிகன்

நல்லா எழுதுறீங்க...

என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்கு...

நீங்க யாருங்க...?

நீங்க யாரா இருந்தாலும் நன்றி.

என் பின்னுட்டத்திற்கு பதில் சொன்னதுக்கு...

உங்களையும் நம்பி களம் இறங்கலாம்.

தொடர்வோம் இனி...!

வெங்கட்

நல்ல நட்புக்கு நம்ம Blog ஒரு sampleஆ இருக்கும்

சந்தெகமே இல்ல...

நன்றி...

வெங்கட் said...

அனாமிகா..,
ஹைகூக்கள் நல்லா இருக்கு..!
இதுல சுட்டது எது..,
சுடாதது எதுன்னு நான்
கண்டுபிடிச்சிட்டேன்..
ஆனா சொல்ல மாட்டேனே..!!

வெங்கட் said...

அனாமிகா ரசிகன்..,
உண்மையிலயே இது சூப்பரு...!!

ஏம்பா கரை வேஷ்டிகளா..,
அனாமிகாவை சீக்கிரம்
கட்சிக்குள்ள இழுக்கற
வேலைய பாருங்கப்பா..!!

உங்கள் சேவை.,
இந்த நாட்டுக்கு தேவை..!!

வெங்கட் said...

ஜனா..,
ஹையா ஜாலி..,
இனிமே மொக்கையா பதிவு
போட்டாலும் கவலை இல்ல..
இவங்க கூட்டணி போட்டு
நம்மள கரை ஏத்திடுவாங்க..

உன் பொண்ணு பேரு பூஜான்னு
" நீங்க LKG பாஸா..? Fail-ஆ "
பதிவு Comment Section-ல தானே
சொன்ன..!!

manivannaraj said...

jana ur reply for hiq is very super .i'm regularlly watching your replies it's marvellous

அஹமது இர்ஷாத் said...

அழகான கவிதை பகிர்வுக்கு நன்றி சகா....

Anonymous said...

ஒரு வயசில ஹைகூ பைத்தியமாக இருந்தேன். இப்ப எவ்வளவோ யோசித்தும் ஒரு மண்ணும் மனதில் வருகுதில்லை. அதுசரி நம்ம அனாமிகாவும் ஐ.டியில் ஆணி புடுங்கிறவங்களா? ஆமா அது என்ன புளொக் எழுதுறதில முக்கால்வாசி பேர் ஐ.டியில் ஆணி புடுங்கிறவங்களா இருக்காங்க. பாவம்ப்பா உங்கள வேலையில் சேத்துக்கிட்ட புண்ணியவான்.

அனாமிகா said...

@அனாமிகா
ஆணி தான் புடுங்குறேன்..ஆனா ஐ.டி கம்பனில இல்லை :)

வெங்கட் said...

மணிவண்ணராஜ்..,
ஜனாவோட Comments படிக்க
வர்றீங்க., சந்தோஷம்...
கூடவே என் பதிவையும்
படிக்கறீங்க தானே..?!!

வெங்கட் said...

அஹமத்..,
நன்றி நண்பரே..

வெங்கட் said...

அனாமிகா துவாரகன்..,
பரவாயில்ல விடுங்க...!
ஹைகூ சொல்லலைன்னா
Bench மேலே எல்லாம்
ஏறி நிக்க சொல்ல மாட்டேன்..
பயப்படாதீங்க..

வெங்கட் said...

அனாமிகா..,
நான் கண்டுபிடிச்சிட்டேன்..
நீங்க ஆசாரி தானே..??!!

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

குறுங்கவிதைகள் அனைத்துமே அருமை - ரசித்தேன் - மகிழ்ந்தேன்

நல்வாழ்த்துகள் நண்பா
நட்புடன் சீனா

வெங்கட் said...

சீனா சார்.,
உங்க வாழ்த்துக்கு நன்றி..,

Anonymous said...

அவள் கவிதையில் பிழை..
காதலனாய் வேறொருவன்.

அனாமிகா ரசிகன் said...

A Guy proposed a girl,
She said 'No'
And he lived happily ever after…

அனாமிகா ரசிகன் said...

ஒரு ச்சின்ன லவ் ஸ்டோரி

அவன் சிரித்தான்
அவளும் சிரித்தாள்
குழந்தை அழுதது...

வெங்கட் said...

பெயரில்லா..,
ஹைகூ சூப்பர்..!!

வெங்கட் said...

அனாமிகா ரசிகன்..,
அட இங்க பார்றா..,
நம்ம ஆளுங்க இங்கிலீஸ்ல
எல்லாம் கவிதை எழுதறாங்க..

வெங்கட் said...

அனாமிகா ரசிகன்..,
அட இப்ப தமிழ்ல..
போற போக்க பார்த்தா
உங்களுக்கு நான் ரசிகன்
ஆயிடுவேன் போல
இருக்கே..!!