சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

30 March 2010

சிங்கம்-ல...!!!ரெண்டு பேர் காட்டு வழியா
நடந்து போயிட்டு இருக்காங்க...,

அப்போ 300 மீட்டர் தூரத்தில
ஒரு சிங்கம் நின்னுட்டு இருக்கு..,

இவங்க சிங்கத்தை பார்க்க.,
சிங்கம் இவங்களை பார்க்க..,
ஒரே ஜாலிதான் - சிங்கத்துக்கு..

அப்புறம் என்ன..?
Chasing தான்...,

இவங்க ரெண்டு பேரும் ஓடறாங்க..

திடீர்னு ஒருத்தன் மட்டும்
உக்கார்ந்து Shoe Lace-ஐ
Correct பண்றான்..

இன்னொருத்தன் கடுப்பாயிட்டான்..

" இதை Correct பண்ணி..,
சிங்கத்தை விட வேகமா
ஓடப்போறியா..? "

" எதுக்கு..! உன்னை விட வேகமா
ஓடுனா போதுமே..!!! "
.
.

30 Comments:

ரசிகன் said...

உண்மையை ஒத்துகிட்டே ஆகணும்.. Fantastic.. இந்த மாதிரி think different type விளம்பரங்கள் தான் add industriesla இப்போ Hot... கைவசம் நிறைய தொழில் வச்சிருக்கீங்க‌.. Move On..

Anonymous said...

" எதுக்கு..! உன்னை விட வேகமா
ஓடுனா போதாது..??!! "
ஏங்கப்பா....ஒரு செகண்ட்...புரிந்தபின்தான்...நண்பனின் வார்த்தை எத்தகைய வீரியத்தை கொண்டது என்றிருக்கிறது...ஏன் சார்...சொந்த அனுபவமா...

இவங்க சிங்கத்தை பார்க்க.,
சிங்கம் இவங்களை பார்க்க..,
ஒரே ஜாலிதான் - சிங்கத்துக்கு..

அப்ப‌டி ஒரு ஜாலின்றீஙக‌...ஆமாமா...மாட்டுன‌வ‌னுக்குத்தான் தெரியும் அந்த‌ ஜாலி
என்னன்னு........பொன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

unkala maathiri nanbarkala inime kooda vachukka koodaathu.

ayya saami itha ninechu thedeernu sirippu vanthu ellorum loosunu ninachida poraanga..

jana said...

வெங்கட் நல்ல Joke...

இத படிச்சதும் எனக்கு கரடி Joke ஒன்னு ஞாபகத்துக்கு வருது...

80 வயது தாத்தா Regular Medical Check up போனார்...
டாக்டர் கேட்டார் " எப்படி இருக்கீங்க"
பெரியவர் " திடகாத்திரமாவும், சந்தொசமாவும் இருக்கேன்... ஏன்னா என்னுடய 18 வயது மனைவி என் குழந்தக்கு (pregnant) அம்மாவாக போறாங்க...
டாக்டர் கொஞ்சம் யோசிச்சிட்டு "நான் ஒரு கதை சொல்லுறேன்னு...
எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் நல்ல வேட்டக்காரர்...
ஒரு நாள் அவசரத்துல Gunக்கு பதிலா குடையை (umbrella) எடுத்திட்டு வேட்டைக்கு போய்ட்டார்.
மரத்துக்கு பின்னாடி இருக்கும் போது திடிருன்னு பெரிய கரடி ஒன்னு அவரு முன்னாடி வந்தது...
உடனே கரடிக்கு முன்னாடி கயில இருந்த குடையை விரிச்சி கைப்பிடியை ஒரு முருக்கு முருக்கினார்... அவ்வளவு தான் அந்த கரடி செத்துட்டது...

டக்குன்னு பெரியவர் சொன்னார் " இது impossible வேறா யாரோ கரடிய சுட்டிருக்கனும்...

இது தான் எனக்கு தொனிச்சி நீங்க சொல்லும் போதும்னு டாக்டர் சொன்னார்...

என்னொட Joke புரிஞ்சா சிரிங்க... ரசிகன் நீங்க மட்டும் புரியலன்னாலும் சிரிங்க

அனாமிகா said...

ஆமா.. இந்த ரெண்டு பேருல நீங்க யாரு? ஓ.. நீங்க இங்க இருக்குறீங்க. அவர் எங்கே???

உங்களை மாதிரி ஒரே ஒரு நண்பன் போதும்.. எதிரிகளுக்கு அவசியமே இல்லை..

அக்பர் said...

அட இது நல்லாயிருக்கே.

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. தொடர்ந்து கலக்குங்க.

வெங்கட் said...

ரசிகன்..,
நன்றி..,
அப்ப நாம Ad Industry-க்கு
போகலாம்கறீங்க..!

வெங்கட் said...

பொன்..,
சிங்கத்துக்கிட்ட மாட்டின
சொந்த அனுபவம் எல்லாம்
கிடையாது..
ஒரு சிங்கத்தை 20 அடி
தூரத்தில பார்த்து வேணா
இருக்கேன்.. Zoo-ல..

வெங்கட் said...

ரமேஷ்..,
இதுக்கே Tension ஆயிட்டா
எப்புடி..?
சிரிச்சா லூசுன்னு நினைக்க மாட்டாங்க.,
காரணம் கேட்பாங்க.,
நீங்க இந்த ஜோக்கை சொல்லுங்க..,
அவங்களும் சிரிக்கட்டும்..!

வெங்கட் said...

ஜனா..,
சிங்கத்துக்கு போட்டியா கரடியா..?
ஆமா இதென்ன பெரியவங்க
ஜோக்கா..?
இப்படி ஜோக் சொன்னா..,
என்னை மாதிரி LKG., UKG
பசங்களுக்கு எப்படி புரியும்..??

வெங்கட் said...

அனாமிகா..,
எங்கே ரொம்ப நாளா
ஆளையே காணோம்..??

உங்களுக்கு இங்கே படிச்சது
பிடிக்கலைன்னா..,
உங்க Blog-ல வெச்சி தானே
திட்டுவீங்க..
( அதாங்க I.T.-ல ஆணி புடுங்கிறவரை
பத்தி கிழிச்சிருந்தீங்களே..! )

அந்த மாதிரி என்னையும் திட்டி
இருக்கீங்களான்னு உங்க Blog-க்கு
ஒரு Visit அடிச்சேன்..
நல்ல வேளை., அப்படி ஒன்னும்
இல்லை..!

வெங்கட் said...

அக்பர்..,
உங்க வாழ்த்துக்கு நன்றி..!

அனாமிகா said...

//இத படிச்சதும் எனக்கு கரடி Joke ஒன்னு ஞாபகத்துக்கு வருது...//

இத படிச்சதும் எனக்கும் ஒரு கரடி Joke ஞாபகத்துக்கு வருது..
ஒரு கரடி ஒரு முயலை துரத்திட்டு இருக்கும் போது கடவுள் வந்து ரெண்டுக்கும் தலா 3 வரங்கள் கொடுத்தாராம்.
கரடியின் முதல் விஷ் - இந்த காட்டில் எல்லா கரடியும் பெண் கரடியாக்கனும். அப்படியே ஆச்சு.. முயல் சொல்லிச்சாம் - எனக்கு ஒரு helmet வேணும்னு. கடவுளே confuse ஆகிட்டார். இருந்தாலும் wish granted..
கரடியின் ரெண்டாவது விஷ் - பக்கத்து காட்டிலும் எல்லா கரடியையும் பெண் கரடியாக்கனும். wish granted.. அதுக்கு அப்புறம் முயல் ஒரு ferrari car கேட்டுச்சாம். கடவுளும் கொடுத்தார்
மூணாவதா, கரடி உலகத்தில் உள்ள எல்லா கரடியையும் பெண் கரடியா மாத்த சொல்லிச்சாம்.. அந்த wish-um granted...
இப்போ முயல் helmet-a மாட்டிட்டு car-a ஸ்டார்ட் பண்ணிட்டு "இந்த கரடியையும் பெண் கரடியா மாத்திடுங்க"-னு சொல்லிட்டு பறந்துடுச்சாம் :)

அனாமிகா said...

ஐயய்யோ... நான் அந்த அனாமிகா இல்லீங்கோ... நான் ரொம்ப அமைதி.. யாரையும் திட்ட மாட்டேன் :) ஆனா, என் புண்ணியத்தில் உங்க friend blog-a ரொம்ப நாளைக்கு அப்புறம் visit பண்ணி இருக்கீங்கன்னு சந்தொஷம்.
எங்கே என் தொண்டர் படை.. இன்னொரு அனாமிகா இருக்குறாங்களாம்பா.. எங்க பாத்தாலும் தூக்கிருங்க...

வெங்கட் said...

அனாமிகா.,
கரடி Joke Super..!

ஓ. நீங்க அவங்க இல்லையா..?
நினைச்சேன்..
அவங்க ID போட்டு தானே
Comment அடிப்பாங்கன்னு.,

யாரையும் திட்டமாட்டீங்க..,
ஆனா என் Friend அனாமிகாவை
எங்கே பார்த்தாலும் தூக்கிடுவீங்களா..??
ரொம்ப தைரியம் தான்..,
இருங்க., இருங்க
நம்ம Friend-ஐ விட்டு.,
அவங்க Blog-ல உங்களை திட்ட
சொல்லுறேன்..

அனாமிகா said...

ஆகா.. இவுக எல்லாரும் பெரிய ஆளுக போல.. இது தெரியாம மாட்டிட்டோமே...so, escape....

துபாய் ராஜா said...

கரடி-யும்ல... :))

வெங்கட் said...

அனாமிகா.,
அஹா.,
இன்னுமா இந்த ஊரு
நம்மள பாத்து பயப்படுது..!
Escape எல்லாம் ஆகப்படாது..,
சொல்லிபுட்டேன்.. ஆமா..!

வெங்கட் said...

துபாய் ராஜா..,
பேசாம Title-ஐ
" ஒரு சிங்கமும்., இரண்டு கரடியும்னு "
மாத்திடலாமா..!!
Comment Section-ல பின்றாங்க..,

ஏம்பா Asst Directors
நோட் பண்ணுங்கப்பா..,
நோட் பண்ணுங்கப்பா..,

அஹமது இர்ஷாத் said...

முடியல வெங்கட்டு முடியல.....

வெங்கட் said...

அஹமத்..,
என்ன ஆச்சு பாஸ்..
எதுக்கும் கீழே உக்காந்து
Shoe Lace-ஐ Correct பண்ணிட்டு
Try பண்ணி பாருங்க..,
இப்ப முடியும்..

Anonymous said...

ஐயோ அந்த அனாமிகா நானில்லை. மலேசியாவில குப்ப கொட்டிட்டு இருக்கேன். அது தான் ஒன்லைன்ல வரல. என்னோட புளொக் போய் பாருங்க அந்த கொடுமைக்கு.

அனாமிகா, நான் ரொம்பவே அப்பாவிங்க. சின்னப் பொண்ணு. இப்படி எல்லாம் பயமுறுத்தினா வெங்கட் சாரைப் பாட சொல்லிடுவன் :))

வெங்கட் said...

அனாமிகா..,
இப்பதான் புரியுது..,
மலேசியால குப்பை சேர
யார் காரணம்னு..!

http://reap-and-quip.blogspot.com/
இது தான் இவங்க
Blog...

Anonymous said...

என்னை மாதிரி LKG., UKG
பசங்களுக்கு எப்படி புரியும்..??


no...no.... you are completely mistaken..... we only lacking behind....not LKG/UKG boys...they are smart.....
all ANAMICAs....pinraangappaa...

pon

Anonymous said...

என்னாலயா? இந்த ஊர் ரொம்ப கொடுமங்க. விபரமா எழுதிறேன். புளொக்கை செக் பண்ணிங்கோங்க.

வெங்கட் said...

அனாமிகா.,
உங்க Blog Fonts எனக்கு
சரியா Load ஆகமாட்டேங்குது..!
ஏன் நீங்க Unicode Font Latha
use பண்ணக்கூடாது..?

Anonymous said...

இதோ பாருங்க, நான் புதுசு. இப்டி எல்லாம் பயமுறுத்தக் கூடாது. யுனிகோட் லதான்னா என்னனு முதல்ல சொல்லுங்க:(( நான் http://www.higopi.com/ucedit/Tamil.html தான் பாவிக்கிறேன். :((

வெங்கட் said...

அனாமிகா..,
இதைhttp://www.higopi.com/ucedit/Tamil.html
இருந்து தான் எழுதறேன்..
பிளாக் விண்டோவில் வந்து
வேறு font மாற்றுவீர்களா..?

நான் Azhagi tamil Converter use
பண்ணுறேன்..
www.azhagi.com
u can download " Azhagi.zip "
to ur system.,
its simple and easy..
Go to Unicode editor and
use Latha Font There...

Anonymous said...

No, I dont change the font later. I will check again. Thank you

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் ஜோக்கு சொலறதுக்காக ஒரு பதிவு - ஓடட்டும் ஓடட்டும் - ஏம்பா வெங்கட்டு - நடுநடுவே கொஞ்சம் உருப்படியா ஏதாச்சும் எழுதறது தானே !