சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

21 March 2010

மின்சாரமும்., சம்சாரமும்..!!


Current நியூஸ் எதாவது எழுதலாம்னு
சன் நியூஸ் பார்த்திட்டு இருந்தேன்...

அப்ப கரண்ட் கட் ஆயிடுச்சி..!
ஆஹா...!
கிடைச்சிடுச்சே " கரண்ட் நியூஸ்..! "

கரண்ட் கட் ஆகறதால எவ்ளோ
நன்மைகள் இருக்கு தெரியுமா..!?

1. கரண்ட் பில் அதிகமா வராது.,

2. T v ஓடாது.., ஜவ்வு மிட்டாயில இருந்து
கொஞ்ச நேரம் தப்பிச்சுக்கலாம்..!

3. குழந்தைங்க வெளிய போயி
விளையாடுவாங்க..
உடம்புக்கு நல்லது தானே..!

4. நாம ரொம்ப Punctual-ஆ இருப்போம்..,
கரண்ட் போறதுக்குள்ள வேலைகளை
Correct-ஆ செய்யணுமில்ல...!

5. கடிகாரத்தை பார்க்காமலே Time
தெரிஞ்சிக்கலாம்..,
கரண்ட் போனா - 12 மணி
கரண்ட் வந்தா - 2 மணி

6. போர் அடிக்குதுன்னு Books படிப்போம்..,
General Knowledge வளரும்..!

7. நைட் கரண்ட் போனா.. வீட்லயே
" Candle Light Dinner " சாப்பிடலாம்..
ஹோட்டல் செலவு மிச்சம்..

8. Fan ஓடாது., புழுக்கமா இருக்கும்.,
அதனால வியர்வை வெளியேறும்..
அது உடம்புக்கு நல்லதுன்னு டாக்டரே
சொல்றார்ல..

என் மனைவிகிட்ட ஒரு Point
சொல்லுன்னு சொன்னேன்.
அப்ப அவங்க சொன்னது இது..,

9. கரண்ட் இல்லாததால.,
நீங்க Computer முன்னாடி உட்காராம..,
என்கூட நாலு வார்த்தை பேசிட்டு
இருப்பீங்க...!

பின் குறிப்பு :

இவ்ளோ நல்ல விஷயம் இருக்கே...,
அப்புறம் ஏன் எல்லோரும்
" அந்த நல்ல மனுஷனை "
திட்றாங்க..??!!
.
.

23 Comments:

Anonymous said...

இன்னும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

aarkaadu veerasaamy naa kulanthaikkum yaarnu theriya vachathu intha current cut thaana venkat

Anonymous said...

இது தேவையா? ஹா ஹா.

வெங்கட் said...

பெயரில்லா..,
அப்படியா..!!
ஓ.கே முயற்சி பண்றேன்..

வெங்கட் said...

ரமேஷ்..,
இது கூட நல்ல Point..,
குழந்தைகளுக்கும்
General Knowledge வளர்ந்திருக்கு..,
எப்படியோ நல்லது நடந்தா சரி..,

வெங்கட் said...

அனாமிகா..,
நல்ல கேள்வி..!
வேற எதாவது சொல்ல
விரும்பறீங்களா..?

ஹப்பா..,
எப்படியோ பதிலே சொல்லாம
சமாளிச்சாச்சு....

jana said...

என் இனிய வெங்கட்,

என்னுடைய வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து "Current News"
எழுதியதற்க்கு நன்றி...
நிறைய படிங்க...
நிறைய யோசிங்க...
நிறைவா எழுதுங்க...
ரமேஹிக்கு...ஒரு தகவல்...
இப்போ மின்சார துறை துரைமுருகன் கிட்ட் வந்திடுச்சின்னு நினைக்கிறேன்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

வெங்கட் said...

ஜனா.,
எப்படி நம்ம Current News..?!
மின்சார துறை இன்னும்
ஆற்காட்டார் வசமே உள்ளது..!

வெங்கட் said...

TVR சார்..,
வருகைக்கும்., Comment-க்கும்
நன்றி..!

Dr.P.Kandaswamy said...

நல்லா இருக்குதுங்க. தொடருங்க.

வெங்கட் said...

டாக்டர் ஐயா..
நன்றிங்க..
உஙகள மாதிரி பெரியவங்க
ஆசிர்வாதம் வேணுங்க..

Anonymous said...

உங்க Wife ஓட பஞ்சுக்கு நினைச்சு சிரிச்சிட்டே இருக்கேன். தேவையில்லாமல் பெண்களிடம் வாயைக் கொடுக்க கூடாது.. சரியா?

உங்க எம்.பி.ஏ போஸ்ட்ல இப்ப அவங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சுக்கிறாங்க. ஊர் இரண்டுபட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சும்மாவா சொன்னாங்க.. ஹையோ ஹையோ. அவங்க கொமன்ற்ஸ் பாத்து சிரிச்சுட்டே இருக்கேன்.

வெங்கட் said...

அனாமிகா..,
என்ன பண்ணறது.., சில சமயம்
இப்படி ஆயிடுது..
ஆனாலும் அதையும் எழுதினேனே
என் தைரியத்தை பாராட்ட வேணாமா..?

அந்த MBA பதிவு..
எப்படியோ ஏத்திவிட்டு Air Check
பண்ணிட்டீங்க...

Anonymous said...

அது சரி, கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டேல என்டு சொல்லுகிறீர்களா? பெரிய தைரியம் தான். HUH =))

வெங்கட் said...

அனாமிகா..,
ஆண்கள் கீழே விழ்ந்தா மீசைல
மண் ஓட்டும்னு யார் சொன்னது..?
நாங்க தலைய லேசா தூக்கிப்போமே..!

Anonymous said...

வெங்கட சார் Wifeஐ யாராவது பார்த்தா கொஞ்சம் இவரை கவனிக்க சொல்லுங்க...

வெங்கட் said...

அனாமிகா..,
எங்களை பார்த்தா Wife-க்கு
பயப்படற ஆளு மாதிரியா
தெரியுது..??

( அதானே எங்கே தெரிஞ்சி
போச்சோன்னு நினைச்சி
பயந்துட்டேன்.. )

cheena (சீனா) said...

அது சரி - எத வச்சு வேணா எழுதலாம்னா அது வெங்கட் தான்பா - பட்டயக் கெளப்புறாரு - ஏழாம் நம்பர் எங்க ஊட்லயும் உண்டு

Anonymous said...

//அனாமிகா..,
எங்களை பார்த்தா Wife-க்கு
பயப்படற ஆளு மாதிரியா
தெரியுது..??

( அதானே எங்கே தெரிஞ்சி
போச்சோன்னு நினைச்சி
பயந்துட்டேன்.. )//
=)) *Smiling*

வெங்கட் said...

சீனா சார்.,
நன்றி..,
உங்க வீட்லயுமா..?
கேட்கவே சந்தோஷமா
இருக்கே..!

வெங்கட் said...

அனாமிகா.,
ஹி., ஹி,, ஹி.,

ஹாலிவுட்ரசிகன் said...

அட ... ஆமால்ல? அப்ப இந்தியா எங்கேயோ டெவலப் ஆகிப் போகப்போகுதுன்னு சொல்லுங்க.