சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

16 March 2010

F i f t y : பிப்டி ( 50 : 50 )என் நண்பன் Mani-க்கு Birthday..,
அவனை வாரி., வாரி புகழ்ந்து
ஒரு கவிதை..

அழகாய் சிரிப்பவனும் நீதான்..,
அசடு வழிய நிற்பவனும் நீதான்..,


அமைதியான ஆழ்கடலும் நீதான்..,
ஆர்பரித்தால் சுனாமியும் நீதான்..,


கை தூக்கி விடுபவனும் நீதான்..,
காலை வாரி விடுபவனும் நீதான்..,


டயட்டில் இருப்பவனும் நீதான்..,
தினமும் சிக்கன் சாப்பிடுபவன் நீதான்..,


தத்துவங்கள் தெளிப்பவனும் நீதான்..,
தத்துபித்தென்று உளறுபவனும் நீதான்..,தோள் கொடுப்பதில் கர்ணன் நீதான்., 
போட்டு கொடுப்பதில் புரூட்டஸ் நீதான்..


அவ்ளோ தான்..


என்னடா பண்றது..,
என்னால Continuous-ஆ
ரெண்டு வரி பொய் பேச முடியாதே..!

இப்படிக்கு.,
உன் உயிர் ( வாங்கும் ) நண்பன்
வெங்கட்
.
.

10 Comments:

வடிவேலன் ஆர். said...

உங்கள் வலைத்தளத்தினால் கவர்ந்திழுக்கப்பட்ட நான் என் வலைப்பதிவில் உங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன்.
http://www.gouthaminfotech.com/2010/03/blog-post_16.html

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே

cheena (சீனா) said...

சூப்பர் கவிதை - தொடர இயலாதது வருத்தத்தைத் தருகிறது. 10 வரிக்கு மேல் பொய் சொல்லத் தெரியல - ம்ம்ம்

நட்பின் இலக்கணமே நீ தான்
நட்பின் எதிரியும் நீதான்

வெங்கட் said...

வடிவேலன் ஆர்..,
மிகவும் நன்றி..,
நான் Blog எழுத ஆரம்பித்த பிறகு
எந்த எதிர்பார்ப்பும் இன்றி
எனக்கு நிறைய நண்பர்கள்
கிடைத்து உள்ளனர்..,

எனக்கு பெருமையாக இருக்கிறது.
என் Blog-ஐ பற்றிய உங்கள்
விமர்சனமும் மிகவும் அருமை..,
இன்னும் நிறைய நண்பர்கள்
கிடைப்பார்கள்..

வாழ்த்துக்கள்.. தொடரட்டும்
உங்கள் பணி..

வெங்கட் said...

சீனா சார்..,
கடைசி ரெண்டு வரி
உங்க Punch..!

Anonymous said...

என்னால Continuous-ஆ
ரெண்டு வரி பொய் பேச முடியாதே..!
.
this is highlight...

வெங்கட் said...

பெயரில்லா..,
மிகவும் நன்றி..,

ரசிகன் said...

கர்ணண் பாதி ப்ரூட்டஸ் பாதி கலந்து செய்த கலவை நீங்க... (ஒரு பொய் கூட முழுசா பேச தெரியல.. ரொம்ப நல்லவங்க நாங்க ...)

வெங்கட் said...

ரசிகன்..,
ஒரே வரியில 50 : 50..
ம்ம்.. நடத்துங்க.., நடத்துங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ethaachum chennella comedykku try pannalaame venkat

வெங்கட் said...

ரமேஷ்..,
என்ன வெச்சி காமெடி., கீமெடி
எதுவும் பண்ணலையே..!