சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

02 March 2010

மாத்தி யோசி..!!B.Com..,Semester Exam
நெருங்கிட்டு இருந்தது..,

என் Friend ஜனா என்னை
கூப்பிட்டான்..

"வா., இளங்கோவன் சார்கிட்ட போயி
முக்கியமான கேள்வியெல்லாம்
குறிச்சி தர சொல்லி வாங்கிட்டு
வரலாம்.. "

எனக்கு தூக்கி வாரி போட்டது..,

" ஜனா...! உனக்கு பரிட்சையில
பாசாகிற எண்ணம் இல்லியா..? "

" இருக்கே..!! "

" அப்ப எதுக்கு இளங்கோவன் சார்கிட்ட
போகணும்கற..?!! அவரு குறிச்சி தந்தா...
ஒரு கேள்வி கூட பரீட்சைக்கு வராது
தெரிஞ்சிக்க...! "

"  அட லூசு.. அதான் எதெல்லாம்
வராதுன்னு தெரிஞ்சிடுதுல்ல.. அப்புறம்
அதை விட்டுட்டு மத்ததை படிக்கலாமே..! "

அட ஆமால்ல..!!!
.

.

10 Comments:

jana said...

என் இனிய வெங்கட்,

சமுதாய சிந்தனை,
புதிய முயர்ச்சி,
தெளிவான தமிழ்,
நகைச்சுவை உணர்வு,

இப்படி சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது... (இது விளம்பரம்)...

ஆதனால் சொல்ல வார்த்தை இன்றி தவிக்கும் உன் நண்பன்

அக்பர் said...

என்னமா யோசிக்கிறாங்கையா.

ம்ம்ம் நடத்துங்க.

வெங்கட் said...

நன்றி அக்பர்..,
உங்க ஆதரவு இருந்தா இன்னும்
கலக்கலாம்.

Keerthi Kumar said...

நினைச்சென்யா.. இந்த இணைந்த கைகள விட்டா வேர யாரும் இப்படி யோசிக்க மாட்டாங்க.

வெங்கட் said...

நன்றி Keerthi..,
" இணைந்த கைகள் " என்று
சொன்னதற்காக.

ரோஸ்விக் said...

ஆஹா... ஒரு குரூப்பாத் தான்யா கிளம்பிருக்காணுக... :-))

நல்ல இருக்கு மக்கா

வெங்கட் said...

ரோஸ்விக்..,
உங்க வருகைக்கும்.,
பாராட்டுக்கும் நன்றி..
அடிக்கடி வருக..

cheena (சீனா) said...

லேட்டரல் திங்கிங்கா - வாழ்க வாழ்க

வெங்கட் said...

சீனா சார்..,
உங்க வாழ்த்துக்கு நன்றி சார்.,

வெங்கட் நாகராஜ் said...

ஹை, இந்த மாதிரி மாத்தி யோசிக்கறது கூட நல்ல யோசனையாத்தான் இருக்கு.