சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

29 March 2010

இதுதான் லொள்ளு..!!!!
நண்பனின் Medical Shop-ல்

நான் : இதென்னடா புதுசா இருக்கு..?

நண்பன் : இது Memory Plus.., ஞாபக சக்திக்கு..,

நான் : இது சாப்பிட்டா நிஜமாலுமே
ஞாபக சக்தி வளருமா..?

நண்பன் : ஆமா.., வேணும்னா
தினமும் ஒன்னு சாப்பிட்டு பாரேன்..

நான் : தினமும் ஒன்னு தானா..?!
வேளைக்கு ஒன்னு சப்பிட கூடாதா..?

நண்பன் : வேணாம்டா...!!
Over Dose-ஆகி..,
அப்புறம் போன ஜென்மத்தில
நீ நாயா சுத்திட்டு இருந்ததெல்லாம்
ஞாபகம் வந்து தொலைக்கப்போவுது..
.
.

21 Comments:

Vijay Anand said...

நல்ல ஜோக் வெங்கட்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Venkat romba arumai. Sirichi sirichi vayiru valisuduchu. Keep it up. u r very excellent.


Pin Kurippu: Venkat neenga sonna maathiriye ungalai vaazhthi comment pottuten. Neenga sonna maathiri panaththai eppa anuppa poreenga?

jana said...

நல்ல காமெடி...

இத படிச்சதும் எனக்கு ஒன்னு ஞாபகம் வருது...

Patient : எனக்கு உடம்பெல்லாம் அரிக்குது டாக்டர்...
Doctor : கவலைபடாதீங்க இந்த மருந்து சாப்பிடுங்க...
Patient : இத சாப்டா அரிக்காதா...
Doctor : இல்ல இல்ல... நகம் நல்லா வளரும் சொரிஞ்சிக்க வசதியா இருக்கும்...
Patient : ??????

எனக்கு வெங்கட் மாதிரி காமெடியா எழுத வராது...
தயவு செய்து சிரிங்க... (ரசிகன்)

வெங்கட் said...

விஜய்..,
உங்க பாராட்டுக்கு நன்றி..!

வெங்கட் said...

ரமேஷ்.,
ஹய்யோ.., ஹய்யோ..,
இப்படியா Secret Matter-ஐ
Public-ஆ சொல்லுவீங்க..??!!

உங்களையெல்லாம் நம்பி
நான் அரசியலுக்கு வந்து.,
எப்படித்தான்
முதலமைச்சர் ஆகி.,
பிரதமர் ஆகி.,
அமெரிக்கா ஜனாதிபதியா
ஆகப்போறேனோ தெரியல..!!!

வெங்கட் said...

ஜனா..,
ஜோக் நல்லா தானே
இருக்குது..,
வெங்கட் மாதிரி எழுத வராதுன்னு
ஒரு பிட் வேற..

அதென்ன ரசிகன் மட்டும் தான்
சிரிக்கணுமா..?
நாங்களும் தான் சிரிப்போம்..

அஹமது இர்ஷாத் said...

நல்ல காமெடி

வெங்கட் said...

நன்றி அஹமத்..

smohamed said...

dear venkat nalla joke,idhu pol niraya edirparkiroum ungalidamirindhu.......!!!!! UMAR ALI FROM NEYVELI

வெங்கட் said...

உமர் அலி.,
உங்க பாராட்டுக்கு நன்றி..,
முயற்சி செய்யறேனுங்க..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

{{{{வேணாம்டா...!!
Over Dose-ஆகி..,
அப்புறம் போன ஜென்மத்தில
நீ நாயா சுத்திட்டு இருந்ததெல்லாம்
ஞாபகம் வந்து தொலைக்கப்போவுது..
.}}}}

அடப்பாவி இதே ஏன் முன்னாடியே சொல்லேல்ல ,,,,சொல்லி இருந்தா மனுஷ ஜென்மமெடுத்து உங்கிட்ட வந்து கஷ்ட பட்டிருக்க மாடேனே!!!!

அம்மா தாயே யாராவது மருந்து கண்டுபிடியுங்களேன் நான் மறுபடியும் போன ஜென்மத்துகே திரும்பி போறதுக்கு!!!!(அப்பிடின்னு நீங்க உங்க மனசுக்குள் சொன்னது எனக்கும் கேட்டுச்சு)

வெங்கட் said...

சங்கர்..,
ஹா., ஹா.., ஹா.
அப்படி எதுவும் நினைக்கலை..,
இருந்தாலும் உங்க கற்பனையை
ரசிச்சேன்...

ரசிகன் said...

ஆனாலும் உங்க நண்பருக்கு Over confidance, அவரு மருந்து மேல‌ . என்னதான் உரம் போட்டாலும், விதை இருந்தாதான் செடி வளரும்னு அவர் கிட்ட சொல்லுங்க.

அப்புறம்.. ஒரு ஜோக்குக்கு சிரிச்சா அடுத்த ஜோக் கிடைக்கும்னா ஒண்ணென்ன 2 தடவை.. தாராளமா சிரிக்கலாம் Jana.. ஹி.. ஹி.. ஹி.. , ஹி.. ஹி..ஹி..

வெங்கட் said...

ரசிகன்..,
நீங்க வேற..,
அவன் இந்த ஜென்மத்தில
என்னை மனுஷனா ஒத்துட்டு
இருக்கானேன்னு நானே
சந்தோஷத்தில இருக்கேன்..

Anonymous said...

போன ஜென்மத்தில
நீ நாயா சுத்திட்டு இருந்ததெல்லாம்
ஞாபகம் வந்து தொலைக்கப்போவுது....

ஆமா...ஆமா....அவரு பூனைக்குட்டியாக உங்களை சுத்தி சுத்தி வந்ததும்...கடிப்பட்டதும்....ஞாபகத்துக்கு வரப்போவுது... அவரின் அறிவுரையின் அர்த்தம் இப்ப புரிகிறதா...(சும்மா....சண்டைகெல்லாம் வந்திராதீங்க)

மனுஷனா ஒத்துட்டு
இருக்கானேன்னு நானே
சந்தோஷத்தில இருக்கேன்...ஒத்துக்க‌த்தான் ஆக‌னும்...அவ‌ரும் ம‌னுச‌னா பிற‌ந்திருகார‌ல்லா...

நகம் நல்லா வளரும் சொரிஞ்சிக்க வசதியா இருக்கும்...nice....

அமெரிக்கா ஜனாதிபதியா ......CM, PM..ok.....b'coz... in India...but....
காசுகொடுத்தா.....இப்ப‌டியும் ஆக‌லாமா....(america pres.)Pon.....

Anonymous said...

நல்ல ஜோக் ஜனா. வெங்கட் சார் மாதிரியே சொல்லுறீங்க. கை குடுங்க. உங்க ஜோக் பத்தி என்னத்த சொல்லுறது வெங்கட் சார். லூசு மாதிரி நடு ராத்திரி சிரிச்சிட்டிருக்கேன். லைப்ரரியை விட இது தேவல.

வெங்கட் said...

அனாமிகா..,
நடுராத்திரியிலா..!!
எதாவது பேய்., பிசாசு
வந்தா பயந்துக்க
போவுது..!!
பாவம்ல...

Anonymous said...

So., நம்ம திறமைக்கு
USA President Post தான்
Correct..,
நம்ம அறிவுக்கு இதெல்லாம் எட்டலபாருங்க...வாழ்த்துகள்...

வெங்கட் said...

பெயரில்லா.,
எதோ இப்பவாவது
புரிஞ்சிக்கிட்டீங்களே..!
சந்தோஷம்..

Anonymous said...

//அனாமிகா..,
நடுராத்திரியிலா..!!
எதாவது பேய்., பிசாசு
வந்தா பயந்துக்க
போவுது..!!
பாவம்ல...//

அதுங்க இனத்தைப் பார்த்து அதுங்க எதுக்கு பயப்பட போகுது. ஹா ஹா. எதிர்பார்க்கல இல்ல?

cheena (சீனா) said...

ஒண்ணொன்னாச் சாப்பிடாம அப்படியே பாட்டிலோட கவுத்துக்கிட்டா என்ன