சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 March 2010

இது கூடவா புரியலை.?
B.Com Class...
ஒரு நாள் எங்க HOD Class எடுத்திட்டு
இருந்தாரு..,
பொதுவா ஒண்ணு., ரெண்டு புரியும்..,
அன்னிக்கு சுத்தமா எதுவும் புரியலை...
மூளை சூடாகி., காது வழியா புகை வந்திச்சி..!
( ' மூளை இருக்கான்னு..? " அபத்தமான
கேள்வியெல்லாம் கேக்கபடாது...! )
பக்கத்துல உக்காந்து இருந்த என் Friend சரவணனை
லேசா தட்டினேன்..
" என்னடா..? "
" HOD என்ன எடுக்கறாருன்னே புரியலையேடா சரவணா..??!! "
அவன் என்னை ஒரு லுக் விட்டுட்டு சொன்னான்..
" அட இது கூடவாடா புரியலை..?!
.
.
.
நம்ம உயிரை எடுக்கறார்டா..!! "
.
.

16 Comments:

அன்புடன் அருணா said...

கலக்கல்ஸ்!

jana said...

இதையெல்லாம் இப்ப எதுக்கு ஞாபகப்படுதுறே...
இன்னும் எனக்கு புகை வந்துகிட்டேதான் இருக்கு...
ஆனா ஒன்னு என்னாதான் அறுத்தாலும் ரத்தம் மட்டும் வராது...
அதனால நம்ம HOD ரொம்ப நல்லவருப்பா...

கவிதை காதலன் said...

அட.. நாங்க செஞ்ச வேலை மாதிரியே இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ipppadi mokkai pathivaa pottu enga uyirai edukka koodaadu.


chee summa sonnen. really superb

Anonymous said...

" என்ன எடுக்கறாருன்னே
புரியலையேடா..??!! "


" இது கூடவா புரியலை..,
நம்ம உயிரை எடுக்கறார்டா..!! "

இல்லை இல்லை அவர் உயிரை நீங்க எடுத்திருக்கவேண்டும்..அவராவது உங்க உயிரை எடுக்ற‌தாவது...பாவம் என்ன நிலையில் இருந்தாரோ...

வெங்கட் said...

அருணா மேடம்..,
நன்றி..,
நிஜத்தில கலக்கினது எங்க HOD.,
கலங்கி நின்னதுதான் நாங்க..

வெங்கட் said...

ஜனா..,
இன்னும் உனக்கு காதுல
புகை வருதா..!!!
ஹா.., ஹா.., ஹா..,
ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்க
போல..!

வெங்கட் said...

ரமேஷ்..,
என்னடா.., நம்ம ரமேஷு இப்படி
சொல்லிட்டாரேன்னு ஒரு நொடி
ஆடி போயிட்டேன்..
கடைசி வரி படித்த பிறகு தான்
நிம்மதியாச்சி...!

வெங்கட் said...

கவிதை காதலன்..,
இதெல்லாம் வழி வழியா
வர்றதுதான்..
இந்த School பசங்க நோட்ல
மயில் இறகை குட்டி
போடும்னு வெச்சி இருக்காங்கல்ல..
அந்த மாதிரி..

வெங்கட் said...

பெயரில்லா..,
நெருப்பு சுடும்கிறது எல்லோருக்கும்
தெரியும்..,
ஆனா..,
அதோட வலி சூடு பட்டவனுக்கு
தான் தெரியும்..
நீங்கல்லாம் எங்க HOD Class ரெண்டு
Attend பண்ணி இருக்கணும்..,
அப்ப இப்படி பேச மாட்டீங்க.

venkat said...

கலக்குங்க

வெங்கட் said...

வெங்கட்..,
அட நம்ம பேருல ஒரு
நண்பரா..!
வாழ்த்துக்கு நன்றி..

Anonymous said...

நீங்கல்லாம் எங்க HOD Class ரெண்டு
Attend பண்ணி இருக்கணும்..,


சரி...சரி ஒத்துக்றேன்...sorry..
நீங்க நல்லவங்கப்பா..

அதுக்காக இப்படியா நீங்க பட்டதுகாணாதுனு
அய்யய்யோ....ஏங்க இந்த விபரீதமெல்லாம்..

வெங்கட் said...

பெயரில்லா..,
அது...!
அந்த பயம் இருக்கணும் மனசுல..!
எங்க HOD-க்கு ரொம்ப Support
பண்ணினீங்க..,
அப்புறம் எங்க HOD-கிட்ட
Tution Join பண்ணி விட்டுடுவேன்..

cheena (சீனா) said...

நாங்கல்லாம் ஒழுங்காப் படிச்ச ஆளுங்க - உன்னை மாதிரி எல்லாம் இல்ல - தெரியுமா

வெங்கட் said...

சீனா சார்..,
நீங்க குடுத்து வெச்சவங்க..
நீங்க நல்ல நல்ல
Professer-கிட்ட படிச்சி இருக்கீங்க..!!

( எதையும் சீரியசாக எடுத்துக்க
வேண்டாமே..! )