சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

10 March 2010

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!இது என் நண்பன் ஜனாவின்
கல்யாண பத்திரிக்கை..
சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே
என்று இப்படி யோசித்தோம்..
--------------------------------------------------------------------------

ஜனா-Win
திருமண அழைப்பு


அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..,

வர்ற June 20-ம் தேதி நீங்க Free தானே..?!

ஏன் கேக்கறேன்னா..,
அன்னிக்கு தான் உங்க JANA-க்கு கல்யாணம்..

ஜனாதிபதிக்கே Appointment குடுத்திருந்தாலும்.,
நீங்க என் கல்யாணத்துக்கு தான் வருவீங்கன்னு
தெரியும்..

ஏன்னா..,

" கோழி குளிரெடுத்தாலும் சுடுதண்ணியில
குளிக்காது..,
அன்பா குடுத்தாலும் ஐஸ்மோரை
குடிக்காது..! "

இப்ப எதுக்கு இதை சொல்லுறேன்னு
பார்க்கறீங்களா..?

பழமொழி சொன்னா அனுபவிக்கனும்.,
ஆராயக்கூடாது..!


இதை பாருங்க..!

ஒன்னு சொல்லுறேன்..,
ஆனா உருப்படியா சொல்லுறேன்..

என் கல்யாணத்துக்கு கவர்னர் வந்தா..,
அது அவருக்கு சந்தோஷம்.. - ஆனா
நீங்க வந்தா தான் எனக்கு சந்தோஷம்..

அன்புடன்
K.ஜனா

பின் குறிப்பு :
இவரு கல்யாணத்துக்கு அடிச்ச
வாழ்த்து பத்தின பதிவுதான்
Feb மாதத்தில் இருப்பது..
.
.

13 Comments:

சசிகுமார் said...

தல இது உண்மையாக நடந்ததா, அப்படி நடந்து இருந்தால் அவருடைய குறும்புதனதிருக்கு என் பாராட்டுக்கள்

வெங்கட் said...

சசிகுமார்..,
இதிலென்ன சந்தேகம்..,
அந்த கல்யாண பத்திரிக்கையை
தான் Photo பிடித்து இங்கே
போட்டு இருக்கிறேன்..
உங்கள் பாராட்டில் எனக்கும்
பங்கு உண்டே..!

யூர்கன் க்ருகியர் said...

super ... i enjoyed !!

அஹமது இர்ஷாத் said...

வித்தியாசமான பத்திரிக்கை. ஆக ஜீன் 20 ந்தேதி ஜெயிலுக்கு மாப்ள போறாப்ள

வெங்கட் said...

யூர்கன்..,
நீங்க ரசிச்சதுக்கு..
நன்றி..

வெங்கட் said...

அஹமத்..
அப்படி எல்லாம் சொல்லக்கூடாது..
கல்யாண பொண்ணு எங்க
சொந்தக்கார பொண்ணு..
தங்கச்சி முறை..

jana said...

வெங்கட்,
மலரும் நினைவுகள்...
தூசி தட்டி எலும்பி பார்க்கிறது நம் குறும்புத்தனம்...
பழைய பதிவுகளை நினைவு படுத்தியதர்க்கு...
நன்றி...நன்றி...நன்றி...

அன்பான வாசகர்களுக்கு...
இந்த திருமண பத்திரிக்கை வார்த்தைகளுக்கு சொந்தக்காரன்
நம்ம வெங்கட் தான்...
எல்லா பாராட்டும் அவருக்கு...

வெங்கட் said...

Jana..,
அந்த நாள்., நியாபகம்.., நெஞ்சிலே..,
வந்ததே.., நண்பனே., நண்பனே..!

ரசிகன் said...

எத்தனை காலம் கழிந்தாலும், எத்தனை முறை படித்தாலும், ரசிக்க வைக்கிற அழைப்பு.. வீட்டுக்கு அழகு சேர்க்குற வண்ண கோலம் போல... கல்யாண வாழ்க்கைக்கு கலக்கலான தொடக்கம் தந்து இருக்கீங்க‌

cheena (சீனா) said...

வெங்கட்டின் கை வண்ணம் மிளிருகிறது - நட்புகளை அழைக்க - கலாய்ப்புக் கல்யாணப் பத்திரிகை

ரசிச்சேன் - மகிழ்ந்தேன் - வெங்கட்

வெங்கட் said...

சீனா சார்..,
நன்றி..,
படிச்சதுக்கும்., ரசிச்சதுக்கும்.
அதை மறக்காம எழுதி
அனுப்பியதற்கும்..

நாடோடித்தோழன் said...

நல்லாவே இருக்குங்க.. நமக்கு (நமக்குன எனக்குங்கன்னா..) கல்யாணம் நடக்க நாலஞ்சு வருஷம் ஆகும்..
அப்போ உங்களுக்கு டைம் இருந்தா பீஸ் இல்லாம இதே மாதிரி ஒரு பத்திரிகை டிசைன் பண்ணி கொடுத்துருங்க..

Ram Prabahar said...

எனக்கு... இந்த மாதிரி... வித்தியாசமா.... எதும்... ரெடி... பன்னிக்குடுங்களேன்...