சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

24 March 2010

கும்பிட போன தெய்வம்..!!
Foreign Coins Collect பண்றது என் Hobby..
கொஞ்சம் கஷ்டமான Hobby-யும் கூட..,

என் நண்பர்கள் யாராவது வெளிநாட்ல
இருந்து வந்தா முதல் வேலையா
ஒரு Coin கேட்டு வாங்கி வெச்சிப்பேன்...

இப்படி 15 வருஷமா கஷ்டப்பட்டு
28 Countries Coins தான் சேர்க்க முடிஞ்சது.

என்ன பண்ண...?

என் நண்பர்கள் துபாய்., அமெரிக்கா.,
சிங்கப்பூர்., மலேசியான்னு சுத்தி சுத்தி.,
ஒரே ஏரியாவுல இருக்காங்களே...!!

சீக்கிரம் Transfer வாங்கிட்டு என் Collection-ல
இல்லாத Country-க்கு போற வழிய
பாருங்கப்பா...!!

நேத்து எனக்கு ஒரு Surprise..,

எங்கிட்ட இல்லாத 10 Countries Coins
பார்சல்ல வந்தது.., Kuwait-ல இருந்து...

அந்த பார்சலை அனுப்பிய அன்பு உள்ளங்கள்..,
சித்ரா அக்காவும்., அவங்க கணவரும்..

" கும்பிட போன தெய்வம்..,
வீட்டுக்கே வந்து பிரசாதம் தந்த
மாதிரி சந்தோஷமா இருந்தது...!! "

என் Blog மூலமா தான் சித்ரா அக்கா
எனக்கு அறிமுகமானாங்க்..

என் " பாட்டு ஆராய்ச்சி " பதிவை
படிச்சிட்டு என்னை பாராட்டி
Mail பண்ணினாங்க.. இப்பவும்
பண்ணிட்டு இருக்காங்க..,

நானும் Reply பண்ணினேன்.. அப்படியே
" ஒரு Kuwait Coin அனுப்புங்கன்னு " கேட்டேன்.,

ஆனா சித்ரா அக்காவும்., அவங்க கணவரும்.,
கூட வேலை பார்க்கிற மற்ற நண்பர்கள்கிட்ட
இருந்தும் Coins Collect பண்ணி அனுப்பி
இருக்காங்க..

Coins அனுப்பிய அவங்களுக்கும்.,
அதை என்னிடம் பத்திரமாக
சேர்த்த ஆறுமுகம் சாருக்கும்
என் நன்றிகள்..

இப்பதான் எனக்கு தெரியுது..,
Coins சேர்க்கிறதை விட.,
மனுஷங்களோட அன்பை சேர்க்கிறது
எவ்ளோ சந்தோஷமான விஷயம்னு...!!

அந்த Coins-ஐ என் ப்ரெண்ட்கிட்ட
பெருமையாக காட்டினேன்...

" ஹேய்... நான் கூட Currency Collect
பண்ணிட்டு இருக்கேன்டா.. "

" அப்படியா..! சொல்லவேயில்ல..?? "

" காந்தி தாத்தா படம் போட்டு.., 500.,
1000-ன்னு நம்பர் போட்டு இருக்குமே
அந்த Currency.. உங்கிட்ட இருந்தா
ஒன்னு., ரெண்டு குடேன்...!! "
.
.

26 Comments:

அன்புடன் அருணா said...

/காந்தி தாத்தா படம் போட்டு.,
500., 1000-ன்னு நம்பர் போட்டு
இருக்குமே அந்த Currency..
உங்கிட்ட இருந்தா
ஒன்னு., ரெண்டு குடேன்...!!/
ஹாஹாஹாஹா! நானும்தான் !வலையுலகில் இப்படி அன்புப் பரிமாறல்கள் நிறைய!

வெங்கட் said...

அருணா மேடம்..,
அதை அனுபவபூர்வமாக
உணர்ந்து கொண்டேன்...

ஜிஎஸ்ஆர் said...

இறுதியில் வழக்கமான நகைச்சுவை உணர்வு

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

venkat, foriegn coins ellaam serththu money exchange la maaththi salem la oru veedu vaankitteenkannu kelvippatten.....nijammaaavaaa???

ரசிகன் said...

Your words are simple,
Lines seems to be playful,
Still,
The message is powerful..
Keep going., Pal...
But,
Never Let our expectations Fail
Be Careful...
( உங்க நண்பர்கள் எல்லாரும் விவரமாதான் இருக்காங்க... :-) )

மாதேவி said...

/காந்தி தாத்தா படம் போட்டு.,100000 விரைவில் அடிக்கச் சொல்லுங்க :))))

வெங்கட் said...

GSR.,
ரொம்ப நன்றிங்க..!

வெங்கட் said...

ரசிகன்..,
மொக்கையா எழுதினா
வீட்டுக்கு ஆட்டோ வரும்னு
மிரட்டுவீங்க போல..
பயமா இருக்குபா...!

அவங்க எல்லாம் என்
நண்பர்களாச்சே..!

" எங்க வழி..,குறுக்கு வழி..! "

வெங்கட் said...

ரமேஷ்..,
அப்படியெல்லாம் இல்ல..
இப்பத்தான் பேச்சு வார்த்தை
போயிட்டு இருக்கு..,

அதுக்குள்ள யாரப்பா
Matter-ஐ லீக் பண்ணினது...??

வெங்கட் said...

மாதேவி..,
நான் சொன்னா
என்னை அடிக்க மாட்டங்களே..??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

venkat apdinna antha veetu enakku vaadakaikku please

jana said...

அப்பாடி,

இனிமே எங்கிட்டே "Philipines" Coin கேக்கமாட்டே தப்பிச்சண்டா சாமி...
உனக்கு coinஅனுப்பியதர்க்கு என்னுடைய நன்றியை Ms.சித்ரா & Mr.சித்ரா விடம் சொல்லிவிடு...

நானும் coin collect பண்னணுறேன். ஒரு சின்ன வித்தியாசம் அது same country coin. எங்க நண்பர்கள் கிட்ட வெளிநாடு வந்து நிறைய சில்லரை சம்பாதிச்ச பெரிய ஆளுன்னு ரொம்பா பெருமைய சொல்லிக்குவென். எனக்கு தான் தெரியும் உண்மை எதுன்னு.

மங்குனி அமைச்சர் said...

சார் என்கிட்ட இந்தியன் காயின்ஸ் இருக்கு வேணுமா ? வேணும்னா ஒரு பதினேளாயிரத்து முநூத்து நாபத்து ஆறு ரூபா இருபது பைசா என் அக்கவுட்டுக்கு டிரான்ஸ்பார் பண்ணுங்க , நான் ஒரு ரூபா, ரெண்டு ரூபா , அஞ்சு ரூபா என மூணு விதமான காயின்ஸ் அனுப்புறேன்.
சார் சும்மா காமெடிக்கு , காயின்ஸ் கலக்சன் நல்ல ஹேபிட்

வெங்கட் said...

ரமேஷ்..,
உங்களுக்கு இல்லாமயா..??
முதல்ல
வீடு Rate ஒத்துவரட்டும்..!

வெங்கட் said...

ஜனா..,
ஹா., ஹா., ஹா..,

அந்த Coin-ல Philipines Coin-ம்
இருக்கு...அதனால
உன் Philipines செகரட்டரியை
Coin கேட்டு தொந்தரவு
பண்ண வேண்டாம்..,
Dismiss பண்ணிடு...

வெங்கட் said...

மங்குனி அமைச்சர்...,
கலகல :)

ரசிகன் said...

வடிவேலு voiceல படிக்க வேண்டிய "BE Careful" ஐ ரகுவரன் voiceல படிச்சி terror ஆகிட்டீங்கள?
ஆனாலும் auto rickshow எதிர் பார்த்தது அதிகப்படி...
கைப்புள்ளயோட cycle rickshaw வேணா கட்டுப்படி ஆகும்.

வெங்கட் said...

ரசிகன்..,
ஒரு உண்மைய சொல்லுறேன்..
உங்க Comment படிக்கிறதுக்குன்னே
சில பேரு என் Blog-க்கு வர்றாங்கன்னு
கேள்விபட்டேன்..
அதனால நல்லா யோசிச்சி
நல்ல Comment-ஆ எழுதுங்க..

ஏனோ தானோன்னு Comment
எழுதினீங்க.. அவ்வளவுதான்...
Be Careful..!
(இதை ரகுவரன் வாய்ஸ்ல
தான் படிக்கணும்..)

Anonymous said...

//நண்பன் : காந்தி தாத்தா படம் போட்டு.,
500., 1000-ன்னு நம்பர் போட்டு
இருக்குமே அந்த Currency..
உங்கிட்ட இருந்தா
ஒன்னு., ரெண்டு குடேன்...!!//

வெங்கட் என்பது இது தானா...

வெங்கட் said...

அனாமிகா..,
அது என் நண்பன் அடிச்ச
Comment...
அந்த புகழ் அவனுக்கு...!!

cheena (சீனா) said...

இணைய நட்பு பலமானது - அன்பின் சிறப்பினை அறிய இந்நட்பே உதவும் - சித்ராவிற்கு நன்றி - நல்வாழ்த்துகள்

வெங்கட் said...

சீனா சார்..,

உங்க வாழ்த்துக்களை
சித்ரா அக்காவிற்கு Forward
செய்கிறேன்.

Anonymous said...

Wanted to type வெங்கட் Touch. But, forgot to type the English part.. :-(

வெங்கட் said...

அனாமிகா.,
எனக்கும் ஒன்னு மறந்து போச்சு..
என் கிட்ட Australia Coin இல்ல..

Anonymous said...

ஹா ஹா ஹா. என் தலையிலேயே கை வைக்கிறீங்களா? கண்டிப்பாக Ash இந்தியா வரும் போது கொடுத்து விடுறேன். வேற நாட்டி காசு கிடைச்சாலும். யார் Ash? பாட்ச்சுலர் சமையலில் நாங்க தான் எக்பேர்ட்டை படியுங்க.

வெங்கட் said...

அனாமிகா..,
Coin-ஐ ஏன் தலையில
வெச்சி இருக்கீங்க..??
Ash = Ashwin
தெரிஞ்சிக்கிட்டேன்..