சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

24 February 2010

செல்ல குழந்தையும் - ஒரு நல்ல பெயரும்..!














ஒரு குழந்தைக்கு நல்ல பெயர்
Choose பண்றது இருக்கே.., - அது
சந்திரமண்டலத்துக்கு ராக்கெட்
விடறத விட கஷ்டம்..,

குழந்தை பிறந்த உடனே நீங்களும் Internet.,
அந்த Book., இந்த Book- ன்னு எங்கெல்லாமோ
தேடி ஒரு பெயர் Choose பணணி வெச்சிருப்பீங்க..

அதுவரைக்கும் OK..,

அதைவிட்டுட்டு பார்க்கிறவங்கிட்ட எல்லாம்
" நல்ல பெயரா சொல்லுங்கன்னு " கேட்டீங்க..
நீங்க அவ்வளவுதான்..

முதல்ல நாம என்ன பெயர் Choose பண்ணி
இருக்கோம்னு கேட்பாங்க..,
நாமளும் சொல்லுவோம்..!

உடனே அந்த பெயருக்கு Numerology, Biology,
Zoology இதெல்லாம் சரியில்லைன்னு சொல்லிட்டு.,
அந்த பெயர்ல வீணாபோனவன் எவனாவது
இருப்பான்., அவனை உதாரணம் வேற
சொல்லுவாங்க..

நமக்கு மனசு கெட்டு போயிடும்..,

ஏதோ ஒரு Tv-ல வர்ற ஒரு நியூமராலஜிகாரங்கிட்ட
போயி நிப்போம்..

அவரும் 5000 ரூபா வாங்கிட்டு.,
ரெண்டு A., மூணு E., நாலு H வர்ற மாதிரி
ஒரு பெயரை Select பண்ணி குடுப்பாரு..
சமயதுல " Z "., " X " இதெல்லாம் கூட
வரும்..

அந்த பெயர் வீட்டு பெரியவங்களுக்கு
பிடிக்காது.., அப்புறம் இருக்கவே இருக்கு
தாத்தா., பாட்டி பெயரோ இல்ல
குலதெய்வம் பெயரோ..!

இனிமே.,
குழந்தைக்கு பெயரை Parents மட்டும்
Select பண்ணுங்க..

அதை விட்டுட்டு வேற யாரையாவது
Idea கேட்டீங்க.., அப்புறம் நீங்களும்
இதே மாதிரி ஒரு பதிவு எழுதுவீங்க..!

பீ கேர்புல்..!!
.
.

9 Comments:

Anonymous said...

நீங்களும் இதே மாதிரி
ஒரு பதிவு எழுதுவீங்க..!

the thing is, where people are giving much importants to the relatives or those who are thinking, it is must to consult their elders in selecting name only facing these kind of problems...but oflate, both the boys/girls are dominating and they have their own idea abt. it in advance...so, i think no confusion...or unnecessary time wasting...anyhow, your narrtion is 100% correct...every one must have this experience...Yes...after selecting the name, consulting others, whether it is nice...or not also ture...etc. etc. recently we attened a birthday celebration..there one engineering student was telling his parents "don't expect me that i would prefix or suffix ur.name for my child" by...avb.....

வெங்கட் said...

பெயரை தேர்வு செய்வதில் குழப்பம் இல்லை..
மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கும் போது
தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

Manish said...

what is your name?

cheena (சீனா) said...

வெகட்டு - ரெண்டாம் கிளாஸ் படிக்கற பய பேர் என்ன ?

வெங்கட் said...

சீனா சார்..,
2-ம் கிளாஸ் படிக்கிற
பையன் பேரு சூர்யா..!
சின்னவன் பேரு கோகுல்..!
என் Blog-கோட பெயர் காரணம்
புரிஞ்சி இருக்குமே..!

அமைதி அப்பா said...

குழந்தைக்கு பெயரை Parents
மட்டும் Select பண்ணுங்க..//


பெயர் வைக்கும் உரிமை பெற்றோருக்கு மட்டுமே உண்டு,
அதை பிறருக்கு விட்டுக்கொடுக்காதீர்கள்.
இதுதான் என்னோட கருத்தும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///குழந்தைக்கு பெயரை Parents
மட்டும் Select பண்ணுங்க..///

குட் பாய்ண்ட்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

???

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.

??? //

Comment moderation :

Only on posts older than 20 days..

பழைய போஸ்ட்ல யாராச்சும் கமெண்ட் போட்டா தெரியணும்ல..
அதுக்காக தான் இந்த Setting.