சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

17 September 2010

காதல் சொல்ல சில Tips ( லேடீஸ் Spl )..!!போன பதிவுல பசங்களுக்கு
காதலை சொல்ல Tips தந்தாச்சு..!!

அப்ப அதே மாதிரி Tips
பொண்ணுகளுக்கு தரணுமே..!!

தருவோம்ல...,
அது நம்ம கடமையாச்சே..!!

சரி உங்க காதலை எப்படி சுருக்கமா.,
Different-ஆ உங்க ஆளுக்கு
புரிய வைக்கிறதுன்னு பார்க்கலாம்..


1. உங்களை கட்டிக்க போற பொண்ணு
ரொம்ப Lucky..!!

நான்கூட ரொம்ப Lucky-யான
பொண்ணுன்னு எங்க வீட்ல
அடிக்கடி சொல்லுவாங்க..


2. எனக்கு நடிகர் சூர்யாவை
ரொம்ப பிடிக்கும்.. ஆனா
அதெல்லாம் உங்களை
Meet பண்றதுக்கு முன்னால...!!


3. நீங்களும் Blue Shirt.,
நானும் Blue Chudithar.,
நம்மள பாக்கறவங்க
சரியான Match-ன்னு சொல்லுவாங்கல்ல..!!


4. இந்த Alphapet-ல ஏன் " I " & " U "
வேற வேற இடத்துல இருக்கு..?

" I " & " U " எப்பவும் சேர்ந்தே இருந்தா
நல்லா இருக்கும்ல..!!


5. உங்களோட Favourite Food எது..?

சமைச்சு பழகிக்கலாம்னு தான்..!!


( இப்படியெல்லாம் சொல்ல
தயக்கமா இருக்கா.? Don't Worry..!!
அப்ப Simple-ஆ ஒரு ஐடியா சொல்றேன்... )

உங்க ஆள் வராத அன்னிக்கு
அவரோட Friends-கிட்ட போயி...,

6. " ரமேஷ் அண்ணா..!! இன்னிக்கு
ஏன் அவரு வரலை..? "

" அருண் அண்ணா..!! அவருக்கு
உடம்பு எதாவது சரியில்லையா..?! "

இப்படி வார்த்தைக்கு வார்த்தை
அவரோட Friends-ஐ அண்ணா
போட்டு பேசுங்க அது போதும்..

உங்க Love-ஐ அவர்கிட்ட
உங்க அண்ணங்க புரிய வெச்சிடுவாங்க..

இன்று ஒரு தகவல் :
--------------------------

" காதல் " கனவு மாதிரி
சிலருக்கு பலிக்கும்.,
சிலருக்கு வலிக்கும்..!!
.
.

73 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//" ரமேஷ் அண்ணா..!! இன்னிக்கு
ஏன் அவரு வரலை..? "

" அருண் அண்ணா..!! அவருக்கு
உடம்பு எதாவது சரியில்லையா..?! "//

நானும் அருணும் அண்ணா வழியில் நடக்குறதுதால அண்ணான்னு சொல்லனும்னு அவசியம் இல்லை.

Shalini said...

me the first!!!111

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//" ரமேஷ் அண்ணா..!! இன்னிக்கு
ஏன் அவரு வரலை..? "

" அருண் அண்ணா..!! அவருக்கு
உடம்பு எதாவது சரியில்லையா..?! "

இப்படி வார்த்தைக்கு வார்த்தை
அவரோட Friends-ஐ அண்ணா
போட்டு பேசுங்க அது போதும்..//

அப்ப நாங்க கேப்போம்ல "ஏம்மா தங்கச்சி உன் classmet பிரியா ஏன் கிளாஸ்-க்கு வரலை. உடம்பு சரி இல்லியா? அத்தான்(நான்தான்) விசாரிச்சதா சொல்லு. ஆப்பிள் எதாச்சும் வாங்கி கொடு. இந்த லவ் லெட்டரை அங்க கொடுத்துடு." அதுக்கப்புறம் அந்த பொண்ணு அண்ணான்னு சொல்லிக்கிட்டு இந்த பக்கம் வரும்?

TERROR-PANDIYAN(VAS) said...

//" ரமேஷ் அண்ணா..!! இன்னிக்கு
ஏன் அவரு வரலை..? "

" அருண் அண்ணா..!! அவருக்கு
உடம்பு எதாவது சரியில்லையா..?! "//

ஹா ஹா ஹா... சூப்பரு தல.... ரமேஷ் நான் நாளைக்கு கண்டிப்பா வரேன் சொல்லிடு.... அருண் எனக்கு உடம்பு நல்லா இருக்கு சொல்லிடுபா...

(மற்ற உறவுகளை சொல்லி கமெண்ட் போட தடை...)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

////" ரமேஷ் அண்ணா..!! இன்னிக்கு
ஏன் அவரு வரலை..? "

" அருண் அண்ணா..!! அவருக்கு
உடம்பு எதாவது சரியில்லையா..?! "//

ஹா ஹா ஹா... சூப்பரு தல.... ரமேஷ் நான் நாளைக்கு கண்டிப்பா வரேன் சொல்லிடு.... அருண் எனக்கு உடம்பு நல்லா இருக்கு சொல்லிடுபா...

(மற்ற உறவுகளை சொல்லி கமெண்ட் போட தடை...)//

ஓகே டெரர் அண்ணா. நீங்க எனக்கு அண்ணன்னா அந்த பொண்ணு உங்களுக்கு என்ன வேணும்?

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//அப்ப நாங்க கேப்போம்ல "ஏம்மா தங்கச்சி உன் classmet பிரியா ஏன் கிளாஸ்-க்கு வரலை. உடம்பு சரி இல்லியா? அத்தான்(நான்தான்) விசாரிச்சதா சொல்லு. ஆப்பிள் எதாச்சும் வாங்கி கொடு. இந்த லவ் லெட்டரை அங்க கொடுத்துடு." அதுக்கப்புறம் அந்த பொண்ணு அண்ணான்னு சொல்லிக்கிட்டு இந்த பக்கம் வரும்? //

கண்டிப்பா வரும். யாருமே திரும்பி பாக்க மாட்டராங்க ரொம்ப பீல் பண்ணுவா அண்ணா... உங்களுக்கு பெரிய மனசு.. இப்படி பட்ட மொக்க பிகரகூட லாவ் பண்றிங்க... அடுத்த முறை.. நீ கேட்ட பிரியாவும் சேர்ந்து வருவா....

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

அருண் பிரசாத் said...

என்னை அண்ணா என்று சொல்லி அவமான படுத்தியதால் நான் நான் வெளிநடப்பு செய்கிறேன்....

ப.செல்வக்குமார் said...

//" ரமேஷ் அண்ணா..!! இன்னிக்கு
ஏன் அவரு வரலை..? " //

ஒரு சின்ன சேஞ்
அப்பா . இன்னிக்கு அவரு ஏன் வரல ..?!?
ஹி ஹி .. எந்த பொன்னும் இவரப் பார்த்து அண்ணா அப்படின்னு கூபிடாது ..?!?

Chitra said...

அண்ணா...... உங்கள் சேவையைக் கண்டு "கண்கலங்க" வச்சுட்டீங்க..... இது ஆனந்த கண்ணீர், அண்ணா....!!!

அனு said...

Barathy வர்றதுக்குள்ள கமெண்ட் போட்டுட்றேன்.. நீங்க சொல்லாம விட்ட கடைசி லைன் எல்லாம் நான் போட்டுட்டேன்..

1. //நான்கூட ரொம்ப Lucky-யான
பொண்ணுன்னு எங்க வீட்ல
அடிக்கடி சொல்லுவாங்க..//

ஆனா, உங்களை கட்டிக்க வேண்டிய கட்டாயம் வந்தா, அப்பவே நான் வெரி unlucky ஆகிடுவேனே!!

2. //எனக்கு நடிகர் சூர்யாவை
ரொம்ப பிடிக்கும்.. ஆனா
அதெல்லாம் உங்களை
Meet பண்றதுக்கு முன்னால//

ஆமா, உங்களைப் பாத்த அப்புறம் நான் தான் ஆண்குலத்தையே வெறுக்க ஆரம்பிச்சுட்டேனே..

3. //நம்மள பாக்கறவங்க
சரியான Match-ன்னு சொல்லுவாங்கல்ல..!!//

நான் T20 Match.. நீங்க தீப்பெட்டில இருக்குற குச்சி (match stick)..

4. //" I " & " U " எப்பவும் சேர்ந்தே இருந்தா
நல்லா இருக்கும்ல..!!//

கூடவே, ரெண்டுக்கும் நடுவில ஒரு 'hate' இருந்தா இன்னும் நல்லா இருக்கும்..

5. //சமைச்சு பழகிக்கலாம்னு தான்..!!//

அதுல, அப்படியே கொஞ்சம் சயனைட் கலந்துடலாம்னு தான்..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// நானும் அருணும் அண்ணா வழியில்
நடக்குறதுதால அண்ணான்னு
சொல்லனும்னு அவசியம் இல்லை. //

அட இதுக்கு நீங்க சந்தோஷப்படணும்..!!

நல்லவேளை அந்த பொண்ணுக்கு
நீங்க அண்ணா வழியில நடக்குறது
மட்டும் தான் தெரிஞ்சிருக்கு..

காந்தி வழியில நடக்குறது
இன்னும் தெரியல..

அப்புறம் ரமேஷ் தாத்தான்னு
சொன்னா...

வெங்கட் said...

@ ஷாலினி.,

// me the first.!!! //

அடடா..,

( Mind Voice... )

ரமேஷ்க்கு மாங்கு மாங்குன்னு
Reply போட்டதுக்கு பதிலா
பேசாம அவர் Comment Delete
பண்ணி இருக்கலாமோ..!!

அப்ப ஷாலினி Comment
1st Comment ஆகியிருக்கும்ல..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// "ஏம்மா தங்கச்சி உன் classmet பிரியா
ஏன் கிளாஸ்-க்கு வரலை. உடம்பு சரி இல்லியா? //

நேத்தே அவளை வழியில பார்த்து
ஒரு Romantic Look விட்டீங்களாமே..
அதான் அவளுக்கு பயத்தில
ஜூரம் வந்துடுச்சி..!!

// அத்தான் (நான்தான்) விசாரிச்சதா சொல்லு. //

அவங்க அத்தானும் கையில வீச்சரிவாளோட
உங்களை தான் விசாரிச்சிட்டு இருக்கார்னா..

// ஆப்பிள் எதாச்சும் வாங்கி கொடு. //

அது எங்களுக்கு தெரியாதா..?!!
சரி., ஒரு ஆப்பிள் வாங்கி தர வக்கில்ல
உங்களுக்கு எதுக்குன்னா ல்வ்வு..??

// இந்த லவ் லெட்டரை அங்க கொடுத்துடு." //

அங்கேன்னா எங்கேன்னா..?
Principal-கிட்டயா..?

வெங்கட் said...

@ அருண்.,

// என்னை அண்ணா என்று சொல்லி
அவமானபடுத்தியதால் நான் நான்
வெளிநடப்பு செய்கிறேன்.... //

அண்ணான்னு சொன்னா அவமானமா..?!!

Mrs.அருண் இவரை கொஞ்சம்
என்னான்னு கேளுங்க..!!

ஒரு சின்ன Request..
எவ்ளோ கோவம் வந்தாலும்
பூரிக்கட்டையால மட்டும் அடிச்சிடாதீங்க..
அப்புறம் பூரிக்கட்டை உடைஞ்சி போயிட்டா
ரொம்ப கஷ்டப்படுவீங்க - பூரி சுட..!!

வெங்கட் said...

@ சித்ரா...,

// அண்ணா. உங்கள் சேவையைக்
கண்டு "கண்கலங்க" வச்சுட்டீங்க...
இது ஆனந்த கண்ணீர், அண்ணா....!!! //

தங்கச்சி.....,
என்னம்மா இதுக்கே கண்கலங்கிட்டே...
இது வெறும் Trailer-தாம்மா..
Main Picture இன்னும் ஆரம்பிக்கவே
இல்லையே..!!

அனு said...

//என்னம்மா இதுக்கே கண்கலங்கிட்டே...
இது வெறும் Trailer-தாம்மா..
Main Picture இன்னும் ஆரம்பிக்கவே
இல்லையே..//

ஆமா, Action Scenes இனிமே தானே வரும்!!

Anonymous said...

@அனு
//Barathy வர்றதுக்குள்ள கமெண்ட் போட்டுட்றேன்..//
தமிழில் 100000 வார்த்தைகள் உள்ளதாம்.அது உள்ளவரைக்கும் நாங்க தயங்கமாட்டம். நிறுத்தவும் மாட்டோம். நிறுத்தவும் முடியாது. உங்களாளும் முடியும் என்று நினைத்துக்ககொண்டு புதிதாக முயற்சிசெய்யுங்கள்.
அருண்(அண்ணா) பதிவுலகில் கால் வைக்கும் போது தன்னை 50 பேர் தொடர்வார்கள் என்று நினைத்திருப்பாரா.ரமேஸ்(அண்ணா) தன்னால் இந்தவருடம் மட்டும் 100 பதிவு எழுதுவோம் என்று நினைத்திப்பாரா. இவ்வளவும் ஏன் தலை வெங்கட்டே தனது நீலச்சட்டைக்கு இவ்வளவு ரசிகர்/ரசிகைகள் பதிவுலகில் உருவாவார்கள் என்று சில காலத்திற்கு முன் நம்பியிருப்பாரா. ஆகவே ...
ஆகவே... ஜஜயோ.. என்ன சொல்லவந்தனான் என்று மறந்திட்டனே.

ரசிகன் said...

me the 19th !!!!

சேலம் தேவா said...

பிப்ரவரி ஸ்பெஷல்லாம் ஏன் இப்பயே போடறீங்க!!!

Shalini said...

ஹைய்யோ போலீஸ்,
உலகப்பொண்ணுங்கள்லாம் உங்கள அண்ணாண்னு கூப்ட்ராங்களாமே!

அச்சச்சோ, இப்ப என்ன பண்றது?!
சரி, உங்க ஜாதகத்த சனிக்கு இல்ல செவ்வாய்க்கு அனுப்புங்க ஏதாச்சும் மாட்டுதான்னு பார்ப்போம்

Shalini said...

////" ரமேஷ் அண்ணா..!! இன்னிக்கு
ஏன் அவரு வரலை..? "

" அருண் அண்ணா..!! அவருக்கு
உடம்பு எதாவது சரியில்லையா..?! "//

//

கலக்கல் லைன்ஸ் பாஸ்!

Shalini said...

//ஆனா, உங்களை கட்டிக்க வேண்டிய கட்டாயம் வந்தா, அப்பவே நான் வெரி unlucky ஆகிடுவேனே!!

//
என்ன அனு, உங்க ஆள் சொன்னதெல்லம் இப்டி பப்ளிக்ல சொல்லலாமா?

Anonymous said...

//" I " & " U " எப்பவும் சேர்ந்தே இருந்தா
நல்லா இருக்கும்ல..!!//
அது எல்லாம் சரியான இடத்திலதான் இருக்கு. இருக்கணும்.
( நாந்தான் பிழையா இங்க நிற்கிறேன்)
அதுதான் எல்லாருக்கும் நல்லது.மற்றும்படி நீங்க இப்படி
அபத்தமா சிந்திக்கிறத நிப்பாட்டினால் எனக்கு மட்டுமல்ல
English-காரனுக்கும் நல்லது.
//சமைச்சு பழகிக்கலாம்னு தான்..!!//
யாரு பழகிக்கிறது??
உங்க கையால சமைச்சு சாப்பிட்டு பரலோகம் போறதிலும்
பார்க்க ஒரு விஷ பாட்டில் வாங்கிக்கொடுங்க. இப்பவே சாப்பிட்டு
சாகிறேன். ஒரு பெண்ணை கொலை பழியில் இருந்து காப்பாத்தின
புண்ணியமாவது எனக்கு வந்து சேரும்.
// " ரமேஷ் அண்ணா..!! இன்னிக்கு
ஏன் அவரு வரலை..? "

" அருண் அண்ணா..!! அவருக்கு
உடம்பு எதாவது சரியில்லையா..?! "
//
NO COMMENTS
(வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சக் கூடாது.)
//
" காதல் " கனவு மாதிரி
சிலருக்கு பலிக்கும்.,
சிலருக்கு வலிக்கும்..!!//
அண்ணன்மாருக்கு கனவாகவே இருக்கும்.

Shalini said...

//// என்னை அண்ணா என்று சொல்லி
அவமானபடுத்தியதால் நான் நான்
வெளிநடப்பு செய்கிறேன்.... //

அண்ணான்னு சொன்னா அவமானமா..?!!

Mrs.அருண் இவரை கொஞ்சம்
என்னான்னு கேளுங்க..!!

ஒரு சின்ன Request..
எவ்ளோ கோவம் வந்தாலும்
பூரிக்கட்டையால மட்டும் அடிச்சிடாதீங்க..
அப்புறம் பூரிக்கட்டை உடைஞ்சி போயிட்டா
ரொம்ப கஷ்டப்படுவீங்க - பூரி சுட..//

நான் இதை வழிமொழிகிறேன்...

Mr.sun`snetway, போலீஸ் கூட சேராதீங்க சேராதீங்கன்னு சொன்னா கேக்கணும்.இப்ப யாருக்கு கஸ்டம்?!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஹைய்யோ போலீஸ்,
உலகப்பொண்ணுங்கள்லாம் உங்கள அண்ணாண்னு கூப்ட்ராங்களாமே!

அச்சச்சோ, இப்ப என்ன பண்றது?!
சரி, உங்க ஜாதகத்த சனிக்கு இல்ல செவ்வாய்க்கு அனுப்புங்க ஏதாச்சும் மாட்டுதான்னு பார்ப்போம்//

ஹஹா அண்ணாங்கிறது பெரிய விஷயம் . நீங்க வானத்தை போல, சமுத்திரம், பாசமலர், ஆனந்தம் பார்த்ததில்லை. லவர் கிடைச்சா purse தான் காலியாகும். அப்புறம் நாமும் காலி(பொண்ணுங்க என்னைக்கு காசு செலவழிக்கிறாங்க). அதே தங்கைன்னா பாசமாவது மிஞ்சும்.

(ரமேஷ் நீ எங்கயோ போயிட்ட. பின்னுர போ)

Shalini said...

//ஹஹா அண்ணாங்கிறது பெரிய விஷயம் . நீங்க வானத்தை போல, சமுத்திரம், பாசமலர், ஆனந்தம் பார்த்ததில்லை. லவர் கிடைச்சா purse தான் காலியாகும். அப்புறம் நாமும் காலி(பொண்ணுங்க என்னைக்கு காசு செலவழிக்கிறாங்க). அதே தங்கைன்னா பாசமாவது மிஞ்சும்.

(ரமேஷ் நீ எங்கயோ போயிட்ட. பின்னுர போ//

போலிஸ் மண்ணு ஒட்டலை போலீஸ்
நிஜமாலும் மண்ணு ஒட்டவே இல்ல

ஆமா எப்பல்லருந்து ஈஸி சேர் பின்ன ஆரம்பிச்சீங்க
சொன்ன மாதிரியே லாக்கப்ல உள்ள திருடன் தப்பிச்சுட்டானா?

ப.செல்வக்குமார் said...

//அப்புறம் நாமும் காலி(பொண்ணுங்க என்னைக்கு காசு செலவழிக்கிறாங்க). ///

பொய் சொல்லாதீங்க .. VKS தலைவி உங்களுக்கு காசு கொடுத்து காசு கொடுத்துதானே கட்சியே நடத்துறாங்க .. அவுங்க கிட்ட காச வாங்கிட்டு இப்படி பொய் சொல்லலமா ..?

வெங்கட் said...

@ அனு.,

// Barathy வர்றதுக்குள்ள கமெண்ட் போட்டுட்றேன்.. //

ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..!!

வெங்கட் said...

@ பாரதி.,

// தமிழில் 100000 வார்த்தைகள் உள்ளதாம்.
அது உள்ளவரைக்கும் நாங்க தயங்கமாட்டம்.
நிறுத்தவும் மாட்டோம். நிறுத்தவும் முடியாது. //

இப்படியே சம்பந்தா சம்பந்தம்
இல்லாம கோர்வையா பேசுனீங்கன்னா
தமிழக அரசியல்ல நல்ல வளமான
எதிர்காலம் இருக்கு உங்களுக்கு.!!

தேர்தல் வேற வரப்போகுது..
எந்த கட்சி உங்களை தன் பக்கம்
இழுக்க போகுதோ..!!

வெங்கட் said...

@ அனு.,

// ஆமா, Action Scenes இனிமே தானே வரும்!! //

ம்ம்.. அப்படி எதாவது அடிதடி வரும்னு
தெரிஞ்சி தானே ரெண்டு பலிகடாவை
கூடவே வெச்சி இருக்கோம்..

நீங்க " காதலுக்கு மரியாதை "
படம் பார்க்கலை..?? அதுல
விஜய் Friends சார்லிக்கும்.,
தாமுவுக்கும் தான் தர்ம அடி விழும்..!!

விஜய்க்கு கம்மியா தான் அடி விழும்..

ஹி., ஹி., ஹி..!!

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
//நீங்க " காதலுக்கு மரியாதை "
படம் பார்க்கலை..?? அதுல
விஜய் Friends சார்லிக்கும்.,
தாமுவுக்கும் தான் தர்ம அடி விழும்..!!

விஜய்க்கு கம்மியா தான் அடி விழும்.. //

நீங்க “காதல்” படம் பார்கலையா? அதுல பரத் -க்கு பைத்தியமே பிடிச்சிடும், ஆனா பிரெண்ட்ஸ் தனி வீடு பார்த்து குடுத்தவுடனே எஸ்கேப்....

(இது வெங்கட் காதலுக்கு மட்டும் பொருந்தும்)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//" காதல் " கனவு மாதிரி
சிலருக்கு பலிக்கும்.,
சிலருக்கு வலிக்கும்//

அந்த ரெண்டாவது லைன் அனுபவத்துல வந்ததா?

வெங்கட் said...

@ அருண்.,

// நீங்க “காதல்” படம் பார்கலையா?
அதுல பரத் -க்கு பைத்தியமே பிடிச்சிடும்,
ஆனா பிரெண்ட்ஸ் தனி வீடு பார்த்து
குடுத்தவுடனே எஸ்கேப்.... //

ஹலோ.. கொஞ்சமாவது சம்பந்தமா
Comment போடுங்க..

இந்த பதிவுல இருக்கிற Situation-ம்.,
" காதலுக்கு மரியாதை " பட
Situation-ம் ஒண்ணு..

அதாவது லவ் ஆரம்பிக்கவே
Friends தான் Help பண்ணுவாங்க..

" காதல் " பட Situation வேற..

" காதல் " படத்தில பரத்- சந்தியா
லவ் பண்றதுக்கு பரத் Friends யாருமே
Help பண்ண மாட்டாங்க.. அவங்களே
லவ் பண்ணி ஊரை விட்டு
ஓடி வந்துடுவாங்க..

So., அங்கே Friends-க்கு அடி விழ
சான்ஸே இல்ல..

அனு said...

//அப்படி எதாவது அடிதடி வரும்னு
தெரிஞ்சி தானே ரெண்டு பலிகடாவை
கூடவே வெச்சி இருக்கோம்.. //

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!!!

(shalini & டெரர் இப்பவே உஷார் ஆகிக்கோங்க!!)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//ஹஹா அண்ணாங்கிறது பெரிய விஷயம் . நீங்க வானத்தை போல, சமுத்திரம், பாசமலர், ஆனந்தம் பார்த்ததில்லை. லவர் கிடைச்சா purse தான் காலியாகும். அப்புறம் நாமும் காலி(பொண்ணுங்க என்னைக்கு காசு செலவழிக்கிறாங்க). அதே தங்கைன்னா பாசமாவது மிஞ்சும்.

(ரமேஷ் நீ எங்கயோ போயிட்ட. பின்னுர போ)//

வானத்த போல - கடைசிவரை அண்ணன் விஜயகந்துக்கு கல்யாணம் நடக்காது.

சமுத்திரம் - அண்ணன் மூனுபேரு சொத்து எல்லாம் போய் கிளைமாக்ஸ்ல அடி வாங்குவாங்க.

பாசமலர் - சிவாஜி செத்தே போய்டுவார்

ஆனந்தம் - அதுல தங்கச்சி கேரக்டரே இல்லிங்க டுபாக்கூர் ரமேஷ் அவர்களே.

TERROR-PANDIYAN(VAS) said...

@Shalini
//என்ன அனு, உங்க ஆள் சொன்னதெல்லம் இப்டி பப்ளிக்ல சொல்லலாமா?//

அட VKS தலைவிகிட்ட நேர மோதர அளவு நம்ம மகளிர் அணி தலைவி வளந்துடாங்களா? சபாஷ்!! சரியான போட்டி....

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அந்த ரெண்டாவது லைன்
அனுபவத்துல வந்ததா? //

ஹி, ஹி., ஹி..!!

முதல் லைன் தான்
அனுபவத்தில வந்தது..!!

வெங்கட் said...

@ அனு.,

// shalini & டெரர் இப்பவே உஷார் ஆகிக்கோங்க!! //

ரமேஷையும்., அருணையும் அடி பின்னி
எடுக்க எதிர்கட்சிக்காரங்களை
Alert-ஆ இருக்க சொல்றீங்க பாருங்க..

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!!!

வெங்கட் said...

@ டெரர்.,

// வானத்தை போல - கடைசிவரை அண்ணன் விஜயகாந்துக்கு
கல்யாணம் நடக்காது. //

ஆனந்தம் - இந்த படத்தில கூட அண்ணன் மம்முட்டிக்கு
ரொம்ப Late-ஆ தான் ( 42 வயசுல ) கல்யாணம் ஆகும்..

ஆனா ரமேசு.., சும்மா சொல்ல கூடாது
ஒவ்வொரு அண்ணன் கேரக்டரும்
பொறுக்கி எடுத்து தான் சொல்லி இருக்கீங்க..

அனு said...

//ரமேஷையும்., அருணையும் அடி பின்னி
எடுக்க எதிர்கட்சிக்காரங்களை
Alert-ஆ இருக்க சொல்றீங்க பாருங்க..//

யப்பா ஷாலினி &டெரர்,

உங்க தலைவர் இப்படி தான் ப்ளேட்-டை திருப்பிட்டு இருப்பார்.. நீங்க ஏமாந்துடாதீங்க.. எதிர்கட்சி-னாலும் உங்க மேல உள்ள இரக்கத்தினால சொல்றேன்.. இப்பவே எஸ் ஆகிடுங்க!!

அனு said...

//அட VKS தலைவிகிட்ட நேர மோதர அளவு நம்ம மகளிர் அணி தலைவி வளந்துடாங்களா?//

இருக்குறதே ரெண்டு பேரு.. அதுல, மகளிர் அணி வேறயா? ஓ.. இதுக்கு பேரு தான் Divide & Ruleஆ?? பாத்து.. இப்படி பிச்சி பிச்சி போடுறதுக்கு இது என்ன பக்கோடா-வா,பஜ்ஜி-யா.. கட்சிப்பா கட்சி..

எங்களை பாத்தாவது கத்துக்கோங்க. எவ்வளவு ஒத்துமையா இருக்கோம்..

lekha said...

hi venkat
just now i saw ur blog ivlo comedya oru blog sathyama edhir paarkala

nalla sirikka vaikkireenga(ur friends too) ;-)

so swt of u and ur friends

idha ipdiye maintain pannunga(enga vadivel style sollunga paarpom) LOL

GSV said...

எனக்கு ஒன்னு புரியல கல்யாணம் பண்ணிகிறது என்ன உலக சாதனையல ஒன்னா !!! எப்ப சேர்த்தாங்க சொல்லுங்க மக்கா !!!

@Venket

உள்ளேன் ஐயா !!!....:)

வெங்கட் said...

@ அனு.,

// எதிர்கட்சி-னாலும் உங்க மேல
உள்ள இரக்கத்தினால சொல்றேன்.. //

அட அட அட..,
என்னாமா செண்டிமென்ட் டயலாக்
பேசறீங்க..?!! அப்படியே விக்ரமன் படம்
பார்த்த மாதிரியே இருக்கு..

// எங்களை பாத்தாவது கத்துக்கோங்க.
எவ்வளவு ஒத்துமையா இருக்கோம்.. //

ஆமா., ஆமா..
அந்த அழகை தான் நாங்க
ரமேஷ் Blog-ல பார்த்தோமே..!!

கட்சில ஒரு ஆள் தனியா
அடிவாங்கிட்டு இருக்காரே..
Support-க்கு போவோம்னு இல்லாம..
எல்லோரும் ஒரே மாதிரி ஒதுங்கி
நின்னு வேடிக்கை பார்த்தீங்க பாருங்க..

அப்ப தெரிஞ்சதுங்க உங்க ஒத்துமை..!!

அப்புறம் நாங்களே " பாவம்னு "
ரமேஷை விட்டுட்டு வந்துட்டோம்..


@ ரமேஷ்.,

இன்னுமா இவிங்கள நம்பறீரு..?
ஹாஸ்பிடல் நல்லா வசதியா
இருக்குல்ல...!!

அனு said...

//Support-க்கு போவோம்னு இல்லாம..
எல்லோரும் ஒரே மாதிரி ஒதுங்கி
நின்னு வேடிக்கை பார்த்தீங்க பாருங்க..//

நாங்க இல்லாத நேரமா பாத்து எங்க ஏரியா பக்கம் வந்து சவுண்ட் விட்டுட்டு போயிருக்கீங்க.. இதுக்கு இவ்வளவு அலப்பறையா..

அந்த போஸ்ட்-லயே எங்க கட்சிக்காரர் உங்களை கிழி கிழின்னு கிழிச்சு காயப் போட்டுட்டாரு.இதுக்கு மேலயும் உங்களை வறுக்க வேணாமேன்னு பாவப்பட்டு விட்டுட்டோம்..

ஆனாலும்,உங்களை கலாய்ச்சு எழுதியிருக்க போஸ்ட்-டுக்கு நீங்களே லிங்க் கொடுக்குறீங்க பாருங்க.. அங்க நிக்குறீங்க நீங்க..

வெங்கட் said...

@ Lekha.,

// hi venkat
just now i saw ur blog ivlo comedya
oru blog sathyama edhir paarkala
nalla sirikka vaikkireenga(ur friends too) ;-)
so swt of u and ur friends //

ஹாய் லேகா.,

" நன்றி மீண்டும் வருக..!! "
இதுக்கு மேல நான் எதாவது
சொன்னேன்னா..

நான் தான் இப்படி உங்களை
எழுத சொன்னேன்னு
அபாண்டமா பேசுவாங்க..
என்னை யாராவது புகழ்ந்தாலே
இவிங்களக்கு ( VKS ) பிடிக்காது..

அனு said...

//நான் தான் இப்படி உங்களை
எழுத சொன்னேன்னு
அபாண்டமா பேசுவாங்க.. //

ஏன் இந்த வெட்டி சீன்?? நீங்க தானே அந்த கமெண்ட்-ட போட்டதே.. கேள்வியும் நானே பதிலும் நானே-வா? நல்லா குடுக்குறாங்கயா பில்ட்-அப்பு...

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு
//நாங்க இல்லாத நேரமா பாத்து எங்க ஏரியா பக்கம் வந்து சவுண்ட் விட்டுட்டு போயிருக்கீங்க.. இதுக்கு இவ்வளவு அலப்பறையா.. //

ஹி..ஹி..ஹி நல்ல சமாளிக்க பாக்கறிங்க. நீங்க இல்லாத நேரமா பாத்து இல்லை.. உங்க ஆளு பதிவு போட்டதும் நீங்க இல்லாம ஆகிட்டிங்க. கிட்டதட்ட 8 மணி நேரம் அடிச்சி இருக்கேம். நீங்க சும்மா எட்டி பாத்துட்டு ஓடி போய்டிங்க.

//அந்த போஸ்ட்-லயே எங்க கட்சிக்காரர் உங்களை கிழி கிழின்னு கிழிச்சு காயப் போட்டுட்டாரு.//

ஹலோ.. நீங்க VKS தலைவி மறந்துபோய் VAS செஞ்சது எல்லாம் நீங்க செஞ்சதா சொல்லிட்டு இருக்கிங்க. அங்க கமெண்ட்ல உங்க டீம் பத்தி ஒரு புனைவு போட்டு இருப்போன்... அத அப்படியே Prove பண்றிங்க.

//இதுக்கு மேலயும் உங்களை வறுக்க வேணாமேன்னு பாவப்பட்டு விட்டுட்டோம்..//

ஹா..ஹா.ஹா.. தல என்ன நடந்தது உங்களுக்கு தெரியும். வேணும்னா நீங்க சொல்லுங்க.

//ஆனாலும்,உங்களை கலாய்ச்சு எழுதியிருக்க போஸ்ட்-டுக்கு நீங்களே லிங்க் கொடுக்குறீங்க பாருங்க.. அங்க நிக்குறீங்க நீங்க.//

பின்ன... எங்கள கலாய்ச்சா என்ன நடக்கும் தெரிய வேண்டாம?உண்மைலே அங்கதான் நிக்குறோம்.

அனு said...

wow.. Me The 50th...

முதல் முறையா நான் 50 போட்டதை முன்னிட்டு இன்னைக்கு (மட்டும்) உங்களை கலாய்க்குறது இல்லன்னு முடிவு பண்ணிட்டேன்..

வெங்கட் said...

@ அனு.,

// ஏன் இந்த வெட்டி சீன்..??
நீங்க தானே அந்த கமெண்ட்-ட போட்டதே..
கேள்வியும் நானே பதிலும் நானே-வா?
நல்லா குடுக்குறாங்கயா பில்ட்-அப்பு... //

இதை பார்த்தா யாருக்காவது
" பொறாமை " மாதிரி தெரியுதா..?!

" தெரியலையா..?!! "

அப்ப O.K..

" அனு., நீங்க சொன்னதை
எல்லோரும் அப்படியே நம்பிட்டாங்க..!!
ஏன்.., நானே நம்பிட்டேன்னா
பாருங்களேன்.."

வெங்கட் said...

@ டெரர்.,

// இதுக்கு மேலயும் உங்களை வறுக்க
வேணாமேன்னு பாவப்பட்டு விட்டுட்டோம்..//

// ஹா..ஹா.ஹா.. தல என்ன நடந்தது
உங்களுக்கு தெரியும். வேணும்னா
நீங்க சொல்லுங்க. //

வேணாம்...!!

நேத்து ரமேஷ் எனக்கு போன்
பண்ணி " என்னை விட்டுடுங்கன்னு "
கெஞ்சி கேட்டப்பவே..
இந்த விஷயத்தை வெளியே
சொல்ல கூடாதுன்னும் சொல்லிட்டாரு..

So., நான் சொல்ல மாட்டேன்பா..

Shalini said...

//(shalini & டெரர் இப்பவே உஷார் ஆகிக்கோங்க!!)
//

thank you so much!

ஆனாலும் அனு இப்டியா சொந்த ஆளுங்கள, சொல்லுபேச்சு கேக்கலன்னு போட்டு கொடுப்பாங்க

Shalini said...

//நேத்து ரமேஷ் எனக்கு போன்
பண்ணி " என்னை விட்டுடுங்கன்னு "
கெஞ்சி கேட்டப்பவே..
இந்த விஷயத்தை வெளியே
சொல்ல கூடாதுன்னும் சொல்லிட்டாரு..

So., நான் சொல்ல மாட்டேன்பா..
//

hello VKS,

ஒரு பாஸ்க்கான இலக்கணத்தை, இதைப் படிச்சாச்சும் தெரிஞ்சுக்கோங்க

lekha said...

hii venkat
u guys r doing a very gud job i tnk bcoz comedians ippo romba kammi aitaanga LOL
ramesh blog-um just now paarthen
pic superrrrrrr
sirippa adakka mudiyala
oru grp la orutharukku comedy sense niraya irukkum
but inga total grp oru typea dhaan irukkeenga (idhukku vera meaning illa);-)
c uuuuu

TERROR-PANDIYAN(VAS) said...

@lekha
//ramesh blog-um just now paarthen
pic superrrrrrr
sirippa adakka mudiyala//

I understood u are saying about the picture in the right side down copyright... நீங்க எப்படி ரமேஷ பாத்து இப்படி சிரிக்கலாம்? அப்புறம் நங்க யாரை பாத்து சிரிக்கறது?? நீ கவலைபடாத ரமேசு... நான் அவங்கள மிரட்டிவிட்டேன்...

(அங்குள்ள வடிவேல் போட்டோவுடன் VAS மெம்பர்ஸை இனைத்து கமெண்ட் செய்ய தடை..)

Madhavan said...

// உங்களை கட்டிக்க போற பொண்ணு
Lucky..!!//

ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு.. நடுல 'k' கெடையாது அப்படின்னு சொல்லிட்டா ? (She is 'Lucy'லூஸி)

//எனக்கு நடிகர் சூர்யாவை
ரொம்ப பிடிக்கும்.. ஆனா
அதெல்லாம் உங்களை
Meet பண்றதுக்கு முன்னால...!!//

is that like "அதெல்லாம் உங்க veekku முன்னால"(person looks simular to surya who stays in front of your house..) ..

//நீங்களும் Blue Shirt.,
நானும் Blue Chudithar.,
நம்மள பாக்கறவங்க
சரியான Match-ன்னு சொல்லுவாங்கல்ல..!!//

இந்தியா([wo]Man-in-Blue) நல்லா விளையாடி, ஜெயிச்ச கிரிகெட்டு ஆட்டத்துக்கு(மேட்ச்) போனப்பதானே எல்லோரும் 'அப்படி' சொன்னாங்க..(சொல்லுவாங்க)?

//" I " & " U " எப்பவும் சேர்ந்தே இருந்தா நல்லா இருக்கும்ல..!!//

அத யார் வேணாலும் சொல்லாலாமே..

// உங்களோட Favourite Food எது..? //

Fresh Fruits in its natural form

Anonymous said...

@ வெங்கட்
//இப்படியே சம்பந்தா சம்பந்தம்
இல்லாம கோர்வையா பேசுனீங்கன்னா
தமிழக அரசியல்ல நல்ல வளமான
எதிர்காலம் இருக்கு உங்களுக்கு.!!//
ஒபாமாவுக்கு போட்டியாக‌ அடுத்த அமெரிக்க தேர்தலில் குதிக்க இருந்த என்னை தமிழ் நாட்டு தேர்தலிற்கு வர அழைத்த வெங்கட்டிற்கு எனது கண்டணங்கள் தெரிவித்து வெங்கட்டிற்கு வழங்கிய தார்மீக ஆதரவினை வாபஸ்வாங்கிக்கொள்கிறேன்.

அனு said...

@ lekha

//u guys r doing a very gud job i tnk bcoz comedians ippo romba kammi aitaanga LOL//

லேகா,நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா??

@Barathy

//வெங்கட்டிற்கு எனது கண்டணங்கள் தெரிவித்து வெங்கட்டிற்கு வழங்கிய தார்மீக ஆதரவினை வாபஸ்வாங்கிக்கொள்கிறேன்//

வாங்க.. வாங்க.. உங்களுக்காக தான் VKS waiting.. வந்து எங்க ஜோதியில ஐக்கியமாகிடுங்க...

வெங்கட் said...

@ Barathy

//வெங்கட்டிற்கு எனது கண்டணங்கள்
தெரிவித்து வெங்கட்டிற்கு வழங்கிய
தார்மீக ஆதரவினை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்//

//அனு Said..,

வாங்க.. வாங்க.. உங்களுக்காக தான் VKS waiting..
வந்து எங்க ஜோதியில ஐக்கியமாகிடுங்க... //

ஹி., ஹி., ஹி..!!
பாரதி ஆதரவை வாபஸ் வாங்கிக்கறேன்னு
சொன்னது... அவர் அமெரிக்க ஜனாதிபதி
Election-ல எனக்கு தர இருந்த ஆதரவை..

இது புரியாம..
வாங்க., வாங்க.. எங்க கடையில
ஒரு துணி எடுத்தா., 2 துணி Free-ன்னு
ஜவுளிகடை வாசல்ல நிக்கிற பசங்க
மாதிரி கூவிட்டு....!

lekha said...

-----hi anu
2 grps-um sema comedya dhaan irukku so
naan NAM madhiri endha pakkamum serala
but i m enjoying all ur comments

en vazhi thani vazhi ;-)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

-------hi terror pandian unga nakkala en kitta kaatureengale idhu nyayama mm?

ramesh photo va theliva paarkala
paartha pinnadi naan solren sema comedy nu deal ok va?;-)

அனு said...

@வெங்கட்

//அவர் அமெரிக்க ஜனாதிபதி
Election-ல எனக்கு தர இருந்த ஆதரவை..//

ஏங்க.. நீங்களே அமெரிக்க ஜனாதிபதி
Election-ல நிக்கும் போது நாங்க நிக்க மாட்டோமா? நானும் Barathy-ய கூப்பிட்டது அமெரிக்க ஜனாதிபதி
Election-ல எங்களுக்கு ஆதரவு தர்றதுக்கு தான்...

தொப்பி.. தொப்பி...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்
//இது புரியாம..
வாங்க., வாங்க.. எங்க கடையில
ஒரு துணி எடுத்தா., 2 துணி Free-ன்னு
ஜவுளிகடை வாசல்ல நிக்கிற பசங்க
மாதிரி கூவிட்டு....!//

ஹா..ஹா..ஹா கலக்கல் தல.

எத்தனை முறை மூக்கு உடைந்தாலூம் சூரியனை நோக்கி பறந்து வரும் VKS பினிக்ஸ் பறவைகளே.... நீவிர் வாழ்க!!!

வெங்கட் said...

@ லேகா..,

// en vazhi thani vazhi //

நடுநிலையா இருக்க நீங்க
விரும்பறதுக்கு முதல்ல
என் வாழ்த்துக்கள்...

அப்படியே ஒரு ID Create பண்ணி
Comment போட்டீங்கன்னா நல்லா
இருக்கும் என்று அன்போடு
கேட்டுக்கொள்கிறோம்..

வெங்கட் said...

@ அனு.,

// தொப்பி.. தொப்பி... //

ஓ.. உங்களுது தொப்பி கடையா..?
நான் தான் துணிகடைன்னு மாத்தி
சொல்லிட்டேனா..?!!

அட ஆமா.., எங்ககிட்ட வாங்கின
தொப்பி நிறைய Stock இருக்கும்ல..

ஓ.. அதையெல்லாம் வெச்சு
தொப்பி கடை ஆரம்பிச்சிட்டீங்களா..
Very Good.., Very Good..!!

இப்படிதான் தீயா வேலை செய்யணும்..!!

வெங்கட் said...

@ பாரதி.,

// வெங்கட்டிற்கு எனது கண்டணங்கள்
தெரிவித்து வெங்கட்டிற்கு வழங்கிய தார்மீக
ஆதரவினை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன். //

பாரதி.. Cool down..!!
இது சப்பை மேட்டரு..!!

வேணுமா ஐ.நா பொது செயலாளர்
பதவிக்கு உங்களை Recommend பண்ணி
ஒரு லெட்டர் தரவா..?!!

வெங்கட் said...

@ டெரர்.,

// எத்தனை முறை மூக்கு உடைந்தாலூம்
சூரியனை நோக்கி பறந்து வரும்
VKS பினிக்ஸ் பறவைகளே.... நீவிர் வாழ்க!!! //

என்ன பண்றது..?

தினமும் இவிங்கள அடிக்கலைன்னா
நமக்கு தூக்கம் வரமாட்டேங்குது..

நம்மகிட்ட அடி வாங்கலைன்னா
அவங்களுக்கும் தூக்கம் வரமாட்டேங்குது..

இது கெட்ட பழக்கமா..?
நல்ல பழக்கமான்னே தெரியலையே..!!

Madhavan said...

//"அதெல்லாம் உங்க veekku முன்னால"....//

sorry for spelling mistake I mean to say 'vettukku' instead of mispelt 'veekku'

ப்ரின்ஸ் said...

//இந்த Alphapet-ல ஏன் " I " & " U "
வேற வேற இடத்துல இருக்கு..?//

ஒரு சிறு தகவல்: கணினி மற்றும் தட்டச்சு இவைகளில் பார்த்தீங்கன்னா "U & I" பக்கத்திலையே தான் இருக்கும்.

வெங்கட் said...

@ மாதவன்.,

// sorry for spelling mistake I mean to say
' vettukku ' instead of mispelt 'veekku' //

ஓ.கே.. அதான் 1st Time படிச்சப்ப
புரியல.. இப்ப சரியா இருக்கு..

ஆமா எனக்கு ஒரு Doubt..

எதுக்கு எல்லோரும் அந்த பொண்ணு
அவ லவ் பண்ற பையனை கலாய்க்கிற
மாதிரியே Counter எழுதி இருக்கீங்க..?

இப்படி ஒரு பொண்ணு சொன்னா..
அப்புறம் அந்த பொண்ணு லவ்
எப்படி சக்சஸ் ஆகும்..?!!

வெங்கட் said...

@ பிரின்ஸ்.,

// ஒரு சிறு தகவல்: கணினி மற்றும் தட்டச்சு
இவைகளில் பார்த்தீங்கன்னா "U & I"
பக்கத்திலையே தான் இருக்கும். //

அட ஆமால்ல.. இத்தனை நாளா
இதை கவனிக்கலையே..!!

Very Nice.. I Like it..!!

அனு said...

@Terror

//எத்தனை முறை மூக்கு உடைந்தாலூம் சூரியனை நோக்கி பறந்து வரும் VKS பினிக்ஸ் பறவைகளே.... நீவிர் வாழ்க!//

எதிர்கட்சியா இருந்தாலும் சொல்றேன்.. I Liked this one..

(எப்படியோ எங்களை ஃபினிக்ஸ்-னு ஒத்துக்கிட்டீங்களே)

Gopi Ramamoorthy said...

நல்லா இருக்கு.

அப்படியே நான் எழுதின இந்தப் பதிவுகளையும் ஒருக்கா படிச்சிட்டுப் பின்னூட்டமும் போடுங்க. நன்றி.

http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_3286.html

http://ramamoorthygopi.blogspot.com/2010/08/blog-post_7709.html

http://ramamoorthygopi.blogspot.com/2010/08/blog-post.html